• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

ஏற்றுக்கொள்வாயா கண்மணி?

Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சீமக்கரை:

"இருபுறமும் மரங்கள் சூழ்ந்த நீண்ட தாரோட்டில் சென்று கொண்டிருக்கும் பேருந்தின், ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தாள்.ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தின் உள்ளே இருக்கும் கூட்டத்தில்."எங்கும் ஒரே சலசலப்பு.

ஆனாலும் அந்த இடி பாடுகளுக்குள் கடக்கும் பயணமோ,உள்ளே இருந்த பயணிகளுக்கு ரசிக்க வைத்தது.காரணமோ,பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலால் தான்.

ஆம் அந்த டவுன் பஸ்ஸில் என்றும் 80ஸ், 90ஸ் வருடங்களில் வந்த பாடல்கள் தான் ஒலிக்கும்.

"சீமக்கரை வந்துருச்சி" இறங்குங்க என்ற நடத்துநரின் குரல் கேட்டவள்,தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினாள் தாமரை.

"கிட்ட தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த ஊருக்கு வந்திருக்கின்றாள் அவள்.இந்த ஊரிலிருந்து கடைசியாக,தனது அத்தையோடு செல்லும் போது அவளுக்கு ஏழு வயது.

"அதன் பின்னர் எந்த நல்லது கெட்டதுக்கும் சீமக்கரைக்கு தாமரை வரவேயில்லை". வருடத்திற்க்கு ஒரு முறை அவள் குடும்பத்தினரே அவள் இருக்கும் ஊருக்கு வந்துவிடுவார்கள்.

"இன்னும் மூன்று மாதங்களில் தனது கனவை நோக்கி வெளிநாட்டிற்கு செல்லப்போவதால்,தனது பிறந்த ஊரை ஒருமுறை பார்த்து விட்டு, பெற்றோரோடு சில நாட்கள் தங்கி வருவதாக, தன்னை வளர்த்த அத்தையிடம் சொல்ல, அவரும் மகளை அனுப்பி வைத்தார்.

முதல் நாள் இரவு நீலகிரியில் பஸ் ஏறியவள்,விடியற் காலை தான் பக்கத்து ஊருக்குள் வந்து இறங்கினாள்.அங்கே, தனது ஊருக்குள் செல்லும் பஸ்ஸை பற்றி விசாரிக்க,இன்னும் இரண்டு மணி நேரம் சென்ற பின்னரே வரும் என்றார்கள்.

"அதைப்போலவே இரண்டு மணி நேரத்தில், சிகப்பும் சந்தனமும் கலந்த நிறத்தில் பஸ் வர அதில் ஏறி அமர்ந்தவள். இதே ஒரு மணி நேரத்தில் வந்து விட்டாள். பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியவள்,தனது ஹேண்ட் பேகை ஒரு பக்கம் தோளில் மாட்டிக்கொண்டு, ஒரு கையில் டிராலியை நீண்டு செல்லும் செம்மண் சாலையில் இழுத்து கொண்டு நடந்து சென்றாள்.

"அவளோடு பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தவர்களுக்கு, இவள் யாரென்று தெரியவில்லை.யார் இந்த பொண்ணு?, ஊருக்குள் யார் வீட்டுக்கு போகுதுனு தெரியலையே? என்று பேசிக்கொண்டே நடந்தனர்.

பாட்டியம்மா ஒருவர்,தனது பெட்டி கடைக்கு தேவையான பொருட்களை பக்கத்து டவுனில் இருந்து வாங்கிக்கொண்டு அந்த பஸ்ஸில் தான் வந்தார். பொருட்களோடு மர நிழலில் காத்திருந்தவர், அங்கு சைக்கிளில் வந்த பேரனிடம் கொடுத்து விட்டு நடந்தவர், தாமரையை வேக நடையில் வந்து பிடித்தார்.

"ஆத்தா என்று அவளை கூப்பிட்டார் நடந்து கொண்டே, தன்னை தான் கூப்பிடுகிறார்களென்று தெரிந்தவள், சொல்லுங்க பாட்டி என்க, ஊருக்கு புதுசாம்மா? என்று கேட்டார்.அதற்கு சிறு சிரிப்பை சிந்தியவள், ஆமாம் பாட்டி என்றாள்.

அதான் புது முகமா இருக்கேன்னு யோசனை, இங்க யாரு வீட்டுக்குமா போற? என்று அடுத்த கேள்வியை கேட்டார் அவர்.

அன்பழகன் இருக்காங்களே அவங்க வீட்டிற்க்கு என்று சொல்லிக்கொண்டு நடந்தாள் தாமரை. அதைக்கேட்டவர், அன்பழகன் வீட்டுக்காஆஆஆ என்றவாரே, இத்தனை வருசத்துல உன்னை இங்கு பார்த்ததேயில்லையேம்மா என்றார்.

"ஆமாம் பாட்டி....இப்போ தான் இந்த ஊருக்கு வரேன் என்றவள், இருபுறமும் தெரியும் இயற்கையை ரசித்துக்கொண்டு, பாட்டியின் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டு தான் பிறந்த ஊருக்குள் நுழைந்தாள் தாமரை.

"பஸ் நிறுத்தத்திலிருந்து சீமக்கரைக்கு செல்ல இரண்டு மணி நேரம் நடை பயணம்.சிறுவயதில் பார்த்த ஊரென்றாலும், தன்னை பார்க்க வரும் போது அம்மா,அப்பா ஊரில் ஏற்ப்பட்ட மாற்றங்களை சொல்லியிருப்பதால், அந்த நினைவில் தனது வீடு இருக்கும் தெருவினுள் நுழைந்தாள்.

"காலை நேரமென்பதால் ஊருக்குள் எங்கும் பரபரப்பாக இருந்தது".ஒரு சில வீட்டின் திண்ணையில் பள்ளி செல்லும் பிள்ளைக்கு தலை சீவி பின்னிக்கொண்டிருந்தார்கள் அம்மாக்கள்.

"ஓரிடத்தில் சில வயதான பாட்டிகள் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை இடித்து போடுவதும், ஆண்கள் கலப்பையோடு வயலுக்கு செல்வதுமாக இருந்தது அந்த காலைப்பொழுது...

"தெருவில் நடப்பவளை அங்கு இருந்தவர்கள் கேள்விக்குறியோடே பார்த்தனர்,யார் இந்த பெண்ணென்று?. நடந்து சென்றவளோ,தனது வீட்டு வாசலில் இருந்த மூங்கில் படலை திறந்து உள்ளே சென்றவள், பெட்டியை வாசலில் இருந்த திண்ணையில் வைத்து விட்டு, அம்மாஆஆஆ என கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள் தாமரை.

அடுப்படியில் சமையலில் இருந்தவர், தன் மகளின் குரலைக்கேட்டு பிரம்மையோ என்று வெளியே எட்டி பார்க்க, அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்ற மகளை பார்த்து அதிர்ந்தார் கவிதா....

அம்மாஆஆ நான் வந்துட்டேனென்று சொல்லிக்கொண்டே கவிதாவின் அருகில் சென்ற தாமரை தாயின் கையை பிடிக்க, மகளின் ஸ்பரிசத்தில் நடப்பது நிஜமென்று உணர்ந்தவர், தாமரை நீ வந்துட்டியா என கேட்டுக்கொண்டே மகளின் கன்னத்தை வருடியவரின் கண்கள் நீரை வடித்தது.

......

சீமக்கரை.... அழகான கிராமம். இரண்டாயிறத்து ஐநூறு குடும்பங்கள் காலங்காலமாக அந்த ஊரில் வசிக்கிறார்கள்.விவசாயம் தான் அவர்களுக்கு குலத்தொழில்.

"சிலர் தங்கள் பிள்ளைகளை படிக்க வெளி ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தாங்கள் தான் குண்டு சட்டியிலே குதிரை ஓட்டி விட்டோம். நம் பிள்ளைகளாவது வெளி உலகத்தை தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்.

ஊருக்குள் பத்தாம் வகுப்பு வரை படிக்க பள்ளிக்கூடம் இருக்கின்றது.அதற்க்கு மேலே படிக்கனும் என்றால் பக்கத்து ஊருக்கு தான் செல்ல வேண்டும். சிலர் வயல் வரப்பின் வழியே நடந்தே சென்று விடுவார்கள்.

சில மாணவர்கள் பெற்றோரிடம் அழுது புரண்டு வாங்கிய சைக்கிள்களில் நண்பர்களின் அரட்டையோடு செல்வார்கள். ஊருக்குள் கட்டுப்பாடு ரொம்பவும் உண்டு.

"பெண் பிள்ளை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் அடக்கி வைத்தே வளர்த்தனர்.அண்டை, அயலார் மகளை ஒரு சொல் சொல்லக்கூடாது என்ற எண்ணத்தில்.

காலங்காலமாக அங்காளி, பங்காளி, கொண்டான், கொடுத்தான் என்ற உறவு முறைகளோடு வாழ்கின்ற,இந்த ஊரில் இருக்கும் இரண்டு குடும்பத்தை பற்றிய கதை தான் ❤"ஏற்றுக்கொள்வாயா கண்மணி"❤.

நாயகன் குடும்பம்.....

பிரகாசம் வள்ளி தம்பதிக்கு பெருமாள்,முத்து, சிந்து மற்றும் கவிதா என்று நான்கு பிள்ளைகள்.

அதில் முதல் மகன் பெருமாள். அவரின் மனைவி சீதா, இவர்களுக்கு கதிரவன், செல்வி என இரண்டு பிள்ளைகள்.

இரண்டாவது மகன் முத்து, அவரின் மனைவியோ சீதாவின் தங்கை ராதா. அவர்களுக்கு வளவன் மற்றும் நிலவன் என இரண்டு மகன்கள்.

நான்காவது மகளனான கவிதாவை தனது தங்கை மகனுக்கே கட்டிக்கொடுத்தார் பிரகாசம். இவர் தான் நாயகியின் அம்மா.

கதிரவன் பார்வைக்கு கம்பீரமான ஆண்மகன். கோவம் கொஞ்சம் அதிகம் தான். படிப்பு எழுத படிக்க தெரிந்த அளவிற்கு தான்.நினைவு தெரிந்த நாளில் இருந்தே தாத்தா பிரகாசத்தோடு வயலில் சுற்றி திரிந்ததால்,அவன் எண்ணமெல்லாம் விவசாயத்திலே இருந்தது.

எட்டாம் வகுப்பிற்கு மேலே படிக்க மாட்டேன் என்ற மகனை, எதுவும் செய்ய முடியாமல் தவித்த பெருமாளிடம், பேரனை அவன் போக்கிலே விடச்சொன்னார் பிரகாசம்.

அந்த வயதிலே தாத்தாவோடு வயலில் இரங்கி கலப்பையை பிடித்தவன் தான், இதோ இருபத்தி ஏழு வயது இளங்காளையாய் மிளிர்கிறான்.

உழைப்பில் ஏறிய உடல் வலிமையும், கிராமத்திற்கே உரிய கலையும், நிறமும் ஒரு வித வசீகரமாகவே இருப்பான் கதிரவன்.அவன் அடையாலமே முறுக்கு மீசையும், புதர் மண்டிய தாடியும் தான்.
ஆனாலும் அது அவனை பார்வைக்கு கம்பீரமான ஆண்மகனாக காட்டும்.

அவனின் விவசாய ஆர்வத்தை கண்டு, அவன் நண்பர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர். இயற்கை உரங்களை பயன்படுத்தியே விவசாயம் செய்கின்றான் கதிரவன்.

"குடும்பத்திற்கு தலை மகன் என்பதால் அவன் மேல் அனைவருக்கும் ஒரு படி பாசம் அதிகமே. தம்பி, தங்கைகளென்றால் அவனுக்கு உயிர். மூவரையும் இதுவரை பிரித்து பார்த்ததில்லை.அவர்களுக்கும் அண்ணனென்றால் கொள்ளை பிரியம் தான்.

"வளவன் பக்கத்து ஊரிலிருக்கும் பிரைவேட் கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கின்றான். நிலவன் பன்னிரெண்டாம் வகுப்பும், செல்வி பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.

தம்பி தங்கைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதும், திரும்பி அழைத்து வருவதும் கதிரின் வேலை தான். முடியாத பட்சத்தில் மட்டுமே அப்பாவையோ இல்லை சித்தப்பாவையோ போகச்சொல்லுவான்.

இனி இவன் வாழ்க்கையில் தாமரையின் வரவால் என்ன நடக்கும் என்பதே கதை...


நாயகி குடும்பம்.

சிவசாமி கலாவிற்கு இரண்டு பிள்ளைகள்.மகன் அன்பழகன்,மகள் வேதவள்ளி.கலாவோ பிரகாசத்தின் கூடப்பிறந்த தங்கைதான்.

சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்ற எண்ணத்தில்,தனது மகன் அன்பழகனுக்கு அண்ணன் மகள் கவிதாவை பெண்ணெடுத்தார் கலா.

அன்பழகன்,கவிதா தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள், தாமரை, சிவா மற்றும் அல்லி.....

வேதவள்ளிக்கு நாக தோஷம் இருப்பதால்,அதே தோஷம் உள்ள மணமகனுக்கு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர் சொல்லி விட்டார்.

வேதவள்ளி நர்ஸிங் படித்து விட்டு அரசாங்க வேலைக்கு சென்று விட்டார்.மகளுக்கும் வரனை தேடி தேடி அலைந்தும் எதிர்பார்த்த போல கிடைக்கவில்லை.

வருஷங்கள் ஓட இனி தனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லியவர்,மலை கிராமத்திற்கு வேலை மாற்றுதல் வாங்கிக்கொண்டு செல்லும் போது, அண்ணன் மகளையும் கூட அழைத்து சென்று விட்டார்.

தாமரையால் வேதவள்ளியும் மகிழ்ச்சியாக இருப்பாரென்று மகளை அனுப்பி வைத்தனர் அன்பழகன் தம்பதியர்.

அல்லி பத்தாம் வகுப்பும்,சிவா பக்கத்து ஊரில் உள்ள காலேஜில் முதல் வருடம் படித்து கொண்டிருக்கின்றான்.

தாமரை பள்ளி படிப்பு, காலேஜ் வரை அத்தையோட இருந்து படித்து முடித்து விட்டாள்.பின் படித்த படிப்பிற்காக தற்காலிகமாக ஒரு கார்மென்ஸில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பேரழகி இல்லை தாமரை,ஆனால் பார்த்தால் பிடிக்கும் முக வடிவம் தான். இளம் பருவ மங்கைக்கே உரிய வசீகரமும்,துருதுருப்பும் கொண்டவள்.நவநாகரீக உலகத்தில் கண்ணைப்போலவே தனது இடையை தாண்டிய கருநீள கூந்தலையும் பாதுகாக்கின்றாள்.

மலையிலிருந்து வரும் மூலிகை நீரை உபயோகிப்பதாலும், இயற்கையின் காற்றை சுவாசிப்பதாலும் கருப்புமில்லாமல் வெளுப்புமில்லாமல்,ஒருவித கலவையான கலரில் இருக்கின்றாள் தாமரை.

தாமரையின் லட்சியம் நிறைவேறுமா? என்பதை கதையின் போக்கில் சந்திக்கலாம்.

இரண்டு குடும்பத்திற்கும் பதினைந்து வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை.இந்த விஷயமோ தாமரைக்கு இதுவரை தெரியாது.

கதையின் உள்ளே போகலாம்....

அம்மா,அதான் வந்துட்டனேம்மா, பிறகு ஏன் இப்படி என்று அவரின் கண்ணை துடைத்தவள் எங்கேம்மா அப்பா,அல்லி,சிவா மூன்று பேரையும் காணலை?.

நம்ப வயல்ல கடலை பரிக்குறாங்க தாமரை.அவங்க ரெண்டு பேருக்கும் லீவ் தானேடா,அதான் அப்பா கூட காலையிலையே போய்டாங்க. அவங்களுக்கு தான் சமைச்சிட்டிருந்தேன்.

காக்கா காலையில இருந்து நம்ப பூசன மரத்துல கத்தி கிட்டே இருந்துச்சி,யோசனையோடே சமைச்சிட்டு இருந்தேன் என்றவர், ஏண்டா ஒரு வார்த்தை சொல்லவேயில்லை வர்ரேன்னு? என்று மகளிடம் கேட்க,நான் தான் நேர்ல போய் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்னு வந்தேன் என்றாள் தாமரை.

மகள் சொன்னதை கேட்டவள்,வந்த புள்ளைய கேள்வி கேட்டு கிட்டு இருக்கேனே என தலையில் தட்டி கொண்டவர்,சமையல் கட்டுக்கு சென்று,அங்கிருந்த வரகாப்பியை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்து வந்து மகளிடம் நீட்டினார்.

அம்மாவிடமிருந்து வாங்கியவள் அங்கிருந்த தூணில் சாய்ந்து கொண்டு ரசித்து குடித்தாள். மகளையே பார்த்துக்கொண்டிருந்த கவிதா,மனதிற்குள் நினைத்து கொண்டார், இந்த அம்மாவாள் உன்னை கூட வச்சி வளர்க்க முடியாம போய்டே என.

தாத்தா பாட்டியுமா அங்க நம்ப வயல்ல இருக்காங்கம்மா?என்ற மகளின் கேள்வியில் நிகழ்வுக்கு வந்தவர்,அவங்க ரெண்டு பேரும் வேலை முடியும் வரை நம்ப போர் கொட்டாயிலே தங்கிக்கிறது வழக்கம் தானே தாமரை என்றார் கவிதா.

ஓஓஓஓ... ஆமால்ல... நான் தான் மறந்துட்டேன்மா என்றவள், தனது வீட்டை சுற்றி பார்த்தாள்.சிறு வயதில் அங்கிருந்த நினைவுகள் பெரிதாக அவளுக்கு இல்லை.இனி தான் அங்கு உள்ளதை தெரிந்து கொள்ள போகின்றாள்.



கண்மணி வருவாள்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top