Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
சென்னை-மலர் வீடு:
அது வந்துங்க அத்தை என்றவன் எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியாமல் தயங்க,ஹம் சொல்லு வேந்தா,ஏதாவது பிரச்சனையா?அத்தை கிட்ட சொல்லுப்பா.
பிரச்சனை இல்லை. ஆனால்,ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி உங்ககிட்ட பேசியே ஆகணும்.இதைக் கேட்டு நீங்க எப்படி எடுத்துப்பீங்க என்றுதான் எனக்கு பலத்த யோசனையாக இருக்கு.
“எத்தனை பேர் எதிர்ல இருந்தாலும் என்னால அவங்க கிட்ட தைரியமாக பேச முடியும்,இப்ப உங்ககிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசறது எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்குங்கத்தை”
“அப்படி என்ன விஷயம் என்று கண்ணகியும் உள்ளுக்குள் யோசனையாக வேந்தனை பார்க்க,ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் நான் மலரை ரொம்ப விரும்புகிறேன்”
கடந்த மூன்று வருடமாக உயிருக்குயிராக காதலிக்கிறேனுங்கத்தை.அவள் படித்துக் கொண்டிருந்ததால் நானும் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டு இருந்தேன் என்று தனது மனதில் உள்ளதை பட்டென்று சொல்லி முடித்தான்.
“வேந்தன் இப்படி ஒரு விஷயத்தை சொல்லுவான் என்பதை எதிர்பாக்காத கண்ணகி என்ன என்று அதிர்ந்து போனார்”
“ஆமாங்க அத்தை”
முதன் முதல்ல நீங்க ஊருக்கு வந்தீங்களே அப்போ கோயில்ல வச்சி பார்க்கும்போதே மலரை எனக்கு ரொம்ப புடிச்சிருச்சி.ஊரறிய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் அதுக்கு நீங்களும் மாமாவும் சம்மதிக்க வேண்டும்.
“மகாராணி போல கண்டிப்பா என்னால உங்க பொண்ணை பாத்துக்க முடியும் என்று அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் இவ்வளவு தான் மரியாதை,வாய மூடு வேந்தா”
போயும் போயும் அந்த கொலைகார குடும்பத்திலையா என் பொண்ணை கொடுப்பேன்?
எவனோ பாடி பரதேசிக்கும் ஒன்னும் இல்லாதவனுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சி ஆளாக்கி அழகு பார்ப்பனே தவிர கண்டிப்பா அந்த கொலைகார குடும்பத்துக்கு என் பொண்ணை நான் கொடுக்க மாட்டேன்.
இப்படி ஒரு எண்ணத்தோட நீ வீட்டுக்கு வந்துருக்க என்று தெரிந்திருந்தால் உன்னை வாசலிலே அனுப்பி வைத்திருப்பேன்.தயவு செய்து இங்கிருந்து போயிடு என்றவாறு எழுந்தவரோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
இப்படி நடக்கும் என்பதை எதிர்பார்த்து தான் வந்திருக்கிறான் அதனால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி வரவில்லை.
உங்களுடைய கோபம் எனக்கு புரியுது.யாரோ செய்த தவறுக்கு எதற்காக எனக்கு தண்டனை தறீங்கத்தை?
உண்மையிலேயே உங்க பொண்ணை நான் மனசார நேசிக்கிறேன் அது ஏங்கத்தை உங்களுக்கு புரிய மாட்டேங்குது?
இதைப் பற்றி பேசுவதற்கு இன்னும் ஒன்றுமே இல்லை.நீ கிளம்பு என்க, நீங்களும் இவ்வளவு பிடிவாதமா இருக்கும்போது நானும் ஒன்னு சொல்லிட்டு போறேன்.
கல்யாணம் என்று உங்க பொண்ணுக்கு நடந்தால் அது இந்த வேந்தனோடு தான் நடக்கும்.இதை மீறி நீங்க எதையாச்சும் பண்ணனும்னு நினைச்சீங்க அப்புறம் என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்கிற போல இருக்கும்.
ஏதாவது மரியாதை குறைவாக பேசுற போல தெரிந்திருந்தால் என்னை மன்னிச்சிடுங்க என்றவன் வாடா என்று மருதுவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
வெளியே வந்து மருது காரை நான் ஓட்டுறேன் என்று சொல்லிவிட்டு கார் சாவியை வாங்கி டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்.
“எப்படி இருந்தாலும் இதை ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்.வேற வழி இல்லை டா மச்சி.எடுத்தவுடனே ஒத்துக்க மாட்டாங்க தான்.போகப்போக பேசி தான் அவர்களை சம்மதிக்க வைக்கணும்”
விஷயத்தை அவங்க காதுல போட்டுட்டோம்ல இனிமே நடக்க போகிறதை சுபமாக நாம நடத்தி வைக்கலாம் என்றவாறு சீட்டில் சாய்ந்த வேந்தன்,ஆமா அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையேடா என்றவாறு தனது போனை எடுத்தவன்,அதில் பொண்டாட்டி என்று சேவ் பண்ணியிருக்கும் நம்பருக்கு கால் பண்ண,ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுக்கவில்லை.
“ஆபீஸ்ல இருக்கிறாள் போல,எதுக்கும் பார்த்துட்டு போகலாமா டா என்று மருதுவிடும் கேட்க,சரிடா என்றான்.பின்னர் அதேபோல் அங்கிருந்து மலர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு வர முக்கால் மணி நேரமானது”
“வாசலில் நின்று கொண்டு அவளுக்கு கால் பண்ண ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர அவள் எடுக்கவே இல்லை மீண்டும் மீண்டும் அவளுக்கு கால் பண்ணி கொண்டே இருந்தான்”
ஷிப்ட் முடிந்து ஆபீஸில் இருந்தவர்கள் வெளியே வருவதை பார்த்தவன் அதில் தன்னவள் எங்கே இருக்கிறாளென்று தேட,நேரம் போனதே தவிர மலர் வரவில்லை.
“என்னடா அவளை ஆளையே காணோம் என்று யோசனையோடு மீண்டும் மலருக்கு கால் பண்ணிக் கொண்டிருக்கும்போது ஹலோ வேந்தன் என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்க்க,அங்கே ஒரு இளம் பெண்ணும் பையனும் நின்று கொண்டிருந்தார்கள்”
நீங்க மலரோட லவ்வர் வேந்தன் தானே என்று அந்த பெண் கேட்க,ஆமாம் சிஸ்டர்.மலரை பாக்குறதுக்காக தான் வந்திருக்கிறேன்,கால் பண்ணா எடுக்கவே இல்லை.அதான் ஆபீஸ் முடிஞ்சு வெளியில் தானே வருவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றான்.
அச்சோ ப்ரோ. ..மலர் நேத்து நைட்டே மீரா கயல் கூட டூர் போயிருக்கிறாள்.வர மூன்று நாள் ஆகும்.இனி மண்டே தான் அவள் ஆபீஸ் வருவா ப்ரோ.
“ஓஓஓ...நான் வெளியூர்ல இருந்ததால் அவளை காண்டாக்ட் பண்ண முடியலை.சரி நேரில் போய் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன் என்றவன் தேங்க்யூ சிஸ்டர் என்றவாறு காரில் ஏறியவன் உன் தங்கச்சிகாரி டூர் போயிருக்கா ஒரு வார்த்தை கூட சொல்லிட்டு போகலை,நேரில் உனக்கு இருக்கிறது டி என்க,மருதுவோ கொலை வெறியில் நண்பனை பார்த்தான்”
சென்னைக்கு வரட்டும்,எவ்வளவு திமிரு? ஒரு வார்த்தை கூட சொல்லிட்டு போக தோணலைல.நீ வாடி உனக்கு இருக்கு சங்கதி என்று சீட்டில் சாய்ந்து கண்களை மூட,அது எப்படிடா மனசாட்சி இல்லாமல் பேசுற??
அந்த புள்ள எத்தனை போன் பண்ணுச்சு அட்டென்ட் பண்ணி ஒரு வார்த்தை நல்லா பேசிருந்தாக்க உன்கிட்ட சொல்லாம போயிருக்குமா?
எனக்கு வர்ற ஆத்திரத்தில் எட்டி மிதித்தேன் மூஞ்சு மொகரையெல்லாம் பேந்துவிடும்.தங்கச்சிக்கு புருஷனாக போறேன்னு பார்க்கிறேன் என்று பல்லை கடித்துக் கொண்டு தங்களது ஊரை நோக்கி காரை ஓட்டலானான்.
கூர்க்-காட்டுபங்களா:
கதவு லாக் பண்ணும் சத்தம் கேட்டு கண்களை திறந்த மூவரும் ஒருவாறு புரண்டு புரண்டு எழுந்து நின்றவளுங்கள்,மூவரும் ஒருவர் பின் ஒருவராக தத்தி தத்தி டீப்பாயின் அருகில் செல்வதற்குள் பல முறை கீழே விழுந்து அடிபட்டு எழுந்தவர்கள்,
எப்படியோ போராடி கத்தியை எடுப்பதற்குள் பாதி உயிர் போய் விட்டது.
"கயலின் கையிலிருந்த கத்தியால் மலரின் கை கட்டை அருக்க முயலும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வி.கே,வெல்டன் ஏஞ்சல்ஸ்"
"உங்களை டெஸ்ட் பண்ண தான் கத்தியை அங்கு வைத்தேன்.என் கணக்கின்படி உங்களுக்கு மயக்கம் தெளிந்திருக்கணும் ஆனால் நீங்கள் மயங்கியபடியே இருந்தீங்களா,அதான் கொஞ்சம் டவுட்"
"இப்போது கிளியர்"
சரி சரி மூவரும் உங்கள் அழகான பெயரை சொல்லுங்கள் பார்க்கலாமென்றவனோ மீராவின் வாயின் மேலிருக்கும் பிளாத்தரை இழுக்க,அதுவோ உதட்டையே பிய்த்து எடுத்த போல வலித்தது.
எரியும் உதட்டை நாவால் தடவியவள் ஏய் யாருடா நீ?
எதுக்குடா எங்களை இப்படி அடைத்து வைத்திருக்க??
நான் யார் பொண்ணு என்பது தெரியாமல் விளையாடிட்ட.இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு சாவு தான் டா என்க,அதைக் கேட்டு கை தட்டி சிரித்தவன் சில்லி கேர்ள்.
"எந்த கொம்பனாலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது.உன் பூச்சாண்டிக்கு வேற எவனாவது சொம்பைங்க பயப்படுவானுங்க,இந்த விக்ரம் இல்லை"
"இப்போது மூன்று த்ரீ ரோசஸ் என்ன பண்றீங்கனா,பிரஷ் ஆகிவிட்டு ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கோங்க.நமக்கு டைம் இல்ல உடனே நம்ம இங்கிருந்து கிளம்பியாகணும்"
"கமான் கமான் என்றவனோ மூவரையும் இழுத்துட்டு வெளியே வந்தவன்,வலது பக்கமாக இருக்கும் ரூமிற்குள் அழைத்து போனவன் கட்டுகளை அவிழ்த்து விட்டு,ப்ரஷாகி வாங்க ஏஞ்சல்ஸ் என்றவாறு வெளியே போய் கதவை பூட்டினான்"
"வேகமாக திரும்பிய கயல் மீராவின் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தாள்.அவளை அடிப்பதற்கான காரணம் புரிந்ததால் மலரும் அமைதியாக நிற்க,மீராவிற்கு தான் நடந்தது எதையும் நம்ப முடியவில்லை"
எந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டிருக்க பாரு டி?
இங்கிருந்து எப்படி தப்பிக்க போறோம் என்பது தெரியாமல் பைத்தியம் பிடிக்குது என்று தலையில் கை வைத்துக் கொண்டு அழுதாவாரு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள்,எப்படி டி மலரு நம்ம தப்பிக்கிறது? இவனைப் பார்த்தால் நல்லவன் போலவே தெரியலை டி.
"எனக்கு ஒன்னும் புரியல டி கயல்.கடவுள் ஏதாச்சும் வழி காட்டாமயா இருப்பார் என்கும் போது மலருக்கும் அழுகை வந்தது"
“இந்த நேரத்துல நம்ம நம்பிக்கையை கைவிடக்கூடாது யோசிப்போம் என்று அழுது கொண்டே மீரா சொல்ல,ஒழுங்கு மரியாதையா நீ வாய மூடு டி நாயே”
உன்னால தாண்டி இவ்வளவும் வந்தது.அவன் நல்லவன் இல்லை நல்லவன் இல்லைனு ஆரம்பத்தில் இருந்து நாங்க ரெண்டு பேரும் சந்தேகத்தோடு சொல்லிக்கிட்டு இருந்தோம் கொஞ்சமாவது காதுல வாங்கினாயாடி?
"தோழியின் கேள்விகள் நெருப்பை போல் சுட,மீராவோ அழுது கொண்டே கீழே குனிந்து கொண்டாள்"
அய்யோ கயல் இப்பொழுது நாம் அவளை திட்றதை விட இங்க இருந்து எப்படி தப்பிக்கிறோம் என்பது தான் முக்கியம்.அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு நாம நடந்துக்கணும்.அவன் சொன்ன போல பஸ்ட் நம்ம குளிச்சிட்டு ரெடியா ஆகலாம்.
ஆமா டி..நீ சொல்றதும் சரிதான் டி என்றாள்.
பின்னர் மூவரும் குளித்துவிட்டு அந்த ரூமிற்குள் இருக்கும் டிரஸிங் ரூமிற்குள் செல்ல,அங்கு புதிதாக அவர்களுக்கு ஏற்ற அளவில் ஆடைகள் இருப்பதை அதிர்ச்சியாகவும் ஆத்திரத்தோடும் பார்த்தாளுங்கள்.
வேறு வழியின்றி டிரஸை போட்டுக் கொண்டு வெளியே உள்ள கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டு,அடுத்தது என்ன பண்ணலாம் என்று,கோட் வேர்டில் திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அவன் தான் டி வரான்.முடிந்தளவு எது கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது..அதில் ஏதாவது கலந்து வைத்திருந்தால் என்ன பண்ணுவது என்று மீரா கேட்க,நீ சொல்றதும் வாஸ்தவம் தான் அளவோடு சாப்பிடலாம்.அப்பதான் அவனுக்கு சந்தேகம் வராது.
“மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து போய் தாழ்ப்பாளை மலர் விலக்க,உள்ளே வந்த வி.கே,ஹாய் ஏஞ்சல்ஸ்”
“ஊட்டியில் பூத்த ரோஜாவைப் போல பிரெஷ்ஷா இருக்கீங்க வாங்க சாப்பிடலாம் என்றவாறு தனது கையில் இருந்து துப்பாக்கியால் மூவரையும் குறி பார்த்துக் கொண்டே சொல்லவும்,அதில் வெடவெடுத்து போனாளுங்கள்”
சொல்வாளா…??

Last edited: