Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பொள்ளாச்சி-கதிர் வீடு:
"பானு.."
"ஏத்தா பானு என்றவாறு வீட்டிற்குள் வந்தார்,பானுமதியின் பெரியப்பா மகன் வேலன்"
"தனது ரூமிலிருந்த கதிர்,தாய்மாமனின் குரலை கேட்டு வெளியே வந்தவன்,வாங்க மாமா எப்படி இருக்கீங்க?,டவுன் வரைக்கும் அம்மா போயிருக்காங்க"
"நாளைக்கு அப்பாவுக்கும்-வசந்த் அத்தானுக்கும் நினைவு நாள் வருது,அதான் படையல் போட ஜாமான் வாங்கி வரேனு மாலா சித்தி கூட போயிருக்காங்க மாமா"
தனது தங்கை மகன் சொன்னதை கேட்ட வேலன்,அப்படியா மாப்பிள்ளை என்றவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவர்,என்ன செய்ய கடவுள் நம்ப தலையில் இப்படி காலம் முழுவதும் கண்ணீர் வடிக்கணும்னு எழுதியிருக்கிறார் போல"
"இன்னும் சோதிக்க என்ன இருக்கிறது என்று தனது மைத்துனரை நினைத்து வருந்தியவர்,வேலை எல்லாம் எப்படி கண்ணு போகுது?ம்ம் போகுது மாமா என்றவாறு கிச்சனிற்குள் சென்றான்"
எப்பொழுதுமே அவர்கள் வீட்டின் விறகடுப்பில் பால் சூடாகவே இருக்கும் என்பதால்,காபி கலந்து எடுத்து வந்தவன் இந்தாங்க மாமா என்று நீட்ட,"என்னங்க மருமகனே நீங்க போய் இதெல்லாம் செஞ்சுக்கிட்டு"
"குடிக்க தண்ணி மட்டும் கொடுத்திருக்கலாமே என்பவரை பார்த்து சிரித்தவன்,இருக்கட்டும் மாமா இதுல என்ன இருக்கு என்றவன் குடிங்க மாமா என்று டம்ளரை நீட்ட,அதை வாங்கி குடித்தவர் தங்கச்சிக்கிட்ட ஒரு நல்ல செய்தியை சொல்லிட்டு போலாம்னு வந்தேன்"
"உன் அத்தைகாரி விட மாட்டேங்குறாள்.முதலில் என் நாத்தனார் கிட்ட சொல்லிட்டுவான்னு என்னை அரிச்சி எடுத்துட்டாயா என்றவாறு வேலன் சிரிக்க,அவர் சொல்வதிலேயே என்ன விஷயம் என்பது கதிருக்கு புரிந்து விட்டது"
"அம்மா எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துருவாங்க மாமா.போய் ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது என்க,அப்படியா கண்ணு"
சரி இருந்தே நான் பாத்துட்டு போறேன் என்றவரிடம் வீட்டில் உள்ளவர்களை பற்றி விசாரிக்க,நல்லா இருக்காங்க யா.நாளைக்கு தான் நம்ம திலகா வரேன்னு சொல்லிருக்கு கண்ணு என்றவர்,மருமகனிடம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல,பானுமதியும் இரண்டு பைகளோடு வீட்டுக்கு வந்தவர் அங்கே இருக்கும் தனது அண்ணனை பார்த்து விட்டு,வாங்க ணா.
எப்படி ணா இருக்கீங்க?
வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா??
“எல்லாரும் நல்லா இருக்காங்க கண்ணு.உன்னை பாத்துட்டு போறதுக்காக தான் வந்தேன்.நான் வந்த நேரம் மருமகன் வீட்ல இருந்தாரு, சரினு சும்மா பேசிகிட்டு இருந்தேன்"
இரு ணா டீ எடுத்துட்டு வரேன்னு சொல்ல,அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாப்பிள்ளை காபி கலந்து கொடுத்தார்.
நீ வந்து உட்காரு ஒரு நல்ல விஷயத்தை உன்கிட்ட சொல்லணும் என்க,கையில் இருந்த பையை அங்கிருந்த சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு,முற்றத்தில் வந்து உட்கார்ந்தவர்,சொல்லு ணா?
