• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 15

சேலத்திற்கு வந்த வித்யாவை, ஈஸ்வரி அவளது வீட்டிலேயே தங்க சொல்லி வற்புறுத்த,

அது சரிப்படாது என்றுவிட்டு அவர்களது வீட்டிற்கு சற்று தொலைவில் ஒரு வீட்டில் குழந்தையுடன் குடியேறினாள் அவள்..

அந்த வீட்டின் ஓனர், அவள் குழந்தையோடு இருப்பதை கண்டு,"பாப்பாவோட அப்பா எங்கேமா?..என்ன பண்றாங்க?!.." என கேட்க, இதுவரை சந்திக்காத திடீர் கேள்வியில் வித்யா விழித்திருக்க,

ஈஸ்வரி தான், "அவர் வெளிநாட்டில் இருக்கார் ம்மா!.." என்று சமாளித்து உரைத்தாள்..வித்யாவும் எதுவும் சொல்லாமல் வீட்டை பார்ப்பது போல் பாவனை செய்ய, அவரும் நம்பி விட்டார்..

அவளது குடியிருப்பை ஓரளவு சரி செய்து விட்டு, குழந்தைக்கும் அருகில் மழலையர் பள்ளியில் அட்மிஷன் வாங்கி விட்டாள் ஈஸ்வரி..

ஈஸ்வரியின் பள்ளியில் தலைமை ஆசிரியையிடம் பேசி வித்யாவின் பணிக்கு ஏற்பாடு செய்திட, முதல் நாள் பள்ளிக்கு, சற்று படபடப்பாகவே சென்றாள் வித்யா!..

பள்ளியின் வாயிலில் சில நொடிகள் நின்று ஆழ மூச்சிழுத்துக் கொண்டிருந்த போது, 'க்கீஈஈஈஈய்!...' என்ற ஹார்ன் சத்தத்தில் பதறி விலகினாள்..

"என்ன மேடம்!?.. முதல் நாள் ஸ்கூலுக்கு போற பிள்ள மாதிரி 'இந்த கேட்டை பார்த்தாலே பயமார்க்கே!' அப்படிங்கறது போல பீதியாகி நிக்கறீங்க!!?.." என்று சிரிப்புடன்,

நக்கலான கேள்வியோடு முன்னே வந்த கார்த்திக், அவளது முகத்தை பார்த்து ஸ்தம்பித்தான்..

அவனது கேள்விக்கு அவனை முறைத்து விட்டு, அவள் விலகிய பின்னும் அவன் செல்லாமல் இருப்பது கண்டு அவள் புருவஞ்சுருங்க யோசிக்க, சட்டென தெளிந்த அவன் சென்று விட்டான்..

அவளை கண்டது முதல் அவனது மனம் சிறகுகள் விரித்து பறக்க, 'இருடா கார்த்தி!.. ஓவரா பறக்காத! முதல்ல அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா என்றே தெரியல?!..'

'இதுல இவரு கனவுக்கோட்டை கட்ட ஆரம்பிச்சுட்டாரு!..' என்று அவனது மனசாட்சி கேலி செய்ய, சிறகுகள் முளைத்து பறந்த மனம் சட்டென தரையில் விழுந்தது ..

அதன்பின் அவளறியாதபடி அவன் அவளை கவனிக்க, அவளது கழுத்தில் தாலியோ, காலில் மெட்டியோ இல்லாதது கண்டு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டான்..

'தாலி, மெட்டி இல்லை சரி!.. ஒருவேளை அவ கிறிஸ்டியன் யாரையாவது மேரேஜ் பண்ணி இருந்தா!!?..' என்று கேள்வி எழுப்பிய மனசாட்சியை ஒன்றும் செய்ய இயலாமல் தன்னையே நொந்து கொண்டான்..

அவளைப் பற்றி சக ஆசிரியர்களிடம் அவர்கள் கவனிக்காதவாறு தெரிந்துக் கொள்ள முயற்சிக்க, 'அவளது தனிப்பட்ட விசயங்கள் எதுவும் எங்களுக்கு தெரியாது' என்ற ரீதியில் அவர்கள் பதில் இருந்ததில் மண்டை காய்ந்தான் அவன்..

ஆனால் அவள் கோவிலுக்கு செல்வதை பற்றியும், விரதங்கள் இருப்பது பற்றியும் கூறி உள்ளதாக தெரியவும் 'ஹப்பாடி!!' என்று ஆசுவாசமானான் கார்த்திக்..

அதன்பின் என்ன!!.. அவளை ஈர்க்கும் முயற்சி தான்!..

அவளை கடக்கும் போதெல்லாம் அவன் வீசிடும் ஓரவிழிப்பார்வை அம்புகள்!.. அவள் இருக்கும் இடத்தில் அவனும் இருக்க நேர்ந்தால் கலகலப்பான பேச்சில் மயக்கும் முயற்சி!..

அவனது சேட்டைகள் புரிந்தாலும், குறும்பு மிளிரும் அக்கண்களிலும், செயல்களிலும் கள்ளத்தனம் தெரியாமல் கோமாளித்தனம் தான் தெரிவதால் அவளும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்..

ஆனால் அவன் தனியாக தன்னிடம் பேச வந்த போது, அவனை காயப்படுத்தாமல் எப்படி விலக்க என்று அவள் யோசிக்க,

அவளுடைய குழந்தை என்று அவன் அதிர்ந்ததும், அவளும் இனி அவன் மனதை மாற்றிக் கொள்வான் என்றெண்ணி இருந்தாள்..

அந்த எண்ணம் மனதில் மிக சிறிய அளவில் வலித்தாலும், இனி அவனது கலகலப்பான பேச்சு இருக்காது என்பதால் அப்படி இருக்கிறது என்று அதை புறந்தள்ளினாள் வித்யா..

சில நாட்களாக அவனது சேட்டைகள் இல்லை என்று எண்ணியிருக்க, குழந்தையுடன் கை கோர்த்தது அவளுக்கு சற்று பயமாகத் தான் இருந்தது..

இனி...

"என்ன சார் விளையாடுறீங்களா?!!..குழந்தையை எதுக்கு சார் உங்க பேர் சொல்லி கூப்பிட சொல்றீங்க?.."

"அதான் இப்ப எல்லாம் கூப்பிட யுனிவர்சல் வேர்ட் இருக்கே 'அங்கிள்'னு அப்படி அவளை கூப்பிட சொல்ல வேண்டியது தானே!!.." என்று அமுதா கேட்க..

"என்னங்க அமுதா!!?.. என்னையை பார்த்தா அங்கிள் மாதிரியா இருக்கு!!?.. இப்ப எல்லாம் வயசான தாத்தாங்கள கூட அப்படி தான் சொல்லி கூப்பிடறாங்க!.." என்று சோகமாக கூறிய அவன்..

"பாப்பா உங்க பேர் என்ன னு கேட்டாங்க.. என் பேரை சொன்னேன்.. அவங்களும் திரும்ப சொன்னாங்க.. இது நல்லார்க்கே இனிமே இப்படியே கூப்பிடு செல்லம் னு சொல்லிட்டேன்!.."

"இதுக்கு ஏன், ஏதோ கொலை குத்தம் பண்ணுனவனை விசாரிக்கற மாதிரி விசாரணை கமிஷன் வச்சுட்டு இருக்கீங்க னு தான் தெரியல!!?.." என்று புரியாத பாவனையில் அவன் சொல்லவும்..

இருவருக்கும் தாம் தான் ஏதோ அதிகப்படியாக கேட்கிறோமோ என்ற சந்தேகம் கூட வந்து விட்டது..

அவர்களது அமைதியை கண்ட கார்த்திக்," ஒருவேளைஐஐ பாப்பாவோட அப்பா பேர் அதானா!!?.."

"அதனால தான் டென்சன் ஆகிடுச்சா ரூபிணி!?.." என்று அவன் ஆழமாக பார்த்து கேட்ட கேள்வியில், அவனை ஒருவிதமாக பார்த்துவிட்டு,

"தேவையில்லாம பேசாதீங்க சார்!.. என்னோட குழந்தைக்கு நீங்க ஒன்னும் ஊட்ட தேவையில்ல.."

"அவளுக்கு சாப்பாட்டு ஊட்ட அந்த ஸ்கூல்ல ஆள் இருக்காங்க.. அவங்க பார்த்துக்குவாங்க!.." என்று பதிலளித்தாள் அவள்..

"என்ன ரூபிணி இது!!?.. பத்து மாசம் தவமிருந்து பெற்றெடுத்த, எந்த தாயாவது தன் குழந்தை ஒருத்தர் ஊட்டி விட்றதால நல்லா சாப்பிடுது னு சொன்னா வேணாம் னு சொல்லுவாங்க!!?.." என

அவன் அந்த 'பெற்றெடுத்த' என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தத்தில் அவனை கூர்மையாக பார்த்து விட்டு, வேகமாக அங்கிருந்து அகன்றாள் வித்யா!..

