Member
- Joined
- May 20, 2025
- Messages
- 54
- Thread Author
- #1
வள்ளியின் கருச்சிதைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து கூறியிருந்தார் மருத்துவர்.
"மெடிக்கல் டெர்ம்ஸ்ல இதைக் கெமிக்கல் பிரக்னென்சினு சொல்லுவாங்க கார்த்திகேயன். பிரக்னென்சி பாசிட்டிவ்னு காமிக்கும். ஆனா நாலஞ்சு வாரத்துல கரு கலைஞ்சிடும். இர்ரெகுலர் பீரியட்ஸ், ஹார்மோன் இம்பேலன்ஸ், தைராய்டு இப்படியான பிரச்சனைகள் இருக்கிறவங்களுக்குக் கெமிக்கல் பிரக்னென்சி ஆக வாய்ப்புகள் அதிகம்" என்ற மருத்துவர்,
"வள்ளிக்கு பிசிஓடி பிராப்ளம் இருக்கு. இந்தக் காலத்துல தம்பதிங்க பிரக்னென்ட் ஆகனும்னு முடிவு செஞ்சிட்டாலே டாக்டர்கிட்ட ஒரு செக்கப் செஞ்சிக்கிறது நல்லது கார்த்திகேயன். முன்னாடியே செஞ்சிருந்தா வள்ளியோட பிசிஓடி பிராப்ளத்தைக் கண்டிபிடிச்சி ட்ரீட்மெண்ட் கொடுத்து இப்படி ஆகாமலே தடுத்திருக்கலாம்" என்றார்.
வள்ளி கேட்ட பொழுதே தான் அவளைப் பரிசோதனைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று இப்பொழுது எண்ணி வருந்தினான் கார்த்திகேயன். மேலும் ஆங்சைட்டி பிரச்சினையினால் அவளுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆகிறது என்று உளவியல் மருத்துவர் தியா கூறியதும் நினைவிற்கு வந்தது அவனுக்கு.
இதை அவன் மருத்துவரிடம் பகிரவும், "ஐடில வேலைச் செய்ற பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ்னால பிசிஓடி பிராப்ளம் வருது கார்த்திகேயன். அவங்க அன்றாட வாழ்க்கைல யோகா, தியானம், உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, உணவு கட்டுப்பாடுனு சில மாற்றங்களைக் கொண்டு வந்துட்டா போதும், இதைச் சுலபமா சரி செஞ்சிடலாம்" என்றார்.
"திரும்பவும் நாங்க பிரக்னென்ட் ஆக முடியும் தானே டாக்டர்" மிகுந்த பயமும் தயக்கமுமாய்க் கார்த்திகேயன் கேட்க,
"நிச்சயமா முடியும். உங்க வைஃப் உடல்நிலையும் மனநிலையும் கொஞ்சம் நார்மல் ஆனதும் இதுக்கான ட்ரீட்மெண்ட் எடுத்தீங்கனா போதும். எல்லாமே நார்மல் ஆச்சுனா மூனு மாசத்துல திரும்பவும் பிரக்னென்ட் ஆகிடலாம்" என்று நம்பிக்கையூட்டினார் மருத்துவர்.
இரண்டு நாள்கள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில், அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுப்பு உரைத்த கார்த்திகேயன் மனமாறுதலுக்காக வள்ளியை ஊட்டிக்கு அழைத்துச் சென்றான்.
இரயிலில் சென்று கொண்டிருக்கும் பொழுதே வளைந்து நெளிந்து போகும் பாதையை ஆசையுடன் பார்த்தவாறு வந்த வள்ளியை கனிவுடன் பார்த்திருந்தான் கார்த்திகேயன்.
சில்லென்ற வானிலையும் பச்சை பசேலென்ற இயற்கைக் காட்சிகளும் இருவரின் மனங்களுக்கும் புத்துணர்வளிப்பதாக இருந்தன.
ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதிக்குச் சென்று தங்களின் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஜன்னலைத் திறந்து இயற்கையை ரசித்துப் பார்த்தவனாய் கார்த்திகேயன் நிற்க, அறையைச் சுற்றிப் பார்த்த வள்ளி ஜன்னலருகே சென்று கணவனைப் பின்னிருந்து அணைத்து அவனது முதுகில் முகத்தைப் புதைத்தாள்.
தனது இடையைச் சுற்றியிருந்த அவளின் கரங்களின் மீது தனது கரங்களை வைத்து இறுக்கியவனாய் தலையைப் பின்னோக்கிச் சாய்த்து அவளின் தலையில் முட்டியவன், "என் பொண்டாட்டிக்கு நான் வேணுமா?" எனக் குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
சட்டென அவனின் முன்னே சென்று நின்றவள், "யப்பா... இந்த அழுமூஞ்சு கார்த்தி இப்படிச் சிரிச்ச மூஞ்சு கார்த்தியா மாறவே மாட்டாரோனு பயந்தே போய்ட்டேன்" கிண்டலாய் உரைத்துச் சிரித்தவள் அவனை அணைத்து மார்பில் முகம் புதைத்தாள்.
அவளின் கூற்றில் மேலும் இதழ் விரிய வாய்விட்டுச் சிரித்தவனாய், "அடிப்பாவி சைட் கேப்ல உன்னோட அழுமூஞ்சு பட்டப்பேரை எனக்கு மாத்தப் பார்க்கிறியா?" என்று கூறியவாறு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
அவனின் கையைத் தட்டி விட்டவள், "பின்ன சிரிப்பையே மறந்தா மாதிரி சுத்தினா வேற எப்படிப் பட்டப்பேரு வைப்பாங்களாம்" என்று புருவத்தை உயர்த்தியவாறு இதழைச் சுழித்தாள்.
அவளின் சுழித்த இதழைப் பிடித்திழுத்தவனாய், "நான் கொஞ்சம் சைலண்ட் ஆனதும் என் பொண்டாட்டி வாய் அதிகமாகிப் போச்சே! அதை அப்படியே விடக் கூடாதே" என்றவனாய் ஆவலும் ஆசையுமாய் அவளின் இதழில் புதைந்தான்.
ஆழ்ந்து அனுபவித்து அவன் தந்த இதழ் முத்தத்தில் சிலிர்த்து உடலெங்கும் தித்திப்பாய் உணர்ந்து அனுபவித்திருந்தவள் அவன் முத்தத்தைத் தனதாக்கி மேலும் சில நிமிடங்கள் நீட்டித்துச் சென்று அவனோடு படுக்கையில் விழுந்தாள்.
அவனின் அங்கம் முழுவதும் அவள் வேண்டுமெனத் தகித்திட, அவளும் அவன் தனக்கு வேண்டுமென உணர்த்தியவளாய் முத்தத்தில் மூழ்கியிருக்க, மெல்ல மெல்ல அவளை விட்டுப் பிரிந்து அருகில் படுத்தான் கார்த்திகேயன்.
முத்த மயக்கத்தை விட்டு வெளி வராதவளாய் ஏன் என்பது போல் அவனை அவள் பார்க்க, "வெளில வேணாம்டா. உனக்குக் கம்ஃபர்டபுளா இருக்காது" என்று உரைத்தவனாய் அவளை அணைத்துக் கொண்டான்.
எந்நிலையிலும் தனக்காகப் பார்க்கும் கணவனின் அன்பில் நெஞ்சுருகிப் போனவளாய் அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், "நான் நேசிக்கும் தமிழ், எழுதும் கவிதை, ஸ்வாசிக்கும் மூச்சு, இந்த வானம் பூமி காற்று எல்லாத்தையும் விட உங்களை ரொம்ப ரொம்ப அதிகமா காதலிக்கத் தோணுது கார்த்தி" என்றவாறு அவனின் கழுத்தில் முகம் புதைத்தாள்.
உணர்வுப்பெருக்கில் நெகிழ்ந்தவனாய், "இந்த அன்பு போதும்டா வள்ளி. நமக்கு எந்தத் துன்பம் வந்தாலும் மீண்டு வந்துடலாம்" என்றவனாய் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
ஊட்டியில் இருந்த நாள்கள் அனைத்தும் கார்த்திகேயனும் வள்ளியும் தங்களின் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ளும் நொடிகளாய் கடந்திருந்தன.
அங்கிருந்து திரும்பி வரும் பொழுதே கலகல கார்த்திகேயனாகவும் வலிமை மிகுந்த வள்ளியாகவும் இருவரும் மீண்டு வந்திருந்தனர்.
அதன் பிறகு மருத்துவரிடம் சென்று குழந்தைப்பேறுக்கான சிகிச்சையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களின் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
காலை ஆறு மணிக்கு இருவரும் சேர்ந்து யோகா செய்யத் தொடங்கினர். மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டனர். மூன்று வேளையும் மருத்துவர் கூறிய உணவுகளை உண்டனர். குழந்தைப்பேற்றுக்கான உணவு கட்டுபாட்டைக் கடைப்பிடித்தனர். வள்ளி கூடுதலாக அவளின் உடல் பிரச்சினைக்கேற்ற மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டாள்.
இந்நிலையில் ஒரு நாள் உதயன் அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தான்.