Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
சொல்லடி 24
பொள்ளாச்சி-கதிர் வீடு:
அண்ணா..!!!
முதலில் பொண்ணு யாருனு உன் மருமகன் கிட்ட கேளு??
“மற்றதை பிறகு பார்க்கலாம் ணா”
தனது தங்கை சொன்னதை கேட்ட வேலவன்,சொல்லு கண்ணு,யார் அந்த மகராசி?
“அது வந்துங்க மாமா என்றவாறு அவர்கள் பக்கம் திரும்பியவன் சீவகன் அத்தானோட அண்ணன் பொண்ணு வான்மதி”
இதைக் கேட்ட பானுமதி,யாரு அந்த கேசவனுடைய பொண்ணாஆஆ?என்று அதிர்வோடு மகனை பார்க்க,ஆமாம் மா என்றான்.
எலேய் மாப்பிள்ளை என் தங்கச்சியோட தாலியை அறுத்தவள் மவாளா என்றவாறு மருமகனை ஓங்கி அறைந்தவர்,எப்படி டா உனக்கு அந்த குடும்பத்து பொண்ணு மேல ஆசை வந்தது?
“இன்னும் நடந்ததை நாங்க மறக்கலையே என்றவாறு தலையில் அடித்துக் கொண்டவர்,இடிந்து போய் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து விட்டார்”
“இப்படி எல்லாம் நீங்க வருத்தப் படக் கூடாது என்பதற்காக தான் என் மனசுல இருக்குறதை நான் சொல்லாம இருந்தேன் என்றவனோ,வேகமாக தனது அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டான்”
“நேரமும் கடந்து சென்றது”
“நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பானுமதி,அண்ணா அண்ணியை உடனே கிளம்பி வரச்சொல் நாளைக்கு முகூர்த்த நாள் தான்.நீயும் அண்ணியும் அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேளுங்கள்”
“குடுத்தா கௌரவமாக கல்யாணம் பண்ணி வைக்கும்.இல்லை எதாவது முரண்டு பண்ணினால்,உன் மருமகன் என்ன பண்ணுறானோ பண்ணட்டும்”
தாய் பண்ணியதுக்கு அந்த பொண்ணு என்ன ணா பண்ணும்?
இப்படித்தான் நடக்கும் என்று நமக்கு விதி இருக்க போல அதன்படி நடக்கட்டும்.
இவ்வளவு நேரம் தனது தங்கை சொன்னதையெல்லாம் கேட்ட வேலன் எம்மாடி பானு,இது சரி வருமா?
பேசி பாரு ணா.அவன் ஆசைப் பட்டுட்டானே ணா.கடைசி வரைக்கும் வாழப் போறது அவன் தானே.அவன் விருப்பம் போல இருக்கட்டும்னு நீதானே ணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன?
போ ணா ஆக வேண்டியதை பேசி முடிவு பண்ணு.
ஒரு நிமிடம் அங்கு மாலை போட்டிருக்கும் தனது மைத்துனரின் புகைப்படத்தை பார்த்த வேலன் உங்கள் சித்தம் இதுதான் போல மாமா அப்படியே நடக்கட்டும் என்றவர்,சரி பானு நான் போயிட்டு உன் அண்ணி கூட காலையில வந்துடறேன்.
“ நம்ப ராமசாமி பண்டாரத்தை வைத்து தானே திதி கொடுக்குற என்க,ஆமாம் ணா என்றார்”
“நேரமும் கடந்து செல்ல இரவு உணவை சமைத்து முடித்தவர் மகனின் ரூம் கதவை தட்ட சிறிது நொடியில் கதவை திறந்தவனை பார்த்தவர் வா கண்ணு சாப்பிடலாம்”
சரி மா என்றவன் வாஷ்பேஷனில் கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்தவன் மாமா போயாச்சா மா?
“ம்ம்”
நாளைக்கு வர சொல்லிருக்கேன் கண்ணு என்றவாறு மகனின் தட்டில் இட்லியை வைத்து அதன் மேல் சாம்பாரையும் ஓரமாக சட்னியையும் வைத்தவர்,ஏன் கண்ணு உன் மனசுல அந்த பொண்ணுகாரிய பற்றிய ஆசை இருக்கு,அந்த புள்ளை இதுக்கு சம்மதிக்குமா?
“தனது அம்மா சொன்னதை கேட்டு சிரித்தவன் அவளுக்கு நான் என்றால் ரொம்ப உசுர மா.ஆறு ஏழு வருஷமா என்னை தான் நினைச்சுட்டு இருக்காள்”
“நான் தான் அந்த குடும்பத்தால நம்ம வீட்ல நடந்தை நெனச்சு இனிமே என் பின்னாடி சுத்தாதன்னு,அந்த புள்ளைய ரெண்டு மூணு முறை அடித்துவிட்டேன்”
அய்யய்யோ என்ன கண்ணு இப்படி பண்ணிருக்க?,பொம்பள புள்ள மேல கைய வைக்கலாமா என்று கோபமாக பானுமதி கேட்க,அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலை மா.
அப்பாவையும் அத்தானையும் கொலை பண்ணியவளோட மகளை எப்படி என்னால ஏத்துக்க முடியும் சொல்லு?
“நானும் எவ்வளவோ பிடிவாதமா வேண்டவே வேண்டாம்னு என் மனசை கட்டுப்படுத்தியும்,என்னால முடியலை மா என்றவாறு கீழே குனிந்து கொண்டான்”
மகனின் மனதை உணர்ந்தவர்,நடந்தது நடந்து போச்சு கண்ணு.அவங்க ஆத்தாளும்,தாத்தனும் பண்ணியதற்கு அந்த புள்ளைக்காரி என்ன பண்ணுவா??
“ரொம்ப தங்கமான பொண்ணு.வெள்ளி செவ்வாயில் அவங்க பாட்டி கூட கோயிலுக்கு வரும் பார்த்திருக்கிறேன்”
“ஆனால் அவ பூஜை புனஸ்காரம்னு இருப்பா போலயே,உனக்கு சாமி கும்பிடவே பிடிக்காது என்ன பண்ண போறன்னு தெரியலையே என்று பானுமதி சிரிக்க,அதைக் கேட்டு கதிருக்கும் சிரிப்பு வந்துவிட்டது”
அம்மா…நான் உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன் உண்மையை மட்டும் சொல்லுங்க.அவளை நம்ம வீட்டு மருமகளா ஏற்க நீங்க மனசாரத்தானே சம்மதிக்கிறீர்கள்?
“மகனை பார்த்து சிரித்தவர் ஆமாம் கண்ணு.உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.நடந்து போனதிலிருந்து கடந்து நம்ப வந்துட்டோம்”
அப்போ இதுலாம் சின்ன புள்ள.அதுக்கெல்லாம் நடந்தது தெரியாது.யாரோ செய்ததற்கு அந்த புள்ளையை எதற்கு பழிவாங்கணும் சொல்லு?
நாம விரும்புறவங்களை விட நம்மள விரும்புறவங்களை கட்டிக்கிட்டா நம்ப வாழ்க்கை நல்லாருக்கும்னு காலம் காலமா சொல்லி காதுல வாங்குறோம் இல்லையா,உன்னை உசுரா நினைக்கிறானு சொல்ற,அப்ப நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதானே.
சந்தோஷமாக கட்டிட்டு வந்து குடும்பம் பண்ணு.ரெட்ட புள்ளைய பெத்து போடு,அம்மா சந்தோஷமா வளர்க்கிறேன் என்று சொல்லவும்,தேங்க்ஸ் மா என்றவாறு தனது தாயின் இடது கையை பிடித்து தனது நெஞ்சின் மேல் வைத்தவனின் கண்ணில் இருந்து இரண்டு துளி கண்ணீர் அந்த கையின் மேல் விழ, மகனின் கண்களை எட்டித் துடைத்தவர் கலங்காத கண்ணு.
மனசுல இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு அம்மா வருத்தப்படுவாள் என்று தானே இத்தனை வருஷம் இருந்திருக்கிற அப்படினா உன்னோட ஆசை எனக்கு முக்கியம் இல்லையா?
சீக்கிரம் இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் என்க,சரிமா என்று சந்தோஷமாக சாப்பிட்டு எழுந்தவன் நான் டூட்டிக்கு கிளம்புகிறேன் என்று ரூமிற்குள் சென்றவனோ சிறிது நிமிடத்தில் ரெடியாகி பைக் எடுத்துக்கொண்டு ஸ்டேஷனை நோக்கி சென்றான்.
இன்று ஒருவேளை என்பதால் தனக்காக கொஞ்சம் ரவா மட்டும் கிண்டி வைத்திருந்த பானுமதி,அதை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே அங்கே செல்ஃபில் இருக்கும் கணவர் போட்டோவை பார்த்தவர்,அந்த குடும்பத்தை சேர்ந்த பொண்ணு,நம்ம வீட்டுக்கு மருமகளா வருவதற்கு உங்களுக்கு சம்மதமாங்க என்கும் போது,வலது பக்கம் சுவற்றிலிருந்து பல்லி சத்தம் கேட்க,சரிங்க உங்களுக்கு சம்மதம்னு எனக்கு புரிஞ்சிருச்சு.
“இதை நல்லபடியா முடிக்கிறேன் என்றவரோ வீட்டை பூட்டிவிட்டு படுத்து விட்டார்”
சென்னை- மலர் வீடு:
“அதிர்ந்து போய் நிற்கும் சீவகனை பார்த்து மற்ற ஐந்து பேரும்,என்ன ஆச்சு என்று பதற,நம்ம புள்ளைங்க காட்டேஜ்க்கு போகவே இல்லையாம் என்கவும்,என்ன சொல்றீங்க என்று அவர்களும் அதிர்ந்து போனார்கள்”
கடவுளே நம்ம பிள்ளைகளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று மூன்று பேரின் தாய்மார்களும் அழ,அழாதீங்கம்மா உடனே கிளம்புங்க,நம்ம அங்க போகலாம் என்று சீவகன் சொல்ல,ஆமா அது தான் நல்லது என்றவர்கள் சீவகனின் காரில் ஏறி கூர்க் நோக்கி பயணமானார்கள்.
“காரில் அழுது கொண்டே வந்த கண்ணகிக்கு தனது தம்பியின் ஞாபகம் வர,உடனே தனது ஃபோனிலிருந்து கதிருக்கு கால் பண்ணினார்”
இரவு நேர ரோந்து பணியில் இருந்தவனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க,தன்னவளாய் இருக்குமோ என்று பரபரப்பாக எடுத்துப் பார்க்க,பெரிய அக்காவின் நம்பர் தெரியவும் அட்டென் பண்ணியவன் அக்கா,எப்படி இருக்க?அத்தான் நல்லா இருக்காங்களா?
“தனது தம்பியின் குரலைக் கேட்ட கண்ணகி கதிரு என்று சத்தமிட்டு அழுதார்”
திடீரென்று அக்காவின் அழுகுரலை கேட்ட கதிர், டிரைவரிடம் ஜீப்பை ஓரமாக நிறுத்த சொல்லியவன் அக்கா,என்ன ஆச்சு?
எதற்காக அழுகுற?
யாருக்கு என்ன ஆச்சு என்று இவனும் பதற,தம்பி நம்ப மலரை காணோம் டா என்றார்.என்னக்கா சொல்ற என்று இவன் இந்த பக்கம் அதிர்ந்து போக,மனைவி பேசுவதை காதில் வாங்கிய சீவகன்,காரை ஓரமாக நிறுத்திவிட்டு போனை என்கிட்ட கொடு என்று பின் சீட்டிலிருந்த மனைவியிடம் ஃபோனை வாங்கியவர் கதிரு என்க..
என்னாச்சுங்க அத்தான்??
“அக்கா என்னமோ சொல்லுது”
ஆமா கதிர் என்றவர் அவனிடம் விஷயத்தை சொல்ல,சரிங்க மாமா நான் உடனே கிளம்பி வரேன் என்று அழைப்பை துண்டித்தான்.
அண்ணே நேரடியாக கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு போங்கள் என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு,தனது ஃபோனிலிருந்து பெங்களூருக்கு பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணியவன் ஸ்டேஷனுக்கு கால் பண்ணி அங்கிருந்த ஏட்டு விடம் தனது டிரஸ் இருக்கும் பேகை எடுத்துட்டு வர சொன்னான்.
அதேபோல் 10 நிமிடத்தில் ஏட்டும் கதிரின் பேக்கை கொண்டு வந்து தர,பக்கத்தில் பெட்ரோல் பங்க் இருந்ததால் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்று டிரஸ்ஸை மாற்றிக் கொண்டு வந்தவன்,கோயம்புத்தூர் ஏர்போர்ட் நோக்கிச் சென்றான்.
அவனின் டென்ஷனை பார்த்த டிரைவர்,கதிர் தம்பி அதெல்லாம் எதுவும் ஆகாது டென்ஷன் ஆகாதீங்க
என்கவும்,அக்கா ரொம்ப அழுவுறாங்க ணா.
“ஒரே புள்ளை”
“வயசு பொண்ணுங்க மூணு பேரும் போயிருக்காங்க.நேத்து நைட்டு சென்ட்ரல் ஏறிருக்காங்க இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை என்றால் பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும் ணா என்று வருத்தமாக சொல்ல,அதெல்லாம் கண்டுபிடிச்சிடலாம் தம்பி”
“எத்தனையோ பொண்ணுங்களை இதுபோல சூழ்நிலையில் காப்பாத்திருக்கீங்க.உங்க வீட்டு பிள்ளைக்கு அப்படி எதுவும் ஆகாது என்று ஆறுதல் சொன்னார்”
“ஜீப்பில் வந்து கொண்டிருந்தவனுக்கு பெங்களூரில் இருக்கும் தனது போலீஸ் நண்பன் ஞாபகம் வர,உடனே அவனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னான்”
நீ வா,நான் பாத்துக்குறேன் என்றவன் அவர்கள் மூவரின் போட்டோவை அனுப்புமாறு கேட்க,அதேபோல் தனது அக்காவிடம் விஷயத்தை சொல்ல,சிறிது நிமிடத்தில் மூவரும் இருக்கும் போட்டோவை கண்ணகியும் தனது தம்பிக்கு அனுப்பி வைக்க,அவனும் அதை தனது நண்பனுக்கு அனுப்பினான்.
எங்கே போயிருப்பார்கள் என்று பலவித சிந்தனையோடு ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தவன் நீங்க பார்த்து போங்க ணா என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு ஏர்போர்ட் உள்ளே போக,அவனுக்கான பிளைட்டின் அறிவிப்பு வரவும் அதில் ஏறி பெங்களூருக்கு சென்றான்.
“மூன்று மணி நேரம் 50 நிமிடம் வானில் பறந்து வந்த இண்டிகா விமானம் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது”
“செக்கிங் முடித்துவிட்டு கதிர் வெளியே வர,அவனுக்காக நண்பன் பிரசாந்த்தும் காரோடு காத்திருக்க,நீண்ட மாதங்களுக்குப் பிறகு பார்த்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் கட்டி அணைத்து பரஸ்பரம் நலம் விசாரித்தவர்கள்,பின்னர் காரில் ஏறி கூர்க்கை நோக்கி புறப்பட்டார்கள்”
சொல்வாளா…??
Last edited: