Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
தங்கை எப்படியெல்லாம் துருதுருவென்று இருப்பாள் என்பதை நினைத்தது மதிக்கும் அழுகை வந்தது. இந்தளவுக்கு நல்லபடியா காப்பாற்றப்பட்டாளே அது போதுமென்று கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டவள் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி பொள்ளாச்சிக்கு வந்து விட்டாள்.
“இரண்டு வாரங்கள் சென்றிருக்க வாசனும் அவர் மனைவி சீதாவும் மலரை பார்க்க வந்திருக்க,கண்ணகியோ அவர்களை இன்முகத்துடன் வரவேற்று மலரிடம் அத்தை மாமா என்று அறிமுகப் படுத்தினார்”
நல்லா இருக்கியா கண்ணு என்று மலரிடம் விசாரிக்க அவளும் நல்லா இருக்கேனென்றாள்.
எங்கேமா சீவகனை காணும்?
“ஞாயிற்றுக்கிழமையும் வேலையா என்க,இல்லைங்கண்ணா.மலருக்காக ஆட்டுக்கால் வாங்கிட்டு வரச்சொல்லி அம்மா சொன்னாங்க.அதுக்காக போனார்”
மார்க்கெட்டில் கூட்டம் போல இன்னும் காணுமென்கும் போது வீட்டுக்குள் வந்த சீவகன்,அங்கிருந்த தனது அத்தை மகனைப் பார்த்தவர் மாமா என்று அதிர்வோடு வந்தார்.
பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்து கொண்டவர்கள் மலரின் உடல் நிலை பற்றி டாக்டர் என்ன சொன்னார்களென்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மதிய உணவை கவிதாவும் கண்ணகியும் செய்ய,சீதாவும் அவர்களுடன் உதவிக்கு வர நீங்க போங்கண்ணி நாங்கள் பார்த்துக் கொள்கிறோமென்கவும் சரிமாயென மலரோடு வந்து பேசிக் கொண்டிருந்தார்.
“எப்படியாவது தனது மகனின் நினைவு வருதா என்று அவரும் மறைமுகமாக மலரிடம் பேசிப் பார்க்க,அப்படி எதுவும் நிகழவில்லை”
“நாட்களும் ஓடியது”
விபத்து நடந்து இதோ மூன்று மாதங்கள் கடந்து விட்டது.ஆனால் தோழிகள் மூவரிடமும் என்ன நடந்தது என்று யாரும் இதுவரை கேட்கவில்லை.
சில நாட்களாக மலரிடம் நிறைய முன்னேற்றம் தெரிவதை நேரில் பார்த்த கதிர் அக்கா மகளுடைய தோழிகளிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்று முடிவெடுத்தான்.
மார்ச்சில் ஐபிஎஸ் ட்ரைனிங் செல்ல வேண்டும் என்பதால் தனது வேலையை ரிசைன் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்தவன்,கமிஷனர் ஆபீஸ்க்கு சென்று அவரைப் பார்த்து வாழ்த்துக்கள் பெற்றுவிட்டு மற்ற பார்மலிட்டிஸ் முடித்துக் கொண்டு அக்கா வீட்டுக்கு வரவு மாலையானது.
அன்று பிரதோஷம் என்பதால் கண்ணகியும் கவிதாவும் கதிர் இருக்கும் தைரியத்தில் பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று விட,வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல் மலரை நடக்க வைக்க முயன்றான்.
“மலரும் முயன்று தடுமாறி கீழே விழப்போக,ஓடிப் போய் தாங்கியவன் ஒன்றுமில்லை டா.சீக்கிரம் நீ எந்திரிச்சு நடப்ப என்க,வலிக்குது மாமா என்கும் போது அவள் கண்கள் கலங்கியது”
அப்பொழுது கயல் மீரா இருவரும் மலரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வர,இதுதான் நல்ல சந்தர்ப்பமென்று நினைத்தவன் அவர்களுக்கு டீ போட்டு எடுத்த வந்து கொடுக்க,எதுக்கு அண்ணா நீங்க இதெல்லாம் பண்றீங்கள் என்கவும்,பரவால்லடா என்றான்.
மலருக்கு உட்கார்ந்தே இருந்தது முதுகு வலிப்பது போலிருக்க,கொஞ்ச நேரம் படுக்கிறேனென்றாள்.
சரி டி என்றவளுங்கள் தோழியை இரண்டு பக்கமும் அணைத்தவாறு ரூமிற்கு போனவர்கள் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தனர்
நாங்கள் வெளில இருக்கோம் என்றவாறு கதவை சாற்றி விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாளுங்கள்.
அவர்களை பார்த்தவன் இதுவரை உங்க மூணு பேருகிட்ட என்ன நடந்துச்சுன்னு எதுவுமே கேட்கலை.இப்ப நீங்க எல்லாம் பெட்டரா தான் இருக்கீங்கன்னு தெரியுது.
சோ,என்ன நடந்துச்சு சொல்லுங்கடா?
எப்படி அந்த காட்டுப்பாதையில் போய் சிக்குனீங்க?உங்களை யார் கூட்டிட்டு போனது, என்றவாறு இருவரையும் பார்த்தான்.
“சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து இப்பொழுதும் பயத்தில் அவர்களுக்கு நடுக்கம் வர,இதுவோ போலீஸ்காரனான கதிரின் கண்ணிலிருந்து தப்பவில்லை”
மீரா-கயல் பயப்படாம அண்ணன் கிட்ட சொல்லுங்க.உங்களுக்கு நடந்த போல வேறு யாருக்கும் நடக்க கூடாது இல்லையா?
மலர் இருக்கிற சூழ்நிலையில் அவகிட்ட எதுவுமே கேட்க முடியாது.சப்போஸ் மலருக்கு நினைவு வந்த பிறகு இந்த விஷயத்தை பற்றி சொல்லிருக்கலாமேனு உங்களிடம் கேட்டால் என்னமா பண்ணுவீங்க?
கதிரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பது தோழிகள் இருவருக்கும் புரிந்து நாங்க சொல்றோம் ணா என்றவளுங்கள் சென்னையில் புறப்பட்டதிலிருந்து விகே.வை உதைத்து தள்ளிய வரைக்கும் சொல்லி முடிக்க, அதையெல்லாம் கேட்டவனோ அதிர்ந்து போனான்!!
சரிடா அது எந்த இடமென்று தெரியுமா என்க,இல்லை ணா.காரிலிருந்து பார்க்கும் போது வெளியில எதுவுமே தெரியலை.தோராயமாக ஒரு மணி நேரம் பயணம் பண்ணிய வரையில் வேறு எந்த வண்டி சத்தமும் அந்த ரோட்டில் கேட்கலை.இதை மட்டும் எங்களால உறுதியாக சொல்ல முடியும்.
அவனுடைய முகம் உங்களுக்கு நினைவு இருக்கா டா?
எனக்கு இருக்கு ணா என்று கயல் சொல்ல,குட் என்றவன் சென்னையில் தனக்கு தெரிந்த நண்பனிடம் அடையாளம் சொல்லி வரைய சொல்லியவன்,அதை தெரிந்த போலீஸிடம் கொடுத்து ரெக்கார்டில் செக் பண்ண சொல்ல,ஒரு மணி நேரம் சென்று கால் பண்ணியவர் அந்த அடையாளத்தில் யாருமே இல்லையென்றார்.
அப்போதுதான் கதிருக்கு ஒன்று புரிந்தது.அவர்கள் மாட்டக்கூடாது என்பதற்காக முகத்தில் ஸ்கின் மாஸ்க் ஏதாச்சும் போட்டுருக்கலாம் டா.இது என்னோட கெஸ்ஸிங் தான் என்கவும்,அதே தான் ணா.காலையில பார்க்கும்போது அவனுடைய முகம் ஓவல் ஷேப்பில் இருந்துச்சு நான் கவனிச்சேன்.
திரும்ப மதியம் பார்க்கும் போது சர்க்கிளா இருக்கிற போல எனக்கு தோணுச்சு ணா.ஆனால் குரல் மட்டும் அதேபோல இருந்ததென்றாள்.
அப்போ கீழே விழுந்தவன்?
அது தெரியலை என்றாளுங்கள்.
சரி டா.இதை மறந்துட்டு உங்க வேலையை பாருங்கள்.அந்த ஜானை எங்கேயாவது பார்த்தால் எனக்கு இன்பார்ம் பண்ணுங்களென்றவன் உடனே பிரசாந்துக்கு விஷயத்தை சொல்ல,ஓகே மச்சி என்றவன் ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணிய நம்பரை கேட்க,போலீஸ் என்பதால் அவர்கள் தரப்பிலும் கொடுக்க,அவனும் அந்த நம்பருக்கு கால் பண்ணினான்.
டிரைவர் அட்டன் பண்ணியதும் ஹலோ மாடசாமியா?ஆமாம் என்றவனிடம்,தான் யாரென்ற விஷயத்தை சொல்லியவன் அந்த ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்ததை பார்த்தியா?அது வந்துங்க சாரென்க,பயப்படாம சொல்லுங்களென்கவும் பின்னர் அங்கு பார்த்ததை சொன்னான்.
“சரியென்று கதிருக்கும் அதை சொல்ல
எப்படியோ அந்த துரோகிக்கு கடவுளாக தண்டனை கொடுத்து விட்டாரே என்றவாறு அழைப்பை துண்டித்தான்”
அதற்கு பின்னர் நாட்களும் வேகமாக ஓட கோலகலமாக வான்மதி-கதிரின் கல்யாணம் நல்லபடியாக முடிந்து அவர்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்.
“ஒரு மாதம் சென்று கதிரும் ஐபிஎஸ் டிரைனிங்காக ஹைதராபாத்கு சென்று விட்டான்”
ஆறு மாதங்களுக்கு மேல் கடந்து சென்றது.அவ்வப்போது சீவகன் மலர் படித்ததையும் வேலைக்கு போன விஷயங்களை நினைவு படுத்தி அதற்கான ஆதாரத்தை காட்ட அவள் மூளையும் அது உண்மையென நம்பியது”
மலரும் பழைய இயல்பு நிலைக்கு திரும்ப,தோழிகள் மூவரும் அதே கம்பெனிக்கு வேலைக்கு சென்றனர்.
போடாத துணிகளை ஆசிரமத்திற்கு கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்திருந்த கண்ணகிக்கு கடந்த ஆறு மாதங்களாக கொடுக்காதது அன்று தான் ஞாபகம் வந்தது.
“சரியென அவருடையதையும் கணவருடையதையும் எடுத்து வைத்தவர்,மகளின் துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு போனார்”
ஒதுக்கி வைக்கும் துணிகள் கபோர்டின் அடியில் இருக்குமென்பதால் அதை எடுக்கப் போகும் போது அதற்கு பின்னாடி சிறிய ட்ராவல் பேக் இருந்ததை பார்த்தார்.
என்னது இதுவென்று அதை எடுத்து திறக்க,மேலாக சில போட்டோக்கள் இருக்கவும் கைகள் நடுங்க எடுத்து பார்க்க அதில் வேந்தனும் மலரும் ஹோட்டல் பீச் கோயிலென்று எடுத்த போட்டோக்களும்,அவன் வாங்கி கொடுத்த டிரஸ்களும் இருப்பதை பார்த்து நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.
பலராமனும் வள்ளியும் பேத்தியை பார்க்க வரும் போதெல்லாம் சீவகனிடம் வேந்தனை பற்றி சொல்லி வருத்தப்படுவதை கண்ணகியும் கேட்டிருக்கிறார்.
“கண்ணகியும் காதலின் வலியை உணராதவர் இல்லையே”
“மகளுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்த பின்னர் வேந்தனின் நினைவு வந்தால் அவள் வாழ்க்கை என்னாவது என்பதை நினைக்கவே இடி விழுந்த போலானது”
கண்களை மூடி நன்கு யோசித்தவருக்கு மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளை வேந்தன் தான் என்பது புரிய,பொருட்களை அதே இடத்தில் வைத்துவிட்டு கீழே வந்தவருக்கு காலிங் பெல் சத்தம் கேட்டது.
அதுக்குள்ளயே வந்துட்டாரா என்றவாறு கதவை திறக்க அங்கே வாசனின் அண்ணன் விநாயகமும் அவர் மனைவி கனியும் நிற்க,வாங்க அண்ணா வாங்கண்ணி என்கவும் உள்ளே வந்தவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
கண்ணகி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்காக தான் நானும் உன் அண்ணியும் வந்தோமென்க,சொல்லுங்கள் அண்ணா என்கவும்,உன் மகளை வேந்தன் உசுரா காதலிக்கிறான்மா.
எட்டு மாசமா என் மகன் இருக்கிற கோலத்தை சத்தியமா பாக்க முடியல. எப்படியாப்பட்ட பிள்ளை தெரியுமா?உன் மகள் மேலான காதல் அவனை இன்னிக்கு பைத்தியக்காரனை விட மோசமாக்கிடுச்சு.
சின்ன வயசிலிருந்து எதையுமே போல்டா செய்வான்.அவன் கலங்கி நான் பார்த்ததே கிடையாது.அப்படியாப்பட்ட புள்ளையோ உன் மகளுக்கு அவனுடைய ஞாபகம் இல்லையென்று சொல்லி உடைந்து போய் அழுதது என் கண்ணு முன்னாடி நிக்குது தாயி.
நடந்த விஷயத்துக்கு மன்னிச்சிடுனு சொல்லலை.என் தம்பிக்கு இருப்பது ஒரே பையன் அவன் குடும்பத்துக்கு வாரிசு வேணும்.மனசுல எதையும் வச்சுக்காதே,சீவகனிடம் இதைப்பற்றி பேசும்போது தான் நீ சொன்ன விஷயம் தெரிந்தது.
"என் புள்ளை ஒவ்வொரு நாளும் உயிரோடு அங்கு செத்துக்கிட்டிருக்கான் மா"
"சிரிப்பை தொலைச்சிட்டு அன்னக்காவடியை விட மோசமாக இருக்கிறான்.மகனை நினைத்து வாசனும் சீதாவும் அழுகாத நானில்லை"
நகத்தில் அழுக்கு படாமல் இருப்பவனோ இப்போது பரதேசி கோலத்தில் இருக்கிறதை பார்க்க முடியலை மா.
உன் பொண்ணை குடு,மகாராணி போல வச்சிருப்பானென்று கையை கூப்ப,ஐயோ அண்ணா என்று பதறியடித்து எழுந்தவர்,அந்த கடவுள் தான் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வேந்தனை மலரும் விரும்புன விஷயமே தெரியுமென்றவர் பின்னர் ரூமில் பார்த்த விஷயத்தை சொல்லி விட்டு,முறைப்படி பொண்ணு கேட்டு வாங்கணா.
"அடுத்த முகூர்த்தத்தில் பிள்ளைகள் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தலாமென்று சந்தோஷத்தோடு கண்ணகி சொல்ல,இது போதும் தாயி என்றவாறு மனைவியோடு அங்கிருந்து கிளம்பினார்"
சொல்வாளா..??
Last edited: