Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
“ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியவர்கள் நல்லபடியாக சென்னைக்கு வந்து சேர்ந்தனர்”
குழந்தை போல தனது அக்கா மகளை அலுங்காமல் தூக்கி வீல் சேரில் உட்கார வைத்த கதிரை பார்த்த கண்ணகி-சீவனுக்கு கண்கள் கலங்கியது.
கொஞ்ச நேரம் கூட தனது மகள் ஒரு இடத்தில் இருக்க மாட்டாள். துருதுருவென அங்கே இங்கும் ஓடியாடுபவள்,கடந்த இரண்டு வாரமாக இப்படி படுத்த படுக்கையாக இருப்பதை நினைத்து,உள்ளுக்குள் வருந்தும் வேதனையோ அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“மற்றவர்களை அடையாளம் காணாமல் தள்ளி வைக்க முடிந்தவளால்,கதிரை ஏனோ வேற்று மனுஷனாக அவளால் பார்க்க முடியவில்லை”
ஹாஸ்பிடல்ல மயக்கம் தெளிந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஜுஸ் வாங்கிட்டு வந்த கதிரை பார்த்து மலர் சிரிக்க,என்னை யாருன்னு தெரியுதா என்று கதிர் கேட்க,ஹம் தெரியும் மாமா.
அப்படியா..!!
நான் யார்?
“நீங்கள் அம்மாவோட தம்பி கதிர் மாமா.எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கென்று மலர் சிரிக்க அதைக் கேட்ட கதிருக்கு கண்கள் கலங்கியது”
நீங்க இங்கையே இருங்கள் நான் போய் ஆலம் கரைத்து எடுத்துட்டு வரேன் என்றவாறு கதவை திறந்து உள்ளே போன கண்ணகி,சிறிது நிமிடத்தில் ஆலத்தோடு வந்தவர் மகளுக்கு மூன்று சுத்து சுற்றி திருஷ்டி கழித்து நெற்றியில் பொட்டை வைத்துவிட்டு வாசலில் போய் அந்த தண்ணீரை ஊற்ற,வீல் சேரை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த கதிர்,மலரை எங்கே அத்தான் தங்க வைக்கிறதென்றான்.
“கீழே உள்ள ரூமிலே இருக்கட்டும்.நல்லா நடக்க ஆரம்பிச்ச பிறகு அவளுடைய ரூமிற்கு போகட்டுமென தம்பதிகள் இருவரும் சொல்லிவிட்டனர்”
சரிங்க அத்தான் என்றவன் அதே போல் கீழே இருக்கும் மூன்றாவது ரூமிற்குள் போக,நல்லவேளை சீவகன் தனது நண்பனிடம் ஒரு சாவியை கொடுத்து வைத்திருந்ததால்,அவனும் ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் பண்ணியிருக்க இப்பொழுது வந்து தங்க வசதியாக இருந்தது.
“பெட்டின் அருகில் போனவன் குழந்தை போல் மலரை தூக்கி பொறுமையாக படுக்க வைக்க,உங்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லையே மாமா என்கும் மலரை பார்த்தவன்,இல்லை டா”
அக்காவுக்கு மட்டும் நீ பொண்ணு இல்ல டா.எனக்கும் நீ குழந்தை தாண்டா என்றவாறு தனது அக்கா மகளின் தலையை தடவி விட்டுக்கொண்டு கதிர் சொல்ல,ஓஹோ இதனால்தான் தாய்க்கு பிறகு தாய் மாமனுக்கு உரிமையென சொல்றாங்களோ என்று சிரித்தாள்.
“அன்று இரவு தனது அக்கா வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு கதிரும் பொள்ளாச்சிக்கு கிளம்பி விட்டான்”
கிட்டத்தட்ட பத்து நாளைக்கு மேல் கதிர் மெடிக்கல் லீவ் எடுத்திருந்ததால்,இதற்கு மேலும் தம்பியை சிரமப்படுத்த வேண்டாமென்று நினைத்த கண்ணகி அவன் ஊருக்கு போவதற்கு சம்மதம் சொன்னார்.
