• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
.
கூர்க்-காட்டு பங்களா:

“தான் எதிர்பார்த்த போல அவர்கள் மூவரின் முகத்தில் இருக்கும் பயத்தை கண்டவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது”

உங்களை கடத்திட்டு போறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயம் இல்லை.தேவையில்லாமல் துப்பாக்கிக்கு இறையாகாதீர்கள் என்றவன்,கமான் வாங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் என்றவாறு துப்பாக்கியை அவர்களை பார்த்து நீட்டியபடி கதவை திறந்து நிற்க,வேறு வழியின்றி மூவரும் வெளியே வந்தார்கள்.

“அங்கே டைனிங் ஹாலில் இருக்கும் அலங்கார சேரில் போய் உட்கார்ந்தவன், கமான் ஏஞ்சல்ஸ் வந்து உட்காருங்கள் கம் கம் என்று சொல்ல,பல்லை கடித்துக் கொண்டு அவன் சொன்னதை கேட்டபடியே இவளுங்களும் போய் உட்கார,அங்கு வந்த வேலையாளோ அவர்களுக்கு முன்பாக தட்டை வைத்து உணவை பரிமாறினான்”

“கடவுளே இதுல என்ன கலந்து இருக்கான்னு தெரியலையே???என்று உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்,அவனை பார்த்தவர்கள் இன்னைக்கு நாங்க சாப்பிட மாட்டோம்”

அப்படியா ஏஞ்சல்ஸ்?

“அதனால்தான் இப்படி ஸ்ட்ரக்சரை மெயின்டன் பண்றீங்களோ என்று வி.கே சிரிக்க,மூவருக்கும் அவன் மேல் அவ்வளவு வெறி வந்தது”

இங்கே இருந்து தப்பிக்கணும் அதற்கு புத்திசாலித்தனமாக யோசிக்கணும் என்பதை ஏற்கனவே பேசி முடிவெடுத்திருந்ததால் இன்று ஆடி கிருத்திகை நாங்கள் சாப்பிட மாட்டோம்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் காலண்டரில் பாருங்கள் என்று தைரியமாக மலரும் சொல்ல,அப்படியா என்றவனுக்கு அவனது அம்மா சொல்லும் அந்த ஆடி கிருத்திகை ஞாபகம் வந்தது

“பின்னர் அங்கிருந்த வேலையாளிடம் அண்ணா இன்னைக்கு இவங்க சொல்ற நாளா?என்க,ஆமாங்க தம்பி.அதனால்தான் காலையிலேயே நம்ம வீட்ல பூஜை பண்ணி சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்”

ஓகே,ப்ரூட் ஜூஸ் ஏதாவது குடிக்கிறீங்களா ஏஞ்சல்ஸ்?

“எங்களுக்கு ஒன்னும் வேண்டாம்.சாயந்திரம் பூஜை முடித்த பிறகு தான் நாங்கள் சாப்பிடுவோம் என்று கரராக சொல்லவும்,அப்படியா,அப்போ போங்க போய் விரதத்தை கண்டினியூ பண்ணுங்க”

இன்னும் ரெண்டு மணி நேரத்துல நம்ம இங்க இருந்து கிளம்பறோம்.அதற்குள் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்து உங்களை பாதுகாப்பாக நான் கூப்பிட்டு போறேன் என்றவாறு அவனுக்கான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வேலைக்காரனோடு அந்த வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றவன்,அங்கிருந்த காரில் ஏறி போவது ஜன்னல் வழியாக இவர்களுக்கு தெரிந்தது.

இங்க இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கா என்று சுற்றி பார்க்கும் போது,ஹலோ ஏஞ்சல்ஸ் தப்பிக்கிறதுக்கு ஏதாவது பிளான் பண்றீங்களா?

அந்த முட்டாள்தனத்தை மட்டும் பண்ணாதீங்க.வெளியில 5 டாபர்மேன் நிற்கிறது.அவர்கள் கையில் மாட்டினீங்க எலும்பு கூட மிஞ்சாது.

அதைவிட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்,கேமராவில் உங்களை நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன் என்ற குரல் கேட்டு அதிர்ந்து போனார்கள்…!!!

நம்ம தங்கி இருந்த ரூமிற்குள்ளும் கேமரா இருக்கானு ஃபர்ஸ்ட் செக் பண்ணலாம் என்றவளுங்கள் அவர்கள் இருந்த அறைக்குள் போய் சல்லடை போட்டு அலசாத குறையாக தேட,அங்கு கேமரா இருப்பது போல் ஏதும் தெரியவில்லை.

“காற்று வருவதற்கு ஜன்னல் இருக்கே தவிர ஜன்னலின் கண்ணாடி கதவுகளோ இரண்டடி இடைவெளியில் வெளிப்பக்கமாக புதைக்கப்பட்டிருப்பது தெரிந்து நொந்து போனாளுங்கள்”

“அப்போது யாரோ இருவர் கேட்டை திறந்து வருவதை கண்ணாடி வழியாக பார்த்து விட்டு,ஹெல்ப் ஹெல்ப் என்று மூவரும் கத்த,வெளியே இருப்பவனுங்களுக்கோ சுத்தமாக கேட்கவில்லை”

“பிறகு தான் உள்ளே இருக்கும் சூழல் வெளியே தெரியாத விதத்தில் கண்ணாடி வடிவமைக்கப் பட்டிருப்பதை புரிந்து கொண்டார்கள்”

“மீண்டும் ஹாலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த ஜன்னல் வழியாக கத்தி கூப்பிட்டும் எந்த பலனுமில்லாமல் போக,தங்களின் நிலையை நினைத்து அழுத மூவரும் முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை நினைத்து பார்த்தாரபார்த்தார்கள்.

தனது போனிற்கு வந்த கால் சத்தம் கேட்டு யாரென்று பார்த்து அட்டென்ட் பண்ணி காதில் வைத்தவள் ஹலோ ஜான் எங்கே இருக்க?

“இதைக் கேட்ட மலரும் கயலும் கோபமாக மீராவை பார்த்து மனதிற்குள் திட்டிக் கொண்டார்கள்”

“நாங்க இப்பதான் கிளம்பியிருக்கும் டா.ஹம் சென்ட்ரலிலிருந்து ஏறிட்டோமே என்று மீரா சொல்ல,அந்த பக்கம் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.அதைக் கேட்டவள் அப்படியா என்று சந்தோஷப்படுவதை பார்த்து இவர்களுக்கு யோசனையானது”

சரிடா சரிடா என்று போனை வைத்தவள் ஜான் கார் எடுத்துட்டு வராண்டி.நம்மை அரக்கோணத்தில் இறங்கிக்க சொல்றான்.அங்கிருந்து எல்லாரும் ஒன்னா போகலன்னு சொல்றான் டி

நாம் போவது அவனுக்கு எப்படி தெரிந்தது என்று கோபமாக கயல் கேட்க,நான் தாண்டி சொன்னேன் என்று வெட்கப்பட்டுக் கொண்டே மீரா சொல்லவும்,மீரா எங்களுக்கு என்னமோ ஆரம்பத்திலிருந்து சந்தேகமா இருக்கு.

அவன் நல்லவன் போலவே தெரியலை.

நாங்களும் கடந்த நாலு மாசமா சொல்லிட்டு இருக்கோம்.நீ கொஞ்சம் கூட எங்க வார்த்தையை காதிலே வாங்க மாட்டேங்கறியே,என்ன டி அர்த்தம் என்று மலர் திட்ட,ஏய் அவன் யாருமே இல்லாத அனாதை டி.

அவனை பார்த்தா தப்பானவன் போல தெரியல.எனக்கு நம்பிக்கை இருக்கு டி.எனக்காக வாங்க.நான் மட்டும் எப்படி உங்களை விட்டுட்டு கார்ல போகிறது என்க,பரவாயில்ல நீ போ நாங்க வரல என்றனர்.

