• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 10

சில வருடங்களுக்கு பிறகான அந்த பிரத்யேக அழைப்பில் கண்களை சிரமத்துடன் விழித்த வித்யா மெதுவாக, "அக்கா!!!.." என்றிட..


"சொல்லு டா பொம்முகுட்டி!.. என்ன டா இது!?.. என்னாச்சு?!.. எப்படி இதெல்லாம்?!.." என்று ஒன்றும் புரியாமல் வினவினாள்..

வித்யா மெதுவாக நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் கூற அவளது சகோதரிக்கு நெஞ்சம் எல்லாம் பதறியது.. தன் தங்கையின் மனமும் உடலும் அந்நிலையில் பட்ட பாடு எண்ணி கண்ணீர் வடித்தாள்..

"கடவுளே!.. பூ மாதிரி இருந்த பொண்ணை இப்படியா இரக்கமில்லாமல் சோதிப்பாய்!.." என்று கடவுளை நிந்தித்தாள் நித்யா..

தனக்கென ஒரு ஜீவன் வந்ததும் சற்று ஆசுவாசமாய் உணர்ந்த வித்யா மீண்டும் மயக்கமடைய, பதறிய நித்யா மருத்துவரிடம் ஓடினாள்..

இது சோர்வினால் வந்த மயக்கம் என்று மருத்துவர் சோதித்து, பின்னர் உரைத்ததும் சற்று அமைதியான நித்யா, அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிடலானாள்..

தமது மானம் காக்க, என்றெண்ணி தமது உயிரோடு மகளின் உயிரையும் எடுக்க நினைத்த பெற்றோர் மீது கோபம் ஒருபுறம் இருந்தாலும், இத்தனை கோழையாகி போயினரே என்ற ஆதங்கம் தான் மேலோங்கியது..

எந்த விசயம் வெளியே தெரிந்தால் மானக்கேடு என்று எண்ணினார்களோ, அதே விசயம் வேறு விதமாக மாறி அவளுக்கு கலங்கத்தை ஏற்படுத்தியதே என தங்கைக்காக மனம் நொந்தாள்..

பின்பு, உண்மை என்னவென்று தெரியாமல், இத்தனை வருடம் பார்த்து பழகிய அவளைப் பற்றியே கீழ்தரமாக பேசும் இவர்கள், கற்பழிக்கப்பட்டாள் என்றால் மட்டும் பரிதாபமா படப்போகிறார்கள்!..

அவர்களது கற்பனைப்படியே இருக்கட்டும்.. இனி ஆக வேண்டிய காரியத்தை பார்க்கலாம் என்று யோசித்த நித்யா,

வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கும் தன் கணவனிடம் அவசரம் தங்கையை காண செல்கிறேன் என்று மட்டுமே உரைத்து இருந்தாள்..

மாமியும் அவளது பெற்றோர் இறப்பை பற்றி எதுவும் கூறாமல், 'தங்கை மருத்துவமனையில், உடனே வா அவசரம் அவசியம்' என்று தந்தி போல் கூறியதில் என்னவென்று தெரியாமல் ஓடி வந்திருக்க,

இப்போது தாய் தந்தையின் இறுதி காரியங்கள் செய்ய வேண்டி தனது கணவனுக்கு அழைத்து நடந்ததை சுருக்கமாக சொல்லி வர செய்தாள்..

ஷக்தியும் விடுப்பு எடுத்துக் கொண்டு அன்று இரவே வந்து சேர, அனைத்தும் துரிதமாக நடந்தது..

அவளது தாய் தந்தையின் இறுதிச் சடங்குகளில் ஷக்தி மகனாக நின்று அனைத்தையும் செய்ய இது எதுவுமே அறியாமல் மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்தாள் வித்யா..

அக்கம்பக்கத்தினர் நித்யாவையும், ஷக்தியையும் புறம் பேசினாலும் எதையும் கண்டு கொள்ளாமல் தங்களது கடமையை முடிக்க, அனைத்தும் முடிந்த பின் வித்யா உடல்நிலை தேறி வீட்டிற்கு அழைத்து வரபட்டாள்..

அறையில் படுத்திருந்த வித்யா எங்கோ பார்த்து, எதையோ வெறித்துக் கொண்டு இருக்க,

"என்னமா இப்படி உட்கார்ந்து இருக்க!?.. உன் மனசுல அப்படி என்ன தான் டா ஓடுது?!.." என்று தங்கையை கவலையாக பார்த்து கேட்டாள் நித்யா..

"ஏன்க்கா அம்மா அப்படி பண்ணுனாங்க?!.. நான் என்ன தப்பு பண்ணுனேன்?!.. அந்த சிசு என்ன தப்பு செய்துச்சு?!.. இல்ல னு ஏங்குற எத்தனையோ பேர் இருக்கைல என் வயித்துல வந்து ஏன் உருவாகி உயிர்விட்டுச்சு?!." என்று தன் மனதின் கேள்விகளை கேட்டாள் அவள்..

"யார் மேல தப்பு னு சொல்றது பொம்முகுட்டி!..அப்பா மட்டும் அந்த மெசேஜ் பார்த்து வந்திருந்தா இது எதுவுமே நடந்து இருக்காது!.."

"ஆனா உன்னோட விதி இப்படித்தான் னு இருக்கும் போது நம்மால என்ன பண்ண முடியும்?!..நடந்ததையே நினைச்சு மறுகாம அடுத்து என்ன னு யோசிக்கிறது தான் புத்திசாலித்தனம்.."

"எல்லோரோட வாழ்க்கையிலும் விதி விளையாட தான் செய்யுது.. ஆனா அதை தாண்டி யோசிச்சு அதிலிருந்து வெளியே வர்றவங்க தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்!.."என்று அவளது கன்னம் பற்றி திருப்பி தன்னை காண செய்தாள்..

"ஏங்குற எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிறதில்லையே!.. எல்லா பிறப்புக்கும் ஒரு கடமை இருக்கு!.. உனக்குள்ள வந்த சிசு க்கு உன்னோட உயிரை காப்பாத்தறது தான் எழுதி இருந்ததோ என்னவோ!?.."அவளது கண்களை ஆழ நோக்கி,

"வந்த வேலை முடியும் போது போகிறது தானே சரி!.. நீ மனசை போட்டு குழப்பாம அடுத்து என்ன செய்வது னு யோசி!.. பொழியற மழை ஒரே இடத்தில் தேங்கி நின்றால் அது குட்டை!.. ஓடினா தான் நதி!.."

"உலகம் தெரிய, மனிதர்களை புரிய, ஓடினா தான் முடியும்!.. நடந்ததை எல்லாம் பாஸிங் க்ளொட்ஸ் மாதிரி மறந்துட்டு, அடுத்த அடி எடுத்து வைக்க மனசை தயாராக்கு டா!.."

"நீ குட்டை மாதிரி தேங்கி அழுக்காகி ஆவியாக போறியா?.. இல்ல நதியா மாறி போற இடங்களை வளமாக்க போறியா னு டிசைட் பண்ணு டா பொம்முகுட்டி!.." என்று

குருஷேத்திரத்தில் கலங்கி நின்ற அர்ஜுனனுக்கு, கிருஷ்ணன் செய்த உபதேசம் போல், தங்கையின் சிந்தனையை சீராக்கி நேராக சிந்திக்க செய்தாள் தமக்கை எனும் தாய்!..

"சரி!.. இப்ப சாப்பிட வா!.. மாத்திரை சாப்பிடனும்ல!.." என்று விட்டு அவள் சென்றிட, தன் அக்காவின் வார்த்தைகளை மனதில் உருப் போட்டாள் திவ்யா..

இரவு முழுவதும் அவளது காதுகளில் சகோதரியின் சொற்களே ஒலித்தன..
அதையே மனதில் இருத்தி, விடியலின் ஒளியில் அவளது மனதிலும் புது ஒளி பிறந்தது..

என்னதான் இயல்பாக இருக்க மனதை விரட்டினாலும், சூடு கண்ட பூனை போல, ஆண்களை கண்டாலே வரும் அதே தயக்கம் வித்யாவிற்கு ஷக்தியிடம் தோன்ற, அவனிடம் அதிகமாக எதுவும் பேசுவதும் இல்லை.. பார்ப்பதும் இல்லை..

பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண், யாரிடமும் சகஜமாக பழக அனுமதி மறுக்கப்பட்டவள் என்பதால் புதிதாக பார்க்கும் தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று எண்ணினான் ஷக்தி..

"உன் அத்திம்பேர்க்கு லீவு முடிய போகுது டா பொம்முகுட்டி!.. நீயும் எங்க கூட கொடைக்கானலுக்கு வந்துடுறியா?!.. உனக்கும் ஒரு சேன்ஜ் ஆ இருக்கும்!.." என்று நித்யா தன் தங்கையிடம் கூறவும்..

அந்நிகழ்வுக்கு பிறகு தந்தையையே தூர நிறுத்திய அவள் மனது, யாரென்று தெரியாத ஷக்தியை எண்ணி அவனை அரைப்பார்வை பார்த்த வித்யா சற்று தயங்கினாள்..

ஆனாலும் சில வருடங்களுக்கு பிறகு தன் சகோதரியுடன் மீண்டும் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற எண்ணம் மேலோங்க, தனது சம்மதத்தை தெரிவித்தாள் அவள்..

பின்பு அவளது உடைமைகள் அனைத்தும் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கும் ஒரு வழி செய்துவிட்டு, அவ்வூரில் இருந்து கிளம்பினர்..

பல ஏற்றங்களும், திடீர் திருப்பங்களும் கொண்ட மலைகளின் இளவரசி, வித்யாவின் வாழ்விலும் அதே போல வாரி வழங்க காத்திருக்க, அவர்களது கொடைக்கானல் பயணம் தொடங்கியது!..

***************

போட்டிகள் முடிந்து அதில் வெற்றியும் கண்டு, அதன்பின் வந்த செமஸ்டர் தேர்வுகளும் முடிந்து தினசரி கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த சமயம், பாலா தன் நண்பன் ரூபேஷிடம்,

"ஏன் டா நண்பா நான் ஒன்னு கேட்பேன்!.. நீ கோவிச்சுக்காம பதில் சொல்லனும் சரியா?!.." என்று முன் கூட்டியே உத்திரவாதம் வாங்கினான்..

"நீ கோபம் வராத மாதிரி கேளு.. நான் கோபப்படல சரியா!.." என்ற ரூபேஷை, முறைத்தான் பாலா..

"சரி..சரி.. என்ன னு விசயத்தை சொல்லு டா எப்போ பாரு இழுத்துட்டே இருக்க வேண்டியது!.." என்று அவன் சலித்துக் கொள்ள,

"இல்ல.. நீ ஒரு பொண்ணை பார்த்துட்டு இருந்தியே.." என்று அவன் ஆரம்பிக்கவும், அவனை தீர்க்கமாக பார்த்தான் ரூபேஷ்..

"இப்படி கண்ணாலேயே எரிச்சா அப்படி எப்படி பேச வரும்!?.." என்று அவன் திரும்பிக் கொள்ள, "சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி!.." என்று அழுத்தமாக கூறினான் ரூபேஷ்..

"இல்ல கொஞ்ச நாளா அந்த பொண்ணை பார்க்கவே முடியலையே!?.. உனக்கு ஏதும் கஷ்டமா இல்லையா!?.." என்று நண்பனின் மனம் அறியக் கேட்டான் பாலா..

"நான் அன்னைக்கே சொல்லிட்டேன்.. தேவையில்லாம கற்பனை பண்ணாத னுட்டு.. அந்த பொண்ணு ப்ளஸ்டூ தானே.. படிப்பை முடிச்சு வேற எங்கேயாவது காலேஜ் போயிருக்கும்!.."

"அதோட வேலையை அது பார்க்குது.. உனக்கு என்ன டா பிரச்சினை!.. நான் தான் சொன்னேனே அந்த பொண்ணு பேசறது சின்ன பிள்ளைங்க பேசறத போல க்யூட்டா இருந்துச்சு.."

"அதான் பார்த்தேன்..மத்தபடி நீ கற்பனை பண்ணுன மாதிரி ஒன்னும் இல்ல னு சொன்னேன் தானே!.. அப்றம் ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?!.." என்று அவனை கூர்ந்து பார்த்து கேட்க..

"இல்ல டா.. அப்றம் அந்த பொண்ணு வராம இருந்த கொஞ்ச நாள் நீ அப்செட் ஆ இருந்த மாதிரி தெரிஞ்சது.. அதான் இப்ப கேட்டேன்!.." என்று தன் கேள்விக்கான காரணத்தை பாலா கூறவும்..

"நீ நல்லா ரசிச்சு டிவில போட்ட படம் பார்த்துட்டு இருக்கும் போது பவர்கட் ஆனா உனக்கு இரிடேட் ஆகாதா?!.. அதுக்கு அப்றமும் டிவியையே வா பார்த்துட்டு சோகமா உட்கார்ந்து இருப்ப!!?.."

"அது மாதிரி தான் இதுவும்.. அந்த பொண்ணு பேசறதை தினமும் ரசிச்சுட்டு இருந்தேன்.. திடீர்னு காணோம்னதும் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு.."

"இப்ப அது பழகிடுச்சு.. அந்த நினைப்பு கூட இல்ல.. ஆமா.. இத்தனை நாள் இல்லாம திடீர்னு நீ ஏன் அந்த பொண்ணை பற்றி கேட்குற??!.." என்று சந்தேகமாக ரூபேஷ் கேட்கவும்,

சுதாரித்த பாலா, "சும்மா தான் டா கேட்டேன்!..உன் மனசுல அந்த பொண்ணு மேல் எதுவும் இன்ட்ரெஸ்ட் இருக்கா னு தெரிஞ்சுக்க தான்!.." என்றவனை காண்டான பார்வை பார்த்த ரூபேஷ்,

"முதல்ல இந்த மாதிரி பொண்ணுங்களை பார்த்தாலே அது காதல் தான் னு கதை கட்டுறதை நிறுத்து டா!.. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு வழி பண்ண வேண்டியது!.." என்று அவன் கோபப்பட..

"ஸாரி மாப்ள!.. என்னோட சிற்றறிவுக்கு அவ்ளோ தான் எட்டுச்சு!.. இனிமே இது மாதிரி யோசிக்காம எட்டுற உயரத்துல ஏணி மேல ஏறி நின்னுக்குறேன்!.. ஹி ஹி!.." என்றான் பாலா..

அவனது அசட்டுச் சிரிப்பைக் கண்டு, "சகிக்கல!!.." என்று விட்டு ரூபேஷ் திரும்பிக் கொள்ள, ஆசுவாச பெருமூச்செறிந்த பாலா தன் மனதிற்குள்..

'நல்லவேளை உன்னோட மனசுல அந்த பொண்ணு மேல எந்த எண்ணமும் இல்ல டா!.. அப்படி ஏதாவது இருந்தாலோ,அல்லது அவளுக்கு நடந்ததை தெரிஞ்சாலோ நீ தாங்க மாட்ட நண்பா!..' என்று வருத்தமாக சொல்லிக் கொண்டான்..

அன்று, போட்டியில் கலந்து வெற்றி பெற்ற நண்பனுடன் அதை கொண்டாடிவிட்டு, அவனது அறையில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு, பாலா திரும்பி வந்த போது தான் சீனிவாசன் அவனை நிறுத்தியது..

அவருடன் சென்று பார்த்த பாலா சத்தியமாக அந்த பொம்மை பெண்ணை அங்கே அந்த நிலைமையில் எதிர்பார்க்கவில்லை..

அவளை அந்த நிலையில் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்த பாலா, அவளுக்கு தன் நண்பரின் சகோதரியிடம் ட்ரீட்மெண்ட் க்கு சொல்லியதோடு,

அனைத்தும் முடித்து அவளை அவர்கள் அழைத்து செல்லவும், பின் தொடர்ந்து அவர்களது ஏரியாவை தெரிந்து கொண்டான்..

அதன் பின் அவ்வப்போது அங்கேயுள்ள சைக்கிள கடைக்கு ஏர் அடிப்பது போல் சென்று கவனிக்க, சில நாட்களாய் பூட்டப்பட்ட வீட்டை கண்டு, அந்த சைக்கிள் கடைக்காரரிடம் விசாரித்தான்..

அவர் கூறிய செய்தியில் அதிர்ந்த அவன், 'அன்றே தீபிகா க்கா சொன்னதை அவர் செய்யவில்லை போலவே!!' என்றெண்ணி அவர் மீது கோபம் கூட வந்தது..

சிறு பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதை எண்ணி வருந்திய அவன், தன் நண்பனிடம், அவன் அவளை காதலிப்பது போல அவளை பற்றி கூறியதால்,

அது எதுவும் அவனது மனதில் பதிந்து விட்டால் அவனது மனமும் வேதனை அடையுமே என்று எண்ணியே அவனிடம் இயல்பு போல விசாரணை செய்தான்.

ஆனால் நண்பன் அதை கடந்து வந்ததை எண்ணி சற்று நிம்மதி அடைந்தாலும், அவளது எதிர்காலத்தை எண்ணி அவன் மனம் வருந்தாமல் இல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top