Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 12
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய வித்யா, தன் அக்காவின் கருவுற்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினாள்..
பின்பு அவளது மாமா வந்தபின், "வாழ்த்துக்கள் அத்திம்பேர்!.. எப்படியோ உங்களுக்கு ஒரு ஆள் செட் பண்ணிட்டீங்க!.." என்று குறும்புடன் வாழ்த்துக் கூறவும்,
அதைக் கேட்ட நித்யா, "என்னாதுஉஉ!!.. ஆளா!!..அதுக்குள்ள உங்களுக்கு நான் போர் அடிச்சுட்டேனா?!.. எவ அவ?!.. எங்க இருக்கா?.. எத்தனை நாளா இது நடக்குது?!.." என்று கேள்விக் கணைகளை ஷக்தியை நோக்கி வீச..
பாவமாய் மச்சினியை பார்த்த ஷக்தி, "இப்ப உனக்கு சந்தோஷமா கரடிக்குட்டி!.. உன்னோட நாரதர் வேலையை சிறப்பா தொடங்கி வைச்சுட்டியா?!.." என்று கேட்டான்..
நித்யாவிற்கு அதுவும் தவறாகவே அர்த்தப் பட, "ஓஓ.. நீங்க செய்றது தப்பில்ல!.. ஆனா என் தங்கச்சி அதை எங்கிட்ட சொன்னது தான் தப்போ?!.." என்று பொறிந்தாள்..
அவளது கேள்வியில் விழி பிதுங்கிய ஷக்திக்கு, அவள் சொன்னதன் பொருள் சில நொடிகளுக்கு பிறகு தான் புரிந்தது..
சற்றும் தாமதிக்காமல், "அம்மா!.. தாயே!.. நித்ய சொரூபிணி!.. கொஞ்சம் மலையிறங்கு!.. அவ சொன்னது வேற அர்த்தத்துல.. நான் சொன்னது வேற மீனிங் ல.." தன்னிலை விளக்க தயாராக..
"நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்!.. இப்ப எல்லாம் உங்களுக்கு கால் பண்ணினா நீங்க அடிக்கடி சைட் வொர்க்ல இருக்கேன் னு சொல்லும் போதே நான் யோசிச்சு இருக்கனும்!.." என்று அவள் வருந்தத் துவங்கவும்,
இதற்கு மேல் சென்றால் விஷமம், விவகாரம் ஆகி விடுமென வித்யாவே விளக்க முனைந்தாள்.. ஆனால் அதை கேட்க அவள் தயாராக இல்லையே!..
"எத்தனை நாளா இது நடக்குது?!.. யாரு அவ?!.. எந்த ஊர்ல செட் பண்ணி இருக்கீங்க?!.."என்று கணவனிடம் மீண்டும் அம்புகள் வீச..
"ஹைய்யோ அக்கா!.. கொஞ்சம் அனத்தறதை நிறுத்துறியா!.. அத்திம்பேர் எல்லாம் அந்தளவுக்கு வொர்த்ஆ னு யோசிக்க மாட்டியா?!.."
"உன்னை தவிர யாரு இந்த அம்மாஞ்சிக்கு வாழ்க்கை கொடுக்க முடியும்!.." என்று அவளுக்கு ஆறுதல் சொல்வது போல ஷக்தியை வாரவும்,
அவள் பேசத் தொடங்கவும், தனக்கு சாதகமாக பேசுகிறாள் என்றெண்ணிய ஷக்தி, அவளது பேச்சில், 'அடிப்பாவி!!..' என்று வாயடைத்து நின்றான்..
"அதானே!.. என்னை கட்டிக்க வைக்கவே நான் அவ்ளோஓஓ பாடுபட வேண்டி இருந்தது.. இதுல இன்னொன்னு!.. அதுக்கெல்லாம் இவர் சரிபட்டு வர மாட்டார் தான் பொம்முகுட்டி!.." என்று கூறி 'களுக்'கென்று சிரித்தாள் நித்யா..
'என்னங்கடா நடக்குது இங்க?..' என்ற பாணியில் ஷக்தி நின்றிருக்க, "இப்போ புரிஞ்சுதா!.. நான் சொன்ன ஆளு உன் வயித்துல இருக்கற பாப்பாவை சொன்னேன்!.."
"இவா உன்னை தவிர வேற பாப்பாவை எல்லாம் பார்க்க மாட்டார்!.. அப்படிதானே அத்திம்பேர்!!.." என ஒருவித ராகமாக இழுத்து, அவனை காப்பாற்றி கோர்த்து விட பார்த்தாள் வித்யா..
அதற்கு, இல்லை என்றா சொல்ல முடியும்?.. ஆம் என்று வேகமாக தலையாட்டி வைத்த ஷக்தி..
"கொஞ்ச நேரத்துல நல்லா இருக்கற குடும்பத்தையே பிரிக்க பார்த்தியே கரடிக்குட்டி!.." என்று அவளது தலையில் செல்லமாக கொட்டினான்..
"எதேஏஏ!.. கரடிக்குட்டியா?!!..அப்படி கூப்பிடாதேள் னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்!.." என்று மூக்கில் காற்றடித்தாள் மச்சினிச்சி..
"பின்னே!.. இந்த மாதிரி நடுவுல புகுந்து நாரதர் வேலை பார்க்கற ஆளை வேற என்ன னு சொல்லுவாங்களாம்?!.." சன்ன சிரிப்புடன் கேட்ட ஷக்தியை முறைத்த வித்யா,
தன் சகோதரியிடம் திரும்பி, "எனக்கென்னமோ நீ கேட்ட மாதிரி எதுவும் இருக்குமோ னு தோணுது க்கா!!?.." என்று மீண்டும் கொளுத்திப் போட்டாள்..
"தெய்வமே!!.. நீங்க கரடிக்குட்டி இல்ல.. மான்குட்டி!.. முயல்குட்டி!.. இன்னும் என்னென்ன அழகான குட்டி இருக்கோ அத்தனையும் நீ தான் போதுமா!!.." வித்யாவிடம், ஷக்தி கையெடுத்து கும்பிட்டு சொல்ல
"ஆக மொத்தம் என்னை மனுச குட்டி லிஸ்ட் ல மட்டும் சேர்க்க மாட்டேள்!.. அப்படி தானே?!.. " கூர்மையாக பார்த்து கேட்ட அவளிடம்,
"போதும் மா!.. போதும்!.. இதுக்கு மேல அடிச்சா இந்த ஷக்தி தாங்க மாட்டான்!..ப்ளீஜ்!.. பர்கிவ் மீ!.." என சரணடைந்தான் ஷக்தி.. அவனது பாவனையில் சகோதரிகள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..
நித்யாவின் தாய்மையை பங்கஜம் மாமிக்கும் தெரிவிக்க, மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாமி, தாயில்லா பிள்ளைகளை அருகில் இருந்து தாங்க முடியவில்லையே என்று வருத்தமும் அடைந்தார்..
சென்னையிலுள்ள தாரிணிக்கும் விசயம் தெரிவிக்கப்பட அவளும் வெகுவாக ஆனந்தம் அடைந்தாள்.. விரைவிலேயே குடும்பத்துடன் வருவதாக கூறி உறுதி அளித்தாள்..
நித்யாவின் கருப்பை பலவீனமாக இருப்பதாக மருத்துவர் கூறியதால் ஷக்தியும், வித்யாவும் கலக்கமடைந்தனர்.. அவர்களது கலக்கத்தை கண்ட மருத்துவர்,
"பயப்படாதீங்க!.. கடினமான வேலை எதுவும் செய்யாம, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் ல இருந்தா போதும்.. நான் கருப்பை வலுவடைய மருந்து தர்றேன்!.." என சிறு முறுவலுடன் கூறி அறிவுறுத்தினார்..
அதன்பின் நித்யாவை பூவை போல இருவரும் பாதுகாத்தனர்.. ஷக்தி தனது சைட் வொர்க்கை சிறிது காலம் ஒத்திவைக்க,
வித்யாவும் கடைசி வருடம் முடியும் தருவாயில் இருப்பதால், பயிற்சி வகுப்புகளே மீதம் இருக்க, அதற்கு மட்டும் சென்று வந்தாள்..
மசக்கையில் அவளது அவதிகளை கண்டு பயந்த இருவரும், மருத்துவரிடம் ஓட, 'இது இயற்கை தான் பயப்பட தேவையில்லை' என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் மருத்துவருக்கே தலை சுற்றியது..
நிலவின் பிறை வளர்வது போல், நித்யாவின் சிப்பிவயிற்றில் உதித்த முத்தும் வளர, தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தாள் நித்யா..
ஏழாம் மாதம் பிறந்ததும் வளைபூட்டல் செய்ய வேண்டும் என பங்கஜம் மாமி கூறிட, அதற்கு உண்டான ஆயத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன..
தங்களது திருமணம் கூட திடீரென நடந்ததால் இதையாவது சிறப்பாக செய்ய நினைத்தனர்..
முதல்முறையாக தங்கள் வீட்டில் நடக்கும் விஷேசம் என்பதால், தாரிணியும் சென்னையிலிருந்து தன் குடும்பத்துடன் வந்திருக்க,
பங்கஜம் மாமி கணவரிடம் மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி அவளுடன் நித்யாவின் வளைபூட்டலுக்கு வந்து சேர்ந்தார்..
மூத்தவராய் முன்நின்று அனைத்தையும் வழிநடத்த, மேடிட்ட வயிற்றோடு பட்டுபுடவையில், வளைகரங்கள் நிரம்பியிருக்க நித்யா அழகு தேவதையாக மிளிர, விழாவும் சிறப்புடன் முடிந்தது..
அதன்பின் அவளை இன்னும் பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.. வித்யாவின் படிப்பும் முடிந்து விட, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்..
பிரசவ காலம் நெருங்கும் வேளையில், ஷக்தியும் அவளுடன் அதிக நேரம் செலவளிக்க,
ஒன்பதாம் மாத பரிசோதனைக்காக மருத்துவரை காண காரில் சென்று கொண்டிருந்த போது தான், விதி அவர்கள் வாழ்வில் விளையாடியது..

இரு தினங்கள் வேறு சூழ்நிலையில் இருந்ததால், சின்னவளுக்கு சட்டென நினைவிற்கு வரவில்லை.. சற்று யோசித்து விட்டு, "அவங்க தான் அப்பி கூப்ப தொன்னாங்க ம்மா!.." என்றாள் சின்ன வாண்டு..
குழந்தையின் மனதில் தேவையில்லாததை சொல்லி கலைக்க நினைக்கும் அவன் மேல் கோபம் வந்தாலும்,
இது எத்தனை நாளாக தொடர்கிறது என்ற கேள்வி எழவும், அதையும் பிள்ளையிடமே இயல்பு போல கேட்டாள் தாய்..
அதற்கு,"அன்னிக்கு நா சாப்பாம அழுதுத்து இந்தேனா!.. அப்ப இவங்க தான் வந்து ஊத்தி வித்தாங்க!.. அப்போம் தெய்லி வந்து எக்கூத கொஞ்ச நேய்யம் வெளாதுவாங்கே!.." என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள் சில்வண்டு..
மகளது வாக்குமூலம் கேட்ட பிறகு 'அவன் எத்தனை நாட்களாக இவ்வாறு செய்கிறான்?.. எதற்காக செய்கிறான்?..'
'இதை ஆரம்பத்திலேயே நிறுத்த வேண்டும்.. எவ்வாறு?..' என்னும் கேள்விகள் அவளுள் படையெடுக்க தலை சுற்றியது ரூபிணிக்கு..
மறுநாள் காலையில் வழக்கம் போல எல்லாம் முடித்து, குழந்தையையும் பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, இன்றே அவனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தனது பள்ளிக்கு சென்றாள் ரூபிணி..
ரெண்டு நாட்கள் விடுப்பில் இருந்ததால் அவள் முடிக்க வேண்டிய பாடவகுப்புகள் தேங்கி இருக்க, தன்னுடைய ஓய்விலும் வகுப்புகளை எடுத்து சமன் செய்தாள்..
கார்த்திக்கை காண்பதற்கு சந்தர்ப்பம் அமையாமல் போக, என்ன செய்ய என அவளுக்கு தெரியவில்லை..
அடுத்து வந்த ஓர் நாளில், அவனை கிளம்பும் தருவாயில் கண்டு விட்டு அவனிடம் விரைந்த ரூபிணி, "எக்ஸ்க்யூஸ் மீ கார்த்திக் சார்!..உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்.." என்று அவனை தேக்க,
அவளை பார்த்த அவனிடம், "நீங்க எதுக்காக என் பொண்ணு கிட்ட உங்கள அப்படி சொல்ல சொன்னீங்க?..எதுக்காக அவளை தினமும் பார்க்க போறீங்க?.." என்று தனது கேள்விகளை கேட்டாள்..
அவளது முதல் கேள்வியை காற்றில் பறக்க விட்டு, "நான் தினமும் லன்ச் க்கு அந்த வழியா தான் போவேன்..அட நமக்கு தெரிஞ்சவங்க குழந்தை அங்க இருக்கே!.."
"பார்ப்போமே னு தான் போய் பார்த்தேன்..இதிலென்னங்க தப்பு இருக்கு!.." என்று விளக்கம் கூறினான் கார்த்திக்..
அவனது விளக்கத்தில் அவனை கூர்மையாக ரூபிணி பார்க்க, "சார்..எல்லார் வீட்டு பிள்ளைங்க படிக்கற ஸ்கூலுக்கும் இப்படி தான் போய் பார்த்துட்டு வர்றீங்களோ??!!.." எனக் கேட்டுக் கொண்டே அமுதா அங்கே வந்தாள்..
"ஏங்க நான் தான் சொல்றேனே!.. நான் லன்ச் க்கு போற வழில போய் பார்த்துட்டு போனேன் னுட்டு.." என்று அமுதாவை பார்த்துக் கூறிய அவனது பதிலுக்கு,
"நம்ம சுசித்ரா மிஸ் குழந்தையும் தான் அதே வழில பக்கத்துல இருக்க க்ரச் ல விட்டு இருக்காங்க!.. அந்த பையனையும் போய் பார்க்குறீங்களா சார்ர்ர்!?.." என்று அமுதா மடக்கினாள்..
"என்னங்க அமுதா சொல்றத சரியா கேட்கலையா?!.. தெரிஞ்சவங்க குழந்தை னு சொன்னேன்.. எனக்கு அந்த டீச்சரையும் தெரியாது.. அவங்க குழந்தையும் தெரியாது!.." அவன் சாமர்த்தியமாக பதிலளிக்க..
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரூபிணி, "நீங்க தினமும் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுறதா சொல்றா!.. அதுக்கும் இதான் ரீசனா?.." என்று நிதானமாக கேட்டாள்..
அவளை திரும்பிப் பார்த்த அமுதா, "இது வேற நடக்குதா!!!?.." என்ற கேள்வியுடன் அவனை முறைத்தாள்..
"அட!.. என்ன ரூபிணி இது!.. நான் பர்ஸ்ட் போன அன்னிக்கு, பாப்பா சாப்பிட ரொம்ப அடம் பண்ணினா.. நான் ஊட்டவும் சட்டுனு சாப்டுட்டா னு அந்தம்மா சொன்னாங்க.."
"அதான் குழந்தை நல்லா சாப்பிடுமேனு போகும் போது அதையும் செய்றேன்!.." அதற்கும் ஒரு பக்க விளக்கம் அளிக்க..
இப்போது அவனை இன்னும் ஆராய்ச்சி பார்வை பார்த்த ரூபிணி, "சரி அதெல்லாம் விடுங்க!.. குழந்தை கிட்ட எதுக்கு உங்கள கார்த்திப்பா னு கூப்பிட சொல்லி இருக்கீங்க?!.." என அழுத்தமாக கேட்டாள் ரூபிணி..
இதற்கு என்ன பதில் சொல்வது என விழித்திருக்க, சரிக்கு சரி வாயாடிய அவன் வாய் மூடி முழித்து நிற்பதை கண்டு அமுதாவிற்கு சிரிப்பு கூட வந்தது..
"சொல்லுங்க. இதுக்கு என்ன விளக்கம் சொல்ல போறீங்க?" என்று மீண்டும் ரூபிணி அழுத்தமாக கேட்கவும்,
கார்த்திக் அதற்கு சற்று தயங்கி விட்டு, "சொல்லுவேன். ஆனா நீங்க அதை எப்படி எடுத்துக்குவீங்கனு தெரியலையே?" என்றான் தயக்கமாக.