• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
கூர்க்:

அது காட்டுப்பாதை என்பதால் அவ்வளவாக வாகனங்கள் தொடர்ந்து வருவதில்லை.அந்த நேரம் வேகமாக வந்து கொண்டிருந்த கண்டைனர் வளைவில் விழுந்து கிடக்கும் வி.கே வின் மேல் ஏறிச் செல்ல,உடல் நசுங்கி அடையாளம் தெரியாமல் அதே இறந்து போனான்.

“அந்த கண்டைனரில் இருந்த டிரைவரோ விபத்திற்குள்ளான காரை பார்த்துவிட்டு வண்டியை உடனே நிறுத்தியவர்,ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வர வைத்தார்”

அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.பின்னர் கார் கதவை உடைத்து அதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.

அப்போதுதான் தற்செயலாக லாரி டிரைவர் திரும்பி பார்க்க,சற்று தூரத்தில் எதுவோ நசுங்கிக் கிடப்பதை பார்த்து யோசனையோடு வந்தவன் அது ஒரு மனித உடல் என்பது தெரிந்து அரண்டு போய் லாரியில் ஏறி, வேகமாக அங்கிருந்து கிளம்பி சென்றான்.

“அடுத்தடுத்து வாகனங்கள் அந்த வழியாக வர,இரவு நேரம் என்பதால் விகே.வின் எலும்புகள் கூட மிஞ்ச வில்லை”

காரில் வந்து கொண்டிருந்த பிரசாந்துக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க,பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் கூர்க்கில் இருக்கும் நண்பனின் நம்பராக இருக்கவும்,அட்டென்ட் பண்ணியவன் சொல்லு டா என்க,

டேய் உடனே பில்ரோத் ஹாஸ்பிடலுக்கு வா டா.நீ அனுப்புன போட்டோவில் இருக்கிற மூன்று பெண்களை அங்கு தான் ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்ல அட்மிட் பண்ணிருக்காங்க டா என்கவும்,அப்படியா என்றவன் இதோ வருகிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்தவன்,மச்சி,நம்ப மலர் இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சி டா.

“எதோ கார் ஆக்சிடென்ட்ல மூணு பொண்ணுங்களையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்”

“அவங்கள பற்றி தெரிந்தவர்கள் தகவல் கொடுக்கணும்னு போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்லும்போது தான்,நான் அனுப்புன போட்டோவ பாத்துட்டு ரஞ்சித் கால் பண்ணிருக்கான் டா”

“இதை கேட்டவன் அப்படியா டா,பெருசா ஒன்னும் இல்லையே என்று கதிர் பதற அப்படி எல்லாம் இருக்காது டா.இல்லைனா சொல்லிருப்பானே,நீ பயப்படாதே நம்ம மலருக்கு ஒன்னும் ஆகாது என்று நண்பனுக்கு ஆறுதல் சொன்னான்”

மூன்று மணி நேரத்தில் அங்கிருந்த பில்ரோத் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தவர்கள்,காரை பார்க்கிங்கள் நிறுத்திவிட்டு வேகமாக ரிசப்ஷனுக்கு வந்து,விபத்தில் அட்மிட் பண்ணிருக்கும் பெண்களுடைய உறவினர்கள் என்று சொல்ல,அவர்களோ ஐ சி யு.வில் இருப்பதாக சொன்னார்கள்.

அதைக் கேட்ட கதிர் என்னடா ஐசியு.ல இருக்கிறாங்கன்னு சொல்றாங்க?
பெருசா எதாவது இருக்குமா டா என்று கலங்க,டேய் அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காதுடா.கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்று நண்பனை தேற்றிக்கொண்டு லிப்டில் ஏறி ஐந்தாவது மாடிக்கு வந்தான்.

“வலது பக்கம் இருக்கும் ஐசியு வார்டிற்கு வந்தவர்கள் அங்கிருந்த கதவைத் திறந்து உள்ளே போக,இரண்டு நர்ஸ்கள் இருந்தார்கள்”

மேடம் என்கவும்,அதில் திரும்பி பார்த்தவளுங்கள்,யாரு சார் நீங்க?எதுக்கு இங்கெல்லாம் வந்தீங்க என்கவும்,மூன்று பெண்களை ஆக்சிடென்ட் கேஸில் அட்மிட் பண்ணிருக்கிறார்களே அவங்களுடைய ரிலேடிவ் என்று பிரசாந்த் சொல்ல,அவர்கள் இருவரும் நம்பாமல் பார்த்தனர்.

நாங்க ரெண்டு பேரும் போலீஸ் என்ற பிரசாந்த்,தனது ஐடி கார்டை எடுத்துக்காட்டு ஓகே சார்.யாரையும் நம்ப முடியாதே அதான்.யாராவது பேஷண்டோட ரிலேட்டிவ்ஸ் வந்தால் டாக்டரை பார்க்க சொல்லிருக்காங்க.

இதே ப்ளோரில் ரைட் சைடில் நாலாவது ரூம் தான் என்க,தேங்க்யூ சிஸ்டர் என்றவாறு நண்பனோடு வந்த பிரசாந்த் அதேபோல் அங்கே டாக்டர் பத்ரிநாத் என்ற நேம் போர்ட் இருக்கும் ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே போக,அங்கிருந்து டாக்டர் இருவரையும் யோசனையோடு பார்க்க,அவர்களிடம் தாங்கள் யார் என்று சொல்லவும் உட்காருங்கள் என்றார்.

பேஷண்டுக்கு நீங்க எப்படி வேண்டும்??

“நான் மலருடைய தாய்மாமன்.மற்ற இரண்டு பேரும் என்னுடைய சிஸ்டர்ஸ் போல,என் அக்கா பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்ட்”

“ஓகே,ஒரு பொண்ணு முன்னாடி உக்கார்ந்திருந்திருக்காங்க போல,அவங்களுக்கு மட்டும் பயங்கரமாக அடிபட்டிருக்கு”

பின்னாடி இருக்கிறவங்களுக்கும் நல்ல அடி,காயமா இருக்கே தவிர பெருசா பாதிப்பு இல்லை.ஆனா முன்னாடி இருக்கிறவங்கதான் கொஞ்சம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்கிறார்கள்.

அந்த பேஷண்ட்க்கு உடனே ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல் சோ நாங்க பண்ணிட்டோம்.மயக்கம் தெளிய எப்படியும் 8 ஹவர்ஸ் ஆகும்.
அதுக்கப்புறம் மேல தான் மற்றதை சொல்ல முடியும்.

“டாக்டர் வேற ஒன்னும் இல்லையே என்று பிரசாந்த் கேட்க,எங்களால் முடிந்த பெஸ்ட் நாங்கள் கொடுத்திருக்கிறோம் டோன்ட் வொர்ரி”

இதை விட பெரிய பெரிய ஆபரேஷன் எல்லாம் நாங்க பண்ணிருக்கிறோம்.பயப்படாதீங்க நல்லவேளை அவங்களுக்கு பின் மண்டையில் அடி படவில்லை.

“வலது கை போன் உடைஞ்சிருக்கு, அதோட முன் பக்க வலது நெற்றியில் பெரிய காயம்.அதனால் தான் உடனே ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலை”

“காட் இஸ் கிரேட்”நல்லவேளை இவங்களை காப்பாத்திருக்காங்க.
இல்லைனா எதுவுமே நம்ம கையில இல்லை.காட்டுப்பாதையில் ஆக்சிடென்ட் நடந்திருக்கு.

எப்படி இந்த பொண்ணுங்க மட்டும் அந்த வழியாக வந்தாங்கன்னு தான் புரியலை.யாரோ லாரி டிரைவர் தான் இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க.

ஓகே டாக்டர்,இப்பொழுது நாங்கள் பார்க்கலாமா?

“பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாருங்கள்.அப்படியே அந்த பேஷண்டோட பெயர்களையும் கொஞ்சம் நோட் பண்ணி கொடுங்கள் என்கவும்,ஓகே டாக்டர் என்றவாறு வெளியே வந்தனர்”

கடவுளே யாருக்கு ரொம்ப அடினு தெரியலையே என்று கவலையோடு உள்ளே வந்தவர்கள் நர்ஸிடம் விஷயத்தை சொல்ல,ஓகே சார் என்றவள் உள்ளே இருக்கும் கதவை திறந்து விட,முதல் அறையில் கயலும் மீராவும் அங்கங்கே கட்டுகள் போடப்பட்டு மயக்க நிலையில் படுத்திருப்பது தெரிந்தது.

பொள்ளாச்சி-அரண்மனைவீடு:

ஸ்கூல் விட்டு ஓய்ந்து போய் வீட்டுக்கு வரும் பேத்தியை பார்த்த வள்ளியம்மை மதி கண்ணு டீ எடுத்துட்டு வரட்டுமா?

“ஹம் பாட்டி“

இஞ்சி கொஞ்சம் அதிகமா போட்டு கொடுங்க பாட்டி,தல ரொம்ப வலிக்குது. அதுக்குள்ள நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று மாடியில் இருக்கும் தனது அறைக்குள் போனவள்,வேக வேகமாக ஒரு குளியலை போட்டுவிட்டு டிரஸ்சை மாற்றிக் கொண்டு கீழே வந்து அங்கிருந்த பூஜை அறைக்கு முன்பு போய் கையை கூப்பி மனதிற்குள் அவள் வேண்டுதல்களை வழக்கம் போல் வைத்துவிட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

அப்பொழுது தோட்டத்தில் இருந்து வந்த பாரிஜாதம் மகளை பார்த்து விட்டு வந்துட்டியா மதி என்றவாறு வர, ஆமாங்கம்மா என்றவள்,நீங்க எப்ப மா வந்தீர்கள்??

நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்.டீ எடுத்துட்டு வரட்டுமா என்கவும்,பாட்டி கிட்ட சொன்னேன்மா என்கிற போது வள்ளியம்மையும் ஒரு கப்பில் டீயும் பேத்தி சாப்பிடுவதற்காக சூடாக 2 உளுந்த வடையும் எடுத்துட்டு வந்து நீட்ட,பாட்டி சூப்பர் சூப்பர் என்றவாறு அதை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.

“அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த பாரிஜாதம் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மதி என்க,சொல்லுங்கம்மா,என்னம்மா புதுசா பர்மிஷன் கேட்கிறீர்கள் என்று தாயைப் பார்த்து சிரித்தாள்”

ஒரு நல்ல இடத்துல சம்பந்தம் கூடி வந்திருக்கு.எல்லாரும் பேசி முடிச்சிட்டோம்.பிப்ரவரி 7ஆம் தேதி உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்கு டி.

அதைக் கேட்டவள் என்னம்மா சொல்றீங்க என்க,மகள் அதிர்வதை பார்த்த பாரிஜாதம் நீ கேட்ட போல இரண்டு வருஷம் தாண்டி மூணாவது வருஷமும் வந்துருச்சு.பொம்பள புள்ளைய காலகாலத்தோடு இன்னொருத்தன் கையில நல்லபடியா ஒப்படைக்க வேண்டியது பெத்தவங்களோட கடமை.

இப்பவே உனக்கு 27 வயசாயிடுச்சு மதி.உன்னை வீட்ல வச்சுக்கிட்டு எப்படி வீரா கல்யாணம் பண்ணுவான்?,அதை நல்லா யோசித்துப் பாரு?

“திடீரென்று இப்படி கல்யாணத்தை முடிவு பண்ணுவார்கள் என்பது தெரியாமல் உள்ளுக்குள் கதறியவள் தனது மனதில் இருக்கும் விஷயத்தை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்”

“கதிரை காதலிப்பதாக சொன்னால் தனது தாய் சம்மதிக்க மாட்டாள் என்று அவளே ஒரு முடிவு எடுத்துக் கொண்டு,எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்தவள் வேகமாக தனது ரூமிற்கு சென்று விட்டாள்”

போகும் மகளை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த பாரிஜாதம்,சிறிது நிமிடங்கள் சென்று மாடிக்கு வந்தவர்,மகளின் ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே வர,அங்கே மதியோ அழுது அழுது கண்கள் சிவந்து போய் படுத்திருப்பது தெரிந்தது.

தனது தாயைப் பார்த்தவள் பதறியடித்து எழுந்து வேறு பக்கம் திரும்பி கொண்டு கண்களை துடைக்க,மதிக்கண்ணு என்கவும்,எதுவும் சொல்லாமல் வந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் சொல்லுங்கள் மா,நீங்க ஆசைப்பட்ட போல நான் கல்யாணம் பண்ணிக்கணும் அதுதானே மா என்கும் போது அவளுக்கு அழுகையோடு தேம்பலும் வந்தது.

“கண்டிப்பாக…”

நான் ஆசைப்பட்ட போல கல்யாணம் நடக்கணும் தான்.ஆனா மாப்பிள்ளையை பற்றி நீ எதுவுமே கேட்கவே இல்லையே?அது தான் எனக்கு வருத்தமாக இருக்கு என்கவும்,அப்படி எந்த சீமையில் இல்லாத ராஜகுமாரனை பார்த்துருக்கீங்க?

எதற்குமா இவ்வளவு அவசர அவசரமாக கல்யாண தேதியை முடிவு பண்ணுனீங்க?

என் கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும்னு உங்களுக்கு எண்ணமே இல்லையா என்றவாறு திரும்பிய மகளின் முகத்தில் இருக்கும் கோபத்தை பார்த்து அமைதியாக சிரித்தவர்,மாப்பிள்ளை ரொம்ப தங்கமான பையன்.

கண்டிப்பாக உனக்கு அவரை பிடிக்கும் மதி.அவங்களே வீடு தேடி வந்து பொண்ணு கேக்குறாங்க எதுக்கு விடணும்,அதனால் தான் உடனே தேதியை குறிச்சாச்சு.

“ஓ…, உங்களோட ஃப்ரெண்ட் அந்த மேனாமினுக்கி இருக்கிறார்களே அவங்களோட இரண்டாவது பையனுக்கு பொண்ணு கேட்டுகிட்டு இருக்காங்களே அவனா மா என்று பல்லை கடித்துக் கொண்டு மதி கேட்க, சேச்சே ஜீவன் இல்லை டி.

நம்ம பானுமதி அம்மாவோட பையன் கதிர் தான் மாப்பிள்ளை என்கவும், அதைக் கேட்டவள் என்னம்மா சொல்றீங்க என்று சந்தோஷத்தில் கண்களை விரிக்க,ஆமா டி.

உன் மனசுல இருக்குறது இந்த அம்மாவுக்கு தெரியாம இருக்குமா சொல்லு?

பெத்தவளுக்கு தெரியாத சூலு இந்த உலகத்தில் இல்லை டி என்றவாறு மகளின் கண்ணீரை துடைத்து விட,அம்மா என்றவாறு தனது தாயை அணைத்துக் கொண்ட மதியோ கத்தி கதறினாள்.

சொல்வாளா…??
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top