• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 11

தரையிறங்கிய முகிலின் குளிரினால் கரும்பச்சை போர்வை போர்த்திய மலைகளின் இளவரசியின் பாதையில் பயணிக்கும் போது, வித்யாவின் எண்ணங்கள் அவளது பள்ளியின் கடைசி சுற்றுலாவில் சென்று நின்றது..

அன்று எத்தனை இன்பமாக, தோழியுடன் இயற்கையை ரசித்து பயணித்த அவளது மனம், இன்றோ எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை..

"இன்னும் கொஞ்ச தூரம் தான் டா பொம்முகுட்டி!.. நம்ம வீடு இருக்கற குவார்ட்டர்ஸ் வந்துடும்!.." என்று நித்யா கூறவும், அவள் புரியாமல் விழித்தாள்..

"ஓஓ.. உனக்கு தான் இவர் வேலை பற்றி தெரியாது இல்ல!..இவர் ரெயில்வேல வேலை பார்க்கறதால, நாங்க க்வார்ட்டர்ஸ் ல தான் தங்கி இருக்கோம்!.." என்று கூறி ஷக்தியின் பணியினை பற்றி எடுத்துரைத்தாள்..

இயற்கையின் கைகளில் மாறிய சூழலும், துருப்பிடிக்க இருந்த அவளது மனதில் சகோதரி விதைத்த நம்பிக்கை விதைகளும், நாட்கள் செல்லச் செல்ல, வித்யாவை ஆழமாக சிந்திக்க செய்து, ஓர் முடிவை எடுக்கச் செய்தது..

அதை தன் தமக்கையிடமும் உரைத்ததில், அவளது மனம் தெளிவடைந்ததை எண்ணி நிம்மதி ஆனாள் நித்யா..

அக்காவின் வீட்டிற்கு வந்து ஓரளவு பொருந்திய பின்,ஓர்நாள் வித்யா டிவியில் குழந்தைகளின் பாடல் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருக்க,

"நீ மே‌ற்கொ‌ண்டு படிக்க இருக்கறதா நித்யா சொன்னா மா?!.. என்ன படிக்கலாம் னு இருக்க டா?.. உனக்குனு ஒரு ஐடியா இருந்து இருக்குமே?!.." என்று ஷக்தி அவளிடம் கேட்டான்..

இத்தனை நாட்களும் அவள் தன்னிடம் பேச கூச்சப்படுகிறாள் என்றெண்ணி பழகுவதற்கு சிறிது இடைவெளி கொடுத்து இருந்தான் ஷக்தி..

இப்படியே இருந்தால் அதுவே நிரந்தர விலகலாகி விடும் என்றெண்ணி, அவளது படிப்பை கொண்டு அவளிடம் பேச்சை தொடங்கினான்..

ஆனால் திடுமென தன்னிடம் இயல்பாக அவன் பேசியதில் ஒவ்வாமை உணர்ந்த வித்யா, பதில் உரைக்காமல் எழுந்து சென்று விட்டாள்.. அவளது செயலில் ஷக்தியின் முகம் சுருங்கியது..

அவளது முகத்தில் தெரிந்த ஒவ்வாமையும், கணவனது சுருங்கிய முகமும், அவர்கள் உரையாடல் முழுவதும் கேட்டுக் கொண்டு, சமையலறையில் வேலையாக இருந்த நித்யா கவனித்தாள்..

சுற்றம் இருந்தும் தனியாகவே வளர்ந்த அவனது தனிமையை போக்கி, தாரமாக வந்து தாயான நித்யாவிற்கு, அவனது வாடிய முகம் வருத்தமளித்தது..

தங்கையின் ஒதுக்கமும் சிந்திக்க வைத்தது. அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்..

மறுநாள் அவளிடம் இயல்பாக சில விசயங்களை அலசி விட்டு, "உனக்கு அவர் கூட பேச பிடிக்கலையா பொம்முகுட்டி!?.." என்று யதார்த்தமாக வினவினாள் நித்யா..

"அதெல்லாம் இல்ல க்கா!.." என்ற அவளை கூர்ந்து பார்த்த தமக்கை, "யார்கிட்டயாவது உன் மனசுல இருக்கறத ஷேர் பண்ணினா தான் மனசு ரிலாக்ஸ் ஆகும் டா!.."

"நான் உனக்கு அந்தளவுக்கு க்ளோஸ்ஆ தோணலை னா அட்லீஸ்ட் உன்னோட ப்ரெண்ட் நம்பர் எதாவது இருந்தா அவங்க கிட்டயாவது பேசு!.." என்று அவள் சொன்னதும்..

"இப்போதைக்கு எனக்காக இந்த உலகத்துல இருக்கற ஒரே ஜீவன் நீ மட்டும் தானே க்கா!.. ஏன் இப்படி எல்லாம் பேசுற?!.." கண் கலங்க வித்யா கூறியதும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்..

"அப்ப உனக்கு என்ன தான் டா பிரச்சனை?!.. ஏன் நேத்து அவர் கேட்டப்ப மூஞ்சில அடிச்ச மாதிரி எழுந்து போன ?!.. அவர் முகமே கசங்கி போச்சு!.."என்று கணவனுக்காக பேசிய அவள்,

"உனக்கு அவரை பற்றி தெரியாது டா.. அவரோட அம்மா இவர் கைக்குழந்தையா இருந்தப்பவே இறந்துட்டாங்க.. அப்பா மறுமணம் பண்ணி வந்த சித்தியோட வளர்ப்புல தான் வளர்ந்தாரு.."

"ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் ஒன்னும் தெரியல.. அவங்களுக்கு குழந்தைங்கனு வந்த அப்றம் தான் அவங்க விலகலை காட்ட ஆரம்பிச்சாங்க!.."

"அவரோட அப்பாவும் கொஞ்சம் வருசத்துல தவறிட, இவர் தனிமைல தான் இருந்தார்.. அதுக்கு அப்புறம் அவங்களோட பெரிய ஒட்டுதல் இல்ல.. இவரோட படிப்பு, சாப்பாடு அதுக்கு எல்லாம் ஒரு குறையும் வைக்கல!.."

"ஆனா மனுசனுக்கு ஆதாரமான அன்புக்கு பஞ்சம்!.. சுற்றியும் சொந்தம் இருந்தும் தனியா தான் இருந்து இருக்கார்!.."

"நான் இவரோட வாழ்க்கைல வந்தப்புறம் தான் அவர் முகத்துல ஒரு நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையும் பார்க்கிறேன்!.." என்று

கணவனது கதையை நித்யா கூற, கேட்டுக் கொண்டிருந்த வித்யாவிற்கு மனம் கனத்தது..

யாருமே இல்லை என்ற நிலை கூட ஏற்றுக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ளலாம் ஆனால் அருகிலேயே சொந்தம் இருந்தும் யாருமற்றவராய் இருப்பது கொடுமை!.. என்று தோன்றியது..

"உன்னையும் தன்னோட உறவா நினைச்சு தான் உன்கிட்ட படிப்பை பற்றி கேட்டார்!.. ஆனா நீ அப்படி பதில் சொல்லாம எழுந்து போனதும் அவர் முகமே வாடி போச்சு!.."

"அதையும் வெளியே காட்ட மாட்டார்..உன்மேல கோபம் கூட படமாட்டார்.. ஏன்னா அவருக்கு இந்த மாதிரி எல்லாம் பழக்கம் தான்!.. ஆனா மனசுக்குள்ள மறுகுவார்!.."

"எனக்கு மட்டும் தான் அது புரியும்.. உன்னோட பதில் அவரை ஹர்ட் பண்ணுச்சு னு என்கிட்ட கூட எதுவும் சொல்லலை!.." என்று நித்யா உரைக்கவும், தங்கைக்கு சற்று குற்ற உணர்வு கூட வந்தது..

"இப்ப சொல்லு உனக்கு என்ன தான் பிரச்சனை?!.. அவர் கூட பேச பிடிக்கலையா?.. அப்படி இருந்தா கூட ஓபனா சொல்லு டா பொம்முகுட்டி!.."

"உனக்கு பிடிக்கலனு அவர் கிட்ட சொன்னா கூட , கண்டிப்பா ஒதுங்கி போயிடுவார்.." என்று கேட்க, சற்று தயங்கிய வித்யா,

பின்னர், "எனக்கு இந்த ஆண்களை கண்டாலே வெறுப்பா இருக்கு க்கா!.. ஒரு இன்செக்யூர் பீல் தான் வருது!.." என்று தன் மனநிலையை அவள் உரைக்கவும் நித்யா யோசனை ஆனாள்..

இது ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியதன் அவசியம் உணர்ந்து, 'ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. ஏதோ சில ஆண்கள் செய்யும் தவறிற்கு,

இருவரும் சேர்ந்து இருக்கும் சமுதாயத்தில் வாழும் நாம், அனைவரையுமே வெறுக்க இயலாது..' என்று அவளிடம் அன்று போல் இன்றும் நிதர்சனத்தை விளக்கி கூறினாள்..

மறுநாள் ஷக்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்த போது, அவனருகில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவன், வித்யா நிற்பதை கண்டு,

"எதாவது வேணுமா டா?!.." என்று பாசமாக கேட்கவும், தான் அவமானப்படுத்திய பின்னும் அன்புடன் கேட்கும் அவன் மனதை புண்படுத்தியதை எண்ணி வருந்தினாள்..

"ஸாரி அத்திம்பேர்!.. நான் அப்படி பண்ணி இருக்க கூடாது!.." என்று மன்னிப்பைக் கேட்க,

"பரவால்ல மா!..உன் மனநிலை என்ன னு தெரியாம கேட்டது என் தப்பு தான் டா!.." என்று அதை இயல்பாய் ஏற்கவும், வித்யாவின் முகம் குற்ற உணர்வை காட்டியது..

அதை கண்ட ஷக்தி, "நீ ஃபீல் பண்ற அளவுக்கு எல்லாம் நான் சென்டிமெண்ட் பீஸ் கிடையாது.. உங்கக்கா என்னை காமெடி பீஸ்ஆ தான் பார்ப்பா!.." என்று அவள் மனநிலை மாற்ற முயன்றான்..

அவனது பேச்சில் வித்யாவின் இதழ்களில் புன்முறுவல் பிறக்க, அவன் சொன்னதை கேட்ட நித்யா,

"இப்ப உங்கள காமெடி பீஸ்ஆ பார்த்து என்ன பண்ணிட்டேனாம்!?.. மச்சினி கிட்ட குற்ற பத்திரிக்கை வாசிக்கிறீங்க!.."எகிறிக் கொண்டு வந்தாள்..

அவள் கேட்டதில் பயந்தது போல் நடித்த ஷக்தி, "எனக்கு நேரமாச்சு மா நான் வர்றேன்!.. வந்து பேசிக்கலாம்!.." என்று வித்யாவிடம் கூறிவிட்டு ஓடியே விட்டான்..

அவனது செயலில் வெகு தினங்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தாள் வித்யா.. தங்கையின் சிரிப்பை ஆதுரத்துடன் பார்த்தாள் நித்யா..

அதன்பின் நித்யா தங்களது தனிமையில் ஷக்தியிடம், தங்கையின் மனநிலையை எடுத்துரைக்க, மனநல ஆலோசகரை அணுகி, அவளது மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வந்தனர்..

இதற்கிடையே அவளது ஆசைப்படி டி.எட் படிக்க வைக்க அவளை கல்லூரியிலும் சேர்த்து விட, புது மனிதர்களோடு ஏற்பட்ட பழக்கமும் அவளது மன மாற்றத்திற்கு துணை புரிந்தது..

தனது அக்கா, ஷக்தியின் நிலையை விளக்கிய பின் அவனுடனும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக பழக ஆரம்பித்து,

"என்ன அத்திம்பேர், அக்கா இன்னிக்கு அடி வெளுத்துட்டாளா?!.." என்று கேட்டு கேலி பேசும் அளவுக்கு வந்தாள்..

இருவருக்கும் அவளது மாற்றம் ஒரு மன நிறைவை கொடுத்தது.. பங்கஜம் மாமியும் அவரது கணவர் இல்லாத நேரத்தில் அவ்வப்போது இவர்களிடம் பேசுவதுண்டு..

தாரணியும், சென்னையில் இருந்து வேலைக்கு இடையில் விடுப்பு எடுத்துக் கொண்டு கொடைக்கானல் வந்து செல்ல,

வித்யாவின் வாழ்க்கையில் வசந்தம் மீண்டும் துளிர் விட்டு தழைக்க துவங்கியது..வித்யாவின் கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் இருந்தாள்..

மணமான பின் ஒன்றரை வருட பிரிவிற்கு பிறகு, தங்கள் வாழ்க்கையை தொடங்கிய தம்பதியினர், ஆவலோடு எதிர்பார்த்த தங்களது வாரிசின் வருகையில் மனம் கொள்ளா மகிழ்ச்சி அடைந்தனர்..

கல்லூரி முடிந்து வீடு திரும்பிய வித்யாவை , நித்யா கருவுற்ற மகிழ்ச்சியான செய்தியே வரவேற்க, ஆனந்த கூத்தாடினாள் தங்கை..

'அதெப்படி நீ சந்தோஷமாக இருப்பாய்!?' என்று மீண்டும் விதி வித்யாவின் வாழ்க்கையில் ஆடிப் பார்க்க நினைத்ததை பாவம் அவள் அறியவில்லை..

✨✨✨✨✨✨✨✨✨✨✨

அமுதாவின் வீட்டில் அவர்களை இறக்கிவிட்டு தன் தாயிடம் அவளது நிலையை கூறிய அமுதா, "நீ இங்க ரெஸ்ட் எடு ரூபிணி!.. பாப்பாவை அம்மா பார்த்துப்பாங்க!.."

"நான் ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சப்பறம் வந்து உன்னோட திங்க்ஸ் எடுத்துட்டு வர்றேன்!.. ரெண்டு நாள் இங்க ரெஸ்ட் எடு.. நான் லீவு சொல்லிடுறேன் என்ன!.." என்று ரூபிணியிடம் சொல்லி விட்டு சென்றாள்..

"மதி பாத்தி!!!.." என்று குழந்தை அமுதாவின் தாய் கோமதியிடம் தாவிக் கொண்டு,

"அம்மாக்கு காச்சல்!.. தாக்தர் கித்த போய் ஊசி எல்லா போத்தாங்க!.. பாவம் அம்மா!.. வைக்கும்ல.." என்று நடந்ததை கூறி வருத்தமாக கூறினாள் சின்னவள்..

"அச்சோ!!.. அப்படியா டா செல்லம்!.. சரி அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்.. பாட்டி உனக்கு சாப்பாடு ஊட்டுறேன்!.. நீ பாட்டி கூட சமர்த்தா இருக்கியா?!.." என்று கோமதி கூறியதற்கு குட்டியும் சமர்த்தாய் தலையசைத்து சம்மதித்தது..

பள்ளி வந்த அமுதாவிற்கு அதன் பின் தொடர் வகுப்புகள் இருக்கவே, கார்த்திக்கை சந்திக்க இயலாமல் போனது..

அன்றைய தினம் அமுதாவின் வீட்டில் ஓய்வில் இருந்த ரூபிணிக்கு உடல்நலம் சற்று தேறவும், தன் வீட்டிற்கு செல்வதாக கூறினாள்..

"இப்ப அங்க என்ன உனக்கு ஆக்கிப் போட்டு உன்னையும் பாப்பாவையும் பார்த்துக்க ஆளா இருக்கு!.. ஒழுங்கா உடம்பு நல்லா குணமான அப்றம் போ." என்ற அமுதாவின் அரட்டலில் மறுநாளும் அங்கே தங்கிவிட்டு, நன்றாக உடல் தேறியதும் தன் வீட்டிற்கு திரும்பினாள்..

அங்கே அமுதாவின் வீட்டில் இருக்கும் போது, பிள்ளையின் 'கார்த்திப்பா!' என்ற அழைப்பை பற்றி கேட்டால் அவர்கள் முன்னிலையில் ஏதாவது அவனை பற்றி கூறுவாளோ என்றெண்ணி அமைதியாக இருந்தாள் ரூபிணி.

தன் வீட்டிற்கு வந்ததும், மெதுவாக மகளிடம், "ஏன்டா அன்னிக்கு அவரை கார்த்திப்பானு கூப்பிடு செல்லம்" என்று வினவினாள் தாய்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top