• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
சூர்யா, ஷாலினியோட எண்ணம் எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது.ஆனா அவங்க காதலிக்கிற ஆள் தான் வேற வேற.

ஷாலினி சூர்யாவ லவ் பண்ணுறது அவ பிரண்டஸ் மூணு பேருக்கும் தெரியும்.

எல்லா சண்டேவும் அவங்க எல்லாரும் எங்கயாவது வெளில போவாங்க.

அன்னைக்கும் அது போல எல்லாரும் பீச் போனாங்க.

ஷாலினி : இன்னைக்கு எப்படியாவது சூர்யா கிட்ட லவ்வ சொல்லிடணும்ன்னு அழகா ட்ரெஸ் பண்ணி வந்தா.

எல்லாரும் ஜாலியா விளையாடிட்டு இருக்கும் போது சூர்யா மட்டும் மிஸ் ஆகிட்டான்.

ஷாலினி : அவனை தேடிட்டு இருந்தா.

அந்த டைம் அவங்களை நோக்கி சின்சான் (shinsan)கார்டுன் வேஷம் போட்டு ஒருத்தர் வந்தாங்க.

சுஜி :ஐஐஐ சின்சான் ( அவங்க ஓடுனா அவளுக்கு சின்சான் ரொம்ப பிடிக்கும் ).

சின்சான் ( சூர்யா தான் அவளுக்காக அப்படி ஒரு வேஷம் போட்டு வந்தான் ).

சூர்யா : அவ முன்னாடி மண்டி போட்டு ரிங் நீட்டினான்.

சுஜி :( யாருனு தெரியாததால பதில் சொல்லாம அவன் போட்ருந்த மாஸ்க் கழட்டுனா )சூர்யா.

சூர்யா : ஐ லவ் யூ சுஜி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி உன் கூட கடைசி வரை சந்தோஷமா வாழணும்னு ஆசை.எனக்கா என் பொண்டாட்டியா வாழ சம்மதமா.

சுஜி : சம்மதம் ( வெட்கப்பட்டு கொண்டே சொன்னா ).

சூர்யா : (அவளை எழுந்து ஹக் பண்ணினான்) நீ வெக்கப்படுறது கூட அழகு தான் டி ஐ லவ் யூ.

சுஜி : ஐ லவ் யூ டூடூ டூ ( அவளும் ஹக் பண்ணிகிட்டா ).

அவங்க பிரண்ட்ஸ் மூணு பேரும் சந்தோஷமா கிளாப் பண்ணி விஷில் அடிச்சாங்க.

இதை பார்த்துட்டு இருந்த ஷாலு பிரண்ட்ஸ்க்கு பயங்கர அதிர்ச்சி.

ஷாலினி: அவளுக்கு இதயமே வெடிச்சிடற மாதிரி இருந்தது.எல்லாரும் இருக்கிறதால அவளால அழ கூட முடியல.

மதி : ஹேய் ஷாலு வா சீனியர் கிட்ட போய் உண்மைய சொல்லலாம்.

ஷாலினி : வேண்டாம் டி சுஜி அக்கா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பார்த்தியா.அவங்க சந்தோஷத்தை கெடுக்க சொல்லுறியா.

அபிநயா: ஆனா உன்னோட காதல்.

ஷாலினி: அது எனக்குள்ளேயே இருக்கட்டும் டி யாருக்கும் தெரிய வேண்டாம். நீங்களும் யார் கிட்டயும் சொல்ல கூடாது இது என் மேல பிராமிஸ்.

சுஜி அவர்களை நோக்கி வரவும் ஷாலு கண்ண தொடைச்சிட்டு லைட்டா சிரிச்சா.

சுஜி : ஹாய் ஷாலு அவனை பார்த்தியா எவ்வளவு அழகா பிரபோஸ் பண்ணினான்.

ஷாலினி : ஆமா அக்கா.

சுஜி : உன் கண்ணு ஏன் சிவந்து இருக்கு.

ஷாலினி : தலை வலிக்குது அதான் அக்கா.

சுஜி : அப்போ வா வீட்டுக்கு போகலாம் டேப்லெட் போட்டுட்டு தூங்கினா சரியாகிடும் வா போகலாம்.

ஷாலினி : அக்கா சீனியர் இப்போ தான் உங்களுக்கு பிரபோஸ் பண்ணி இருக்காரு உங்க கூட டைம் ஸ்பென்ட். பண்ணனும்னு நினைப்பாரு அதனால நீங்க இருங்க நான் போய்கிறேன்.

சுஜி: நீ எப்படி டா தனியா போவா.

ஜெனி :நாங்க அழச்சிட்டு போறோம் அக்கா.

சுஜி: சரி பார்த்து பத்திரமா போங்க ஷாலு வீட்டுக்கு போனதும் கால் பண்ணு டா.

ஷாலினி: சரி அக்கா.

ஷாலினி வீட்டுக்கு போய் டோர் லாக் பண்ணிட்டு ரொம்ப அழுதா. சுஜிக்காக காலேஜ்ல இருக்கும்போது சந்தோசமா இருக்குற மாதிரி நடிப்பா வீட்டுக்கு வந்ததும் ரொம்ப அழவா.

சூர்யா, சுஜி லவ் சூப்பரா போச்சு, இவங்க பிபிஏ முடிச்சதும் சுஜி வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

சுஜி அவ வீட்ல லவ் பண்ணுற விஷயத்தை சொன்னா ஆனா அவங்க அதுக்கு ஒத்துக்காம கட்டாயப்படுத்தி வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க.

இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிஞ்சு அவன் அப்பா, அம்மா கிட்ட பேசி அவங்கள சம்மதிக்க வச்சு சுஜிய பொண்ணு கேக்க சென்னைக்கு அழச்சிட்டு வந்தான்.

ஆனா அப்பவும் சுஜி அப்பா, அம்மா ஒத்துக்கல.

சூர்யா : நீங்க சம்மதிக்கலனாலும் எங்களுடைய கல்யாணம் நடக்கும்.ஆனா மத்தவங்க உங்களை தான் தப்பா பேசுவாங்க அப்பறம் உங்க இஷ்டம்.

சுஜி அப்பா : ஏதோ பெத்த கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்குறோம்.ஆனா அதுக்குப் பிறகு அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

சுஜி : ரொம்ப அழுதா.

சூர்யா : நான் இருக்கேன் டி அழாத.

சுஜி : ம்ம்ம்ம்ம்ம்.

அவங்களுக்கு கல்யாணம் ஆனதும் மதுரைலயே செட்டில் ஆகிட்டாங்க.ஆனா சுஜி மட்டும் அடிக்கடி ஷாலுக்கு கால் பண்ணி பேசுவா,கொஞ்ச நாள்ல சுஜி பேசுறத ஸ்டாப் பண்ணிட்டா ஷாலினி கால் பண்ணினாலும் கால் போகாது அதோட அவங்களோட கண்டாக்ட் மொத்தமா கட் ஆயிடுச்சு.

ஷாலினி: பிஏ முடிச்சதும் எம்ஏ,பிஎட் பண்ணி ஸ்கூல் டீச்சர் ஆனா. அதுக்குப் பிறகு நடந்தது தான் ஸ்டோரி பர்ஸ்ட்ல இருந்து இப்ப வரைக்கும் நடந்தது.

ஷாலினி: ஃபுல் கதையும் சொல்லி முடிச்சா.

லட்சுமி :கண்ணீரோடு உட்கார்ந்து இருந்தாங்க.

இதையெல்லாம் கடைக்கு போயிட்டு வந்த சூர்யா கதவுக்கு பின்னாடி மறைந்து நின்று கேட்டுட்டு இருந்தான்.

அபி விளையாடிட்டு சூர்யா கிட்ட வந்தான்.

அபி: அப்பா எனக்காக தான் வெய்ட் பண்ணுறியா.

இவங்க வரதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியில் எழுந்து நின்னாங்க.

ஷாலினி :(mv) எல்லாத்தையும் கேட்டு இருப்பாரோ.

தொடரும்....
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top