- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
எழுதுகோல் கொண்டு
என்னவனுக்கோர்
மடலெழுத அமர்கிறேன்.
வார்த்தைகள் ஏனோ
எழுத்தாய் வராது
தடுமாறித் தவிக்கிறதோ!
கவியெழுதிக் காலமாகிரதல்லவா!
கோர்வை வார்த்தைகள் மறந்து,
கொஞ்சும் வரிகளைப் பிரிந்து,
கொட்டும் கவியினைத் துறந்து,
எழுத்தின்றி நிற்கின்றது,
என் மனதைப்போல்
எனது எழுதுகோலும்!
வார்த்தைக்கு வரி கொடுத்துக்
கவிபுனைய,
நீக்கமற என்னுள் வா
மன்னவனே!
என்னவனுக்கோர்
மடலெழுத அமர்கிறேன்.
வார்த்தைகள் ஏனோ
எழுத்தாய் வராது
தடுமாறித் தவிக்கிறதோ!
கவியெழுதிக் காலமாகிரதல்லவா!
கோர்வை வார்த்தைகள் மறந்து,
கொஞ்சும் வரிகளைப் பிரிந்து,
கொட்டும் கவியினைத் துறந்து,
எழுத்தின்றி நிற்கின்றது,
என் மனதைப்போல்
எனது எழுதுகோலும்!
வார்த்தைக்கு வரி கொடுத்துக்
கவிபுனைய,
நீக்கமற என்னுள் வா
மன்னவனே!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்