Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
சொல்லடி 25
பொள்ளாச்சி அரண்மனை வீடு:
காலை டிபன் சாப்பிட்டுவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த பலராமன் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டு முற்றத்தில் இருந்து எட்டிப் பார்க்க,அங்கே பானுமதியின் அண்ணன் வேலன் அவர் மனைவி தேவகியும் வருவது தெரிந்தது.
“ஒருவித சங்கடத்தோடு வந்தவர்கள் படிகளில் கால் வைக்கும் போது ஒரு நொடி யோசித்து விட்டு,பின்னர் உள்ளே வந்தவர்கள் அங்கிருந்த பலராமனை பார்த்து வணக்கம் பா என்றார்”
“வா வேலா”
இன்றைக்கு தான் உனக்கு இந்த வீட்டு வாசப்படி ஏறணும்னு மனசு வந்துச்சா??
20 வருஷமா தங்கச்சி வீட்டுக்கு வர,ஒரு முறை கூட எட்டிப் பார்க்கலையே என்று வருத்தமாக பலராமன் சொல்ல,வேலன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார்.
“எதுக்கு வாசல்ல நிக்கிறீங்க உள்ள வாமா தேவகி என்றவாறு எழுந்து வீட்டிற்குள் போனவர் வள்ளி வள்ளி,யார் வந்திருக்கா பாரு என்று உள்ளே இருக்கும் மனைவிக்கு குரல் கொடுத்தார்”
கணவரின் குரல் கேட்டு இதோ வரேங்க என்றவாறு வந்த வள்ளியம்மை அங்கிருந்த வேலனையும் தேவகியையும் பார்த்தவர், வாங்கப்பா.
எப்படி இருக்கீங்க?
திலகாவும் தனஞ்செயனும் நல்லாருக்காங்களா??
தனஞ்செயன் பொண்டாட்டி மாசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்,எப்பப்பா டெலிவரி?
எல்லாரும் நல்லா இருக்காங்க பெரியம்மா.அடுத்த மாசம் 15 ஆம் தேதினு சொல்லிருக்காங்க.தம்பியும் அப்பதான் வரான்.
“திலகா புள்ளைகளை கூப்பிட்டு காலையில தான் அங்க வீட்டுக்கு வந்துருக்கு.ஒரு நல்ல காரியமா உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு தான் நானும் தேவகியும் வந்தோம்”
அதைக் கேட்ட பலராமன் தம்பதிகள் அப்படியா,சொல்லு வேலா,என்ன சங்கதி?
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருவித சங்கடத்தோடு வேலன் இருப்பதை அவர்களும் பார்த்தனர்.
அந்த நேரம் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்த கேசவன் அங்கிருந்த வேலனை பார்த்து வாங்க வாங்க,நல்லாருக்கீங்களா என்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“நீங்களும் வீட்ல இருக்கீங்களா ரொம்ப நல்லதா போச்சு.அப்படியே பாரிஜாதத்தையும் கூப்பிடுங்கள் என்க,என்ன விஷயமா இருக்கும் என்று பலராமனும் வள்ளியம்மையும் மனதிற்குள் யோசனையோடு இருந்தனர்”
மாடியில் இருந்த பாரிஜாதமும் கீழே இறங்கி வந்தவர் வாங்க வாங்க நல்லாருக்கீங்களா என்று விசாரிக்க நல்லா இருக்கோம்மா எல்லாரும் ஒரே இடத்தில் இருக்கீங்க அப்போ நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்.
“மருமகன் கதிருக்கு நம்ம பெரிய புள்ள வான்மதியை பொண்ணு கேட்டு வந்திருக்கிறோம்.கதிர் பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை.மருமகனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது”
“கை நிறைய நியாயமா சம்பாதிக்கிறான்”
இப்ப கூட ஐபிஎஸ் பரிச்சை எழுதியிருக்கிறான்.அடுத்த மாதம் ரிசல்ட் வருது.கண்டிப்பா என் மருமகன் உயர்ந்த பதவிக்கு போவான்.எங்க மனதில் இருக்கிறதை நாங்கள் சொல்லிட்டோம்.இப்ப நீங்க தான் பதில் சொல்லணும்.
இப்படி ஒரு விஷயம் வரும் என்று எதிர்பாக்காதவர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
“கதிருக்கு பொண்ணு கொடுக்க எனக்கு சம்மதம்.இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்து நாள் குறிச்சிடலாம் என்கும் பாரிஜாதத்தை மற்றவர்களோ ஆச்சரியமாக பார்த்தனர்”
நீங்க எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க என்று கேசவனிடம் கேட்க கதிருக்கு பொண்ணு கொடுக்க எங்களுக்கு என்ன கசக்கவா போகுது.நாங்க பார்த்து வளர்ந்த பையன். பெத்தவளுக்கு இல்லாத உரிமையா நமக்கு என்று கேசவன் சிரித்தார்.
“சத்தியமா கொஞ்சம் கூட இதை நாங்க எதிர்பார்க்கலை.எங்கே இந்த விஷயம் கேட்டு ஏதாச்சும் வாக்குவாதம் வருமோ என யோசனையோடு வந்தோம் என்று தேவகி சொல்ல,நாங்களும் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கலை”
அன்னைக்கு ஏதோ ஒரு திமிரில் நான் நடந்து கொண்டது இரண்டு உயிர் பலியாகிவிட்டது அந்த குற்ற உணர்வு இன்னும் என்னை விட்டுப் போகலை என்று பாரிஜாதம் கண்கலங்க,காலம் கடந்துடுச்சி.இனிமே அத பத்தி பேசி ஒன்னும் ஆகப் போறது கிடையாது.
பிள்ளைங்க கல்யாணத்தை நல்லபடியா முடிக்கலாமென்ற வேலன், அப்ப நீங்க ஜாதகம் பார்த்துட்டு சொல்றீங்களா நாங்க ஒரு நல்ல நாள்ல குடும்பத்தோட பொண்ணு கேட்டு வருகிறோம்??
எய்யா வேலா இன்னைக்கே நாள் நல்லாருக்கு.கையோடு நாம் ஜோசியர் கிட்ட பொருத்தம் பார்த்துடலாமே என்று வள்ளியம்மை சொல்ல,சரிங்க பெரியம்மா என்றதும்,பலராமனும் ஜோசியருக்கும் போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்ல,அரை மணி நேரத்தில் அவரும் வந்தார் .
வான்மதியின் ஜாதகத்தை எடுத்துட்டு வந்து வள்ளியம்மை கொடுக்க,கதிரின் பிறந்த நேரம்,பிறந்த தேதியை வேலன் சொல்ல,இருவருக்கும் பொருத்தம் பார்த்து விட்டு பத்து நிமிடங்கள் சென்று நிமிர்ந்தவர்,ரெண்டு பேருக்கும் பேஷா கல்யாணம் பண்ணி வைக்கலாம்.
வாழ்க்கையில் நல்லாருப்பாங்க.பொண்ணு அந்த வீட்டுக்கு போற நேரத்திற்கு முன்பு உயர்ந்த பதவிக்கு மாப்பிள்ளை போயிடுவார்.
இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும்.இல்லன்னாக்க இன்னும் ஒன்றரை வருஷம் தள்ளி போடுற போல பையனோடு ஜாதகத்துல இருக்குங்க என்றார்.
அப்போ அடுத்த முகூர்த்தத்தில் நாளை குறிச்சி விடலாமா வேலா என்று பலராமன் கேட்க,குறித்து விடலாம் பா என்கவும்,ஜோசியரும் பஞ்சாங்கத்தை பார்த்து பிப்ரவரி ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாள்.அந்த நாள் ஒத்து வருமா என்று பாரிஜாதத்திடம் கேட்க,யோசனை பண்ணி பார்த்தவர் அந்த நாளிலே வச்சுக்கலாம் என்றார்.
மதி எங்கே என்க,ஸ்கூல்ல 12 த் பிராக்டிகல் எக்ஸாம் நடக்குதுன்னு கொஞ்சம் சீக்கிரமாவே போயிட்டா என்ற பாரிஜாதமோ கிச்சனிற்கு சென்று வேகமாக எல்லாருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுக்க,அவர்களும் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசியிருந்து விட்டு பக்கத்து தெருவில் இருக்கும் தங்கை வீட்டுக்கு வந்த வேலன் விஷயத்தை சொல்ல,இவ்வளவு சுமூகமாக முடிந்ததை நினைத்து பானுமதிக்கும் சந்தோஷமாக இருந்தது.
கூர்க்-காட்டுபங்களா:
சொன்ன போலவே இரண்டு மணி நேரத்தில் காட்டு பங்களாவிற்கு வந்தவன்,அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் ராயர்,கந்தனை கூப்பிட்டு இதுவரை வேலை செய்தது போதும்,நாளைக்கு வாங்களென்றான்.
“முதலாளியே இப்படி சொல்வதால் பொருட்களை முதல் நாள் வைத்த இடத்திலே வைத்து விட்டு சைக்கிளில் ஏறி அங்கிருந்து சென்றனர்”
“கண்ணிலிருந்து அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன்,காரை மூவ் பண்ணி வீட்டு வாசலின் முன்பு வந்து நிறுத்தி விட்டு கதவை திறந்து உள்ளே போக,அவளுங்கள் மூவரும் அழுது அழுது ஓய்ந்து போயிருந்தனர்”
காலையில் பார்க்கும் போது எவ்வளவு ப்ரஷாக இருந்தீங்க ஏஞ்சல்ஸ்,இப்பொழுது பாருங்கள் எவ்வளவு டல்லாக இருக்கீங்களே என்றபடி வந்தவன்,ஒரு நிமிடம் மூவரையும் பார்த்து விட்டு,வலது பக்கத்தில் இருப்பவளை எட்டி இழுத்தவன் அவளின் இடுப்பில் கன் வைக்க,அய்யோ மலரை ஒன்றும் பண்ணிடாதே என்று தோழிகள் இருவரும் கத்தினாளுங்கள்.
“குட்”
“இப்போது என்ன பண்றீங்க என்றால்,எந்த தில்லுமுல்லும் பண்ணாமல் வெளியே நிற்கும் காரில் போய் உட்காரணும்.அதை விட்டு தப்பிக்க முயற்சி பண்ணுனீங்க இவள் உயிரோட இருக்கமாட்டாளென்று மலரின் நெற்றியில் கன் வைத்தான்”
இப்படி கையறு நிலையில் இருக்கிறோமே என்பதை நினைத்து மூவரும் அழ,டைம் வேஸ்ட் பண்ண எனக்கு பிடிக்காது.
குயிக் குயிக் என்க,வேறு வழியின்றி கயல்,மீரா இருவரும் வெளியே நிற்கும் காரில் ஏற,பின்னாடி வர இருவரையும் பார்ப்பவர்களுக்கு அணைத்த போல வருவாதாக தெரியும்.
ஆனால் அவளின் இடுப்பில் கன் இருப்பது தெரியாத போல மலரோடு வந்த வி.கே கதவை லாக் பண்ணி விட்டு அவளோடு முன் பக்கம் காரில் ஏறியவனோ,புயல் வேகத்தில் காரை ஓட்டலானான்.
“அப்புறம் ஏஞ்சல்ஸ் உங்களை 6 லட்சம் குடுத்து விலைக்கு வாங்கியாச்சு. இப்போது நாம் எங்கே போகிறோமென்றால் கப்பல்ல பயணம் பண்ணியவாறு சிட்னிக்கு போறோம்”
எதுக்கு உங்களை கூப்பிட்டு போறேன்னு தெரியுமா???
“ஓ காட்,உங்களுக்கு எப்படி தெரியும்”
நானே சொல்றேன்..அதாவது இந்த பணக்காரனுங்க இருக்கானுங்களே அவங்களுக்கு சொத்துக்கு வாரிசு வேண்டும்.ஆனால் அவள் மனைவியாக இருக்க கூடாது.
அதற்காக சரோகசி மூலமாக குழந்தை பெற்று வாரிசா அறிமுகம் பண்ணுவாங்க.இந்த முறை கோடி கணக்கு சொத்துக்கு வாரிசான பீட்டர் இண்டியன் பொண்ணு தான் வேண்டும்,அவள் மூலமாக தான் குழந்தை பெற்றுக் கொள்ளணும்னு முடிவு பண்ணி த பேமஸ் கைனகாலஜிஸ்ட் விக்ரம் குமாராகிய என் கிட்ட வந்தான்.
“ஏன்னா என்னோட சைடு பிஸ்னஸ் இதானே,ஆனால் எல்லாரையும் போல இல்லாமல் இந்த முறை இவன் மட்டும் சில கண்டிஷன் போட்டுட்டான்”
ஹைட்,வெயிட்,கலர் அது இதுனு…ஒரு லிஸ்ட் போட்டு அதே போல பொண்ணு தான் வேண்டும்னு ஒத்த காலில் நிற்கிறான்.சரி நமக்கு தொழில் தானே முக்கியமென்று,அதே போல உள்ள பெண்களை தேடும் போது தான் மூணு ஏஞ்சல்ஸும் பேஸ்புக்ல விதவிதமான போட்டோஸ் போட்டுருந்ததை என் ஆளு பார்த்துட்டு,உங்களில் உள்ள இந்த முட்டாளிடம் நல்லவன்,அப்பாவினு நாடகமாடி நண்பனாகி,பிறகு காதலனாகவும் நடித்து,என் கிட்ட ஒப்படைச்சிட்டு அவன் பணத்தோட போயாச்சு.
“இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு சொல்றேன்னா,ஏன் கடத்த பட்டிருக்கிறோம் என்பது தெரியாமல் நீங்கள் இருக்க கூடாதாச்சே அதனால் தான்”
“மூணு பேருக்கும் செம டிமாண்ட் “
சோ தங்க முட்டை போடப் போகும் வாத்துகளே இங்கு இருக்கிற எல்லாவற்றையும் மறந்து புது வாழ்க்கையை ஜாலியா தொடங்குங்க.
ஏதாவது கிரிமினலா யோசித்தீங்க,மூன்று பேர் வீட்டிலையும் நாளை காலையில் யாரும் உயிரோட இருக்க மாட்டார்கள் புரிஞ்சிதா என்றவாறு விசிலடித்தபடி காரை ஓட்டினான்.
“இதுவரை அவன் சொன்னதையெல்லாம் கேட்ட மூவரும் நோஓஓஓஓ என்று கத்தியவர்கள் பிளீஸ் எங்களை விட்டு விடு என்று அழுது கெஞ்ச,அவனோ அதற்கு வாய்ப்பில்லை என்றான்”
அப்போது தான் தன் காலில் ஏதோ உருளுவதை பார்த்த கயலுக்கு தப்பிக்க போவதற்கான நம்பிக்கை பிறக்கவும்,குனிந்து அந்த இரும்பு ராடை எடுத்தவளோ ஓங்கி விகே.வின் பின் மண்டையில் அடிக்க,திடீரென ஏற்பட்ட சம்பவத்தில் தடுமாறியவனுக்கு கார் கண்ட்ரோல் இல்லாமல் போக,ஏய் மலரு அவனை வேகமாக உதைத்து தள்ளுடி என்று இருவரும் கத்தினாளுங்கள்.
அதைக் கேட்டவளோ வீறுகொண்ட வேங்கை போல உதைத்து தள்ள,கார் கதவை உடைத்துக்கொண்டு வி.கே கீழே விழ,பேலன்ஸ் பண்ண முடியாத காரும் விபத்திற்குள்ளானது.
சொல்வாளா..??
Last edited: