Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
இறுதி பாகம் 31
“25 வருடங்களுக்கு பிறகு தனது வீட்டிற்கு வந்த விநாயகம் கண்ணகியிடம் பேசிட்டு வந்த விஷயத்தை பற்றி தம்பியிடம் சொல்ல,அதைக் கேட்டவர்களோ ரொம்ப சந்தோஷப்பட்டனர்”
“மகன் எப்போது வருவானென்று பெற்றவர்கள் காத்திருக்க,வழக்கம் போல் இரவு 11 மணிக்கு வந்தவன் குளித்துவிட்டு கடமைக்கு சாப்பிடுவதற்காக வர,சாப்பாட்டை பரிமாறிய சீதா,வேந்தா உன்னிடம் ஒரு நல்ல விஷயம் சொல்லணுமென்றார்”
கண்ணில் உயிரே இல்லாமல் நிமிர்ந்து பார்த்தவனிடம்,நாளைக்கு கண்ணகி மவளை பொண்ணு பாக்குறதுக்கு நம்ம மெட்ராசுக்கு போகணும் என்கவும்,அதைக் கேட்டவன் என்னம்மா சொல்றீங்களென்று சந்தோஷத்தில் அதிர்ந்தவனின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை பெற்ற தாயாக பார்த்த சீதாவுக்கும் அழுகை வந்தது.
“நாளைக்கு போய் பொண்ணு கேட்டு,அப்படியே கையோட பூ வச்சுட்டு வந்துடலாம்”
அடுத்த முகூர்த்தத்தில் கல்யாண தேதியை வச்சுக்கலாம்னு உன்னுடைய ரெண்டு அப்பாவும் முடிவு பண்ணியிருக்கிறார்கள் கண்ணு என்கவும்,சந்தோஷத்தில் அதிகமாகவே சாப்பிட்டு போய் தனது அறையில் படுத்தவனுக்கு இத்தனை நாளில்லாத தூக்கம் இப்பொழுது வந்தது.
அதிகாலை நாலு மணிக்கெல்லாம் மகனை வந்து எழுப்பி விட,இத்தனை நாள் தனது வெளித்தோற்றத்தில் கவனமில்லாமல் இருந்தவனோ தாடி மீசையை ட்ரிம் பண்ணி குளித்து ரெடியாகி வெளியே வரும் மகனை பார்த்த இருவருக்கும் சந்தோஷத்தில் அழுகை வந்தது.
“அந்த நேரம் மனைவியோடு அங்கு வந்த விநாயகம் எழிலுயென கையை நீட்ட,வேகமாக போய் தனது பெரியப்பாவை அணைத்துக் கொண்டான்”
இப்பதான் என் புள்ள முகத்துல சிரிப்பு வருது கனி என்றவர் சந்தோஷமா இரு கண்ணு,”பெத்த அப்பன் அமைதியாக இருந்தாலும் பெரியப்பன் அப்படியே இருந்திட மாட்டேனென்றார்”
“பின்னர் இரண்டு காரில் ஏறி புறப்பட்டவர்கள் காலை 11:00 மணிக்கெல்லாம் சென்னையிலிருக்கும் சீவகன் வீட்டுக்கு வந்து விட்டனர்”
“முதல் நாள் இரவு தான் மலரிடம் பொண்ணு பார்க்க வரும் விஷயத்தை சொல்ல,வேண்டாமென்று சொல்வதற்கு காரணங்கள் இல்லாததால் சரிமா என்றாள்”
மலரை கூப்பிட்டு வாங்க என்கவும்,ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தன்னவளை பார்க்க போகும் அந்த நிமிடத்திற்காக வேந்தனும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான்.
“அதிக அலங்காரமின்றி நீலகலர் பட்டுப்புடவையில் அளவான நகைகளோடு வந்தவளை பார்த்தவனுக்கு திகட்டவில்லை”
பின்னர் சம்பிரதாயபடி எல்லாருக்கும் டீ கொடுக்க சொல்ல,மலரும் கொடுத்துக் கொண்டே வரவும் இதுதான் மாப்பிள்ளை என்று பலராமன் சொல்ல,தன்னை நிமிர்த்து பார்த்தவளுக்கு வெட்கம் வந்து கன்னம் சிவப்பதை பார்த்தவனுக்கு,முதன்முதலில் கோயில் பார்த்ததும் இப்படி தானே சிவந்தாளென்ற ஞாபகம் வந்தது.
மே 20 ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறித்தவர்கள் பொண்ணு வீட்டில் கையை நனைத்து விட்டு,அவர்களிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டனர்.
“வழக்கம்போல் இருவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்”
தன்னவளுக்கு நினைவு வந்து அவளின் பிரத்தியோக அழைப்பான அந்த இரண்டு எழுத்து சொற்களை கேட்க தான்,அவன் உயிர் கூடு இந்த நிமிடம் வரை தவித்துக் கொண்டிருக்கிறது.
கல்யாணத்துக்கு 10 நாளைக்கு முன்பே மலர் குடும்பம் பொள்ளாச்சிக்கு வந்துவிட்டது.
இரண்டு வீட்டிலும் பந்தல் காலூன்றி 7 நாள் நலுங்கை சிறப்பாக செய்து முடித்தனர்.
விடிந்தால் திருமணம் என்பதால் முறைப்படி பொண்ணழைப்பதற்காக விநாயகத்தின் பெரிய பையனும் அவன் மனைவி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலரோடு பக்கத்து தெருவில் இருக்கும் பலராமன் வீட்டிற்கு வந்தனர்.
“அங்கு பொண்ணுக்கு பரிசம் போட்டு முடித்ததும் நல்ல நேரத்தில் மலரை அழைத்துக் கொண்டு வேந்தன் வீட்டிற்கு வந்தனர்”
மணமகள் அழைப்பிற்கான பாடலும் ஒலிக்க,சில சம்பிரதாயங்களை செய்து விட்டு மலரை வீட்டுக்குள் அழைத்துப் போய் அங்கிருந்த பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார்கள்.
பின்னர் இரவு டிபன் பரிமாறப்பட சாப்பிட்டு அவர்களுக்கான அறைக்குள் சென்று படுத்துவிட்டனர்.காலை ஆறு டூ ஏழு மணிக்கு முகூர்த்தம் என்பதால் அதிகாலை 4 மணிக்குலாம் மலரை எழுப்பி விட்டு குளிக்க அனுப்பினார்கள்.
அவளும் குளித்திட்டு வந்தவுடன் பூஜை அறையிலிருக்கும் கூரப்புடவையோடு மற்ற பொருள்கள் அடங்கிய தாம்பாளத்தை எடுத்து வந்த கனி,ரூம் கதவை தட்ட,மதி போய் கதவை திறக்கவும்,இதை கட்டிக்க சொல்லு கண்ணு,கோவில்ல தான் தாலி கட்டுறதென்கவும் சரிங்கத்தை என்றாள்.
“பியூட்டிஷனும் புடவையை கட்டிவிட்டதும் பின்னர் அவளோடு அம்மன் கோயிலுக்கு வந்தார்கள்”
வேந்தனின் பக்கத்தில் மலரை உட்கார வைத்ததும்,வேத மந்திரங்கள் ஓத,சாமி சாட்சியாக சொந்த பந்தங்கள் முன்னிலையில் கெட்டி மேளம் ஒலிக்க மூன்று முடிச்சை போட்டவனின் மனமோ,ஒரு முறையாவது சொல்லி விடுடி?
“அந்த வார்த்தைக்காக தான் டி தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்”
மெட்டியை போட்டு விடுங்கோ என்று ஐயர் சொல்ல,தன்னவளின் பாதத்தை கையிலேந்தியவன் பூ போன்ற விரல்களில் மெட்டியை போட்டு விட,அவனின் வலிமையான கரங்களின் அழுத்தத்தில் பெண்ணவளோ சிலிர்த்து போனாள்.
பின்னர் வீட்டிற்கு வந்ததும் மலருக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டதும்,அலங்கரிக்கப்பட்ட மேடையில் பொண்ணு மாப்பிள்ளை வந்து உட்கார,சொந்த பந்தங்களும் சீர் செய்ய மேடைக்கு வந்தனர்.
“எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் சம்பிரதாயப்படி மணமக்களை பலராமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்”
மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி பேரன் பேத்தியை வீட்டிற்குள் அழைத்துப் போன வள்ளியம்மை பாலும் பழத்தையும் கொடுக்க நீ குடித்துவிட்டு கொடு என்று மனைவியிடம் நீட்டினான்.
“அவளும் குடித்துவிட்டு நீட்ட,இப்பொழுது வேந்தன் குடிக்கவும் மலரின் தோழிளோ ஓஹோ அப்படியா சங்கதியென்று சிரித்தார்கள்”
மூன்றாவது நாள் மனைவியோடு தனது வீட்டிற்கு வந்து விட்டான்.அன்று இருவருக்கும் சாந்தி முகூர்த்தத்துக்கான ஏற்பாடும் நடந்தது.
“நேரமும் கடந்து செல்ல சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் மலருக்கு நலுங்கு வைத்ததும் மதியோடு அவளை குளிக்க அனுப்பினார்கள்”
தங்கையின் முகத்தில் இருக்கும் கலவரத்தை பார்த்தவள் இது வழக்கமான சடங்கு டா.வாழ்க்கையை நீங்கள் விரும்பும்போது தொடங்குங்கள் என்றாள்.
பின்னர் மலரும் குளித்துவிட்டு வந்ததும் தங்கைக்கு அலங்காரத்தை முடித்தவள் மாமா சொக்கி தான் போவாரென்று தங்கையை அணைத்து முத்தமிட்டாள்.
மலருக்கு ரூமிலேயே சாப்பாட்டை எடுத்துட்டு வந்து மதி கொடுக்க, கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு போதுமென்றாள்.
நல்ல நேரம் வந்ததும் சாமியை வணங்க சொல்லி பேத்தியின் கையில் பால்சொம்பை கொடுத்த வள்ளியம்மை ரெட்ட புள்ளை சிங்கக்குட்டியா பெத்து இந்த கிழவி மடியில் போடுடாயென்று பேத்தியின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுக்க,பாட்டி என்று வெட்கப்பட்டவளோ மேலே போகும் படியில் ஏற,பயத்தில் நடை பிண்ணியது.
“எவ்வளவு பொறுமையாக நடந்து வந்தாலும் மேலே வந்து தானே ஆக வேண்டுமென்கும் உண்மை புரிய கதவின் அருகே வந்தவள் ஒரு நொடி தயங்கி பின்னர் தாழ்ப்பாளில் கைய வைக்க கதவும் திறந்து கொண்டது”
உள்ளே வந்தவளோ கதவை லாக் பண்ணி விட்டு திரும்ப,அலங்கரிக்கப்பட்ட வெறுமையான மெத்தை அவளை வரவேற்க,கணவன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
எங்கே போனாங்க?
பாட்டி வேற இவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்னு சொன்னாங்களேயென்று புலம்பி கொண்டிருக்கும்போது விசில் சத்தம் கேட்கவும்,அதில் திரும்பி பார்க்க அங்கிருந்த பால்கனி கதவின் மேல் கையை கட்டிக்கொண்டு சாய்ந்து நிற்பவனை பார்த்தவளோ படபடப்பில் கீழே குனிந்து கொண்டாள்.
காதலியாக இருந்தவள் இன்று மனைவியான உரிமையோடு,பேரழகு பெட்டகமாய் வெள்ளை பட்டு மின்ன,மல்லிகையின் வாசனை போதையை ஏற்ற,கையில் பால் சொம்புடம் தலை கவிழ்ந்து நிற்பவளை பார்த்து ஆண்மகனாக வேந்தனுக்கு உணர்ச்சிகள் மேலெழும்ப,வேகமாக அவளை நோக்கி நடந்து வரவும்,நீண்ட கால்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்தவளோ பின்னாடியே போய் அங்கிருந்த கதவின் மேல் இடித்து நின்றாள்.
நூலளவு கூட இடைவெளியின்றி அவளோடு இணைந்து நின்றவன் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அங்கிருந்த ஜன்னல் மேடையில் வைத்து விட்டு,என்னை பிடித்து தானே இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன என்க..
“ஆமாம்”
“நீங்கள் தான் மாப்பிள்ளை என்றதும் ஏதோ எனக்கான உயிர் கிட்ட போற போல என் மனசுக்கு தோணியதென்றாள்”
தன்னவளின் வார்த்தைகளை கேட்டவன் மிசஸ் வேந்தன் இன்று நமது வாழ்க்கை தொடங்க உங்களுக்கு ஏதாவது தடங்கல் இருக்கா என்க,இல்லையென்று தலையசைக்கவும்,மனைவியை கையில் ஏந்தி போய் மெத்தையில் சரிந்தவனோ விளக்கை அணைத்தான்
“நான்கு வருட காதல்”
கடந்த 9 மாத பிரிவுகளின் வலியை மென்மையாகவும் சிறிது வன்மையாகவும் மனைவியிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு அதிர்வில் தன்னவளுக்கு நினைவுகள் வந்து விடாதா என்று ஒவ்வொரு நாளும் அவன் கடவுளிடம் வேண்டாமலில்லை.
ஒரு கட்டத்தில் தன்னவள் சோர்ந்ததை உணர்ந்தவன்,அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் கொடுத்து தலையில் தடவி விட,உடலின் அசதியிலும் உள்ளத்தின் பூரிப்பிலும் சிறுது நிமிடத்திலேயே தூங்கி விட்டாள்.
அப்பொழுது இரவு விளக்கை மட்டும் எட்டி ஆன் பண்ணியவன்,எப்பொழுதுடி அந்த வார்த்தையை சொல்லி கூப்பிடுவ??
“ஒரு முறை சொல்லடி”
“என் உள்ளத்தில் இருக்கிற அத்தனை வலியும் போய்விடும்.அந்த அழைப்பை கேட்டால் போதும்,பாதியாக செத்துப் போயிருந்தவனுக்கு புத்துணர்வு வந்திடும்”
என்னை விட நீதான் அதிக காதல் வைத்திருக்கணு சொல்லுவியே,பிறகு ஏண்டி என்னை மறந்தாய் என்கும் போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
தனது கையணைவில் படுத்திருப்பவளின் கன்னத்தை செல்லமாக கிள்ள,ஐயோ மாமு போதும் என்றவாறு வேந்தனின் நெஞ்சில் புதைந்து கொள்ள,இதோ என் உயிர் சொல்லிட்டாளே…!!
அந்த வார்த்தையை சொல்லிட்டாளே என்றவனுக்கு ஆகாசத்தில் பறப்பது போலிருக்கவும் இப்பொழுது வேந்தனுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
உனக்கு என்னுடைய நினைவு இருக்குடி.உன் ஆழ்மனதில் நான் இருக்கிறேன்.இது போதும் டி.இனி உனக்கு நினைவு வந்தாலும் சரி நினைவு வரவில்லையென்றாலும் எனக்கு கவலை இல்லை என்றபடி அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டுக் கொண்டே“ஐ லவ் யூ டி விழி”என்றவாறு மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தூங்கலானான்…!!!
சுபம்
..சீமா..
Last edited: