Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
கூர்க்-பில்ரோத் ஹாஸ்பிடல்:
மலரு என்னடி சொல்ல?
இவங்களாம் யாரென்று உனக்கு தெரியலையாயென பதற்றமாக கண்ணகி கேட்க,ஆமாம் மா.இதற்கு முன்பாக இவர்களை பார்த்த போல எனக்கு தெரியலைமா.
உனக்கும் அப்பாவிற்கும் தெரிந்தவர்களா??
“மலரின் வார்த்தைகளை கேட்ட நியூரோ டாக்டரான கேசவனுக்கு விஷயம் புரிந்து விட்டது”
என்னங்க என்றவாறு வேகமாக எழுந்த கண்ணகியோ கதவை திறந்து வெளியே ஓடியவர்,அங்கே ஓய்ந்து போய் சேரில் உட்கார்ந்திருந்த கணவரின் காலை கட்டிக் கொண்டு அழ,ஏய் கண்ணகி என்ன டி ஆச்சென்று சீவகன் பதட்டமானார்.
“நம்ப மலருக்கு மலருக்கென்று அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் கண்ணகி அழ,மலருக்கு தான் ஏதோ ஆகிவிட்டதென மனைவியை விலக்கி விட்டு வேகமாக கதவை திறந்து உள்ளே போனார்”
அங்கே மலரோ ஏதோ அசௌகரியமாக இருப்பதை பார்த்தவர்,கண்ணுகுட்டி என்ன டா ஆச்சென மகளின் அருகில் போக,அம்மா எங்கப்பா போனாங்க?
இவங்க எல்லாம் யாருன்னே தெரியலை,அவங்க பாட்டுல விட்டுட்டு அப்படியே வந்துட்டாங்களே என்கவும் அதைக் கேட்டு அதிர்ந்து போன சீவகன் தனது வீட்டினரை பார்க்க,ஆமாம் என்று கண்ணீரோடு தலையசைத்தனர்.
என்னடா சொல்ற?
இவங்களை யாருன்னு உனக்கு தெரியலையா என்ற அதிர்வோடு சீவகன் மறுபடியும் கேட்க,நெஜமா இவங்க எல்லாம் யாருன்னு தெரியலை பா என்று கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.
மகளின் வார்த்தையை கேட்டவர் அண்ணா என்று கேசவனை பார்க்க, வெளியில போய் பேசிக்கலாம் என்றவாறு எல்லாரும் அங்கிருந்து செல்ல,இவ்வளவு நேரம் ஒரு பார்வையாளராக நின்று கொண்டிருந்த வேந்தன் தன்னை நிச்சயமாக அவளுக்கு அடையாளம் தெரியுமென நம்பிக்கையோடு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சிறிது நொடிகளுக்கு பிறகு யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்த மலர், கஷ்டப்பட்டு வலது பக்கம் திரும்பி பார்க்க,அங்கே ஒருவித இயலாமையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு,அதே அந்நிய பார்வையில் பார்த்தாள்.
எந்த கண்கள் தன்னை பார்த்தால் பளபளவென மின்னுமோ,எந்த முகம் தன்னை கண்டால் வெட்கப்படுமோ,எந்த உதடுகள் தன்னை பார்த்தால் முத்துப் பற்கள் தெரிய சிரிக்குமோ,அந்த முகமோ இன்று தன்னை யாரோ போல பார்ப்பதை உணர்ந்த வேந்தனோ மொத்தமாக உடைந்து போய்,நெஞ்சை பிடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியேறி விட்டான்.
அந்த நேரம் மலருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு உள்ளே வந்த கதிர் வேந்தனின் இடிந்த தோற்றத்தை பார்த்து,வேந்தா என்னடா ஆச்சு என்க,இதுவரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாத அண்ணன் தற்போது வேந்தன் என்று கூப்பிடுவதை உணர்ந்தவன்,அண்ணா என்றவாறு கதிரின் தோளில் சாய,அவன் கண்ணிலிருந்து வடிந்த கண்ணீரோ கதிரின் இடது பக்க சட்டையை நனைத்தது.
சில நொடிகளுக்குப் பிறகே அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவன்,என்னடா ஆச்சு என்று அவனை நிமிர்த்த,அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை ணா.
“சத்தியமா இதை என்னால தாங்க முடியலை.நாலு வருஷமா நானும் அவளும் காதலிக்கிறோம்.இது யாருக்குமே தெரியாத விஷயம்”
நேத்து தான் அத்தை கிட்ட போயிட்டு பொண்ணு கேட்டுட்டு,எங்களுடைய காதல் விஷயத்தை சொல்லிட்டு வந்தேன்.இப்போ யாரோ ஒருத்தன் போல பார்க்கிறாளேனு கலங்கினான்.
தனது அத்தான் மூலம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டிருந்த கதிர் எல்லாம் சரியாகிவிடும் வேந்தா, கவலைப்படாதேயென அவனுக்கு ஆறுதல் சொன்னான்.
“அவள் யாரோ போல பார்ப்பதை இனி ஒரு முறை என்னால பார்க்க முடியாது என்றவன் அங்கிருப்பவர்களிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்பி விட்டான்”
“என்னாச்சு ணா மலருக்கென்று சீவகன் பதட்டமாக கேட்கும் போது,கேசவனின் நம்பருக்கு கால் வந்தது”
ஒரு நிமிஷம் டா என்றவர் தனது போனை எடுத்து பார்க்க அதில் வந்த பெயரை பார்த்துவிட்டு அட்டென்ட் பண்ணியர் சொல்லு பத்ரி என்க,அந்த பக்கம் இருந்த டாக்டர் பத்ரிநாத்,கேசு எங்கடா இருக்குற என்றார்.
பர்சனல் வேலையா கூர்க் வரைக்கும் வந்துருக்கேன் டா என்கவும்,ரொம்ப சந்தோஷம்டா.ஒரு முக்கியமான கேஸ் விஷயமா உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்.
எங்க ஹாஸ்பிடல் நியூரோ டாக்டர் ஒரு எமர்ஜன்சி கேஸ் விஷயமா அட்டென்ட் பண்ண போயிட்டாரு.
ஓஓஓ,நீ வேலை பார்க்கிற ஹாஸ்பிடல்ல தான் டா இருக்கேன் என்று கேசவன் சொல்ல,வாட்…!!!
நண்பனின் அதிர்வை கேட்டவர் ஆமா பத்ரி.ஐசுயு ல தான் இருக்கேன்,ஓ மை காட்,அந்த மூணு பொண்ணுங்க ஆக்சிடென்ட் கேசா என்கவும்,ஆமா என்றார்.
அதில் ஒரு பேஷண்டோட கண்டிஷன் பற்றி உன்கிட்ட பேசுறதுக்காக தான் கால் பண்ணினேன்,சரி சரி நீ எங்க இருக்கிற என்க,அப்படியே திரும்பி பாருடா என்கவும் கேசவனும் திரும்பி பார்க்க,அங்கே டாக்டர் பத்ரிநாத் வந்து கொண்டிருந்தார்
நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு பின்னர் தனது வீட்டினருக்கு பத்ரியை அறிமுகப்படுத்திய கேசவன்,மலருக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஆகியிருக்கு பத்ரி என்க,நானும் அதைப் பற்றி தான் உன்கிட்ட பேசலாமென்றிருந்தேன்.
பேஷண்ட் இங்க வந்து அட்மிட் ஆகும்போது நினைச்சேன் அவங்க கோமாக்கு போவாங்க,இல்லை என்றால் கண்டிப்பா மெமரி லாஸாகிருக்கும்னு.
அதே போல தான் நடந்திருக்கு என்க,ஆமா பத்ரி நம்ப வீட்ல இருக்கும் யாரையுமே அவளுக்கு அடையாளம் தெரியவில்லை டா.ஓஓஓ,சரி ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திரலாம் என்றனர்.
“பின்னர்,அதே போல் மலருக்கு ஸ்கேன் பண்ணி பார்க்க தலையில் அடிபட்டதால் சில வருடங்களில் நடந்ததை மட்டும் அவள் மறந்து போயிருப்பது தெரிந்தது”
மற்ற கேஸ் டீடைல்ஸ் எல்லாம் படித்து பார்த்த கேசவன் வேற ஒன்னும் பிரச்சனை இல்லை. கண்டிப்பா நினைவு வரும் டா என்று தனது தம்பியிடம் சொல்ல,அண்ணா உங்க யாரையுமே மலருக்கு அடையாளம் தெரியலையே என்று சீவகன் கலங்கினார்.
அது ஒன்னும் பிரச்சனை இல்ல டா.போகப்போக தானா வந்துரும்.இல்லனாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகப்படுத்தலாம்.ஆனால் ஒரேடியா ஞாபகப்படுத்த வேண்டாம்,அது நல்லதுக்கு இல்லை என்று ஒரு டாக்டராக சொல்லவும் சரி ணா என்றார்.
இவன் உங்க அண்ணன்னு எனக்கு தெரியாம போயிடுச்சே,இப்படியாப்பட்ட நியூரோ டாக்டரை வீட்டில் வைத்துக்கொண்டு நீங்கள் ஏன் கவலைப் படுறீங்க என்ற பத்ரிநாத்,ஒன் வீக்கில் தையல் பிரிச்ச பிறகு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.
காயம் கொஞ்சம் ஆறியதும் பிசியோதெரபியை வைத்துக் கொண்டு அவங்களுக்கு எக்சர்சைஸ் சொல்லி கொடுத்தீங்களென்றால் சீக்கிரம் அவங்க பழைய நிலைமைக்கு வந்துடுவாங்க என்று டாக்டராக பத்ரி சொல்லவும் ஓகே டாக்டர் என்றார்.
“வெளியே வந்தவர்கள் தங்களது வீட்டினரிடம் விஷயத்தை சொல்லவும் மலருக்கும் மற்ற இருவருக்கும் சீக்கிரம் குணமாகிட வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்”
நேரமும் கடந்து சொல்ல,ஒருவாறு பேசி வீட்டினரை ஊருக்கு கிளம்ப சொல்லும் போது தான் வேந்தனை காணாமல் எங்கே என்று தேட,ஒரு முக்கியமான வேலையாக போன் வந்துச்சு மதியமே வேந்தன் போயிட்டான்.நான்தான் சொல்லிக்கிறேன் என்று சொல்லி கதிரும் அவர்களை சமாளித்தான்.
“ஒரு வாரம் கடந்திருக்க மலருக்கு நெற்றியில் போடப்பட்டிருந்த தையல்கள் பிரிக்கப்பட்டு ஒரளவிற்கு காயங்கமும் லேசாக ஆற தொடங்கியது”
காயத்தில் பூச வேண்டிய ஆயின்மென்டை எழுதி கொடுத்தவர் மற்ற கையில் ஆபரேஷன் பண்ணியிருப்பதால் ஆர்த்தோ டாக்டரை பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாமென்றார்.
அதேபோல் எலும்பு டாக்டரை போய் பார்க்கவும் அவரும் சோதனை பண்ணி பார்த்துவிட்டு நல்லாருக்கு.மந்த்லி ஒரு டைம் வந்து செக் அப் மட்டும் பண்ணிக்கோங்க,இல்லை என்றால் அங்கே சென்னையில் என்னுடைய நண்பன் கேஜி ஹாஸ்பிடல்ல வொர்க் பண்றார்.அவரை பாருங்களென்றவர் டாக்டரின் பெயரை சொல்லி,அவருக்கு லெட்டர் எழுதி கொடுத்தார்.
பின்னர் பில் பே பண்ணி விட்டு தோழிகள் மூவரையும் டிஸ்சார்ஜ் பண்ணி அவரவர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்
பொள்ளாச்சி:
“ஸ்கூல் முடிந்து வெளியே வந்த மதி எங்கே அம்மாவை காணுமென தேட,அந்நேரம் காரில் அங்கு வந்த வாசன்,மதி கண்ணு இங்கு வா என காரிலிருந்தவாறு கூப்பிட்டார்”
“ எதற்கு மாமா கூப்பிடுகிறார்கள் என்ற யோசனையோடு வந்தவள்,சொல்லுங்க மாமா என்கவும்,வாடா கண்ணு.உன்னை கூப்பிட்டு போவதற்கு நான் தான் வந்திருக்கேன் என்க,அப்படிங்களா மாமா என்றவளோ முன் கதவை திறந்து உட்கார்ந்தவள்,நம்ம வீட்ல எல்லாரும் எங்க போயிருக்காங்க??
மருமகளை பார்த்து சிரித்தவர் அதுலாம் ஒன்னும் இல்லை கண்ணு.
நான் தான் இந்த வழியாக போறேனு உங்க அப்பன்கிட்ட சொன்னேன்.சரி மாமா உன் மருமகளையும் அப்படியே கூப்பிட்டு வந்துருனு சொன்னான்.
ஏன் டா,மாமா உன்னை கூப்பிட வரக் கூடாதா?
அய்யோ மாமா…அப்படிலாம் ஒன்னும் இல்லை.அப்பா அம்மா இருவரோடு வெளியில் போனதை விட,உங்க கூடையும் அத்தை கூட தானே மாமா அதிகமா நான் ஊர் சுத்தியிருக்கிறேனென்ற மதியோ செல்லமாக தனது மாமாவை முறைத்துக் கொண்டு கேட்க..
“ஹா ஹா என்று சிரித்தவர்,காரை திருப்பி வீட்டை நோக்கி சென்றார்”
“என்னவாக இருக்குமென மதியும் யோசனையாக வந்தாள்”
வாசனும் பொதுவாக பேசிக்கொண்டே தங்களது வீட்டிற்கு வந்து சேர,காரணம் இல்லாமல் மாமா கூப்பிட வர மாட்டார் என்னும் உண்மை புரிந்த மதியோ எதுவும் கேட்காமல் காரிலிருந்து கீழே இறங்கியவள் தனது தாய் பிறந்த வீட்டிற்குள் போக,ஹாலில் உட்கார்ந்திருந்த சீதாவோ யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“எதுவும் சொல்லாமல் போய் அவர் எதிரில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்தவள் கையை மட்டும் அவர் முன்பு ஆட்டிக்காட்ட,ஒரு நிமிஷம் டா என்று அவரும் சைகையில் சொன்னார்”
உள்ளே வந்த வாசன்,மதி கண்ணு என்றவாறு சோபாவில் உட்கார்ந்தவர் மலருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது மா என்க,என்ன மாமா சொல்றீங்களென மதி அதிரும் போது அவளுக்கு கண்கள் கலங்கியது.
“ஆமா கண்ணு”
என்ன நடந்துச்சுன்னு தெரியலை.விஷயத்தை கேள்விப்பட்டதும் காலையிலேயே எல்லாரும் பெங்களூருக்கு போயிட்டாங்க.அவங்க வர வரைக்கும் நீ நம்ப வீட்டில் இரு டா.
அய்யோ மாமா…!!
என் தங்கச்சிக்கு என்ன ஆச்சென்று தெரியாமல் என்னால் இங்கு இருக்க முடியாதென்று அழுதவள்,தனது போனை எடுத்து சீவகனுக்கு கால் பண்ணினாள்.
அந்த பக்கம் அட்டென் பண்ணியவர் சொல்லு டா என்க,அப்பாஆஆ மலருக்கு என்னாச்சு??
ஏன் எனக்கு சொல்லவில்லையென்று அழ,அடேய் மதி கண்ணு ஒன்னும் இல்லை டா.கொஞ்சம் அதிகமான அடி தான்.நீ அழாத கண்ணுயென அண்ணன் மகளுக்கு அவர் ஆறுதல் சொல்ல,நீங்கள் பொய் சொல்றீங்க பா.
நான் நம்ப மாட்டேன் நீங்கள் வீடியோ கால் பண்ணி மலரை காட்டுங்களென்று மதி அழ,சரி கண்ணு.
டாக்டர் வந்துருக்காங்க செக்கப் முடிந்ததும் நான் பண்ணுறேன்.
எல்லாரும் கிளம்பிட்டாங்க டா.நைட் வந்துடுவாங்க என்றவாறு அழைப்பை துண்டித்தார்.
சொல்வாளா…??

Last edited: