• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அடுத்த நாள் காலைல எழுந்து அவசர அவசரமா ஸ்கூல், ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க.



அபி: அவன் பேக்ல புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தான்.



ஷாலினி :டிபன் பாக்ஸ்ல மூணு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு இருந்தா.



சூர்யா: ஆபிஸ்க்கு கிளம்பி கிட்டு இருந்தான்.



ஷாலினி : இரண்டு பேருக்கும் இட்லி எடுத்து வச்சா.



சூர்யா, அபி: சாப்பிட ஆரம்பிச்சாங்க.



ஷாலினி : அவளும் உக்கார்ந்து சாப்பிட்டா.



மூணு பேரும் சாப்பிட்டு வீட்டை லாக் பண்ணிட்டு வெளில வந்தாங்க.



அபி : அப்பா பாய் ( சொல்லிட்டு ஸ்கூட்டி முன்னாடி போய் நின்னான் ).



சூர்யா : பாய் செல்லம்.



ஷாலினி : (ஸ்கூட்டிய எடுக்கும் போது தான் பார்த்தா ஸ்கூட்டி பஞ்சர் ஆகி இருக்குனு )அச்சச்சோ.



சூர்யா : என்ன ஆச்சு.



ஷாலினி : ஸ்கூட்டி பஞ்சர் ஆகிருச்சு சீனியர்.



சூர்யா : நேத்து வினய்யும்,அபியும் ஸ்கூட்டில ரவுண்டு அடிக்கும் போதே நெனச்சேன் இப்படித்தான் ஏதாவது ஆகும்னு.



அபி: நாங்க ரவுண்டு அடிக்கும்போது நல்லா தான் இருந்தது.



சூர்யா: இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.



அபி: உதட்டை சுளித்தான்.



ஷாலினி: போதும் அப்பாவும், பிள்ளையும் சண்டை போடுறத நிறுத்துங்க. ஸ்கூலுக்கு வர டைம் ஆயிடுச்சு.



சூர்யா :ஒன்னும் பிரச்சனை இல்ல வாங்க பைக்ல போகலாம்.



ஷாலினி: சரி நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் ஆட்டோல வந்துடுறேன்.



சூர்யா: ஷாலு நீயும் பைக்லயே வா.



ஷாலினி :என்ன சொன்னீங்க.



சூர்யா :உன்னையும் பைக்ல வர சொன்னேன்.



ஷாலினி: ஆனா (தயங்குனா ).



சூர்யா: நீ என் ஒய்ஃப் தானே அப்புறம் ஏன் தயங்குற.



ஷாலினி: இது கனவா இல்லை நிஜமா.



அபி: அவ கையில கிள்ளுனான்.



ஷாலினி : ஆ ஆ ஆ ஏண்டா கில்லுன.



அபி: இது கனவு இல்ல நிஜம் தான்.



ஷாலினி : வாலு அதுக்கு கிள்ளுவியா (அவனை புடிக்க போனா).



அபி : சிரிச்சு கிட்டே ஓடினான்.



ஷாலினி : அவளும் துரத்தினாள்.



சூர்யா பைக்ல உட்கார்ந்து இருக்க இரண்டு பேரும் அவனையே சுத்தி சுத்தி வந்தாங்க.



சூர்யா : அபிய பிடிச்சு தூக்கினான்.



அபி : அப்பா விடுங்க (அவன் கை குள்ளயே துள்ளினான் ).



ஷாலினி :ஹே மாட்டினியா.



சூர்யா : அவ கைய பிடிச்சான் ( இப்போ ஸ்கூலுக்கு டைம் ஆகலையா).



ஷாலினி : அச்சோ ஆமா (தலைல அடிச்சிட்டு அவன் பின்னாடி போய் உட்கர்ந்தா) போங்க போங்க ( அவன் கையை பிடிச்சு ஆட்டினா ).



சூர்யா : அடியே கைய பிடிச்சு ஆட்டாத டி பைக் ஸ்டார்ட் பண்ண வேண்டாமா.



ஷாலினி : அவன் பைக் ல அழச்சிட்டு போறேன்னு சொன்னது, இப்போ டி போட்டு கூப்பிட்டது இது எல்லாமே அவளுக்கு புதுசாவும் அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது.



பொறுமையா அவன் தோள் மேல கைய எடுத்து வச்சா.



சூர்யா: ஓர கண்ணால அதை பார்த்து சிரிச்சிட்டு பைக் ஸ்டார்ட் பண்ணி போனான்.



ஷாலினி : முதல் முறை சூர்யா கூட பைக்ல போறா. அவ பைக்ல உட்கார்ந்து இருந்தாலும் அவ மனசு வானத்துல பறந்துட்டு இருந்தது.



சூர்யா : கண்ணாடிய அட்ஜெஸ்ட் பண்ணி அவ முகத்தை பார்த்தான்.



ஷாலினி : சின்ன சிரிப்போட வேடிக்கை பார்த்துட்டு வந்தா.



சூர்யா : திரும்ப ரோட்டை பார்த்து ஓட்ட ஆரம்பிச்சுட்டான்.



ஈவினிங்,



சூர்யா :ஆபீஸ் வொர்க் முடிஞ்சதும் ஸ்கூலுக்கு வந்தான்.



ஷாலினி :நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் பஸ்ல இல்ல ஆட்டோ வந்துடறேன்.



சூர்யா : வேண்டாம் நாங்க வெய்ட் பண்ணுறோம் சேர்ந்தே போகலாம்.



ஷாலினி: ஹால் ஹவர் ஆகுமே.



சூர்யா : பரவாயில்லை நாங்க கிரவுண்ட்ல வெயிட் பண்றோம் முடிஞ்சதும் வா.



ஷாலினி: சரி (கிளாஸ்க்கு போயிட்டா).



சூர்யா: அபியை தூக்கிட்டு போய் பிளே கிரவுண்ட்ல விட்டு விளையாட சொன்னான்.



ஷாலினி : கிளாஸ்ல இருந்து பார்த்தாலே க்ரௌண்ட் தெரியும் சோ சூர்யாவை சைட் அடிச்சு கிட்டே இருந்தா.



சூர்யா : அவளை திரும்பி பார்த்தான்.



ஷாலினி : ஒழிஞ்சுக்கிட்டா.



சூர்யா : புருஷனையே திருட்டு தானமா சைட் அடிக்கிறா பாரு இவ்வளவு வச்சு கிட்டு என்ன தான் பண்றதோ.



ஷாலினி : எல்லா பசங்களும் வீட்டுக்கு போனதும் இவ ஹாண்ட் பேக் எடுத்துட்டு வந்தா.



சூர்யா : அவ வரதை பார்த்ததும் அபியை பைக்ல உட்கார வச்சிட்டு அவனும் பைக் ஸ்டார்ட் பண்ணி ரெடியா நின்னான்.



ஷாலினி :( அவன் பின்னாடி உட்கார்ந்தா ) போலாம் சீனியர்.



சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.



ஷாலினி : ரொம்ப சந்தோசமா இருந்தா.



சூர்யா : வீட்டுக்கு முன்னாடி பைக் ஸ்டாப் பண்ணினான்.



ஷாலினி : கீழ இறங்கி கேட் ஓபன் பண்ணினா.



சூர்யா : பைக் உள்ள ஸ்டாப் பண்ணிட்டு அபிய இறக்கி விட்டுட்டு பேக் எடுத்துட்டு வந்தான்.



ஷாலினி : சீனியர் என் ஸ்கூட்டி ய காணோம்.



வினய் : இதோ வந்திருச்சு ( ஸ்கூட்டியை பஞ்சர் ஓட்டிட்டு வந்து அவ முன்னாடி ஸ்டாப் பண்றான் ).



ஷாலினி : ( இனி சூர்யா கூட பைக்ல போக முடியாதுன்னு நினைச்சு பீல் பண்ணினா ).



சூர்யா :( அவ முகம் மாறுவதை பார்த்தான் )வினய் நீ ஸ்கூட்டிய உன் வீட்டுக்கு எடுத்துட்டு போய்டு டா.



வினய் : ஏன் ஏன் ஏன்.



அபி : எத்தனை ஏன் மாமா சொல்லுவ.



வினய் : நான் சொல்லுவேன் டா உனக்கு என்ன.



அபி : ப்பே.



வினய் : ஏன் எடுத்துட்டு போக சொன்னீங்க.

சூர்யா : டெய்லி நானே இவங்கள ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன்.எதுக்கு வீணா இரண்டு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு.

வினய் :மாமா கல்யாணம் ஆனதும் பொறுப்பு தானா வந்துட்டு காசை மிச்சம் பண்ண பாக்குறிங்களா.

சூர்யா : வெட்டி கதை பேசாம சொன்னதை செய் டா.

வினய் : இந்த ஓட்ட வண்டிய எடுத்துட்டு போய் நான் என்ன பண்ணுறது.இங்கையே ஓரமா இருந்துட்டு போகட்டும்.

ஷாலினி : அவன் தலைல கொட்டுனா.

வினய் : மாமா பாருங்க உங்க முன்னாடியே அடிக்குறா.

சூர்யா : எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல பா (அபிய தூக்கிட்டு உள்ள போய்ட்டான் ).

வினய் : எனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல (தலைய தேச்சு கிட்டே உள்ள போனான் ).

ஷாலினி : இனி சூர்யா கூட டெய்லி பைக்ல போறதை நினைச்சு சந்தோஷத்தோட உள்ள போனா.


தொடரும்....
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top