• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
13. கவிப்பிரியா தீபா இவர்களின் உறவு முறையும்..
ஐவரின் அறிமுக படலமும்..


கவிப்பிரியா...

கவிப்பிரியாவின் தந்தை மிகப்பெரிய ஜவுளி வியாபாரி... சென்னை மிகவும் பிரபலமான பல்வேறு இடங்களில் அவருக்கு சொந்தமாக ஐந்து மிக பெரிய ஜவுளி கடைகள் உள்ளது. அது இல்லாமல் கவிப்பிரியா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஒரு துணி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் மில்லும் இருக்கிறது.

அண்ணன் வெங்கடாசலம், இவரது மனைவி மரகதம்.
தம்பி கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி ருக்மணி இவர்கள் இருவரின் புதல்விகள் தான் கவிப்பிரியா, தீபா...

வெங்கடாசலத்தில் புதல்வி தான் கவிப்பிரியா... கொஞ்சம் திமிர்... கொஞ்சம் பிடிவாதம்.... ரொம்ப செல்லம் வீட்டின் முதல் குழந்தை அதனால் அனைவருக்கும் செல்லம்...... அதுவும் தந்தையை காட்டிலும் சித்தப்பா கோபாலுக்கு தான் கவி மீது கொள்ளை பிரியம் இருக்கும்.

கவிப்பிரியா பிறந்து ஒரு வருடம் கழித்து தான் ... அவருக்கு திருமணம் நடந்தது. பிறகு ஒரு வருடம் கழித்து தான் தீபா பிறந்தாள். தனக்கு என்று ஒரு மகள் பிறந்தாலும் தன் அப்பா மட்டும் இல்லாமல் அம்மாவும் கூட கவிப்பிரியாவை கொண்டாடுவது தான் தீபாவிற்கு கவி மீது கோபம் வர காரணம்.

எதற்கு எடுத்தாலும் கவி... கவி... என்று தன் வீட்டில் அவளுக்கு மட்டும் எந்த விதமான தடைகளும் இல்லை.. கட்டுப்பாடுகளும் இல்லை,
என்பதால் வந்த ஒதுக்கம் தான் அக்கா தங்கை என்றாலும் யாரோ எவரோ என்று இருப்பதற்கு காரணம்.

சரி இவர்களை கதையின் போக்கில் இவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்...

அது மிகவும் பிரபலமான கிளப்.
அங்கு பேட் மிட்டன், டென்னிஸ்.. டேபிள் டென்னிஸ் என்று அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கவிப்பிரியா பேட்மிட்டன் பிளேயர்.. தீபா டென்னிஸ் பிளேயர்.. இருவருக்கும் இடையே மூன்று வருடம் இடைவெளி இருந்தாலும்.. இருவரும் இங்கே கிளப்பில் உறுப்பினராக இருப்பதால்.. ஸ்போர்ட்ஸ் இல் பழக்கமான அவர்களுடைய தோழி மஞ்சு பிறந்தநாள். அந்த கொண்டாட்டத்திற்கு தான் வந்து இருந்தார்கள்... எப்பவுமே இது மாதிரி கொண்டாட்டங்கள் என்றால் கவி பிரியா டான்ஸ் பாட்டு என்ற செம்மையாக கலக்கலாக இருப்பாள். ஆனால் இம்முறை ஏனோ அவளுக்கு காலையில் தன்னை கடந்து சென்ற பெராரி காரே மனதிற்குள் வந்து வந்து அலைமோத..

சீக்கிரமாக பார்ட்டியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டாள். ஆனால் தீபா அவள் போனால் எனக்கு என்ன என்று அவள் பார்ட்டி முழுவதும் இருந்து நல்லா என்ஜாய் செய்து விட்டு இரவு ஒரு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தாள்.

கவி வீட்டிற்கு வந்ததுமே அங்கு இருந்த வாசல் காவலாளிய அழைத்து... அந்த வீட்டின் விபரங்களை கேட்டாள்.

மேடம் நீங்க சொல்ற அந்த வீட்டு வாட்ச்மேன் அவருடைய அண்ணன் நாளைக்கு காலையில் தான் டியூட்டிக்கு வருவார் அவருக்கு தான் தெரியும் மேடம் என்று சொல்லவும், ஆ.. ஷிட்.. என்றவள் சரி நீ போ என்று அவனை அனுப்பி வைத்து விட்டு தன் வீட்டிற்குள் சென்று படுத்தாள். நினைவுகள் எங்கும் அந்தக் காரிலேயே இருக்க... அந்த காரில் இருப்பவர் யாராக இருக்கும்... வயதானவனா, இல்லை இளம் வாலிபனா இல்லை... அதற்குள் இருந்தது பெண்ணா யாராக இருக்கும் யாராக இருந்தாலும் செம்ம கார்.. என்று இப்போது காலையில் விடியும் அது யாருடைய கார் அங்கு யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே உறங்கினாள்.

அழகான இளம் காலை பொழுது...

ஐந்து மணி...

அண்ணன் தம்பி அனைவருமே எழுந்து தங்களுடைய தோட்டத்தில் ஜாக்கிங் செய்தனர். அந்த நேரம் சரியாக மெய்யழகியும் பூக்களுக்கு நடுவில் அழகான ஒரு புல் தரையில் யோகா செய்து கொண்டு இருந்தாள்.

அந்தப் பக்கமாக ஐந்து பேருமே ஜாக்கிங் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் முன்னும் பின்னுமாக பேசிக் கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த சரோஜா...

ஐந்து பேரையுமே மெய்யழகிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

முதலில் இது மிதுன் தேவ் என்று அறிமுகம் செய்தாள்...

அவனைப் பார்த்து விட்டு ஹாய் மாமா நீங்க அப்படியே அழகா ஆக்டர் ரானா சார் மாதிரி இருக்கீங்க... என்று இயல்பாக பேசினாள்.

அடுத்து சனாதன் தேவ் இவர் தான் இரண்டாவது ஆள் என்று அறிமுகம் செய்ய...

ஐயோ மாமா உங்களை பார்க்கிறதுக்கு அப்படியே ஆக்டர் அருண் விஜய் மாதிரி இருக்கீங்க... அதுவும் செம க்யூட்டா இருக்கீங்க என்று சொன்னாள்.

அடுத்து ருத்ர தேவ்... என்று சொல்லிய அடுத்த நொடி..

ம்ம்... வாவ் சூப்பர்... நீங்கள் அப்படியே ஆர்யா மாதிரி இருக்கீங்க என்று சொன்னாள்.

அடுத்து கர்ணாவை சொல்வதற்கு முன் மிதுன் இடையில் பேசினான்... ஓய் என்ன இது எங்க எல்லாரையுமே ஏதாவது ஒரு ஆக்டர் சொல்லி சொல்ற அப்படி என்று கேட்டான். ஆமா எங்களை வைத்து ஏதும் கிண்டல் செய்கிறாயா என்று கேட்டான்.

அச்சச்சோ சத்தியமா அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எங்க காலேஜ்ல எல்லாம் பொம்பள பிள்ளைங்க இப்படித்தான் அவங்களுக்கு பிடிச்ச கேரக்டர்ஸ் சொல்லி பேசி சிரிப்பாங்க... ஆனா யாருக்குமே என்ன மட்டும் பிடிக்கவே பிடிக்காது.

அங்க இருக்க எல்லாருக்குமே ஏதாவது ஒரு நிக் நேம் வைத்திருப்பார்கள்.. அவங்க ஒரிஜினல் பெயரை விட அவங்க நிக் நேம் தான் ரொம்ப அழகா இருக்கும்... ஆனால் எனக்கு வச்சு இருக்கிற பெயர் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது தெரியுமா என்று சொன்னாள்.

அப்படி என்ன உனக்கு பெயர் வைத்து இருந்தார்கள் என்று கேட்டான் கர்ணா.

அது... வா... மாமா என்னுடைய பெயர் சொன்னதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் யாரும் சிரிக்க கூடாது என்று தயக்கத்தோடு கேட்டாள்.

நாங்கள் அதெல்லாம் எதுவும் ஒன்றும் சிரிக்க மாட்டோம் நீ சொல்லு என்று சொன்னார்கள்.

எனக்கு பெயர் பழைய கஞ்சி... என்று சொல்லி விட்டு அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.

ஐந்து பேருமே ஏதோ கண்களால் பேசிக்கொண்டு...

ஏன் கர்ணா எனக்கு என்னமோ... மெய்யழகியை பார்க்கும் போது நடிகை ஷாலினி மாதிரி இல்ல என்று சொன்னான் சனாதன்.

அட ஆமாம் அண்ணா எனக்கும் இந்த பெண்ணை இரவில் பார்த்ததில் இருந்து மனதிற்குள் அப்படித்தான் தோன்றியது. நான் நினைத்தது போலவே நீங்களும் சொல்கிறீர்கள், அப்போ இவளுடைய முகவெட்டு நடிகை ஷாலினி போல் இருக்கிறது தானே.. என்று சொல்லி இருவரும் உரையாடிக் கொண்டு இருக்க...

மெதுவாக தலை தூக்கி அனைவரின் முகங்களையும் பார்த்தாள்.... அவர்கள் யாரும் கேலி செய்வது போலும் இல்லை.. கிண்டல் செய்வது போலும் இல்லை .. ஏதோ உண்மையாகவே சொல்வது போல் பேசிக் கொண்டு இருக்க..

முகத்தில் உண்மையான மலர்ச்சியோடு... மாமா நீங்கள் உண்மையாகவா சொல்கிறீர்கள். நம்ம ஊர்ல இருக்கிற என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே அப்படித் தான் சொல்லு வாங்க.. ஆனால் காலேஜில் படிக்கும் போது தான் என்னை யாரும் தோழியாக பார்க்கவே மாட்டார்கள் பேசவும் மாட்டார்கள் ... மீறி அவர்களுக்கு ஏதேனும் வேலை என்றால் மட்டும் என்னை பழைய கஞ்சி என்று அழைத்து வேலை மட்டும் சொல்வார்கள்.

அவளின் மன வாட்டத்தை போக்க எண்ணிய கர்ணா.. சரி சரி மெய் எங்க அண்ணன் மூன்று பேருக்கும் நடிகர்கள் பெயர் சொன்னியே எனக்கும் என் தம்பி லிபினுக்கும் எந்த ஹீரோ பெயர் சொல்லலாம் என்று நினைக்கிறாய் என்று விளையாட்டாக அவளை இயல்பாக ஆக்குவதற்காக கேட்டான்..

கர்ணா மாமா நீங்கள் அப்படியே கண்டேன் காதலை படத்தில் வந்த பரத் மாதிரியே இருக்கீங்க.. ஆமா நீங்களும் லிபின் மாமாவும் இரட்டை பிறவிகளா நீங்கள் இருவரும் ஒரே போல் இருக்கிறீர்கள் என்று கேட்டாள்.

அட ஆமாம் .. நாங்கள் இருவரும் இரட்டையர்கள் தான் என்று சொன்னார்கள்.

அப்புறம் ஏன் பெயரில் ஒற்றுமை இல்லாமல் வேறு வேறு விதமாக வைத்து இருக்கிறீர்கள். ஏதாவது இரட்டை பிறவிகள் என்றால் கோர்வையாக தானே பேர் வைப்பார்கள் என்று கேட்டாள்.

அதுவா எங்கள் குடும்பத்திற்கு இன்றி பரம்பரை பரம்பரையான பெயர் என்றால் அது தேவ் என்று முடியும். அதனால் அந்த பெயர் எங்கள் அனைவருக்கும் என் காமனாக இருக்கும்...

மற்றபடி நீ யோசிப்பது போல் எங்கள் அம்மாவோ அப்பாவோ யோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேண்டும் என்றால் நீ உன் அத்தையும் மாமாவும் இங்கு வரும் போது காரணம் என்ன என்று கேட்டுக் கொள்.. என்று சொல்லி விட்டு சரி நேரம் ஆயிடுச்சு.. நாங்கள் முதலில் ஆபீஸ்க்கு கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

நீ எப்படி வருவாய் என்று கர்ணா கேட்டான்.

நான் இங்கு வந்ததுமே அம்மா எனக்கு ஸ்கூட்டி ஓட்ட கத்து கொடுத்து இருக்கிறார்கள். புது ஸ்கூட்டியும் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். நான் அதில் தான் வருவேன் என்று சொன்னாள்.

சரி எங்களோடு வருகிறாயா காரில் என்று கேட்டான் கர்ணா.

அச்சச்சோ நம்ம இங்க இருக்கும் போது மட்டும் தான் உறவுகள். வேலை என்று வந்துவிட்டால் அங்கு நாம் உறவுகள் கிடையாது அங்கு நீங்கள் முதலாளி உங்களிடம் வேலை செய்யும் தொழிலாளினால் என்று தெளிவாக சொன்னாள்... ஆனால் அவள் அதை சொல்லிய விதம் அவ்வளவு அழகா இருந்தது.

சரி டா நீ உன்னுடைய யோகா பயிற்சி முடித்துக் கொண்டு உன் வேலைகளை பார்த்து விட்டு எப்போதும் போல் நீ ஆபீஸ்க்கு வா. இப்போது நான் போய் கிளம்பி கீழே வருகிறேன் என்று அவனும் தன அவைக்கு சென்றான்.

மெய்யழகியும் தன்னுடைய யோகா மேட்டை எடுத்து சுருட்டி வைத்து விட்டு... தங்களுக்குள்ளாகவே சிறியவர்கள் அறிமுகமாகி கொள்ளவும் சரோஜமா அங்கு இருந்து செடஅவர் வேலையை பார்க்க சென்று இருந்தார்.

இப்போது நேராக தன்னுடைய அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு.. அழகான இளம் பச்சையில் இளம் மஞ்சள் பூக்கள் சிதறி கிடக்க.... அழகான ஒரு ஷிபான் சாரியை கட்டி கொண்டு... பச்சை நிற கண்ணாடி வளையல்களை இடது கையிலும், வலது கையில் பிளாக் கிறிஸ்டல்களால் உருவாக்கின வாட்ச் ஒன்றை அணிந்து இருந்தாள்.

சேலையில் தன் இடுப்பில் சொருகி கொண்டவள் நேரே கிச்சனுக்கு வந்தாள்... அங்கு சரோஜா மற்ற வேலை ஆட்களை வைத்து காலை உணவை தயார் செய்து கொண்டு இருக்க..

ஹாய் சரோ மா இன்னிக்கு என்ன டிபன்.. என்று கேட்டுக்கொண்டே அங்கே தக்காளி சட்னிக்கு என்று சிறிய வெங்காயம் தக்காளி பூண்டு வரமிளகாய் எல்லாம் வதக்கி வைத்து இருக்க.. அதை மிக்ஸியில் போட்டுக் கொண்டே கேட்டாள்.

ஏய் உனக்கு எத்தனை தடவை சொல்வது... வேலைக்கு கிளம்பி விட்டு இப்படி வந்து கிச்சனில் வேலை செய்யாதே என்று திட்டிக்கொண்டே ரெடியான உணவுகளை எடுத்து டைனிங் டேபிள் வைக்க சென்றார் சரோஜா.

அவளும் சட்னி அரைத்து அடுப்பில் வாணலி வைத்து என்னை விட்டு கடுகு தாளித்து... சட்னி அதி
ல் கொட்டி விட்டு கைகளை கழுவி விட்டு திரும்பி பார்க்க...

அங்கே....

இணைந்திருங்கள்

சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top