• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
சொல்லடி 27


டேய் அப்போ மலருக்கு தாண்டா என்று கதிர் கண்கலங்க,ப்ச் தங்கச்சிக்கு ஒன்னும் இல்லைடா வாடா என்று நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டு இன்னொரு கதவை திறந்து உள்ளே போக,அங்கே உடலில் முக்கா பகுதியில் கட்டு போடப்பட்டு,பலவித ஒயர்கள் மிஷினில் இணைக்கப்பட்டு,வேரறுந்த கொடி போல,அக்கா மகள் படுத்திருப்பதை பார்த்த கதிர்,இந்த நிலையில் அக்கா பார்த்தால் என்ன ஆவாங்கனு தெரியலையேடா என்றபடி கதற,தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாதுடா.

“வாடா முதலில் அக்காக்கு விஷயத்தை சொல்லலாம் என்ற பிரசாந்த்,அவனுக்குள் இருக்கும் கவலையை மறைத்துக் கொண்டு நண்பனை தேற்றி வெளியே அழைத்து வந்தான்”

சத்தியமா என்னால் சொல்ல முடியாதுடா. அவங்க ரெண்டு பேருக்கும் மலர் தாண்டா உசுரு.நாலு வருஷம் முன்பு தாண்டா அக்கா குடும்பத்தை அந்த கடவுளும் கண்ணுல காமிச்சாரு.

“ஒருவேளை அவங்க சந்தோஷமா இருப்பதை பார்த்து என் கண்ணே பட்டுடுச்சா டா என்றவாறு நண்பனின் தோளில் சாய்ந்து கதிர் அழுக,அடிச்சு பல்லை ஒடச்சிடுவேன்”

“வாயை மூடுடா”

“நானே போன் பண்ணி சொல்றேன் என்றவனோ தனது ஃபோனிலிருந்து கண்ணகியின் நம்பருக்கு கால் பண்ணினான்”

பெங்களூர் தாண்டி வந்து கொண்டிருந்தவர்களுக்கு கால் வரும் சத்தம் கேட்க,மலரு என்றவாறு கையிலிருந்த போனை பார்க்க அதில் தம்பியின் நண்பன் பிரசாந்தின் நண்பர் வர,உடனே அட்டென் பண்ணியவர் மலர் பற்றி எதாவது தெரிந்ததாடா என்று அழுக, அக்கா பதறாதீங்க,இப்ப எங்க இருக்கீங்க அக்கா?

பெங்களூர் ரீச்சாகிட்டோம்டா. கூர்க் வர வழியில் தான் வந்துட்டு இருக்கோம் என்கவும், அப்படியாக்கா.மாமா கிட்ட போனை குடுங்க என்று பிரசாந்த் சொல்ல, பரவால்லைடா.எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடா என்றவாறு கண்ணகி பதறினார்..

“மலரும் கூட இருந்த இரண்டு பேரும் கிடைச்சிட்டாங்கக்கா. சின்னதா ஒரு ஆக்சிடென்ட். பில்ரோத் ஹாஸ்பிடலில் இருக்கிறோம்.பயப்பட ஒன்னும் இல்லைக்கா. அங்க வந்துடுங்கள் என்றவாறு அழைப்பை துண்டித்தான்”

என்னங்க நம்ம மலரு கயல் மீரா இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சுங்க என்று கண்ணகி சொல்லவும்,அப்படியா என்ற சீவகன் சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்த, அதில் தூங்கிக் கொண்டிருந்த நால்வரும் என்னாச்சு என்று பதறினர்.

நம்ப பிள்ளைங்க இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சாம். ஏதோ சின்னதா ஆக்சிடென்ட்னு இப்பதான் கதிருடைய பிரண்டு போன் பண்ணி சொன்னான்.

நேராக பில்ரோத் ஹாஸ்பிடலுக்கு போங்களென கண்ணகி சொல்ல,சீவகன் நீ வந்து பின்னாடி உட்காரு.நான் கார் ஓட்டுறேன் என்றவாறு கதவை திறந்து கீழே இறங்கி வந்த மீராவின் அப்பா ராஜன்,சீவகனை பின்னாடி உக்கார அனுப்பிவிட்டு அவர் டிரைவிங் பண்ணினார்.

“மேப் பார்த்து வழி சொல்லவும்,சில மணி நேரத்தில் அவர்களும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்களுக்காக கதிரும் பிரசாந்த்தும் கீழே காத்திருந்தனர்”

பின்னர் அவர்களோடு மேலே வந்து பிள்ளைகளை பார்த்த மூன்று பேரின் பெற்றோர்களும் கத்தி கதறி அழுக,நர்ஸ் வந்து சத்தம் போட்ட பிறகே அவர்கள் வெளியே வந்தார்கள்.

எப்படி இது ஆச்சென்று ஏதாவது தெரிந்ததா என்று கேட்க,அவர்கள் கண் திறந்து சொன்னால் தான் தெரியும் என்றானுங்கள்.

“மகளைப் பார்த்து மயங்கி விழுந்த கண்ணகிக்கு பக்கத்து பெட்டில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது”

நேரமும் கடந்து செல்ல விடியலும் ஆரம்பமானது. டாக்டர் கொடுத்த 8 மணி நேரமும் கடந்து செல்ல, மூடியிருந்த மலரின் கண்கள் லேசாக அங்கே இங்கே அசைவதை கவனித்த நர்ஸ்,வேகமாக போய் டாக்டர் பத்ரிநாத்திடம் சொல்ல அவரும் வந்து பேஷண்டை செக் பண்ணியவர் அவர்களுக்கு கான்ஷியஸ் வந்துருச்சு.

ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண விடாம யாராவது அவங்களுக்கு பேச்சு கொடுங்கள் என்கவும், கண்ணுகுட்டி,மலரு என்று தனக்குள் இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு சீவகன் கூப்பிட,தனது தந்தையின் குரலை கேட்டவளோ அப்பா என்று கையை தூக்க முயற்சி பண்ண அவளாள் முடியவில்லை.

“மகளின் செயலை பார்த்தவர் நான் தான்டா. இதோ பக்கத்தில் தான்டா இருக்கேன்”

அப்பா கயலும் மீராவும் என்று அவள் அழுக,அவுங்களுக்கும் ஒன்னும் இல்லை சாமி. பக்கத்துல தான் இருக்கிறாங்க.மூணு பேரும் நல்லாருக்கிறீங்க போதுமா என்று தைரியமாக சீவகன் பேச,அப்படிங்களாப்பா என்கும் போது காயப்பட்ட உதடுகளின் மேல் லேசாக சிரிப்பு வந்தது.

எங்கப்பா, அம்மாவை காணும்?

இந்த நிலைமையில் என்ன பார்த்தாங்க உங்க டார்லிங் ரொம்ப அழுவாங்களே என்று சிரிக்க,உன் அம்மா தைரியமாக தான் டா இருக்கிறாள் என்பவரின கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

“மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது”

கயல் மீரா இருவரும் தோழியை பார்க்க அடம் பிடிக்க பின்னர் வீல்சேரில் உட்கார வைத்து கொண்டு வந்து காட்டினர்.

மகனோ இரண்டு நாட்களா வராததை பார்த்த பானுமதி வெளியூருக்கு போனால் சொல்லிட்டு போவானே, என்ன ஆச்சென்று யோசனையோடு இருந்தவர்,பின்னர் கதிருக்கு கால் பண்ணினார்.

அப்போதுதான் மலருக்கா மெடிசன் வாங்கிக் கொண்டு மேலே ஏறி வந்து கதிருக்கு கால் வரும் சத்தம் கேட்க,போனை எடுத்து பார்க்கவும் தனது அம்மா என்று தெரிந்ததால் என்ன சொல்லுவது என்று ஒரு நொடி யோசித்தவன், பின்னர் அட்டென்ட் பண்ணி அம்மா என்க..

தம்பி.. எங்கே ரெண்டு நாளா வரல??

ஆமாம்மா.

ஒரு கேஸ் விஷயமாக வந்திருக்கிறேன் ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி சிறிது நேரம் தாயிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் ரூமில் இருக்கும் தனது அக்காவிடம் வந்து விஷயத்தை சொல்ல, நல்லவேளை சொல்லலை. அம்மாவும் நம்மள நினைச்சு ரொம்ப வருத்தப்படுவார்கள் என்றார்.

அப்பொழுது சீவன் போனுக்கு கால் வரவும் மகளுக்கு ஜூஸை பிழிந்து கொண்டிருந்தவர் டம்ளரில் ஊற்றி கண்ணகியிடம் கொடுக்க சொல்லி விட்டு, பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்துப் பார்க்க அவரது அண்ணனாக இருக்கவும் அட்டென்ட் பண்ணியவர் சொல்லு ணா.

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்டா.ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக தான் போன் பண்ணுனேன்.

சொல்லு ணா என்ன விஷயமென சீவகன் கேட்க, நம்ம மதியை கதிருக்கு பொண்ணு கேட்டுருக்காங்கடா என்கவும்,அப்படியா என்று அதிர்ந்தவர் என்ன முடிவு பண்ணிருக்கிங்க?

நல்ல முடிவு தான்டா. தங்கமான மருமகன் கிடைக்கும் போது எதுக்கு கை விடணும்னு கல்யாண தேதியை முடிவு பண்ணியாச்சு.வர பிப்ரவரி ஏழாம் தேதி கல்யாணத்திற்கு தேதி குறிச்சாச்சி.

முறைப்படி அவங்க பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிருக்காங்க, அன்றைக்கு நிச்சயதார்த்தத்தை வைக்கலாம்னு அப்பாவும் சொல்றாங்க.நீ என்ன சொல்ற?

கண்ணகியிடமும் மலர்கிட்டயும் விஷயத்தை சொல்லணும்,போனை குடு என்க,அது வந்து ணா என்று சீவகன் தயங்கியவர் பின்னர் நடந்த விஷயத்தை சொல்ல,என்னடா சொல்ற என்று அதிர்ந்து போனவர்,அறிவுகெட்டவனே ஒரு வார்த்தை சொல்றதில்லையா?

உன் அண்ணன் இன்னும் உயிரோடு தானே இருக்கேன்,இல்லை செத்தா போயிட்டேன்?

நேரில் வந்து உன்னை பேசிக்கிறேன் என்று சொல்லி ஃபோனை கட் பண்ணியவர் வீட்டில் இருப்பவர்களிடம் விஷயத்தை சொல்ல, அய்யோயென பதறி அடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

“நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மகனிடம் எதுவும் விசாரிக்காத வாசன் காலையில் எதாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்று மனைவியிடம் சொல்ல அவரும் சரிங்க என்றார்”

எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போய் படுத்தவனுக்கு தூக்கமே வரவில்லை.

எப்படி தான் அத்தையின் மனதை மாற்றுவது என்று வெகு நேரம் யோசித்த வேந்தனோ பின்னரே தூங்கினான்.

வழக்கம் போல விழிப்பு வர கண்கள் மட்டும் தூக்கமின்மையால் எரிந்தது.பின்னர் எழுந்து போய் குளித்தவன் தாத்தாவிடம் பேசினால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்குமென்று எண்ணியவாறு தயாராகி வெளியே வந்தவன்,பெரிய வீட்டுக்கு போயிட்டு வரேன் என்றவனோ அவர்கள் பதிலை கூட எதிர்பார்க்காமல் பக்கத்து தெருவிலிருக்கும் அத்தை வீட்டிற்கு சென்றான்.

இரும்பு கதவை திறந்து வந்தவனுக்கு அவர்களெல்லாம் அழுது கொண்டே காரில் ஏறுவது தெரிந்து,என்னாச்சு அப்புச்சி என்றவாறு வேந்தன் ஓடி வர, சின்னவனே என்ற வள்ளி அவனை கட்டிப்பிடித்து அழ, ஐயோ அம்முச்சி என்ன ஆச்சுன்னு சொல்லுங்க?

எதுக்கு இப்படி அழுகிறீர்கள்?

யாருக்கு என்ன ஆச்சு என்று அவனும் பதட்டமாக கேட்க,உன் சின்னமாமன் மகள் காரில் அடிபட்டுட்டாளாம் கண்ணு. ஹாஸ்பிடல்ல இருக்கிறாளாம்,அதான் எல்லாரும் பெங்களூருக்கு கிளம்பிட்டோமென்று அழுது கொண்டே சொல்லவும், என்னாஆஆ என்னோட விழிக்கா என்று அவன் அதிர்வதை மற்றவர்கள் இருந்த பதற்றத்தில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மதி அங்கு வீட்ல இருக்கட்டும்.நாளைக்கு பிராக்டிகல் எக்ஸாம் இல்லையா டூட்டி போட்டுருக்காங்க.நீ மதியை கொண்டு போய் சீதா கிட்ட விட்டுட்டு என்று கேசவன் சொல்ல,மாமா,நானும் உங்களோடு வரென்றான்.

சரி வா கண்ணு என்கவும் தனது போனை எடுத்து தந்தைக்கு விஷயத்தை சொல்ல,அவர்களும் அதிர்ந்து போனார்கள்.

“அங்கு என்ன சூழ்நிலை என்னனு பார்த்துட்டு நான் போன் பண்றேன் பா.பிறகு நீங்க வாங்கப்பா.நான் மாமா கூட போறேன் என்கும் மகனின் மனநிலையை புரிந்து கொண்டவர் சரி கண்ணு,பார்த்து போங்களென்றவாறு அழைப்பை துண்டித்தார்”

“பின்னர் கோயம்புத்தூர் ஏர்போர்டிற்கு வந்தவர்கள் பிளைட்டில் ஏறி பெங்களூருக்கு வந்து,அங்கிருந்து வாடகை டாக்ஸியில் ஏறி ஹாஸ்பிடலை நோக்கி வந்தார்கள்”

“வேந்தனோ உள்ளுக்குள் இருக்கும் வேதனையை எப்படி வெளியே சொல்லுவது என்று தெரியாமல்,தூண்டிலிட்ட புழுவை போல துடித்துக் கொண்டிருந்தான்”

ஐயோ விழி…இத்தனை மாதமாக என்னோட சுயநலத்துக்காக உன்னை வேதனைப் படுத்திட்டேன் டி.என்னை மன்னிச்சிடு டி என்று மனதிற்குள்ளே தன்னவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்தான்.

“சில மணி நேர பயணத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்”

சீவகனுக்கு கால் பண்ணி விசாரிக்க ஐந்தாவது ப்ளோருக்கு வருமாறு சொன்னார்.லிப்டில் ஏறி மேலே வர,கதிரும் சீவகனும் அங்கே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

வேகமாக வந்த கேசவன் தனது தம்பியை பார்த்து முறைக்க,சூழ்நிலை அப்படி ணா அதனாலதான் சொல்ல முடியலை என்கவும்,என்னடா பொல்லாத சூழ்நிலை என்று கோபப்பட்டவர் பின்னர் ஹாஸ்பிடல் என்பதை உணர்ந்து,வீட்டில் போய் உனக்கு இருக்கு.

ஏன் இத்தனை பேரும் உயிரோட தான் இருக்கிறோம்னு உனக்கு கண்ணு தெரியலையா டா??

பெரிய மகனின் கோவத்தை பார்த்த வள்ளியம்மை,ஐயா கேசவா இது கோபப்படுவதற்கான நேரமில்லை.முதலில் பேத்தியை பார்க்கலாமென அழுது கொண்டே சொல்ல,தம்பியை முறைத்து விட்டு கதவை திறந்து உள்ளே போக,அங்கே மலருக்கு கண்ணகி ஏதோ சாப்பிட ஊட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“தன்னவளின் கோலத்தை பார்த்த வேந்தனோ இடிந்து போய் நிற்க,மற்றவர்களோ மலரு கண்ணு என்றவாறு அவளின் அருகில் போனவர்கள்,எப்படி டா இருக்கயென்று கண்ணீரோடு விசாரிக்க,அவர்களை அடையாளம் தெரியாமல் அந்நிய பார்வையில் பார்த்தவள்,யாரு மா இவங்களென கண்ணகியிடம் கேட்க,அதைக் கேட்டவர்களோடு வேந்தனும் அதிர்ந்து போனான்…!!


சொல்வாளா…??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top