• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அன்னைக்கு நைட் ஷாலினி சூர்யா நம்பரை எப்படி வாங்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தா.



அவ மொபைலுக்கு வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷன் தொடர்ந்து வந்துட்டே இருந்தது.



ஷாலினி : ( மொபைல் எடுத்து பார்த்தா) ச்ச இந்த ஸ்கூல் குரூப் தொல்லை வேற தாங்க முடியல எப்போ பாரு டொய் டொய்ன்னு தொல்லை தாங்க முடியல.



ஐஐஐ ஐடியா.



வாட்ஸாப் ல குரூப் ஒன்னு ஓபன் பண்ணா அதுல அவ ப்ரண்ட்ஸ் அபிநயா, மதுமதி,ஜெனி மூணு பேரையும் ஆட் பண்ணினா.



அப்பறம் சுஜியையும் ஆட் பண்ணிட்டு அவளுக்கு மெஜேஸ் பண்ணுனா.



சுஜி : என்ன டி புதுசா குரூப் எல்லாம் ஓபன் பண்ணி இருக்க.



ஷாலினி: சும்மா தான் அக்கா எல்லார்ட்டையும் தனி தனியா பேச வேண்டாம்ல அதான்.



சுஜி : நல்ல ஐடியா தான்.



ஷாலினி : அக்கா ஒரு ஹெல்ப்.



சுஜி : என்ன.



ஷாலினி : ஹேமா அக்கா நம்பரும் சீனியர்ஸ் மூணு பேரோட நம்பரும் என்கிட்ட இல்ல நான் உங்களை அட்மின் ஆக்குறேன் நீங்க ஆட் பண்ணிடுறிங்களா.



சுஜி: அதுக்கென்ன ஆட் பண்ணிட்டா போச்சு.



ஷாலினி : ஓகே அக்கா.



சுஜி :அவங்க நாலு பேரையும் ஆட் பண்ணுனா.



மாதேஷ் : எதற்காக இந்த குரூப் தெரிந்து கொள்ளலாமா.



மதி : நீங்க எப்படி அரியர் வைக்கிறீங்க அதோட ரகசியம் என்னன்னு தெரிஞ்சுக்க தான் சீனியர்.



மாதேஷ் :அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க.



ஜெனி: எல்லாம் ஒரு சென்ட்ரல்



நாலேஜ்க்கு தான் சீனியர்.



அபிநயா : எங்க மத்த யாரையும் காணாம்.



சுஜி : முதல்ல இந்த குரூப் ஓபன் பண்ணுனவ எங்க போனா.



ஷாலினி :எல்லாரும் மெசேஸ் பண்ணுறாங்களான்னு செக் பண்ணுறேன் அக்கா.



சுஜி : இன்னும் மூணு மிஸ்ஸிங் எங்க போச்சுன்னு தெரியல.



ஹேமா : ஹாய் காய்ஸ்.



சுஜி : ஒன்னு வந்துருச்சு மத்த இரண்டு பக்கிகளும் எங்க ஊர் சுத்த போச்சோ.



ஷாலினி : சீனியர் அவங்களும் உங்க ரூம் தான எங்க போனாங்க இரண்டு பேரும்.



மாதேஷ் : ஏதோ புக் எடுத்து வச்சு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கானுங்க மொபைல சைலண்டுல போட்டுட்டு.



சுஜி : அவனுங்க இரண்டு பேர் தலைலயும் இரண்டு கொட்டு கொட்டிட்டு ஆன்லைன் வர சொல்லு.



மாதேஷ் : அப்படியே ஆகட்டும் மகாராணி.



சுஜி : என் பேர் சுஜி மகாராணி இல்ல டா.



மாதேஷ் : ஒரு டயலாக் பேச விடுராளா பாரு.



விக்ரம் : எங்களுக்கு டிஸ்டர்ப் ஆக கூடாதுன்னு தான் மொபைல சைலண்ட்ல போட்டுட்டு படிக்குறோம் அது பொறுக்கலையா உங்களுக்கு.



ஹேமா : ஆமா இவன் அப்படியே படிச்சி கிழிச்சுட்டாலும்.



சுஜி : கிளாஸ்ல தூங்க வேண்டியது ரூம்க்கு போனதும் சூர்யாவ சொல்லி தர சொல்லி தொல்லை பண்ண வேண்டியது.



சூர்யா : சரியா சொன்ன சுஜி மா.



விக்ரம் :என்ன டா இப்படி சொல்லிட்ட.



ஷாலினி : போதும் சண்டை போடாதீங்க சீனியர்.



சூர்யா, விக்ரம் : இப்போ இங்க யாரு சண்டை போட்டா.



சுஜி : அதான.



ஷாலினி : அக்கா நீங்களுமா.



இப்படியே கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருந்தாங்க, அப்புறம் ஒவ்வொருத்தரா குட் நைட் சொல்லிட்டு ஆப் லைன் போயிட்டாங்க.



அடுத்த நாள் காலேஜ்,



சுஜி, ஹேமா: ஷாலு கிளாசுக்கு வந்தாங்க.



அபிநயாவை தவிர மற்ற மூன்று பேரும் அவங்க கிட்ட ஜாலியா பேசுனாங்க.



சுஜி : இவ ஏன் சோகமாவே இருக்கா.







ஷாலினி எல்லாம் உங்க பிரண்டு பேச மாட்ராரு ன்னு தான்.



சுஜி : அவனே ஒரு டம்மி பீஸ் அவன் பேசலைன்னு சோகமா இருக்காலாமா.



அபிநயா: மாமாவ என் கூட பேச வைக்க ஏதாவது ஐடியா இருந்தா கொடுங்க அக்கா.



சுஜி: ஏற்கனவே நீ கேன்டீனுக்கு சாப்பிட வர மாட்றேன்னு பையன் சோகமா தான் இருக்கான். அப்போ அவனுக்கு உன்னை பிடிக்கும் போல.



அதனால நீ என்ன பண்ற அவன பார்த்தாலே நீ மூஞ்சிய திருப்பி விட்டு போயிடு அப்புறம் அவன் பாக்குற டைம் வேற பசங்களோட நீ நல்லா சிரிச்சு சிரிச்சு பேசு.



அபிநயா: வேற பசங்களா ஐயோ அக்கா நான் பசங்க கிட்டலாம் பேசவே மாட்டேன் பயமா இருக்கும்.



ஹேமா : அப்போ சூர்யா, மாதேஷ் கிட்ட பேசுற.



அபிநயா : அவங்க மாமாவோட பிரண்ட்ஸ் அதான்.

சுஜி : அப்போ அவன்ங்க கிட்டயே நல்லா ஜாலியா பேசு.

அபிநயா : அவங்க ஏதாவது தப்பா நினைச்சுக்க போறாங்க.

சுஜி: அதெல்லாம் நினைக்க மாட்டாங்க நான் சொல்லி வைக்கிறேன் சரியா.

அபிநயா : ம்ம்ம்ம் சரி அக்கா.

ஹேமா: சரி வாடி கிளாசுக்கு போகலாம்.

சுஜி: ஓகே பாய் செல்லம்ஸ்.

( அவங்க போயிட்டாங்க )

ஷாலினி :(mv) நம்மளும் இது போல ஏதாவது பண்ணி நம்ம ஆளுக்கும் பொசசிவ்னஸ்ஸ உணர்த்த தூண்டி விடலாமா. ஆனா நாம எல்லாம் கூடையும் ஜாலியா பேசுவோமே. அப்போ இந்த பிளான் வொர்க் அவுட் ஆகாது வேற பிளான் யோசிக்கலாம்.

மதி:( அவ தலைல கொட்டுனா) நீ என்னடி அடிக்கடி கண்ணா திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்ற.

ஷாலினி : ஒன்னும் இல்ல டி.

சுஜி விக்ரம் என்று தெரியாமல் சூர்யா மாதேஷ் கிட்ட இந்த விஷயத்தை பற்றி சொன்னா.

சூர்யா : (mv) நம்மளும் இதே ஐடியாவை பாலோ பண்ணுவோம்.அப்போ தான் சுஜிக்கும் நம்ம மேல பொசசிவ்னஸ் உண்டாகி லவ்வ சொல்லுவா.

யாருடன் நெருங்கி பழகலாம் ஹேமா ஷாலினி இல்ல அவ பிரண்ட்ஸ் யார் கூடையாவது பேசலாமா.

ச்சி ச்சி சூர்யா ஏண்டா நீ இவ்வளவு கேவலமா யோசிக்கிற அவளை லவ் சொல்ல வைக்க மத்த பொண்ணுங்களோட ஃபீலிங்ஸ் விளையாட பாக்குறியே இது ரொம்ப தப்பு டா ( இப்படியே அவன் மனசுல பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது ).

சுஜி: இது எதுவும் தெரியாம காலேஜ் லைஃப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருந்தா.



தொடரும்....
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top