New member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
கூர்க்:
என்ன பரசு சொல்ற???
"அவருக்கு இந்த காட்டு பங்களாவில் என்ன வேலை இருக்க போகுது என்று கந்தன் கேட்க,அது என்னவோ தெரியல கந்தா"
“கையில சின்னதா சோப்பு புட்டி போல ஒரு டப்பா எடுத்துட்டு வருவாரு.இந்த புள்ளைங்களாம் அதை கையில் வச்சுக்கிட்டு படம் பாட்டு எல்லாம் பாக்குதுங்களே,அது பேரு என்னமோ சொல்லுவாங்க என்றவாறு வாட்ச்மேன் யோசனையாக,லேப்டாப் என்று ராயர் செல்லவும்,அதே ராயர் அதேதான் பா"
"நல்லா ரீஜன்ட்டான(டீசன்ட்)மனுஷன்"
"சின்ன வயசு தான்"
"பெரிய பதவில இருக்கோம்னு தலை கணம் எல்லாம் கிடையாது.வாங்க போங்கன்னு நல்லா மரியாதையா பேசுவார்"
"பேச்செல்லாம் பார்த்தா நம்ம வடநாட்டு வாடை தான்"
"சின்ன முதலாளியோட தம்பியாம்.சீகாரம் எடுத்த புள்ளையாம்.அதனால தான் இவருக்கு மட்டும் பங்களா உள்ள போறதுக்கு அனுமதி இருக்குனா பாத்துக்கோங்களேன்"
ஓஓஓஓ!!!
"அப்படி என்னவா இருக்கும் என்று கந்தனும்,ராயரும் தலையை பிய்த்துக் கொண்டு போனானுங்க"
இதை சுத்தம் செய்து முடிக்க,எப்படியும் இந்த ரெண்டு மூணு நாளாகும். அதுக்குள்ள இங்க என்ன ரகசியம் இருக்குன்னு தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவர்கள்,டீயை குடித்து முடித்துவிட்டு வேலையை தொடங்கினார்கள்.
"பரசுவோ அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வேலை வாங்கினார்"
மாலை 4.30 ஆனது சரி ராயர் இன்றைக்கு இது போதும் நீங்க கிளம்புங்கப்பா.நானும் வீட்டுக்கு கிளம்புறேன்.
நாளைக்கு வந்து மீதி வேலையை பார்க்கலாம் என்றவர்,பொருளை இங்கே வச்சிட்டு போறீங்களா???
“ஆமா பரசு வேலை முடியுற வரைக்கும் இங்கயே இருக்கட்டுமே, ம்ம்ம்ம் நீ சொல்றதும் வாஸ்தவம் தான் என்ற பரசு, மரங்களுக்கு ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தினார்"
அதே போல் கோணி சாக்கில் அருவாளையும்-கைப்பாரையையும் சுருட்டி கட்டிய ராயர்,இந்த கந்தா என்க,அவனோ அதை எடுத்து போய் மாடிப் படியின் கீழே வைத்துவிட்டு வரவும்,இருவரும் சைக்கிளில் ஏறி அங்கிருந்து கிளம்பினார்கள்.
"சைக்கிள் மிதித்து கொண்டிருந்த ராயர்,நீ சொன்னதிலிருந்து எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு கந்தா"
“நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன்
அந்த இன்ஸ் என்னமோ பண்றான் தான் போல"
“அவசரப்பட்டு யாரையும் குத்தம் சொல்ல முடியாது டா.ஒரு வேளை அவரு நல்லவரா இருந்தா என்ன செய்ய??
இது நமக்கு தேவையில்லாத சங்கதி கந்தா"
சின்னவரோட தம்பினு சொல்றாரே,அவரை பார்த்தே நாம பத்து வருசத்துக்கு மேல இருக்கும் டா.ஆனால் வளர்ப்பு புள்ளை ஒன்னு இருக்கும்னு எங்க அப்பா கூட சொல்லிருக்கார்.
“கத்தரிக்காய் முத்தினால் கடைதெருக்கு வந்து தானே ஆகணும்,அப்போ பார்த்துக்கலாம்.நாம இப்படி உளவு வேலை பாக்குறோம்னு அவனுக்கு தெரிஞ்சிது அம்புட்டு தான் எனக்கும். போது,தூரத்தில் புல்லட் வரும் சத்தம் கேட்டது"
"அண்ணே அந்த இன்ஸ் தான் வரான்,புல்லட் சத்தம் கேட்குது பாரென்று கந்தன் சொல்ல,அதேப்போல இவர்களுக்கு எதிரில் வந்தவன் கையை நீட்டி நிற்க சொன்னான்"
சைக்கிள் மிதித்து கொண்டிருந்த ராயரோ,பிரேக் அடித்து இடது கால் ஊன்றி நிறுத்த..
இருவரையும் பார்த்தவனோ இங்க எங்க போயிட்டு வரீங்க என்று விசாரிக்கும் போது,பங்களா வாட்ஸ்மெனும் அங்கு வந்தவன் வணக்கம் சார்..சின்னையா வராங்கணு நான் தான் தோட்டத்தை சுத்தம் பண்ண வரச் சொல்லிருந்தேன்.
"நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க தானுங்க சார்"
அப்படியா...!!
சரி போங்க என்றவன்,யோவ் எனக்கு பங்களாவில் வேலை இருக்கு கேட் சாவி கொடுயா என்க,அவனும் சைக்கிளில் மாட்டியிருக்கும் பையில் சாவியை எடுத்துக் கொடுக்க,அதை வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் சென்று விடவும்,வா ராயரு என்றவாறு வாட்ஸ்மெனும் அவன் சைக்கிளில் ஏற,இவர்களும் அவனோடு பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்றனர்.
வண்டியை நிறுத்தி விட்டு கதவை திறந்து பங்களாவின் தரை தளத்திலிருக்கும் அறைக்குள் வந்த சேதுராமன்,அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் சென்று பிரஷாகி வெளியே வந்தவன் லேப்டாப்பை ஆன் பண்ணவும் வி. கே என்ற நம்பரிலிருந்து வீடியோ கால் வந்தது.
"உடனே அட்டென் பண்ணவும் அந்த பக்கமிருந்தவனோ சகட்டு மேனிக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் திட்ட, இவனோ அமைதியாக கேட்டுக் கொண்டான்"
மலர் நினைவுகள்:
"மலருக்கோ தலையை பிய்த்துக் கொண்டு போனது"
அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்களோ கண்ணகி வந்திருப்பதை கேள்விப்பட்டு நலம் விசாரித்து சென்றவாறு இருப்பதால் இவ்வளவு நேரமும் அவளது தாயிடம் எதுவும் இல்லை கேட்டு தெரிந்து கொள்ள முடியவில்லை.
அம்மா நான் கேட்கிறேன் நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே???
கவிதாவை எந்த ஊரில் கட்டிக் கொடுத்திருக்கு?கதிருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா மா?என்று மீண்டும் கண்ணகி கேட்க..
அப்போது புல்லட் சத்தம் வாசலில் கேட்கவும் உன் தம்பி தான் வாரான் மா எனக்கும் போது ஷூ சத்தம் கேட்டு திரும்பி பார்த்த கண்ணகியோ,கதிரு என்று நா தழுதழுக்க சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.
வேகமாக வந்தவன் அக்கா....!!!
எப்போ வந்த???
எப்படி இருக்க கா???
நாங்களாம் உயிரோட இருக்கோமென்று தெரிந்து விட்டதா எனக்கும் போது அந்த ஆண்மகன் கண்களும் கலங்கியது.
பின்னர் அக்காவும் தம்பியும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது மகளை தனது தம்பிக்கு அறிமுகப்படுத்தி வைக்க அவளோ போலீஸ் உடையில் இருக்கும் தனது தாய் மாமனை பார்த்து திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்
உன் பொண்ணு பேர் என்ன கா என்கவும்,மலர்விழி டா.இன்ஜினியரிங் செகண்ட் இயர் படிக்குறாளென்கும் போது,உள்ளே வரலாமா எனக்கும் குரல் கேட்டு வாசல் பக்கம் திரும்பி பார்க்க, அங்கே சீவகன் நின்று கொண்டிருக்க...
அய்யோ சின்னவங்களே...!!
என்ன இப்படி கேட்டுட்டீங்க?
இந்த ஏழை வீட்டிற்குள் நீங்கள் வர நான் தான் புண்ணியம் பண்ணிருக்கேனுங்க என்று பானுமதி பதற....
"பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதிங்க"
பெரிய வீட்டு மகனாக நான் வரவில்லை.நாராயணன் சாரோட மருமகனாக வந்திருக்கிறேன் என்றவாறு அங்கிருந்த மனைவியைப் பார்த்துக் கொண்டே சீவகன் சொல்ல...
"ஏ கதிர்"
சின்னவங்க வீடு தேடி வத்துருக்காங்க. வந்தவங்களே வாங்கன்னு சொல்லாம இடிச்ச புலி போல நிக்கிறியே இதுதான் பண்பாடா என்று அங்கிருந்த மகனையும் மகளையும் முறைத்துக் கொண்டு பானுமதி சொல்ல,அதன் பின்னே சுதாரித்த கதிரோ வேகமாக போய் அங்கிருந்த சீவகனை வாங்க மாமா என்று வாய் வரை வந்த வார்த்தையை வெளியேற்றாமல் தயங்கி நிற்க..
என்னங்க மச்சான் அக்கா புருஷன் என்ற மரியாதை கிடையாதா?,வாசலில் நிற்க வச்சே பேசி அனுப்பிடுவிங்களா என்ற சீவகனோ அவனை இயல்பாகினார்.
அந்த வார்த்தையில் நெகிழ்ந்தவன் உள்ளே வாங்க மாமா என்க,ஹம் என கதிரின் தோளை பற்றியவர் எப்படி இருக்கிறார் கதிர்???
சார் ஆசைப்பட்ட போல நீ போலீஸ் ஆகிட்ட..கவிதா எப்படி இருக்கிறாள்?ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா??
கவிதாவிற்கு எத்தனை பசங்கள் என்றவாறு உள்ளே வந்தவர் அங்கே சுவற்றில் மாலை போட்டிருக்கும் போட்டோவின் முன்பு சென்று கையை கூப்பியவருக்கு கடந்த கால சுவடுகளின் நினைவுகள் வந்து சென்றது.
கண்ணகியோ தனது கணவரை கண்டுகொள்ளாமல் நிற்க,மகளை பார்த்த பானுமதி என்ன டி...,வெளி ஊரில் வாழ்ந்தால் பண்பாடு மறந்துடுமோ???
வீட்டுக்கு வந்த மனுஷனை வாங்கனு கூப்பிட துப்பு இல்லை, இப்படித்தான் உன்னை வளர்த்தேனா என்று மகளை கடிந்து கொள்ள,இதை பார்த்த மலருக்கு சிரிப்பு வந்தது விட்டாச்சு.
வழக்கமாக கண்ணகி தான் சீவகனையும் மலரையும் அதட்டுவார்.இன்று தனது தாயை அவரின் அம்மா திட்டுவதை பார்த்தவள் இதுக்கு தான் சொல்வாங்க வாழ்க்கை வட்டமென்று...
பட் நீ இப்படி வாயை மூடி நிற்கிறது ரொம்ப நல்லாருக்கு மா என்றவாறு மலர் சிரிக்க,கண்ணகியோ மகளை முறைத்து பார்த்தார்..
சொல்வாளா....???