“ஒரு வாரத்தில் வரேன் என்று சொன்ன மகன் பத்து நாட்கள் சென்று ஓய்ந்து போய் வந்த தோற்றத்தை பார்த்த பானுமதிக்கு எதுவோ சரியில்லை என்பது புரிந்து,மகனின் வலது கை எடுத்து தனது தலையின் மேல் வைத்தவர்,என்ன நடந்துச்சுன்னு என் மேல் ஆணையாக சொல்லென்றார்”
பின்னர் நடந்ததையெல்லாம் கதிரும் கலங்கியபடி சொல்ல,ஐயோ என் பேத்தி என்று நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதவர்,உடனே நான் என் பேத்தியை பாக்கணும் என்று மகனிடம் கெஞ்ச,சரிம்மா நான் உன்னை பஸ் ஏத்தி விடுறேன்.
“நீங்க போய் இறங்கினால் மாமா வந்து உங்களை கூப்பிட்டு போவார் என்கவும் சரி கண்ணு என்றவர் வேகமாக தயாராக சென்றார்”
தனது ஃபோனிலிருந்து டிக்கெட் புக் பண்ணியவன் வேகமாக குளித்து தயாராகி வெளியே வர,அதற்குள் பானுமதியும் ஊருக்கு போவதற்காக ரெடியாகியவர்,மகனுக்கான காலை உணவோடு காத்திருந்தார்.
இந்தா கண்ணுயென தட்டை நீட்ட அதிலிருந்த இட்லியை சாம்பார்,பூண்டு பொடியோடு தொட்டு சாப்பிட்டு கையை கழுவியவன்,தனது தாயை அழைத்துக் கொண்டு போய் பஸ் ஏற்றி விட்டு,அக்காவிடம் விஷயத்தை சொல்லியவன் டூட்டிக்கு சென்று விட்டான்”
“பெங்களூருக்கு போய்ட்டு வந்த மகனிடம் மலரை பற்றி விசாரிக்க, அவனோ எதுவும் சொல்லாமல் தனது ரூமிற்கு போய் கதவை சாத்திக் கொண்டதை பார்த்து,வாசனுக்கும் சீதாவுக்கும் ஒன்றும் புரியவில்லை”
அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையேங்க?என்க,அமைதியாக இரு சீதா.நான் போய் மச்சான் கிட்ட கேட்டுட்டு வரேன் என்கவும்,நைட் 12 மணி ஆவது இந்த நேரத்துல போய் என்னத்த கேப்பிங்க?காலையில போய் கேட்கலாமென்று சீதா சொல்லவும் சரி என்று படுத்து விட்டனர்.
எப்போ விடியும் விடியுமென்று காத்துக் கொண்டிருந்த இருவரும் காலையிலே எழுந்து வழக்கம் போல் வீட்டில் பூஜை முடித்துவிட்டு,மாமனாருக்கு டீயை கொடுத்த சீதாவோ விஷயத்தை சொல்லவும் சரிமா என்றார்.
பின்னர் வாசனும் சீதாவும் பக்கத்து தெருவில் இருக்கும் பலராமன் வீட்டிற்கு வர,அங்கு எல்லோரும் ஹாலில் சோகமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து உள்ளே போனவர் மாமா என்க,தங்கை மகனை பார்த்தவர் வா கண்ணு என்றவரிடம் மலரை பற்றி விசாரிக்க,நடந்ததையெல்லாம் அவர் சொல்லவும் அதைக் கேட்ட இருவரும் அதிர்ந்து போனார்கள்.
அப்பொழுது,மாமா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று வாசன் தயங்க,என்ன கண்ணு சொல்லுயா என்கவும்,பின்னர் மலரும் வேந்தனும் காதலித்த விஷயத்தையும்,வேந்தனே கண்ணகியை நேரில் பார்த்து பேசிட்டு வந்ததையும் சொல்ல,அப்படியா என்று அதிர்ச்சியோடு ஆச்சர்யப்பட்டனர்.
சின்னவனோட மனசு என்ன பாடு படும்னு புரிஞ்சுக்க முடியுது கண்ணு.பிள்ளை கொஞ்சம் நல்லா தேறி வரட்டும்.அதற்குப் பிறகு அவங்க கல்யாண விஷயத்தை பற்றி நாம பேசலாமென்று பலராமன் சொல்ல,சரிங்க மாமா என்றவர் ஒரு முறை நானும் சீதாவும் போய் மலரை பார்த்துட்டு வரட்டுமா மாமா?
இதனால் கண்ணகிக்கு ஒன்னும் மன வருத்தம் வராதே என்க,அதெல்லாம் ஒன்னும் ஆகாது.நீ போயிட்டு வா என்றார்.
“பானுமதியும் சென்னைக்கு வந்து இறங்க,சீவகனும் தனது மாமியாரை காரில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர,பேத்தியை பார்த்தவர் கத்தி கதறினார்”
அவர் யார் என்று அவளுக்கு தெரியாததால்,தனது தாய் என்று கண்ணகி சொல்லவும் அம்மாச்சி என்பவளை கண்ணீரோடு பார்த்தவர் உன்னை நடக்க வச்சுட்டு தான் இந்த அம்மாச்சி அந்த பொள்ளாச்சி மண்ணை மிதிப்பேன் என்றவர்,உடல் வலு பெறுவதற்காக என்னென்ன சாப்பிடணும் என்று பட்டியலை போட்டு மருமகனிடம் கொடுத்தவர்,அதற்கான பொருளை எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி பேத்திக்கு ஒவ்வொரு வேளைக்கும் ஒன்னு ஒன்னு செய்து கொடுத்தார்.
“கதிரின் மூலமாக மலருக்கு இப்படியான விஷயத்தை கேள்விப்பட்ட கவிதாவால் நேபாளத்தில் இருக்க முடியவில்லை”
மூன்று மாதம் விடுப்பு கேட்க,கடந்த 10 வருடங்களாக இந்த ஊரை விட்டு அவர் எங்குமே போகாததை பார்த்த ஹாஸ்பிடல்ல நிர்வாகமும் தாராளமாக போயிட்டு வாங்க என்று பர்மிஷன் கொடுத்தார்கள்.
அங்கிருந்து கிளம்பியவர் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வந்து சேர்ந்தவர்,பின்னர் கதிரிடம் அக்கா வீட்டுக்கு எப்படி போகணும் என்று விசாரித்துக் கொண்டு டாக்ஸியில் ஏறி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவருக்கு மனம் மட்டும் சீவகனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்று ஒருவித படபடப்பாக இருந்தது.
"மனதிற்குள் பொத்தி வைத்த காதலாச்சே,படிப்பு முடிந்ததும் தனது மனதில் இருப்பதை சொல்லலாமென காத்திருக்கும்போது தனது அக்காவுக்கு கணவனான கோலத்தை என்னவென்று சொல்ல"
மனதில் சீவகனை நினைத்துக்கொண்டு வேறோருவருடன் வாழ விரும்பாமல் கண்காணாத இடத்திற்கு சென்று இதோ 10 வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது.
"மீண்டும் இப்படி ஒரு சூழலிலா உங்களை சந்திக்கணுமென உள்ளுக்குள் நொந்து கொண்டார்"
“அரை மணி நேர பயணத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சீவகன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்”
கால் டாக்ஸிக்கு பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்த இரும்பு கதவை திறந்து உள்ளே போனவர் காலிங் பெல்லை அழுத்த,சிறுது நொடியில் கதவை திறந்த பானுமதி,அங்கிருந்த தனது சின்ன மகளை பார்த்தவர் கவிதா என்று மகளை கட்டிக் கொண்டுஅழுதார்.
பின்னர் வா கண்ணு என்று வீட்டிற்குள் அழைத்து போக,கண்ணகி பூஜை அறையிலும் சீவகன் அவர் ரூமில் ஆபீஸ்க்கு தயாராகி கொண்டிருந்ததால் கவிதா வந்த விஷயம் தெரியவில்லை.
“தனது பேத்தி இருக்கும் ரூமிற்கு அழைத்துப் போக,அங்கே பெட்டில் சாய்ந்தவாறு மலர் டிவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது”
மலருகண்ணு இங்க பாருங்க யாரு வந்திருக்கா என்று பானுமதி சொல்லவும்,தனது அம்மாச்சியின் குரலை கேட்டு யாரென்று பார்க்க, அங்கே கண்ணகியின் சாயலில் இருக்கும் கவிதாவை பார்த்தவள்,அம்மா போலயே இருக்கிறாங்க.
அப்போ இவங்க தான் சித்தியா என்கவும் ஆமாடா என்றவாறு வேகமாக வந்த கவிதா,தனது அக்கா மகளின் கன்னத்தை வருடும் போது அவருக்கும் கண்கள் கலங்கியது.
இப்போதுதான் என்னை பார்க்கணும்னு உங்களுக்கு தோணுதா சித்தி என்க, மன்னிச்சிடு தங்கம்.உனக்கு அடிபட்டுடுச்சுன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் மாமா சொன்னான்.அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.
இந்த பத்து வருஷத்தில் என்னோட அக்கா தம்பி அம்மாவைகூட நான் பார்க்க வரலைடாயென்க,அப்படியா சித்தியென்று ஆச்சரியப்பட்டாள்..!!
பூஜை முடித்து வெளியே வந்த கண்ணகிக்கு இன்னொரு பேச்சு குரல் கேட்கவும்,யார் வந்திருக்கிறது என்றவாறு உள்ளே வந்தவர் அங்கே இருந்த தனது தங்கையை பார்த்தவர் கவிதா என்று போய் தங்கையை கட்டிக் கொள்ள,அக்கா தங்கை இருவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்துக் கொண்டதால் சந்தோஷத்தை அழுகையாக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து வந்த சித்திக்கு ஒரு வாய் டீ கொடுக்காமல் இப்படி எல்லாரும் அழுதுட்டு இருக்கீங்களே என்று அந்த சூழ்நிலை மலர்தான் இயல்பாக்கினாள்.
நான் கூட மறந்துட்டேன் ஆத்தா என்று பானுமதி சொல்லவும் கவிதாவோடு கிச்சனுக்கு போனவர் தங்கையிடம் பேசிக்கொண்டே பிளாஸ்கிள் இருந்த டீயை இரண்டு கப்பில் ஊற்றி ஜீனியை அளவாக கலக்கி தங்கைக்கு ஒன்று கொடுத்துவிட்டு அவர் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவர்கள் பல வருட கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஆபீஸ் போவதற்காக தயாராகி வெளியே வந்த சீவகன் அங்கிருந்த கவிதாவை பார்த்து,ஏய் நர்சம்மா வாட் எ சர்ப்ரைஸ்…!!!
“நீ எப்ப வந்த என்றவாறு மனைவியின் அருகில் வந்து உட்கார,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்.நீங்க எப்படி இருக்கீங்க என்றார்”
“எனக்கு என்ன கவி உன் அக்கா மகாராஜாவை போல என்னை பார்த்துக் கொள்கிறாள் என்றவாறு கண்ணகியை தோளுடன் அணைத்துக் கொண்டு சொல்ல,அதை பார்த்த கவிதாவின் நெஞ்சுக்குள் தாங்க முடியாத ஓர் வலி வந்தது”
சிறிது நிமிடங்கள் கவிதாவின் வேலையை பற்றிய பேசிக் கொண்டிருந்த சீவகன்,ஆபீஸ்க்கு நேரமாக விட்டதை உணர்ந்து அக்கா தங்கை ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க,நான் போயிட்டு வருகிறேன் என்றவர் காலை டிபனை சாப்பிட்டுவிட்டு மனைவி கொடுத்த லஞ்ச் பேக் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
“தங்கையும் தாயும் மகளை பார்த்துக் கொள்வதால் கண்ணகியும் டென்ஷன் இல்லாமல் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து கொண்டிருந்தார்”
சனி ஞாயிறு விடுமுறை வர தங்கையை பார்க்க மதியும் ஓடோடி வந்துவிட்டாள்.அவளுக்கு நினைவுகள் இல்லை என்பதை முன்னாடியே சொல்லியிருந்ததால்,புதிதாகவே அறிமுகமாகிக்கொள்ள தனது அக்காவான மதியை மலருக்கு ரொம்ப பிடித்து விட்டது.
சொல்வாளா…???

Last edited: