• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்:

தனது தங்கை,மைத்துனர், மற்றும் பெரிய மருமகனோடு வந்திருப்பதை பார்த்த வேலுசாமி,வாங்க மச்சான் வாடா கண்ணு வாங்க மருமகனே... என்ன சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்துருக்கீங்க???

முன்னாடியே சொல்லிருந்தாக்க நம்ம கனகுவை கோழி-ஆடு சமைக்க சொல்லிருப்பனே என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா.ஒரு நல்ல விஷயம் பேசிட்டு போலாம்னு தான் நாங்கள் வந்தோம் என்றார்.

அப்படிங்களா..!!!

"சொல்லுங்க மச்சான்"

ஆளு விட்டு அனுப்பிருந்தால் நானே வந்துருப்பேனுங்களே,கனகு வேற புள்ளைகளை கூப்பிட்டுக் கொண்டு கொஞ்சம் நேரம் முன்ன தான் நம்ப கோயிலுக்கு போயிருக்காள்.

கண்ணு நீ போய் மச்சானுக்கு டீ போட்டு எடுத்து வா என்று தங்கையிடம் சொல்ல, இருக்கட்டும் மாமா,இப்போது தான் சாப்பிட்டு வரோம்.அப்புறம் மாமா நம்ப கேசவனுக்கு பாரிஜாதத்தை பொண்ணு கேட்டு வந்துருக்கோம் நீங்கள் என்ன சொல்றீங்க?

என்னதான் தனது தங்கச்சி மகனாக இருந்தாலும் கேசவனோ படித்து முடித்து அங்கிருக்கும் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் டாக்டராக இருப்பதால்,பன்னிரண்டாவது வரைக்கும் படித்திருக்கும் தனது மகளை தங்கை மகன் கட்டுவானா என்ற சந்தேகம் வேலுசாமிக்கு இருந்தது.ஆனால்,தங்கை குடும்பத்தில் தான் மகளை கொடுக்கவும் அவருக்கு விருப்பம்.

திடீரென்று தனது மைத்துனர் பலராமன் இப்படி ஒரு நல்ல விஷயத்தை சொல்வார் என்பதை எதிர்பார்க்காத வேலுசாமி, சந்தோஷத்தில் கண்கலங்க, என்னாச்சு ணா???

என் பையனுக்கு உன் பொண்ணை கொடுக்கறதுல உனக்கு விருப்பமில்லையா என்க,ஐயோ வள்ளி கண்ணு ஏன் மா இப்படி சொல்ற??

உனக்கு இல்லாத உரிமையா??

பெரிய மருமவன் உசந்த படிப்பு படிச்சிருக்காரு.உன் மருமக அவ்வளவு படிக்கலையே அந்த எண்ணம் தான்.வேற ஒன்னும் இல்ல கண்ணு என்று பதற்றமாக சொல்லும்போது கோயிலுக்கு போயிருந்த கனகுவோ தனது மகள்கள் பாரிஜாதம்-மல்லிகாவோடு வீட்டிற்குள் வந்தவர் இவர்களை பார்த்து வாமா வள்ளி,வாங்க ணா, வாங்க மருமகனே என்க,பாரிஜாதமோ ஓரக்கண்ணால் அங்கிருக்கும் கேசவனை பார்த்துவிட்டு கீழே குனிந்து கொண்டாள்.

"காபி தண்ணி கூட கொடுக்க ஆள் இல்லையே என்றவாறு கிச்சனிற்குள் போனவர் வேக வேகமாக காஃபியை போட்டு வந்து கொடுக்க,அவர்களும் குடித்து முடித்தனர்"

அம்மா கனகு உன் மகள் பாரிஜாதத்தை என் மவனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம் நீ என்ன மா சொல்ல???

மச்சான் எதுவுமே வாயத் திறக்க மாட்டேங்குறார் என்கவும்,இதைக் கேட்டவர் ஆத்தா அங்காள பரமேஸ்வரியே உன் கருணையே கருணை என்றவாறு கை கூப்பி சொன்னவர்,பாரு போய் அத்தை மாமா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு என்க..

பதுமை போல் வந்த பாரிஜாதம் தனது தாய் சொன்னதை செய்ய நல்லா இருமா என்று ஆசீர்வாதம் பண்ணியவர்கள் அவர்கள் கையோடு எடுத்துட்டு வந்த பூவை எடுத்து தலையில் வைத்தனர்.

"அதான் பூவே வச்சாச்சு கையோட ரெண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்து விடலாமே என்று பலராமன் சொல்லவும் சரி என்றனர்"

பின்னர் அவர்கள் குடும்ப ஜோதிடரை வரவைத்து ஜாதகம் பார்க்க இருவருக்கும் 9 பொருத்தம் இருப்பதாக சொல்லவும் சரிங்க என்றவர்கள் திருமணத்திற்காக நாளையும் குறித்தனர்.

அந்த நேரம் வெளியே போயிருந்த வேலுசாமியின் மகன்கள் வாசனும் விநாயகமும் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடமும் விஷயத்தை சொல்ல,இதை கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

ஐயா விநாயகா கனிய போய் பார்த்தியா என்று கேட்கவும்,பார்த்துட்டு தான் வந்தேங்கத்தை.ஒரு வாரத்திற்குள் டெலிவரி ஆகிடும்னு சொல்லிருக்காங்க. அதுக்குள்ள நம்ம பஞ்சாலைல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு போலாம்னு வந்தேன் என்று விநாயகம் சொல்லவும் சரி கண்ணு என்றார்.

சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அவர்களும் வீட்டிற்கு வந்தனர்.அதேபோல் குறித்த நேரத்தில் சொந்த பந்தங்கள் சூழ பாரிஜாதம் கேசவனின் திருமணமும் நல்ல முறையில் நடந்தது.

"இரண்டொரு மாதத்தில் பாரிஜாதம் உண்டாகியிருப்பது தெரிந்து குடும்பமே தங்கள் வீட்டு வாரிசை வரவேற்க காத்திருந்தனர்"

சீவகனும் பிஜி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சிஏ படித்துக் கொண்டிருக்க,தங்கை மல்லிகாவை சீவகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் எந்த பிக்கல் பிடுங்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

தங்கையே தனக்கு ஓரகத்தியாக வந்தால் தாய் தகப்பனும் அவளை நினைத்து கவலைப்பட மாட்டார்கள் என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்ட பாரிஜாதம், தனக்குள் பெரிய கோட்டையை கட்டிக் கொண்டிருந்தாள்.

என்ன மாமா காலையிலிருந்து ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க? முகத்தில் ஒளிவட்டம் பயங்கரமாக தெரியுதே என்று கவிதா கேட்கவும்,வசந்திற்கு சிரிப்பு வந்துவிட்டது .

ஏய் வாலு சும்மா இருக்க மாட்டியா என்க, எல்லாம் எனக்கு தெரியும் தெரியும். உங்க ஆளு காலேஜிலிருந்து வராங்கனு தானே இவ்வளவு குஷியா இருக்குறீங்க என்கவும், அதைக் கேட்டு அவன் முகம் சிவக்க, ஆண்கள் வெட்கப்படுவதே அழகு மாமா.

அதை நேரில் பார்க்கிற கொடுப்பினை எனக்கு மட்டும்தான் கிடைச்சிருக்கு போல என்க...அடியேய் பிசாசு வாய மூடு டி.அத்தை மாமா உள்ள தான் இருக்கிறார்கள் என்று வசந்தும் சிரிக்க, உங்க ரெண்டு பேருக்கு தான் கல்யாணம் பண்ணபோறதுனு சின்ன வயதிலேயே பேசியாச்சே பிறகு எதுக்கு இந்த டிராமா??போயா போயா என்று உள்ளே ஓடிவிட்டாள்.

"கவிதா சொல்லிய போல கண்ணகியும் விடுமுறைக்காக ஊருக்கு வருகிறாள் என்பதை நினைத்துதான் காலையிலிருந்து தலைகால் புரியாமல் இருந்தான்"

மாமா நான் போய் கண்ணகியை கூப்பிட்டு வரேனென்று வசந்த் சொல்லவும்,நாராயணனும் பானுமதியும் மௌனமாக சிரித்தவர்கள் சரி கண்ணா என்றனர்.

"அதேபோல் தயாராகியவன் அவனிடமிருந்த டிவிஎஸ் 50ஐ எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றவன்,அங்கிருந்த மரத்தின் மேல் சாய்ந்து கொண்டு பல வித கனவுகளோடு தன்னவளுக்காக காத்திருந்தான்"

நினைவு தெரிந்த நாளிலிருந்து வசந்தத்திற்கு கண்ணகி தான் வருங்கால மனைவி என்பதை சொல்லிய வளர்த்ததால் அவள் மேல் உயிரையே வைத்திருக்க கண்மணிக்கும் தனது அத்தை மகன் என்றால் ரொம்ப பிடிக்கும்.

"காதல் என்பதை தாண்டி அவனின் அந்த அன்பே அவளை அவன் பக்கமாக சாய்த்தது"

"அவள் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்பது தெரிந்தாலும் சீக்கிரமாகவே வந்து காத்திருப்பவனுக்கு,எப்ப வருவாள் என்று தேடல் மட்டும் பெரும் தவிப்பாக இருக்க,அவனை ஏமாற்றாமல் ஒரு மணி நேரத்தில் பேருந்து வந்து நிற்கவும், அதிலிருந்து இறங்கியவளை பார்த்தவன் இமைக்க மறந்து ரசித்தான்"

தன்னையே அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருக்கும் அத்தை மகனின் முன்பு வந்து நின்றவள்,ஹலோ மாம்ஸ், வெட்டிதுரை அப்படி என்ன சிந்தனையில் இருக்கீங்க என்று கிண்டல் பண்ண,உன்னை தவிர வேற யாரை டி நினைப்பேன்???

"இந்த உசுரே உனக்காக தானே என்று வசனம் பேச,இதெல்லாம் எத்தனை படத்துல பேசி கேட்டாச்சு போயா போயா என்றாள்"

ஏன்டி சொல்ல மாட்ட என்கும் போது அந்த வழியாக வந்த அம்பாசிடர் கார் இவர்களை பார்த்து நிறுத்தவும் யார் என்று இருவரும் பார்க்க அதிலிருந்து சீவகன் இறங்கி வந்தான்.

எப்படி இருக்கீங்க என்று விசாரிக்க, நல்லாருக்கிறோம் சார் என்று இவர்களும் பேசிக் கொண்டிருக்கும் அந்த வழியாக வந்த ஊர்காரர்கள் பார்க்கும்போது கண்ணகியும் சீவகனும் சிரித்து பேசுவதை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே போனார்கள்.

படிப்பெல்லாம் எப்படி போகிறது என்று கேட்கவும்,நல்லா போகுதுங்க சார்..செல்லமாக அவளை முறைத்தவன் இன்னும் சார் தானா உனக்கு???
நான் தான் உன்னை அண்ணானு கூப்பிடுமானு சொன்னனே என்க, அதற்கு கண்ணகியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சாரை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க நான் சாயந்திரம் பார்க்க வரேன் என்று சொல்லியவன் காரில் ஏறி அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.

அதேபோல் வீட்டிற்கு வந்தவன் தன் தாய் சமைத்து வைத்திருக்கும் உணவுகளை வயிறார சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படுத்து எழுந்தவன் நாராயணனை பார்க்க போக கண்ணகியும் வசந்தும் வீட்டின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க இவனும் வந்தவன் அவர்கள் பக்கத்தில் உட்கார, இதுவும் மற்றவர்கள் பார்வைக்கு படவும் அவர்களுக்கோ கண்ணகிக்கும் சீவகனுக்கும் தான் ஏதோ உறவு இருக்கிறது என்று தவறாக புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

"இந்த விஷயம் அரசல் புரசலாக பலராமன்-வேலுசாமி வீட்டினரின் காதில் விழுந்தது"

பாரிஜாதமோ இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கண்ணகியின் மேல் அவ்வளவு ஆத்திரம் வந்தது.பாடம் நடத்திக் கொடுக்கிற அந்த வாத்தி மவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் அரண்மனை குடும்பத்தில் வாக்கப்படணும்னு கோட்டை கட்டிட்டு இருக்காள் என்று மனதிற்குள் அவ்வளவு வன்மமாக இருந்தாள்.

சொல்வாளா...??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top