• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 3, 2025
Messages
19
மலரின் நினைவுகள்:

"ஊருக்கு போவதற்கான நாளும் வர,மூவரும் சென்னையில் இருந்து ஸ்லீப்பர் பஸ்ஸில் ஏறியவர்கள், கோயம்புத்தூருக்கு அதிகாலையில் வந்து சேர்ந்தனர்"

"இவர்களுக்காய் சீவகனின் அண்ணனும் அங்கு காரோடு காத்திருந்தார்"

"பிளாட்பார்மில் நிற்கும் தனது அண்ணனை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் அவரின் கையை பிடிக்க, தம்பியின் கரத்தை இறுக்கமாக பிடித்து தனது நெஞ்சில் வைத்தவருக்கு கண்கள் கலங்கியது"

பின்னர் தன்னை தானே தேற்றிக் கொண்டு,அவர்களை பார்த்து சிரிக்க, மலரு இது தான் உன்னுடைய பெரியப்பா என்று தனது அண்ணனை காட்டி சொல்ல,நல்லா இருக்கியாடா என்று தம்பி மகளின் தலையை தடவியபடி கேசவன் கேட்க,நல்லாருக்கேன் பெரியப்பா.

நீங்க நல்லா இருக்கீங்களா??

"நான் நல்லா இருக்கேன் டா"

"வாங்க போகலாமேன ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவர்கள், அங்கிருந்த காரில் ஏறிக்கொண்டு பொதுவாக பேசியபடியே அந்த பெரிய வீட்டிற்கு வந்தார். சேர்ந்தனர்"

"அந்த வீட்டினரோ பழைய கதையை எதுவும் பேசாமல் இப்போது இருக்கும் சந்தோஷத்தை மட்டும் கொண்டாடினால் போதும் என்ற மனநிலையில் இருந்தது"

"வள்ளியம்மையோ தனது சின்ன மகனுக்காக வாசலிலே காத்திருந்தார்"

அவரின் பெரிய மகனின் பிள்ளைகள் இருவரும்,அப்போ நாங்கள் உனக்கு பேரப்பிள்ளைகள் இல்லையா அப்பா? என்று வம்பு பண்ணிக் கொண்டிருந்தனர்.

"இருபது வருடங்களுக்குப் பிறகு மனைவியின் முகத்தில் இருக்கும் பொலிவை பார்த்த பலராமனுக்கு, காலஞ்சென்றே தனது தவறு புரிந்தது"

வருடங்கள் ஆனாலும் இன்னும் அப்படியே கம்பீரமாக இருக்கும் தங்களது வீட்டை பார்த்த சீவனுக்கு,பழைய நினைவுகள் வரவும் கண்கள் கலங்கியது.

"வாடா என்று தம்பியை தோளோடு அணைத்துக் கொண்டவாறு கேசவன் முன்னே போக,மலரும் கண்ணகியும் அவர்களின் பின்னாலே வந்தார்கள்"

"கண்ணகிக்கோ அந்த வீட்டில் காலடி வைக்க பெருத்த சங்கடமாக இருந்தது"

ஆனால்,மலர்விழியோ தனது சொந்தங்களை பார்க்க ஆர்வமாக உள்ளே போனாள்.

மகனைப் பார்த்து கண்கலங்க,அம்மா என்று போய் தனது தாயை அணைத்துக் கொண்டு சீவகன் அழ,அந்த இடமே உணர்ச்சியில் மிதந்தது.

வாங்க தம்பியென்று கேசவனின் மனைவி பாரிஜாதம் கூப்பிட,அவர் குரலில் அழுது கொண்டிருந்த சீவகன் திரும்பி பார்த்து,வரேங்க மதனி,நல்லா இருக்கீங்களா??

"நான் நல்லா இருக்கேன் தம்பி"

நீங்க எப்படி இருக்கீங்க என்றவாறு அங்கிருந்த கண்ணகியையும் மலர்விழியையும் பார்த்தவர் வா கண்ணகி,வாத்தா என்று தனது கொழுந்தன் மகளின் கையைப் பிடிக்க, இவங்கதான் உன்னுடைய பெரியம்மா என்று கேசவன் சொல்ல,அவரைப் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்தாள்.

"தனது பேத்தியை கண்ணீரோடு பார்த்த வள்ளியம்மைக்கு தன்னையே இளம் வயதில் பார்த்தது போல இருந்தது"

"கண்ணு என்றவாறு பேத்தியை நோக்கி தனது கையை நீட்ட,அந்த வயதானவரின் பரிதவிப்பை பார்த்தவள்,என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி என்றவாறு அவரின் காலில் விழுந்தாள்"

"நல்லாரு கண்ணு என்றவாறு பேத்தியை தூக்கி விட்டவரோ,அவளின் உச்சந் தலையில் முத்தத்தைப் பதித்தார்"

கண்ணகி மட்டும் அந்த வீட்டினரோடு ஓட்ட மனம் இல்லாமல் ஒருவித சங்கடத்தோடு நின்று கொண்டிருக்க, அதுவோ அங்கிருந்த மற்றவர்களுக்கும் நன்கு புரிந்தது.

எதுக்கு வாசலில் நின்னுட்டு இருக்கீங்க??

"மருமகளை கூப்பிட்டு உள்ள போ வள்ளியம்மை என்று பலராமன் சொல்ல,உள்ளே வா கண்ணகி என்ற வள்ளியம்மையோ மருமகளின் கையைப் பிடிக்க வர,அவரோ ஒரு அடி. பின்னாடி தள்ளிப் போனார்"

இதைப் பார்த்து கண்ணகி என்று சீவகன் கத்த,தனது கணவனை நிமிர்ந்து பார்த்தவரோ அவரவரிடத்தில் இருப்பதுதான் அவர்களுக்கு மரியாதை என்றவர்,தனது பெட்டியை எடுத்து கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தனது வீட்டை நோக்கி சென்றார்.

கண்ணகியை ஒருவித வேதனையோடு மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க,இதை கண்ட மலர் அப்பாஆஆஆ,அம்மா எங்கே போறாங்க?

"அம்மா..அம்மா"

"எங்கேம்மா போற???என்றவாறு மலரும் கண்ணகியின் பின்னே ஓடினாள்"

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊருக்குள் இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த கண்ணகிக்கு,தனது வாழ்க்கையில் நடந்த அத்தனையும் நினைவுகளாக வர,கண்ணீர் மட்டும் ஆறாய் வழிந்து ஓடியது.

"கையில் பெட்டியோடு ரோட்டில் நடந்து வருபவரை,பார்த்த சிலருக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை"

வலது பக்கத்தில் தனது வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைந்த கண்ணகிக்கு, கடைசியாக இந்த ஊரை விட்டு போன நிகழ்வுகள் கண் முன்னால் வந்து செல்ல,இதுவரை இருந்த மனநிலை மாறியது.

"உடம்போ எஃகை போல் விறைத்தது".

அந்த தெருவில் கடைசியாக இருக்கும் வீடு தான் அவருடையது.இன்னும் சில அடி தூரத்திலேயே தனது வீடு வந்துவிடும் என்பது புரிய,கால்கள் இரண்டும் இரும்பு குண்டுகளால் பிணைத்த போல நடை பின்னியது.

அப்போது...

அம்மா அம்மா என்ற குரல் கேட்டு கண்ணீரோடு திரும்ப,அங்கே தனது மகள் ஓடி வருவதை கண்டவர்,ஏ மலரு எதுக்கு இப்படி ஓடி வர என்று முறைக்க, எதுக்குமா என்னை மட்டும் அங்கே விட்டுட்டு வந்த???

நீ இங்கு யாரு வீட்டுக்கு போற மா???

"என்னோட வீட்டுக்கு தான் தான் டி".

உன்னோட வீடாஆஆஆ!!!

அப்போ நீ பிறந்த ஊரும் இதுதானா???என்கவும்,ஆமாம் என்றவர்,வேறு எதுவும் சொல்லாமல் மகளை ஒரு கையில் பிடித்து கொண்டு அங்கிருந்த இரும்பு கதவின் அருகில் போனவர்,பெட்டியை கீழே வைத்து விட்டு கைகள் நடுங்க கதவை திறந்து வீட்டிற்குள் போனவரோ தனது தாயோடு உடன் பிறப்புகளை தேட,நான் பக்கமும் தூங்கு தாங்கியிருக்கும் முற்றமோ வெறுமையாக இருந்தது.

எங்க யாருமே காணுமென அங்கிருந்து பார்வையால் அலச,தோட்டத்துக் கதவு திறந்து இருப்பதை பார்த்து பெட்டியை கீழே வைத்தவர் வேகமாக போய் அம்மா என்று கூப்பிட, அங்கே மாடுகளுக்குப் பில்லை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த பானுமதிக்கு,யாரோ கூப்பிடுகிறார்கள் எனக்கும் குரல் கேட்டது.

யாருத்தா? என்றவாறு தொழுவத்தில் வெளியே வந்தவரோ அங்கே தனது மூத்த மகள் இருப்பதைப் பார்த்து கண்ணகி என்று தனது வயதையும் மறந்து வேகமாக ஓடி வந்து மகளின் கையைப் பிடித்துக் கொண்டு கத்திக் கதறி அழுதார்.

அவரும் அம்மா என்று தாயை பிடித்துக் கொண்டு அழ,இன்னைக்கு தான் இந்த ஆத்தாள பாக்கணும்னு உனக்கு நேரம் வந்துச்சா???என்று தனது நெஞ்சிலே அடித்துக் கொண்டு பானுமதி அழ..

இவர்களின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களோ என்னாச்சு பானு என்று ஓடி வந்து பார்க்க,சிலருக்கு கண்ணகியை அடையாளம் தெரிந்தது.

அம்மாடி கண்ணகி...!!!

"வா கண்ணு"

இன்னைக்கு தான் வழி தெரிஞ்சிதா என்று உறவினர் பெண்மணியிடம் ஒருத்தர் கேட்க,அத்தை என்று அந்த முதியவரின் கையை பிடித்து கொண்டு கண்ணகி அழ,மலரோ எதுவும் புரியாமல் திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏ பானு"

இம்புட்டு வருசம் போய் புள்ளை வந்துருக்கே அதை நினைத்து சந்தோஷப் படாமல் எதுக்கு ஒப்பாரி வைக்கிற என்றவாறு கண்ணகியின் கையை பிடித்த இன்னொரு பெண்மணியோ வீட்டிற்குள் அழைத்திட்டு போனார்.

படி தாண்டி உள்ளே வரும் போது தான் அங்கு எதுவும் புரியாமல் குழப்பத்தோடு நிற்கும் மக்களை பார்த்தவர்,பெரியம்மா இதுதான் உங்க பேத்தி மலரு என்று தன் கையை பிடித்திருக்கும் பெண்மணியிடம் சொல்ல, அப்படியாஆ!!!

"அப்பன் வூட்டு வழிகாலையே உரிச்சிட்டு வந்திருக்கே என்று அவள் நெற்றியை வழித்து நெட்டி முறித்தார்"

பின்னாடியே வந்த பானுமதி இது தான் என் பேத்தியா என்று கண்ணீருடன் கேட்க ஆமாம் மா.ஒரே பொண்ணு தான். இரண்டாவது வருஷம் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றவர், மகளுக்கும் தனது உறவினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அய்யோ மலரு இங்கு என்ன டி நடக்குது???

அப்பா-அம்மா ரெண்டு பேருக்கும் இவ்வளவு சொந்த பந்தங்கள் இருக்கும் போது ஏன் எதுவுமே நமக்கு சொல்லாமல் இருந்திருக்கிறாங்க???
என்று தனக்குள் பேசிக் கொண்ட மலரோ அங்கு நடப்பதை பார்த்து என்ன விஷயமாக இருக்குமென்று யோசனையானாள்".

உட்காருங்க கண்ணு இதோ வந்துடுறேனென்று அங்கிருந்து சமையல் கட்டுக்குள் சென்ற பானுமதி, அடுப்பில் இருந்த பாலை மீண்டும் சூடு படுத்தி மக்களுக்கும் பேத்திக்கும் கொடுக்க,எங்கம்மா கதிரும் கவிதாவும்???

ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி எத்தனை குழந்தைகள் மா?

"என் விதி தான் எதையுமே தெரிஞ்சுக்காம வைத்து விட்டதேயென்று கண் கலங்கினார்"

சொல்வாளா.....??

Joined
Jun 25, 2025
Messages
4

சூப்பர் டா செல்லம் 💐👏💕🥰
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top