நம்ப ஆச்சி அத்தையோட பேத்தி டீச்சருக்கு படிச்சிட்டு கவர்மெண்ட் வேலைக்கு போய் மூணு மாசம் ஆகுதாம்.அந்த பிள்ளைக்கு மாப்பிள்ளை தேடிட்டு இருக்காங்க.
போன வாரம் ஒரு பொறந்தநாள் காரியத்துக்கு போனேன்,அப்பதான் அத்த மவன் ராசுவை பார்த்தேன்.அந்த புள்ளைய நம்ம கதிருக்கு பார்க்கலாமா?
நம்ப தாய் வழி சொந்தம்,உறவும் விட்டு போகாது இல்லையா?நீ என்ன கண்ணு சொல்ற என்று தனது தங்கையை வேலன் பார்க்க,நான் என்னன்னு சொல்ல?
வயசு போயிட்டிருக்குனு எவ்வளவு சொன்னாலும் இவன் வாயவே திறக்க மாட்டேங்குறான்.போலீஸ் வேலை மட்டும் போதும் என்று முடிவு பண்ணிட்டானா?என்னனு தெரியலை ணா.கையோடு இந்த தையில கல்யாணத்தை முடிச்சிட்டு தான் மறு வேலை நானும் பார்க்க போறேன்.
இந்த வருஷமும் ஏதாச்சும் உன் மருமகன் சாக்கு போக்கு சொன்னான்னு வச்சிக்க,இந்த வீட்ல இனிமே நான் இருக்க மாட்டேன்.எங்கோ கண்காணாத இடத்துக்கு நானும் போயிடுவேன் ணா.
இது தான் என் முடிவு.இந்த முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று பானுமதியும் உறுதியாக சொல்ல,அதைக் கேட்டு வேலனும்-கதிரும் அதிர்ந்து போனார்கள்.
"ஏ பானு..."
என்னத்தா இப்படி பேசுற???
குடும்பத்தோட ஆணிவேர் நீயே இப்படி பேசலாமா??
உனக்கு என்ன என் மருமகனுக்கு கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே,நீ செத்த அமைதியாக இரு.நான் பேசுறேன் என்றவாறு மருமகனின் பக்கம் திரும்பியவர்,அய்யா கதிரு நானும் ஏழு-எட்டு வருஷமா உனக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு தான் இருக்கிறேன்,நீயும் ஏதோ காரணத்தை சொல்லி தட்டி கழிச்சிட்டு இருக்கும்போதே தெரியுது,உன் மனசுல எந்த புள்ளையோ இருக்குன்னு.
"புள்ள யாருன்னு சொல்லு மாமா போய் பொண்ணு கேக்குறேன்"
இதுக்கு அப்புறமும் உன்னுடைய இஷ்டத்துக்கு அமைதியா இருந்தாக்க நல்லா இருக்காது,வயசு போகுது அதை பத்தி யோசிக்கிறது இல்லையா?
ஊர் உலகத்துல நடக்குற போல பேர புள்ளைய தூக்கி கொஞ்சனும்னு என் தங்கச்சிக்கும் ஆசை இருக்கும் தானே?
இந்த குடும்பத்தோட வம்சம் தழைக்கணும்னு உனக்கு எண்ணம் இல்லையா?
என்ன காரணத்துக்காக அமைதியா இருக்கிற?அதை முதலில் சொல்லு யா?
"அது வந்துங்க மாமா என்ற கதிர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் தடுமாற,சொல்லு கண்ணு,பொண்ணு யாரு?வேற சாதிசனமா?பரவால்ல இருந்துட்டு போகட்டும் வாழப்போற உன் மனசுக்கு புடிச்சிருந்தா போதும் கண்ணு"
இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அம்மா சொன்னது நிச்சயமாக நடக்கும் என்கும் உண்மையை புரிந்து கொண்ட கதிர்,ஆமாங்க மாமா நான் ஒரு பொண்ணை ரொம்ப வருஷமா விரும்புறேன்.ஆனால் அவளையே கல்யாணம் பண்றதுக்கு ஒரு பக்கம் எனக்கு மனசு வரமாட்டேங்குது.
இதைக் கேட்ட வேலன் அப்படி என்ன பிரச்சனை உன்னை தடுக்குது சொல்லு??சொத்துபத்தில் நம்மள விட ரொம்ப பெரியவங்களா?
"நம்ம ஒன்னும் அடுத்தவங்க கிட்ட கையேந்திட்டு நிக்கலையே?நாலு பேருக்கு முன்னாடி கௌரவமா தானே வாழ்கிறோம் என்று கோபமாக பானுமதி கேட்க,இதெல்லாம் சரி தான் மா"
"பொண்ணு யாருன்னு தெரிஞ்சாக்க நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்க என்றவாறு,வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்"
கூர்க்-காட்டுபங்களா:
"அதிகாலையில் தனது பங்களாவிற்கு வந்த வி. கே,தனது போனிலிருந்து பீட்டரின் நம்பருக்கு கால் பண்ணினான்"
"ரிங் போய்க்கொண்டே இருக்க,அப்பொழுது தனது கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க அதிகாலை 5 என்றது"
"அப்போ இப்பொழுது சிட்னியில் காலை ஒன்பதரை மணி.கண்டிப்பாக பீட்டர் எழுந்திருந்திருப்பானே என்ற யோசனையோடு இருக்க,கடைசி ரிங்கிள் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணிய பீட்டர் ஹலோ வி.கே,குட் மார்னிங்,ஹவ் ஆர் யூ?
பைன் பீட்டர்,வாட் அபௌட் யு???
"ப்ச் என்கும் சத்தம் வி.கே.விற்கு கேட்க,
சரி பிட்டர்,உடனே வீடியோ காலில் வா என்று அழைப்பை துண்டித்தான்"
அதேபோல் பீட்டரிடமிருந்து வீடியோ கால் வர அட்டென்ட் பண்ணிய வி.கே சர்ப்ரைஸ் என்றவாறு கேமராவை எதிர் பக்கமாக காட்டவும்,ஓ மை காட்..!!!
ஹேய் வி.கே மூணு தங்கமும் எனக்கே வேணும்.ஒன்னு ஒன்னுக்கு ஒரு கோடி கொடுக்கிறேன் என்று அந்த பக்கம் பீட்டர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க,இப்பொழுது வீடியோவை தனது பக்கம் திருப்பியவன்,இது பேராசை பீட்டர்"
"மூன்று தங்கத்தில் உனக்கு எது வேணுமோ அதை நீ எடுத்துக்கொள் எனக்கு ஆட்சேபனை இல்லை.அதை விட்டுட்டு மூன்றுமே உனக்கு வேணும்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு.உன்னை போல இன்னும் ரெண்டு கஸ்டமர் எனக்கு இருக்கிறார்கள்"
அட ஆமாம்...
"சரி...நம்ப இடத்திற்கு கொண்டுட்டு வா.அங்க நான் பைனல் பண்ணிக்கிறேன் என்கவும்,ஓகே டன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ண போனவனிடம் மூன்று தங்கத்தோட போட்டோவை தனித்தனியா கொஞ்சம் எனக்கு அனுப்பி விடு வி.கே"
"ஓகே என்று சிரித்தபடியே அழைப்பை துண்டித்த வி.கே தனது கண் முன்பிருக்கும் பெட்டின் அருகாமையில் போனவன்,ஒரு கோடி இல்லை 100 கோடி கூட உங்க மூணு பேருக்கும் கொடுக்கலாம் அந்த அளவுக்கு நீங்க ஒர்த் தான்"
"இன்னும் கொஞ்ச நேரத்தில் மூவருக்கும் மயக்கம் தெளிந்து விடும் என்பதை ஒரு டாக்டராக புரிந்து கொண்டவன்,அங்கே தயாராக இருந்த கயிற்றை எடுத்து மூவரின் கை கால்களை கட்டி விட்டு,வாயில் பிளாஸ்தரை ஒட்ட,இதையெல்லாம் உணராமல் மூன்று இளம் பெண்களும் ஜடம் போல் இருந்தார்கள்"
"ஒவ்வொருத்தியின் முகத்தை உற்றுப் பார்த்தபடி நின்றவன் எனது அழகு தங்கங்களே...நீங்கள் மூன்று பேரும் பிரம்மன் படைத்த அழகிகள் என்பதை மறுக்க முடியாது"
என்ன பண்றது?
இதுவரை தவறான எண்ணத்தோடு பெண்களை தொட்டு எனக்கு பழக்கமில்லையே,இல்லனா லட்டு போல இருக்கும் உங்க மூணு பேரையும் இந்த வி.கே,வின் அரண்மனைக்கு மகாராணியாக வைத்திருப்பேனே என்று பெருமூச்சு விட்டவாறு,பக்கத்து ரூமில் இருக்கும் பெட்டில் போய் படுத்து விட்டான்.
"மூன்று மணி நேரம் கடந்திருக்க,பெட்டில் படுத்திருந்த மூவருக்கும் மயக்கம் தெளிந்தது.ஒருவாறு கண்களைத் திறந்து பார்த்தவளுங்களுக்கு முதலில் எதுவும் புரியவில்லை"
"பிறகு தலையை உலுக்கி விட்டு பார்க்கும் போது தான் அவர்கள் இருக்கும் நிலமை புரிந்து,வாய் விட்டு கத்த முடியாமல் அதிர்ந்து போய் அந்த ரூமை சுற்றி பார்த்தவளுங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது"
இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டவளுங்கள் முதலில் கை கால்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டுகளை அவிழ்கணும்.
அதற்கு ஏதாவது வழி இருக்கா என்று அந்த ரூமை பார்க்கும் போது,அங்கிருந்த டீபாய் மேல் கத்தி இருப்பது தெரிந்தது.
எப்படி அங்கே போய் எடுப்பது என்று கண்களால் பேசிக்கொள்ள கட்டிலிலிருந்து கீழே உருண்டு தான் போகணும் என்று ஜாடையில் சொல்லிக் கொண்டவர்கள்,அதை செயல்படுத்த முயலும் போது கதவு திறக்கும் சத்தம் கேட்க,இதுவரை மயங்கிய நிலைமையில் இருந்த போல,இப்பொழுதும் கண்களை மூடிக் கொண்டாளுங்கள்.
உள்ளே வந்த வி.கே,பெட்டிலிருந்த மூவரையும் பார்த்தவன்,இவ்ளோ நேரத்துல மயக்கம் தெளிஞ்சிருக்கணுமே??
அந்த அறிவுகெட்டவன் எவ்வளவு டோஸ் காபியில் கலந்தானு தெரியலையே???
"தங்க முட்டை போடப்போகும் தேவதைகளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதே என்றவாறு தனது போனை எடுத்தவன்,அதில் நிக் என்ற நம்பருக்கு கால் பண்ணினான்"
"அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் பாஸ் என்க,டேய் நம்ப ஜான் அந்த காபியில் எவ்ளோ டோஸ் கலந்தான்?
பாஸ் நீங்கள் சொன்ன அளவு தான் என்று நிக் பதற,சரிடா என்று அழைப்பை துண்டித்தான்.இதை கேட்ட மூவரும் என்ன அவனா என்று உள்ளுக்குள் அதிர்ந்து போனார்கள்"
"கரெக்டா தான் கொடுத்துருக்கான்,அப்புறம் ஏன் இன்னும் மயக்கம் தெளியவில்லை என்றவாறு மூவரின் கையைப் பிடித்து பல்ஸ் செக் பண்ணியவன் நல்லவேளை உயிரோட தான் இருக்கிறார்கள்"
"குபேர தேவதைகளே,உங்களுக்கு ஒன்னும் ஆயிட கூடாது.சரி சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிங்க,பிறகு நாம நால்வரும் சொர்கத்திற்கு ரதத்தில் போகலாம் என்றவாறு கதவை திறந்து வெளியே போனான்"
சொல்வாளா??

Last edited: