Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
சூர்யா, ஷாலினி, அபி, வினய் : நாலு பேரும் வீட்டுக்குள்ள போனாங்க.
சூர்யா அப்பா : வீட்டை சுத்தி பார்த்திங்களா பிடிச்சிருக்கா.
ஷாலினி : ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.
சூர்யா அம்மா : எல்லாரும் சாப்பிட வாங்க.
நிறைய பேர் இருந்ததால எல்லாரும் வரிசையாக கீழ உக்காந்தாங்க.வாழை இலை போட்டு அதுல தண்ணீர் தெளிச்சு இட்லி,பூரி, பொங்கல், வடை சட்னி, சாம்பார், கேசரி எல்லாம் சூர்யா அம்மாவும், அங்க வேலை பார்க்கிற இரண்டு பேரும் சேர்ந்து எல்லாருக்கும் பரிமாறுனாங்க.
வினய்: காலைல பிரேக் பாஸ்ட்டே இவ்வளவா அப்போ மதியம் லன்ச்க்கு இன்னும் நெறையா இருக்கும் போலையே.
சூர்யா அம்மா : ஆமா மருமகனே நிறையா இருக்கு.
வினய்: என்ன மருமகனா உங்களுக்கு இன்னொரு பொண்ணு கூட இருக்கா.
: இருக்கு ஆனா எனக்கு தான் கல்யாணம் ஆகியிருச்சே.
எல்லாரும் திரும்பி பார்த்தாங்க அங்க சூர்யாவோட தங்கச்சி மீனா, அவங்க ஹஸ்பண்ட் ராகவ், அவங்களோட குழந்தை அபர்ணா நின்னாங்க.
வினய்: சோ சேட் கல்யாணம் ஆகி குழந்தை வர இருக்கா.
மீனா: ஆமா என்ன பண்றது( சோகமா சொன்னா ).
ராகவ்: பார்த்தியா மச்சான் உன் தங்கச்சி கொழுப்ப நான் எதோ அவளை கொடுமை படுத்துற மாதிரி சொல்றா.
சூர்யா: அதானா என் நண்பனுக்கு என்ன குறைச்சல்.
மீனா: காலையில கூப்பிட்டதற்கு இப்பதான் என்னை அழைத்து வந்து இருக்காரு இவரெல்லாம் வச்சு என்ன பண்றது.
ராகவ்: அதுக்காக காலையில் 5:00 மணிக்கே வா வந்து நிக்க முடியும்.
சூர்யா அம்மா : சரி கை,கால் கழுவிட்டு வந்து உட்காருங்க முதல்ல சாப்பிடலாம் அப்புறம் பேசிக்கலாம்.
அப்புறம் எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டாங்க.
சூர்யா: ஷாலினி இவன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ராகவ், ஸ்கூல்ல ஒன்னா தான் படிச்சோம். இப்படி ஒரு நல்லவனா பெரிய மனசுல மாதிரி என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சு மச்சான் ஆகிட்டேன்.
ராகவ்: ரொம்ப புகழாத மச்சான் எனக்கு வெக்கமா இருக்கு.
மீனா : ரொம்ப நடிக்காதீங்க என்ன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி எங்க அண்ணன் கால்ல வந்து விழுந்ததுனால ஏதோ எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வச்சான். இல்லேன்னா உன்னை எல்லாம் எவ கட்டிப்பா.
ஷாலினி, வினய்: சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
ராகவ் :எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்தாத டி.
மீனா :அண்ணி நீங்க சொல்லுங்க எப்படி உங்களுக்கு மேரேஜ் ஆச்சு.
ஷாலினி : நடந்த எல்லாத்தையும் சொன்னா.
மீனா : சுஜி அண்ணி அடிக்கடி உங்க பேரை சொல்லுவாங்க இப்பதான் பார்க்க முடிஞ்சிருக்கு பாருங்க.
ஷாலினி : ம்ம்ம்ம்ம் ஆமா.
அபி : அத்தை, அத்தை.
மீனா : என்ன செல்லம் ( அவனை தூக்கி மடியில வச்சு கிட்டா).
அபி : அபர்ணா என்னை அடிக்கிறா என்னன்னு கேளுங்க.
மீனா : பாப்பா தம்பிய அடிக்க கூடாது சமத்தா விளையாடுங்க.
அபி : அத்தை ஒரு வாரம் லேட்டா பிறந்ததுக்காக என்னை அவ தம்பின்னு சொல்லாதீங்க.
அபர்ணா : அம்மா அவன் எனக்கு பின்னாடி பிறந்தவன் அப்ப எனக்கு அவன் தம்பி தான வேணும்.
மீனா : திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க சண்டைய.
சூர்யா : அபி உன் ப்ளே ரூம் போய் அங்க உள்ள டாய்ஸ் வச்சு விளையாடுங்க போங்க,அபர்ணா நீயும் போ.
அபி /அபர்ணா : ஓகே அப்பா / மாமா.
அப்பறம் இவங்க கொஞ்ச நேரம் ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருந்தாங்க.
மதியம் அந்த ஊர்ல உள்ள எல்லாரையும் விருந்துக்கு கூப்பிட்டு இருந்தாங்க.
அதுக்காக சமையல் ஆள் எல்லாம் வந்து வீட்டுக்கு பின் புறத்துல சமையல் வேலை நடந்து கிட்டு இருந்தது.
சூர்யா அம்மா :ஷாலினி கையில பட்டுப்புடவை நகை எல்லாம் கொடுத்து ரெடி ஆகி வர சொன்னாங்க.
சூர்யா அப்பா: சூர்யா கையில பட்டு வேஷ்டி,செயின்,ப்ரைஸ்லேட், மோதிரம் எல்லாம் கொடுத்து போட்டு ரெடியாகி வர சொன்னாங்க.
மீனா ஷாலினிக்கு அலங்காரம் பண்ணி விட்டா.
மீனா: அண்ணி ரொம்ப அழகா இருக்கீங்க.
ஷாலினி : அழகா ஸ்மைல் பண்ணா.
மீனா : வாங்க வெளில போகலாம்.
அவங்க வெளில வர நேரம் சரியா சூர்யாவும் பக்கத்து ரூம்ல இருந்து வெளிய வந்தான்.
சூர்யா, ஷாலினி : அவங்களையே மறந்து இரண்டு பேரும் மாறி மாறி பார்த்துட்டு இருந்தாங்க.
மீனா : பார்த்தது போதும் வாங்க பா.
சூர்யா, ஷாலினி : சுய நினைவுக்கு வந்து கீழ போனாங்க.
சூர்யா அம்மா : ஷாலினி முதல்ல பூஜை அறைல விளக்கு ஏத்து மா.
ஷாலினி : சரிங்க அத்தை.
அவ விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டதும் வெளில வந்து பெரியவங்க எல்லார் கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க.
அப்பறம் ஊர் மக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிச்சுட்டாங்க. வயிறு நிறையா சாப்பிட்டு சூர்யா, ஷாலினியை மனதார வாழ்த்திட்டு போனாங்க.
தொடரும்....