அவள் பின்னோடே சென்ற ஈஸ்வரி, கார்த்திக்கை யோசனை பார்வையுடன் பார்த்து நகர, செல்லும் அவர்களை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்..

அவனிடம் பேசிவிட்டு வந்த வித்யா குழந்தையை அழைக்க வந்த போது கண்டது, அழுது அழுது சிவந்த முகத்துடன் தேம்பிக் கொண்டிருந்த சின்னக் குட்டியை தான்!..

"என்னமா நீங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க?!..நீங்க வர்ற நேரம் தாண்டுனதுமே பாப்பா அழுகையை ஆரம்பிச்சுட்டா!.."

"சமாதானம் பண்றதுக்குள்ள போதும் போதும் னு ஆகிடுச்சு!!.." என்று அந்த ஆயாம்மா அலுத்துக் கொண்டே அவளிடம் பவிஷ்யாவை ஒப்படைத்தார்..

கார்த்திக்கிடம் விசாரித்துக் கொண்டு இருந்ததில் குழந்தையை அழைக்கும் நேரம் தாண்டியதை மறந்த, தன்னுடைய மடத்தனத்தை எண்ணி வருந்திவிட்டு குழந்தையுடன் வீட்டை அடைந்தாள் வித்யா..

**************

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பழுப்பான மணற்பரப்பு மட்டும் தெரிய, தாகத்தால் தவித்து.. நெஞ்சம் உலர.. உயிர் விடும் தருணத்தில் சென்று கொண்டிருந்த அவள்..

நடை தடுமாறி கீழே விழ.. மணலில் துளாவிய கைகளில் அகப்பட்ட சிறிய நீர்க்குடுவையை பற்றினாள்..

அதனை கொண்டு சிறிது தாகம் தீர்த்து இளைப்பாற, திடுமென அக்குடுவை கை நழுவி உருண்டோடி மறைய.. விலுக்கென கண் விழித்தாள் வித்யா!..

பதறி விழித்த அவள், உடனே திரும்பி அருகிலிருந்த குழந்தையை பார்க்க, அவளது வயிற்றின் மீது ஒரு காலை போட்டுக் கொண்டு,

அவளது கழுத்தில் கையை வைத்துக் கொண்டு இதழ்களில் மென்னகை தவழ, உறங்கும் பூந்தளிரை கண்டு, அவளை பார்க்க திரும்பிப் படுத்த வித்யா, அவளை இறுக அணைத்துக் கொண்டாள்..

அப்படி ஒரு விடாப்பிடியான அணைப்பு!.. சிறு பிள்ளைகள் தங்களிடம் இருந்த பொம்மையை பிடுங்கி விடுவார்களோ என்று காட்டுமே அதே பிடிப்பு!..

சற்று அந்த பயம் தெளிந்த பின், பிள்ளையை அணைத்துக் கொண்ட அவளது சிந்தனை, கார்த்திக்கின் செயல் மற்றும் சொற்களில் நிலைத்தது..

ஏனோ இனம் புரியாத பயம் மனதில் படற.. இதனை கூடிய விரைவில் களைய வேண்டும் என்று உறுதி எடுத்தாள்..

அதன்பின் வந்த நாட்களில், வித்யா அவனை கண்டும் காணாதது போல் விலகிச் செல்ல,

அவனும் அவளிடம் மேற்கொண்டு எதுவும் வம்பிழுக்காமல் புன்முறுவலுடன் கடந்து கொண்டு இருந்தான்..

இவர்கள் இருவரையும் கவனித்த ஈஸ்வரிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை..

'கார்த்திக்கிற்கு வித்யாவை பற்றிய ஏதோ ஒரு உண்மை தெரிந்து இருக்க வேண்டும்' என்று அவளது மனம் அடித்து கூறியது.. அதை அவனிடமே கேட்டுவிட வேண்டுமென்று முடிவும் எடுத்தாள்..

ஓர் விடுமுறை நாளில், அந்த சூப்பர் மார்க்கெட்டில் சாமான் வாங்க வந்திருந்த ஈஸ்வரி, பொருட்களை எடுத்துக் கொண்டு இருந்த போது,

அடுத்த வரிசையில் கார்த்திக் நின்றிருப்பதை கண்ட ஈஸ்வரி, அவனை நோக்கி சென்று, "என்ன கார்த்திக் சார் பர்சேஸிங்ஆ?.." என சம்பிரயாத கேள்வி கேட்க..

யாரென திரும்பிப் பார்த்த கார்த்திக் "ஹாய்!.. அமுதா!!.." என்று புன்னகைத்து விட்டு,

"இல்லைங்க இந்த கடைல பூச்சிங்க தொல்லை அதிகமா இருந்துச்சுனாங்க அதான் மருந்து அடிச்சுட்டு போக வந்து இருக்கேன்!.." என்று சிரியாமல் சீரியஸ் ஆக சொன்னான் அவன்..

அவனது பதிலில் காண்டான ஈஸ்வரி, 'இவங்கிட்ட போய் பேச வந்தேன் பாரு!.. என்னை சொல்லனும்' என்று மனதில் அவனை வறுத்துவிட்டு,

"ஓகே சார்!.. நீங்க கன்ட்டிநியூ பண்ணுங்க!..நான் கிளம்பறேன்!.." சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தாள் அவள்..

"என்னங்க இது!.. சாதாரண கேலி இதுக்கு போய் கோவிச்சுக்கிறீங்க?!.." என்று சமாதான உடன்படிக்கை நீட்டினான் கார்த்திக்..

அவன் அவ்வாறு கூறியதும் மெலிதாக நகைத்து விட்டு, "உங்க வாய்க்கு உங்களை எல்லாம் வீட்ல வைச்சு எப்படி தான் சமாளிக்கிறாங்களோ!!?.." எனக் கூறினாள்..

"நான் இதுக்கும் எதாவது சொல்லுவேன்!..அப்றம் நீங்க ஆளை விடு டா சாமி னு கிளம்பிடுவீங்க!.." அவன் கூறவும்,அவள் சிரித்தாள்..

"உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கனும்.. ஆனா நீங்க விளையாட்டா பதில் சொல்லாம கொஞ்சம் சீரியஸா சொல்லுவீங்க னா பக்கத்துல இருக்க பார்க் க்கு வர முடியுமா?!.." என்று அவள் தீவிரமாக பேசவும்..

அவளை சில நொடிகள் கூர்ந்த கார்த்திக், " ஓஓ.. ஷ்யூர்!.. இருங்க பில் போட்டுட்டு வர்றேன்!.." என்றான்..

சாமான்களை வாங்கி முடித்துவிட்டு இருவரும் அந்த பூங்காவில் வந்து அமர்ந்து சில நிமிடங்கள் அமைதியாக இருக்க, கார்த்திக்கே முதலில் ஆரம்பித்தான்..

"சொல்லுங்க அமுதா!.. என்கிட்ட என்ன கேட்கனும் னு நினைச்சீங்க?!.." அவனே கேள்வியை முதலில் தொடங்கினான்..

சில நொடி மௌனத்திற்கு பிறகு,"வித்யா கிட்ட உங்க பிஹேவியர் வித்தியாசமா
இருக்கே அது ஏன்?!.." எனக் கேட்டு விட்டு,

"உங்களுக்கு வித்யாவை முதல்லயே தெரியுமா?" என நேரடியாக ஈஸ்வரி கேட்க, "வித்யா!!!?.." என அவன் விழித்தான்.

"ஓஓ.. அவளை இங்க எல்லாருக்கும் ரூபிணி னு தானே தெரியும். அவ பேர் வித்யரூபிணி!.. நாங்க சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்." அவர்களை பற்றி கூறினாள் ஈஸ்வரி.

அவள் கூறியதை புரிந்து கொண்ட கார்த்திக், "ஏன் னு கேட்டா!!?என்ன சொல்றது!!? எனக்கு அவங்கள பிடிச்சு இருக்கு.நான் அவங்கள விரும்புறேன்." என்ற பதிலில் அதிர்ந்த ஈஸ்வரி பின்பு,

"என்ன கார்த்திக் இப்படி சொல்றீங்க?ஒரு குழந்தைக்கு தாயான அவளை.. எப்படி!!?" என்று சொல்லி வேறு என்ன கேட்கவென அவள் திணறி,

"குழந்தை தானேங்க இருக்கு. கல்யாணம் ஆகலையே!?" என்ற அவனது பதிலில் துல்லியமாக அதிர்ந்து ஸ்தம்பித்தாள் ஈஸ்வரி.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top