தோழிகள் இருவரும் சொன்னதை கேட்ட மீராவோ ஒருவாறு கெஞ்சி சமாமதிக்க வைத்தவள்,தோழிகளோடு அரக்கோணம் ஜங்ஷனில் வந்து இறங்கியவள் வெளியே வர அங்கு ஜானும் காரில் காத்திருந்தான்.

பின்னர் மனமே இல்லாமல் அவன் காரில் ஏறி கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும் போது ஹாய் டியூட் சூடாக எதாவது குடிக்கலாமா என்று ஜான் கேட்க,இவர்களுக்கும் ஒரு காபி குடித்தால் தேவலாம் போல இருக்கவும், எங்கேயாவது கஃபே வந்தா நிறுத்துங்கள் என்றனர்.

அதெல்லாம் எதுக்கு? ?

உங்களுக்கு காபி பிடிக்கும்னு தெரிஞ்சு தான் நான் வீட்டில் இருந்தே எடுத்துட்டு வந்தேன் என்றவன்,காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி போய் டிக்கியை திறந்தவன்,அதிலிருந்த ஒரு பேகை எடுத்துட்டு வந்து மீராவிடம் நீட்ட,சிரித்தவாறு வாங்கி திறந்து பார்க்க,அதில் பிளாக்ஸ்கும் மூன்று பேப்பர் கப்பும் இருந்தது.

உனக்கு என்று மீரா கேட்க நான் இப்பதான் குடிச்சேன்.அந்த கடையில் காபி நல்லா இருந்துச்சா,சரின்னு உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன் என்று அன்பாக பேச,அதை நம்பிய மீராவோ மூன்று கப்பிலும் காபியை ஊற்றியவள் தோழிகளுக்கும் கொடுத்துவிட்டு அவளும் குடித்தாள்.

“குடித்தததும் பேப்பர் கப்பை தூக்கி சாலை ஓரம் எறிந்து விட்டு காரில் உட்கார்ந்த சிறிது நிமிடத்திலேயே கண்கள் சொக்கியவாறு மூவரும் மயங்கி விட்டார்கள்”

சென்னை:

“எவ்வளவு நேரம் கண்ணகி அப்படியே சோபாவில் உட்கார்ந்திருந்தார் என்று தெரியவில்லை”

காலிங் பெல் சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வந்தவருக்கு வீடு முழுவதும் இருட்டாக இருப்பது தெரிந்து,பதறியடித்து எழுந்தவர் அங்கிருந்த சுவிட்ச் தேடி லைட்டை ஆன் பண்ணி விட்டு கதவை திறக்க,அங்கே சீவகன் நின்று கொண்டிருந்தார்.

என்ன டி ஆச்சு வீடு இவ்வளவு இருட்டா இருக்கு?

உடம்பு ஏதும் சரியில்லையா என்று மனைவியின் நெற்றியை தொட்டுக்கொண்டே சீவகன் கேட்க,அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.சும்மா படுத்தேன் அப்படியே தூங்கி விட்டேன்..

அப்படியா என்று யோசனையோடு மனைவின் முகத்தை பார்க்க ஆமாம் என்க,இல்லையே வேற ஏதோ விஷயம் போல இருக்கே,என்ன பிரச்சினை என்கவும்,மடை திறந்த வெள்ளம் போல வேந்தன் வந்து பேசியதெல்லாம் கண்ணகியும் கொட்டி விட்டு கணவரின் தோளில் சாய்ந்து அழுதார்.

அதைக் கேட்ட சீவகன்,நான் ஒன்னு சொல்லுவேன் நீ தப்பா எடுத்துக்க மாட்டியே கண்ணகி?

ம்ம் என்னங்க என்று நிமிர்ந்து பார்க்க வேந்தன் நல்ல பையன்.மலருக்கு விருப்பம் இருந்தால் தாராளமாக பொண்ணு கொடுப்போமே,எதுக்கு நீ தேவை இல்லாததை போட்டு மனசை குழப்பிக்கிற?

இன்னொரு வார்த்தை இதை பற்றி பேசுனீங்க அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.எங்க அப்பாவையும் என் மாமாவையும் கொலை பண்ணிய அந்த குடும்பத்தில் ஒரு காலமும் என் பொண்ணை கொடுக்க மாட்டேன்.

“என்னை மீறி நீங்கள் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்கனாக்க எனக்கு கருமாதி தான் பண்ற போல இருக்கும் என்றவாறு அங்கே இருந்த ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்”

கண்ணகி சொல்லிவிட்டு போன விஷயத்தை கேட்டு அதிர்ந்து போய் நின்ற சீவகன்,கடவுள் என்ன நமது பொண்ணு வாழ்க்கையில் எழுதியிருக்கிறாரோ அது போலவே நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டு கதவை தட்டியவர்,உனக்கு விருப்பம் இல்லாத எதையுமே கண்டிப்பாக செய்ய மாட்டேன் டி.

“இனிமே இதை பற்றி நான் பேசமாட்டேன் என்க,அதன்பிறகு கதவை திறந்து வெளியே வந்தவர் இரவு டின்னர் தயாரிக்கப் போனார்”

சீவகனும் பிரஷாகிட்டு வந்தவர் மலர் போய் சேர்ந்துடுச்சா?இன்றைய நாள் எப்படி போச்சுன்னு ஏதாச்சும் போன் பண்ணுச்சா? ??

இதைக் கேட்ட கண்ணகி இதுவரைக்கும் எனக்கு ஒரு போன் கூட பண்ணவே இல்லைங்க.நான் நினைத்தேன் அப்பா பொண்ணு தானே நல்லா க்ளோஸ்.உங்ககிட்ட சொல்லிருப்பான்னு இருந்தேன் என்கவும்,என்னடி சொல்ற என்று பதறியவர்,தனது போனை எடுத்து மகளுக்கு கால் பண்ண,ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர எடுக்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் மலருக்கு கால் பண்ண எடுக்காததால் மற்ற இருவருக்கும் கால் பண்ணி பார்க்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்டு,யார் என்று போய் கண்ணகி கதவை திறக்க அங்கே மீரா-கயல் இருவரின் பெற்றோர்கள் பதட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

வாங்க வாங்க என்று சொல்லு,கண்ணகி,மலர்கிட்ட இருந்து எதாச்சும் கால் வந்துச்சா?

நாங்களும் காலையிலிருந்து மாத்தி மாத்தி மூணு பேருக்கும் போன் போடுறோம் எடுக்க மாட்டேங்கறாங்க.அதான் உன் கிட்ட கேட்டு போகலாம்னு வந்தோம்.

இல்லைங்கண்ணி,இப்பதான் அவங்க அப்பாவும் கால் பண்ணி பாத்துட்டு எடுக்கலைன்னு சொன்னாரு என்று பதட்டமானார்.

“அவங்க எந்த காட்டேஜில் ஸ்டே பண்றதா சொன்னாங்க?,அந்த அட்ரஸ் கொஞ்சம் சொல்லு கண்ணகி என்று சீவகன் கேட்க,இதோங்க என்றவர் மகள் புக் பண்ணியிருந்த காட்டேஜின் அட்ரஸை சொல்லவும் அதில் இருந்த நம்பருக்கு கால் பண்ணினார்”

இரண்டாவது ரிங்கிட் அட்டென் பண்ணியதும்,ஹலோ பியர்ஸ் காட்டேஜ்,நான் சென்னையில் இருந்து பேசுறேன்.எங்களது பிள்ளைகள் இருக்கும் ரூமிற்கு கால் கனெக்ட் பண்ண முடியுமா???

சாரி சார்..நீங்கள் சொன்ன பெயரில் ரூம் புக்காகியிருக்கு.ஆனால் இதுவரை அப்படி யாரும் வரவில்லை என்று அந்த பக்கம் ரிசப்ஷன்ல இருந்து சொல்லவும்,என்ன என்று அதிர்ந்து போன சீவகன் கையிலிருந்த செல்போன் கீழே விழுந்து சிதறியது..!!


சொல்வாளா..??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top