Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
ஷாலினி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு அதுக்கு நடுவுல முகூர்த்த புடவை எடுக்கணும், நகையும் வாங்கணும் அதுக்காக ஷாலினி வீட்டுல சூர்யா, அபிமன்யு, கதிரேசன், லட்சுமி எல்லாரையும் வர சொல்லி இருந்தாங்க.
ஷாலினி அவ அப்பா, அம்மா வோட டிரஸ் கடைக்கு முன்னாடி வெய்ட் பண்ணிட்டு இருந்தா.
(சரத் பேமிலி அப்போ தான் வந்தாங்க )
சரத்: ஹாய் ஷாலினி.
ஷாலினி : ஹாய் வாங்க. அத்தை மாமா நல்லா இருக்கீங்களா.
சரத் அப்பா, அம்மா : நல்லா இருக்கோம் மா.
ஷாலினி அம்மா, அப்பா : வாங்க சம்மந்தி.
சரத் அம்மா, அப்பா : வரோம் சம்மந்தி.
சரத் அப்பா : சரி வாங்க உள்ள போகலாம்.
ஷாலினி அப்பா : கொஞ்ச நேரம் இருங்க என் அக்கா, மாமா வந்திடட்டும்.
சரத்: அந்த சூர்யா அபியும் கூட வராங்களா (ஷாலினிக்கு மட்டும் கேக்குற மாதிரி கேட்டான் ).
ஷாலினி : ஆமா அவங்களும் தான் வராங்க.
சரத் : ஏன் எங்க போனாலும் அவங்களையும் கூட சேர்த்துகிறீங்க.
ஷாலினி : அவங்க வரதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.
சரத் : அவங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல.
ஷாலினி :அதுக்கு நான் என்ன பண்ணுறது.
சரத் : எனக்கு பிடிக்காத விஷயத்தை நீயும் பண்ண கூடாது.
ஷாலினி : நமக்கு இன்னும் மேரேஜ் ஆகல அதுக்கு முன்னாடியே நான் என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு நீங்க எனக்கு ரூல்ஸ் போடாதீங்க.
சரத் : அவளை கோவமா முறைச்சு பார்த்து கிட்டு இருந்தான்.
ஷாலினி அம்மா : என்ன இரண்டு பேரும் ரகசியம் பேசுறிங்க அவங்க அங்க வந்துட்டாங்க.
அபி : ஷாலினி மிஸ் ( அவ கிட்ட ஓடி வந்தான்).
ஷாலினி
அவனை தூக்கி கிட்டா )செல்லக்குட்டி வந்துட்டீங்களா.
அபி: ஆமா மிஸ் வந்துட்டேன்.
ஷாலினி: சரி வாங்க அப்ப உள்ள போகலாம் வாங்க சீனியர்.
முதல்ல முகூர்த்தத்துக்கு புடவை பார்த்தாங்க.
சரத் அம்மா: சரத் நீ ஷாலினிக்கு புடவை எடுக்க உதவி பண்ணு நாங்க எல்லாரும் மத்தவங்களுக்கு புடவை செலக்ட் பண்றோம்.
சரத்: சரி மா.
அந்த இடத்துல சரத்,ஷாலினி,சூர்யா, அபி மட்டும் தான் இருந்தாங்க. மத்தவங்க எல்லாரும் தனியா போயிட்டாங்க.
சரத்: ஒவ்வொரு புடவையா எடுத்து காட்டிக்கிட்டு இருந்தான்.
ஷாலினி: அவளுக்கு எதுவுமே பிடிக்கல.
சூர்யா: சும்மா நின்னுகிட்டு இருந்தான்.
அபி :அப்பா நீயும் ஏதாவது செலக்ட் பண்ணு பா.
சூர்யா: வேண்டாம் அபி அதற்குத் தான் சரத் இருக்காருல்ல.
அபி: அவர் எடுக்கிறது தான் மிஸ்சுக்கு பிடிக்கலைல நீ ஏதாவது எடுத்து காட்டு.
சூர்யா: சரி வா எடுத்துக் காட்டலாம் ( அடர் பச்சை கலர்ல கோல்டன் கலர் பால் பார்டர்ல மயில் உருவம் பதிச்ச அழகான புடவை எடுத்தான் ).
அபி: வாவ் அப்பா இந்த கலர் புடவை மிஸ்ஸுக்கு அழகா இருக்கும்.
சூர்யா: அப்படியா அவ்வளவு அழகா இருக்கா.
அபி: மிஸ் இந்த புடவை எப்படி இருக்கு பாருங்க.
ஷாலினி: வாவ் ரொம்ப அழகா இருக்கு அபி.
சரத்: ரொம்ப கோவமா இருந்தான்.
வினய்
அப்போ தான் உள்ள வந்தான் )ஹாய்.
சரத்: ஹாய் வினய்.
வினய் : ஹாய் மாமா ஹாய் அபி குட்டி ( அபிய தூக்கி கிட்டான் ).
சூர்யா: ஹாய் வினய்.
அபி : வினய் மாமா இது அப்பா செலக்ட் பண்ண புடவை எப்படி இருக்கு.
வினய்: மாமாவோட செலக்சன் எப்பவுமே சூப்பர் தான்.
(வினய் கதிரேசன், லட்சுமி வீட்டுக்கு கல்யாண விஷயமா பேச வரும்போது எல்லாம் சூர்யா, அபி கூட பேசி ரொம்ப க்ளோஸ் ஆயிட்டான்).
சரத்
ஷாலினி கிட்ட) உன் தம்பிக்கு நான் மாமாவா இல்ல அவள் மாமாவா உரிமையா அவன் கூட நின்னு பேசிகிட்டு இருக்கான்.
ஷாலினி : நீங்க அவன் கூட எப்படி பேசுறிங்களோ அப்படி தான் அவனும் பேசுவான்.
சரத்: அப்போ என் மேல தான் எல்லா தப்புமா.
ஷாலினி : நான் அப்படி சொல்லல நீங்க அவன்கூட ஃப்ரீயா பேசினா அவனும் உங்க கூட ஃப்ரீயா பேசுவான்.
சரத்: வேற ஒரு pudavau எடுத்துக் கொடுத்தான் எனக்குன்னு எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.
அபி : ஆனா என் அப்பா எடுத்தது தான் நல்லா இருக்கு.
சரத் :உனக்கு புடவை பற்றி என்ன தெரியும்.
சூர்யா : அபி அமைதியா இரு (அவனை தூக்கி வச்சு கிட்டான் ).
வினய்: உங்களுக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்லை ( சரத்தை பார்த்து சொன்னான் ) ஷாலு உனக்கு புடிச்சிருக்கா இல்லையா.
ஷாலினி: ரொம்ப பிடிச்சிருக்கு டா.
வினய்: அப்புறம் என்ன அவளுக்கு பிடிச்சிருந்தா போதும் இதையே எடுத்துக்கலாம்.
சரத்: கோவமா போய்ட்டான்.
சூர்யா : அச்சோ அவரு கோவமா போறாரு டா.
வினய்:போகட்டும் மாமா அவரை எனக்கு சுத்தமா பிடிக்கல.
அபி : எனக்கும் தான் வினய் மாமா.
வினய்: போட்டுக்க செல்லம் ( ஹைபை பண்ணிகிட்டாங்க ).
சூர்யா : ஹே போதும் ஷாலினி முகம் மாறுது பாருங்க.
வினய்: சரி சரி வா உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரேன்.
ஷாலினி :வாங்க வாங்க.
சூர்யா : அய்யோ ( அவன் தலைல அடிச்சு கிட்டான்) அவன் போய்ட்டான்னு கொஞ்சமாவது பீல் பண்ணுறாளா பாரு.
ஷாலினி :ஐஸ் கிரீம் சாப்பிட்டு சமாதானம் பண்ணிக்கலாம் சீனியர் வாங்க.
பெரியவங்க எல்லாரும் வரதுக்குள்ள இவங்க நாலு பேரும் எதிர்ல உள்ள ஐஸ் கிரீம் ஷாப்ல போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாரத்த சமாதானம் பண்ணி அழைச்சிட்டு வந்தாங்க.
டிரஸ் கடைக்கு எல்லாம் எடுத்துட்டு நகை கடைக்கு போய் கல்யாணத்துக்கு தேவையான நகை எல்லாம் வாங்கினார்கள்.
அப்புறம் மூன்றாவது நாள் ஷாலினி, சரத் வீட்டுல பந்தக்கால் நட்டு அவங்களுக்கு நலுங்கு வச்சாங்க.
அடுத்த எபிசோட்ல ஷாலினி மேரேஜ் பத்தி பாக்கலாம்.
தொடரும்.....