Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
கூர்க்-காட்டு பங்களா:
அங்கிருந்த மெத்தையின் மேல் பொதிரென்று விழுந்து கண்ணை மூடியவனிடம்,இந்த பிசினஸ் உனக்கு தேவையா என்று அவன் மனசாட்சி கேட்க,நானும் கொஞ்ச நாளாக அதை தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று வாயை விட்டு சொன்னான்.
நல்லா படிச்சு நல்ல பதவியில் இருக்கும் போது உனக்கு எதுக்கு சேது இந்த வேலை சொல்லு? என்று மனசாட்சி கேட்க,என்னை வளர்த்தவர்களுக்கு நன்றி கடனாக செய்கிறேன்.
மற்றபடி நான் ஒன்றும் விரும்பி செய்யவில்லை என்க,உனக்கென ஒரு குடும்பம் என்று இருந்திருந்தால் அந்த அருமை தெரியும்.நீ தான் அனாதையாச்சே உனக்கு எங்கே இதன் வலிகள் தெரியப்போகிறது என்றவாறு மனசாட்சி அங்கிருந்து சென்றது.
அந்த வார்த்தையோ அவன் மனதை மிகவும் தைக்க கண்ணை மூடியிருந்தவனுக்கு கண்ணீர் மட்டும் கடை கண்ணால் வழிந்து ஓட கடந்த காலத்தை புரட்டி பார்க்கலானான்..
"காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப்போன சரசுக்கு சில மாதங்கள் கழித்து தான் கணவனின் உண்மையான சுயரூபம் தெரிந்தது"
“குடியும் சீட்டுமே வாழ்க்கையாக இருக்கிறான் என்பதை உணர்ந்தவளோ, அவசரப்பட்டு தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொண்டோமே என்று உடைந்து போனாள்"
திரும்பி பெற்றோர்களிடம் போக முடியாத நிலைமை.வயிற்றில் ஆறு மாத குழந்தை இருக்கவும்,இது தான் தன் விதியென கிடைத்த வேலையெல்லாம் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டவளுக்கு கணவன் காணாமல் போன விஷயம் இடியாய் இறங்கியது.
வழக்கம் போல் வேலைக்கு போறேன் என்று போனவன் தான்,நாட்களும் போய் வாரங்களும் போய் மாதங்களும் கடந்ததே தவிர அவன் வரவில்லை. ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்றும் தெரியவில்லை.
"பத்தாவது மாதமும் நெருங்கியது"
ஒரு நாள் பக்கத்து தெருவில் வீட்டு வேலை செய்து விட்டு திரும்பி வரும் போது அடிவயிற்றில் வலி வரவும், ரோடென்று பாராமல் அப்படியே சுருண்டு உட்கார்ந்தாள்.
இதைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் அந்த வழியாக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்க்கவும் சில மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
"குழந்தை பிறந்து சிறிது நிமிடத்தில் வலிப்பு வரவும் அவரை காப்பாற்ற முடியாமல் போக, குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் சரசுவின் உயர் பிரிந்தது"
"பின்னர் குழந்தையை அங்கிருக்கும் ஆசிரமத்தில் கொண்டு வந்து விட, அங்கிருந்த பல குழந்தைகளோடு இந்த குழந்தையும் வளர்ந்தது"
"தனது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதற்காக மனைவியோடு வந்திருந்த வாஞ்சிநாதனுக்கு ஏனோ சேது ராமனை பிடித்து விடவும்,சட்டப்படி தத்து எடுத்தவர் வீட்டுக்கு அழைத்து வந்தார்"
"அவரின் மகன் விக்ரமிற்கு கூட பிறந்தவர் யாரும் இல்லாததால்,புதிதாக கிடைத்திருக்கும் தம்பியை ரொம்ப பிடித்து விட்டது"
சேதுவையும் விக்ரம் ஸ்கூலில் சேர்த்தவர் பிசினஸிலும் முன்னேற்றம் அடைய சென்னையிலிருந்து கர்நாடகாவில் இருக்கும் கூர்கிற்கு இடம் பெயர்ந்தனர்.
"விக்ரமோ மெடிசின் படிக்க ஆசைப்பட,அவனை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தனர்.வருடங்கள் ஓட படிப்பை முடித்தவன் அங்கேயே வேலைக்கும் சேர்ந்து விட்டான்"
சேதுவோ காலேஜ் முடித்ததும் போலீஸாக விரும்புவதாகச் சொல்லவும் சரி என்றனர்.அதேபோல தேர்வு எழுதவும் அதில் தேர்வானதற்கு முதல் போஸ்டிங் சென்னையில் கிடந்தது.
"மனமில்லாமல் சென்னைக்கு வந்தவனோ தான் ஆசைப்பட்ட வேலையில் சேர்ந்ததும் முழு ஈடுபாட்டை காட்டியவன்,நேரம் கிடைக்கும் போது பெற்றோர்களை வந்து பார்க்க மறப்பதில்லை"
"சேது இங்கு இருப்பதால் விக்ரமும் அங்கு நிம்மதியாக இருக்க,ஓர் நாள் தூக்கத்திலே வாஞ்சிநாதனுடைய மனைவியின் உயிர் பிரிந்தது.விக்ரமால் உடனடியாக இந்தியாவிற்கு வர முடியாமல் போக,சேது தான் தாய்க்கு கொள்ளி வைத்தான்"
பெற்ற தாய் இருந்தால் கூட இவ்வளவு பாசமாக இருப்பார்களா என்பது தெரியவில்லை வாஞ்சிநாதனின் மனைவி கயலுக்கு விக்ரமைவிட சேதுவின் மேல் தான் ஒரு படி அதிகமான பாசம்.
“கயலின் இறப்பிலிருந்து வெளி வர முடியாமல் தவிக்கும் மகனைப் பார்த்த வாஞ்சிநாதன்,நம்பிக்கையான ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்"
தந்தையின் வருகைக்கு பிறகு சேதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற,அவனோடு பக்கத்தில் நடக்கும் ஓஷோ தியானத்திற்கு தினமும் போய் வரும் போது தான் ஒருவளை பார்த்து உள்ளுக்குள்ளே ஆசையை வளர்த்துக் கொண்டான்.
"சில நாட்களுக்கு பிறகு அவன் மட்டும் தியானத்திற்கு வர எஸ்கியூஸ்மி எனக்கும் மென்மையான குரல் கேட்டு திரும்பியவனோ அதிர்ந்து போனான்"
"ஹலோ..."
"என்னுடைய பெயர் கார்குழலி"
“சில மாதம் முன்பு தான் வேலை கிடைத்தது..ஏன்னு தெரியலை உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று வாயை மூடுவதற்குள் ஓங்கி ஒரு அறையை விட்டவன்,இடியட்.."
உனக்கு பொழுது போகலைனா நான் தான் கிடைத்தேனா?
எவ்வளவு திமிர்??
பொம்பளை புள்ளைனு பார்க்கிறேன், இல்லை முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளிடுவேனென்றவனோ அங்கிருந்து கோவமாக செல்லும் போது சாரி டி.நான் உனக்கு வேண்டாமென்று சொல்லும் போது உள்ளுக்குள் பலமாக வலித்தது.
"அதன் பின்னர் வந்த நாட்களில் சேதுவை பற்றி தெரிந்து கொண்டவள் மனதை மட்டும் மாற்றவில்லை. அதே போல் அவனிடம் தனது காதலை சொல்லவும் தயங்கவில்லை"
எவ்வளவு அவமானப் படுத்தினாலும் சுவரில் அடித்த பந்து போல அவனைத் தேடி வந்து கொண்டிருக்கிறாள். இப்படியே நாட்கள் சென்றது.
"ஓர்நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வாஞ்சிநாதனுக்கு நெஞ்சை வலிப்பது போல இருக்கவும்,வாயை திறந்து சொல்வதற்குள் பின் பக்கமாக சரிந்தார்"
அய்யா என்று வேலையாள் பதற,டூட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தவனுக்கு சத்தம் கேட்டு என்னாச்சு என்று ஓடி வந்தவன் மயங்கி கிடந்தவரை தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போக,சோதித்த டாக்டரோ அவர் உயிரோடு இல்லை என்றார்.
"மீண்டும் ஓர் இழப்பை தாங்க முடியாதவனோ இடிந்து போய் உட்கார,வீட்டில் இருக்கும் வேலையாட்கள் தான் ஆக வேண்டியதை பார்த்தனர்"
தந்தையின் இறப்பு செய்தியை கேட்ட விக்ரம் மறுநாள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தவன் குழந்தை போல் அழும் தம்பியை அணைத்துக் கொண்டவனுக்கும் அழுகை வந்தது.
பதினாறாம் நாள் காரியம் முடிய,இந்தியாவில் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் தனது தம்பியான சேதுராமனிடம் ஒப்படைத்தான்.
சட்டப்படி சேதுராமனை தத்து எடுத்ததால் அவனும் குடும்ப வாரிசானன்.
"ஆனால் சொத்து மேல் ஆசையில்லாத சேதுராமன் அவர்கள் பில்டரில் வேலை பார்க்கும் சிலரை தேர்ந்தெடுத்து,அவர்களிடம் தங்களது பிசினஸை ஒப்படைத்தாலும் மேற்பார்வை பார்க்க தவறவில்லை"
"மேலதிகாரியிடம் பேசி கூர்கிற்கே போஸ்டிங்கை மாற்றிக் கொண்டவனுக்கு கார்குழலியின் நினைவுகள் மட்டும் இம்சை பண்ணாமலில்லை"
போலீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு இந்த பிசினஸையும் கவனித்துக் கொண்டே நாட்களைக் கடத்த, ஒரு நாள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த விக்ரம் சில விஷயங்களை சேதுராமனிடம் சொல்ல, அவனோ முடியவே முடியாது என்றான்.
விக்ரமோ செண்டிமெண்டாக பேசி சேதுவை சம்மதிக்க வைத்தான்.நிகழ் உலகில் போலீசாக இருப்பவனோ நிழல் உலகத்தில் சட்டத்திற்கு புறம்பான வேலை பார்த்துக் இருக்கிறான் என்பது தான் கசப்பான உண்மை,இதுவரை யாருக்கும் தெரியாது.
ஒரு நாளும் உனை மறவாத என்று ரிங்டோன் சத்தம் கேட்டு தனது நினைவில் மூழ்கியிருந்தவனோ கண்களை திறந்து போனை எடுக்க,அதில் வந்த பெயர் பார்த்தவன் வழக்கம் போல் அட்டென்ட் பண்ணாமல் இருந்தான்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வர ஒரு கட்டத்தில் விரும்பியே அட்டென்ட் பண்ணியவன்,விருப்பமில்லாத போல் ஏன் டி ஒருமுறை சொன்னா உனக்கு புரியாதா???
எனக்கு தான் இந்த காதல் மயிறு மட்டையெல்லாம் வேண்டாம்னு சொல்றேன்.பிறகு ஏன் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கிற என்று கத்தினான்.
மிஸ்டர் சேதுராமன் அடுத்த மாதம் எனக்கு கல்யாணம்.உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு இன்விடேஷன் அனுப்பியிருக்கேன்.தயவு செய்து வராதீங்க.
"இதுவரை உங்களை தொந்தரவு பண்ணியதற்கு சாரி என்கவும்,என்னடி சொல்ற என்று இவன் அதிர,அந்தப் பக்கமிருந்தவளோ அழைப்பை துண்டித்தாள்"
உடனே நெட்டை ஆன் பண்ணியவன் வாட்ஸ்அப்பில் போய் செக் பண்ண, மைடியர் வொய்ப் என்ற நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருப்பது தெரிந்தது.
கைகள் நடுங்க அதை ஓபன் பண்ண "கார்குழலி வெட்ஸ் சுரேந்தர்" என் பெயர் பொறிக்கப்பட்டதை பார்க்கவும் சேதுவிற்கு ஆத்திரம் வர, அங்கிருந்த கண்ணாடி ஓங்கி குத்த அதுவோ தூள் தூளாக சிதறியது.
மலர் நினைவுகள்:
உள்ளே வந்த இளைஞனோ நமஸ்காரம் மாமா என்றவாறு நாராயணனின் கால்களில் விழ,நல்லாரு கண்ணு என்று தனது தங்கை மகனை தூக்கி விட்டவர், அவனைத் தோளோடு அணைத்துக் கொள்ள இருவருக்கும் கண்கள் கலங்கியது.
நாராயணனுடைய ஒரே தங்கையின் மகன் தான் வசந்த்.சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் வசந்தின் குடும்பத்தினரோ அகால மரணமடைந்தனர்.
அப்போது வசந்த் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்ததால் அவன் மட்டும் தப்பித்தான்.அதன் பிறகு தனது தங்கையின் மகனுக்கு நாராயணனும் அவர் மனைவியும் தாய் தகப்பனார்கள்.
அவன் ஆசைப்பட்ட போல காலேஜில் படிக்க வைத்தனர்.அதன் பிறகு டீச்சர் டிரைனிங் முடித்து கவர்மெண்ட் எக்ஸாம் எழுத,இதே ஸ்கூலில் அவனுக்கும் போஸ்டிங் கிடைத்தது.
"வா கண்ணு..."
நல்ல நேரத்தில் கையெழுத்து போட்டு வேலையில் சேரு கண்ணு என்று தனது மருமகனின் கண்ணை துடைத்தவர்,அங்கேயிருந்த வருகை பதிவேடு நோட்டை எடுத்துக்காட்ட அதில் சைன் பண்ணியவன் முதல் நாள் வகுப்பிற்கு சென்றான்.
"அதன் பின் நாட்களும் சந்தோஷமாக சென்றது"
"கண்ணகியோ திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.கவிதா கதிர் இருவருக்கும் வசந்த் என்றால் அவ்வளவு பிரியம்.இருவரையும் குழந்தைகள் போல வசந்த் கவனிக்க,நாராயணனும் பானுமதியும் அவர்கள் மூவரையும் கிண்டல் பண்ணுவார்கள்"
வசந்த்-கண்ணகி இருவருக்கும் தான் கல்யாணம் பண்ணனுமென்ற பேச்சு சிறு வயதில் இருந்ததால் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது வீட்டிற்குள் பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருந்தது.
இதுவரை வெளியிலே இருந்தவனுக்கு இப்போது குடும்பமாய் இருக்கவும் தாய் தகப்பன் பற்றிய கவலை இல்லாமல் வசந்தும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்க,இதை பார்த்து நாராயணனும் சந்தோஷப்பட்டார்.
வெளியூரில் படித்துக் கொண்டிருந்த சீவகன் அவ்வப்போது ஊருக்கு வரும்போதெல்லாம் நாராயணனை மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து பேசிவிட்டு போக மறக்கவில்லை.
மேல்நிலை வகுப்பு வரையிலும் அவனுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது அவர் தான்.எளிய முறையில் அவர் சொல்லித் தரவும்,கணக்கின் மேல் ஆர்வம் வர,சி. ஏ படிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு நாராயணன் சார்தான் முக்கிய காரணம் என்பதால்,குருவின் மேல் மிகப்பெரிய மதிப்பு வைத்திருந்தான்.
"சீவகனின் குடும்பமோ அந்த ஊரில் மிகப்பெரிய பணக்காரர்கள்.காலங்காலமாக அவர்கள் குடும்பத்தினர் தான் பிரசிடெண்டாகவும் ஊர் தலைவராகவும் இருப்பது"
இந்த முறை கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஊர் கமிட்டியில் பேசும்போது,நாராயணனிடம் பணம் வசூலிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.அவரும் கோயிலில் விஷயம் என்பதால் மறுப்பு சொல்லாமல் சம்மதம் சொன்னார்.
தம்பி பெரியவனே உனக்கு நம்ம பாரிஜாதத்தை உனக்கு பொண்ணு கேட்கலாம்னு இருக்குப்பா.நாளைக்கு நாள் நல்லாருக்கு உன் அத்தை வீட்டுக்கு பொண்ணு கேட்டு போகலாம் என்று பலராமன் சொல்லவும்,கேசவனும் கீழே குனிந்துக் கொண்டு சரிங்கப்பா என்றார்.
மறுநாள் காலை பலராமன் அவரது மனைவி வள்ளியம்மை மகன் கேசவனோடு பக்கத்து தெருவில் இருக்கும் தனது மைத்துனர் வீட்டுக்கு பொண்ணு கேட்டு சென்றார்.
சொல்வாளா...??

Last edited: