• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அன்னைக்கு பார்க்கல இருந்து வீட்டுக்கு போன பிறகு ஷாலினி ரொம்ப குழப்பத்தோடவே இருந்தா. சூர்யாவை தொட்டதும் ஏன் அப்படி இருந்தது.இன்னைக்கு ஏன் அவன் புதுசா தெரியுறானு யோசிச்சிட்டு இருந்தா.

சூர்யா : நைட் அவனுக்கு தூக்கமே வரல புள்ள சுஜியோட நினைப்பு தான் அவளோட குறும்பு தனம் எல்லாத்தையும் நினைச்சு சிரிச்சுட்டு இருந்தான்.

அடுத்த நாள் காலை,

சூர்யா: ரொம்ப நேரம் கண்ணாடியை பார்த்து தலை சீவி விட்டு இருந்தான் .

மாதேஷ் :தள்ளுடா எவ்வளவு நேரம் தலை சீவுவ.

சூர்யா :ஏன் மச்சி கோபப்படுற.

மாதேஷ் : பின்ன கொஞ்சவாங்களா காலேஜ்க்கு டைம் ஆகிருச்சு போக வேண்டாமா.

சூர்யா : சரி வாங்க போகலாம்.

மூனு பேரும் கிளாஸ் உள்ள போனாங்க அங்க சுஜி ஹேமா மடில படுத்து இருந்தா.

சூர்யா :(அவள்ட ஓடினான் அவளை நிமிர்த்தி உக்கார் வச்சு நெத்தி எல்லாம் தொட்டு பார்த்தான் )என்ன டி ஆச்சு ஏன் படுத்திருக்க உடம்பு சரி இல்லையா.

சுஜி : அடேய் லூசு நைட் எல்லாம் தூக்கம் வரலையேனு இப்போ தூங்குனா அதையும் வந்து கெடுத்து விட்டுட்டான்.

சூர்யா : என்ன தூங்குனியா.

விக்ரம் :இது என்ன காலேஜா இல்லை பெட் ரூமா.

சுஜி :அதை சார் கிளாஸ் எடுக்கும் போது தூங்குற நீ சொல்லாத டா.

விக்ரம் : ப்பே.

மாதேஷ் : சூர்யா நீ ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணுற.

ஹேமா: அதான இப்ப மட்டும் என்ன ஓவர் அக்கறை.

சூர்யா : (அச்சோ எப்படி சமாளிக்கிறது) ஆங் அது நேத்து ஐஸ்கிரீம் சாப்பிட்டா ள அதான் ஃபீவர் வந்துடுச்சுன்னு நினைச்சேன்.

எல்லாரும் அவன ஒரு மாதிரி பார்த்தாங்க.

சூர்யா:( ஒரு வேளை யாரும் நம்பலையோ ).

அதுக்குள்ள ஸ்டாப் வரவும் எல்லாரும் அவங்கவங்க பிளேஸ்க்கு போய்ட்டாங்க.

சூர்யா :(mv) நல்ல வேலை தப்பிச்சிட்டோம்.

மதியம் 5 பெரும் கேண்டின் போனாங்க அங்க ஆல்ரெடி ஷாலு, அனு,ஜெனி, மதி இருந்தாங்க.

சுஜி : ஷாலு பக்கத்துல போய் உட்கார்ந்தா.

சூர்யா :சுஜி பக்கத்துல போய் உக்காந்தான்.

ஷாலு : சூர்யாவையே பார்த்துட்டு இருந்தா.

அபிநயா : மாமா.

விக்ரம்: அறிவில்லையா உனக்கு எவ்வளவு டைம் சொல்றது அப்படி கூப்பிடாதன்னு. அபிநயா அம்மா உங்களுக்கு வெஜ் ரைஸ் செஞ்சு கொடுத்து அனுப்பினாங்க. அதுக்கு தான் கூப்பிட்டேன் சாரி.( அவன் முன்னாடி பாக்ஸ் எடுத்து வச்சுட்டு அழுதுட்டே போயிட்டா ).

அவ பின்னாடியே ஷாலு,மதி, ஜெனி, எழுந்து போய்ட்டாங்க.

சுஜி : ஏண்டா அந்த பொண்ண திட்டிகிட்டே இருக்க.

சூர்யா : ஆமா டா பாவம் அந்த பொண்ணு.

ஹேமா : ஏன் உனக்கு அந்த பொண்ண பிடிக்கல சொல்லு.

விக்ரம் : அவ மேல கோவம் இல்லடா அவ அப்பாக்கு தான் எங்களை பார்த்தாலே பிடிக்காது அத்தை எங்க கூட பேசினாலே சண்டை போடுவாரு.

இதுல எப்படி அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ண முடியும் பிரச்சனை தான் ஆகும்.

சூர்யா: (mv) நம்ம ஆல் வீட்டுலயும் இப்படி ஏதாவது பிரச்சனை இருக்குமா.

சுஜி : என்ன டா யோசிக்கிற.

சூர்யா: நீ யாரையாவது லவ் பண்ணி இப்படி ஏதாவது பிரச்சனையா என்ன பண்ணுவ.

சுஜி :நான் அவனை இழுத்துட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்பேன்.

மாதேஷ் :நீ பண்ணாலும் பண்ணுவ.

சுஜி: சரி வாங்க கிளாசுக்கு போகலாம்.

அன்னைக்கு நைட் சூர்யா சுஜி கூட ரொம்ப நேரம் மொபைல்ல பேசிட்டு இருந்தான்.

ஷாலினிக்கு சூர்யா நம்பரை எப்படியாவது வாங்கி பேசணும்னு ஆசை ஆனா நம்பர் எப்படி வாங்குவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தா.

அடுத்த நாள் காலேஜ்,

சூர்யா:( வரும்போது சுசுகி சாக்லேட் வாங்கிட்டு வந்தான் )சுஜி இந்த சாக்லேட்.

சுஜி: என்ன அதிசயம்.

விக்ரம், மாதேஷ் :எங்களுக்கு இல்லையா.

சூர்யா :உங்களுக்கு தான் பிடிக்காதே.

ஹேமா :எனக்கு பிடிக்குமே அப்ப எனக்கு இல்லையா.

சூர்யா: மறந்துட்டேன் நாளைக்கு வாங்கிட்டு வரேன்.

சுஜி: இப்போ ஷேர் பண்ணிக்கலாம் வா.

சூர்யா:(m. v) ஒரு சாக்லேட்க்கு இவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்கு.

கேண்டீன்,

சுஜி : என்ன நமக்கு முன்னாடி இருப்பாங்க இன்னும் ஆள காணோம்.

மாதேஷ்:அதான் என்ன ஆச்சுன்னு தெரியலையே.

அப்போ ஷாலு, மதி மட்டும் வந்தாங்க.

ஹேமா: எங்க அவங்க இரண்டு பேரையும்.

ஷாலினி: அபிநயா கிளாஸ்லயே சாப்பிட்டுக்குறேன்னு சொல்லிட்டா.

விக்ரம்:ஏன் ஏன் வரலைன்னு சொன்னா.

சூர்யா :ஏண்டா பார்க்கும் போதெல்லாம் திட்டினா அந்த பொண்ணு பாவம் என்ன பண்ணும்.

ஷாலினி: நாங்களும் வரவில்லை என்றால் நீங்கள் ஏதாவது நினைச்சிபிங்கள்ள அதான் ஜெனிய அவங்க கூட இருக்க சொல்லிட்டு நாங்க மட்டும் இங்க வந்தோம்.

சுஜி : சரி உட்காருங்க ஷாலு நீ தக்காளி சாதம் பிடிக்கும்ன்னு சொன்னதுனால உனக்காக நான் என் கையால சமைச்சு எடுத்து வந்து இருக்கேன்.

ஷாலினி: (வாங்கி சாப்பிட்டா( வாவ் சூப்பரா இருக்கா.

சூர்யா : ( சுஜி செஞ்ச சாப்பாடா நானும் சாப்பிடணுமே )ஷாலு எனக்கும் கொடு.

ஷாலினி : நோ சீனியர் உங்களுக்கு கிடையாது.

சூர்யா : பச் ( அவ கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிட்டான் ).

ஷாலினி : அவ சாப்பிட்ட சாப்பாட்டை சூர்யா வாங்கி சாப்பிடவும் சந்தோஷப்பட்டா அவன் சாப்பிட்டதை பார்த்து கிட்டே இருந்தா.

சூர்யா:(mv) சுஜி செஞ்ச சப்பாடு எவ்வளோ சூப்பரா இருக்கு கல்யாணத்துக்கு பிறகு டெய்லி ருசியானா சப்பாடு சாப்பிட்டலாம் போலயே.

சுஜி : சின்ன பையனா டா நீ இப்படி சட்டையெல்லாம் கொட்டி கிட்டு சாப்பிடுற.( அவ கர்ஷிப் வச்சு அவனுக்கு துடைச்சி விட்டா ).

சூர்யா :சுஜி.

சுஜி : பல்ல காட்டாம தின்னுடா முண்டம்.

சூர்யா: சரி சரி.

ஷாலினி : பாருங்க அக்கா சீனியர் என்கிட்ட உள்ளதை பிடுங்கி சாப்பிடுறாங்க.

சுஜி : நீ கவலை படாதே நாளைக்கு வரும்போது இரண்டு பாக்ஸ் எடுத்துட்டு வர்றேன்.

ஷாலினி : என் செல்ல அக்கா (சுஜிய கிஸ் பண்ணிட்டு சூர்யாவை பார்த்து பளிப்பு காட்டுனா ).

சூர்யா : ப்பே.

அப்பறம் சாப்டுட்டு கிளாஸ்க்கு போய்ட்டாங்க.

தொடரும்....
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top