• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்:

மலரு நீயா...!!!!

நானே தான்...

கிளாஸ் கேன்சலென்று திரும்பி வந்தேன்.இங்கு வந்து பார்த்தால் அருமையான காதல் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்றவாறு மலர் சிரிக்க,ஏய் என்று சொன்னாலும் கதிருக்கோ வெட்கமும் சிரிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

"அட அட அட..."

போலீஸ்காரர் வெட்கப்பட்டால் ரொம்ப அழகா இருக்கே நீ சொன்ன போல உண்மையிலேயே மாமா செம ஹேண்ட்சம் தான் கா என்று மலர் சிரிக்கவும்,அடியேய்...!!

"எத்தனை முறை சொல்லிருக்கேன் மாமாவை சைட் அடிக்க கூடாது என்று வான்மதி கோவப்பட,இங்கே பாருடா"

ஏண்டி ஒருத்தன் வீட்டிற்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது??ஒரு வாய் தண்ணி கொடுக்கணும்னு தெரியாதா?

"உன்னை கட்டிக்கிட்டு நான் என்னதான் குடும்பம் பண்ண போறேன்னு தெரியலை போ என்றான்"

"ஹலோ மிஸ்டர் போலீஸ்காரரே, உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேனென்று நான் சொல்லவே இல்லையே என்று வான்மதி கேட்க,என்ன டி சொல்ல என்று அதிர்ந்தான்"

ஆமா,5 வருஷமாக உங்களை தேடி வந்தேன் அப்போதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு தானே சொன்னீங்க.இப்போ இந்த விஷயத்தில் நான் முடிவு பண்ணி ரொம்ப நாளாகுது.

"உண்மையிலேயே நீங்க எனக்கு வேண்டாம் என்பவளின் குரல் உறுதியாக இருக்கவும்,அதில் அடிபட்ட பார்வை கதிர் பார்க்க,இனி எனக்கு நீங்க வேண்டாம் என்றவாறு வேகமாக உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொண்டாள்"

"மதியிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்பதை எதிர்பார்க்காத கதிர் அதிர்ந்து போய் நிற்க,மாமா மாமா என்று அவன் தோளை மலர் தட்ட,அதில் நிகழ்வுக்கு வந்தான்"

இத்தனை வருஷமாக அக்கா மனசுல எவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க மாமா.

"கொஞ்சம் டைம் கொடுங்க சரியாகிடுமென்றாள்"

சரி டா நான் கிளம்புறேன் என்றவனோ எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அதன் பின்னர் நாட்களும் வேகமாக ஓடியது.நான்காவது வருட படிப்பை வெற்றிகரமாக முடித்தவள் கேம்பஸ் இன்டர்வியூல கலந்து கொள்ள,
தோழிகள் மூவருக்கும் ஒரே கம்பெனியில் வேலையும் கிடைத்தது.

திருமண பேச்சை பொள்ளாச்சி வீட்டில் எடுக்கவும்,ரெண்டு வருஷம் வேலைக்கு போகிறேனென்று வான்மதி சொல்ல,சரி என்றதும் பக்கத்து ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தவளோ,மறந்தும் எந்த விதத்திலும் கதிரை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணவில்லை.

இப்பொழுது கதிரோ இவள் செய்த வேலையை செய்து கொண்டிருக்கிறான்.
தொடர்ந்து அவளுக்கு கால் பண்ணுவதும்,மெசேஜ் பண்ணுவதுமாகவே இருக்க,மதியோ சிறிதும் மனமிறங்கி வரவில்லை.

"ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லையே"

கடந்த எட்டு வருடங்களாக இவனுக்காக எவ்வளவு உருகி தவித்திருப்பேன் சிறிது காலம் அவனும் அனுபவிக்கட்டும். அப்பொழுதுதான் எனது வலியும் வேதனையும் புரியும் என்று தனது நிலையிலிருந்து மதியும் இறங்கி வரவில்லை.

"கடந்த சில மாதங்களாகவே வேந்தனிடம் சில மாற்றங்கள் இருப்பது மலருக்கு தெரிந்தது.முன்பு போல அவளிடம் பேசுவதில்லை.அவளாக பேச முயன்றாலும் கண்டுகொள்ளவில்லை"

"இதாலே இப்போதெல்லாம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்க,என்ன காரணம் என்பது தெரியாமல் மலருக்கு தான் பைத்தியம் பிடித்த போல இருந்தது"

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால்,எங்கேயாவது போய் வரலாமென்று தோழிகள் மூவரும் முடிவு பண்ணியவர்கள்,எங்கே போகலாமென பேசி ஒரு மனதாக கூர்க் போக பிளான் பண்ணினாளுங்கள்.

இனி...

மகள் கேட்ட போல அனைத்தையும் தயார் பண்ணி முடித்த கண்ணகி சோபாவில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பவளிடம் வந்தவர்,என்ன லேப்டாப் ஆன்ல இருக்கு உன் சிந்தனை வேற எங்கேயோ இருக்கேயென மலரு மலரு என்று மகளின் தோளில் தட்டினார்.

"இவ்வளவு நேரம் தனது நினைவுக்குள் மூழ்கி இருந்தவளோ,தாயின் உலுக்கலில் நிகழ்வுக்கு வந்தவள் என்னம்மா என்க,என்ன டி யோசனை?

"லேப்டாப் ஆன்ல இருக்கு உன் கவனம் எல்லாம் எங்க இருக்கென்று மகளை முறைத்தார்"

அதுவா...புது ப்ராஜெக்ட் ஒன்று வந்துருக்குமா அதைப்பற்றி யோசிக்கிறேன் என்று சமாளித்தவள் லேப்டாப்பை ஆஃப் பண்ணிவிட்டு ரூமிற்கு போனவளோ பிரஷாகிவிட்டு தோழிகளுடன் டூருக்கு போவதற்கு தயாராகவும்,மகளுக்கு இரவு டிஃபனை எடுத்துட்டு வந்து கண்ணகி வைக்க, சீவகனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டவர்கள் அவளை அழைத்துக் கொண்டு சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வர,அங்கே இவளின் தோழிகளான மீரா-கயல் இருவரும் அவர்கள் வீட்டிலிருந்து வந்தவர்களுடன் நின்றிருந்தனர்.

"மூன்று பேரின் பெற்றோர்களும் ஆயிரம் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்க இவளுங்கள் செல்வதற்கான ட்ரெயினும் வந்தது"

பின்னர் லக்கேஜோடு ட்ரெயின் ஏறியவளுங்கள் நாங்கள் போயிட்டு வரோம் என்றவாறு உள்ளே போய் பர்த்தில் உட்காரும்போது மீராவின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

பொள்ளாச்சி-சென்னை:

"ஆமாப்பா"

கடந்த மூணாவது வருஷ பொங்கலுக்கு முதன் முதல்ல வந்தாங்களே,அந்த புள்ளைய நம்ப அம்மன் கோயில் சந்நிதியில் பார்த்தேன்.

அப்பவே அந்த பிள்ளையை பிடிச்சிருச்சு.கட்டுனா அவளை தான் கட்டுவேன்.அப்பாவும் அம்மாவும் மாமா வீட்டில் சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்றாங்க.

என்ன பண்றது பா நீங்க தான் எனக்கு வழி சொல்லணுமென்று விஷயத்தை தனது பெரியப்பாவிடம் வேந்தனும் சொல்லி முடிக்க,இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர்,அந்த பாவம் நம்பள சுத்தமா விடாது கண்ணு.

"நீ என்ன பண்றேனா கண்ணு,கண்ணகியை நேர்ல போய் பாரு என்க, என்னங்க... சின்னவனுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று கனி முறைக்க,அமைதியாக இரு கனி"

எப்படியாவது இரண்டு குடும்பமும் ஒன்றாகட்டும்.இத்தனை வருஷத்துல பானுமதி அம்மா வீட்டில் நம்ம ரெண்டு பேர் குடும்பத்தை சுத்தமா ஒதுக்கி வச்சுட்டாங்க.எந்த நல்லது கெட்டதுலையும் அவங்க கலந்துகிறது கிடையாது.

ஊருக்கு பெரிய மனுஷனா இருந்தாலும் இதெல்லாம் எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் தெரியுமா?

"ஆயிரம் நிறைகள் வெளியே தெரிவதை விட ஒரு குறை தான் எல்லாருக்கும் பூதாகரமாக தெரியும்"

சீவகன் கிட்ட நான் பேசுறேன்.நீ கண்ணகி கிட்ட நேர்ல போய் பேசு கண்ணு.கண்ணகி ரொம்ப தங்கமான பொண்ணு.வாத்தியார் வீட்டில் நம்மளவுக்கு காசு பணம் இல்லனாலும் ரொம்ப மேன்மையாக வளர்த்திருக்கிறார்.

கண்ணகி மவள் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தால் இந்த உலகத்திலேயே சந்தோஷ படுறது நானும் என் தம்பியாக தான் யா இருப்போம்.

உன் தாத்தனும் அத்தைகாரியும் பண்ணிய கொடுமையால் அவங்க குடும்பத்துக்கு எந்த ஒரு நல்லதும் பண்ண முடியலன்னு எவ்வளவு குற்ற உணர்ச்சியா இருக்கு தெரியுமா என்று விநாயகம் வருத்தமாக சொன்னார்.

அது வந்து பா...என்ன மன்னிச்சிடுங்க பா...

எலே...என்னைக்கும் நீதி நேர்மை நியாயம் பேசுற நீ இப்படி தலை குனிஞ்சு நிக்க கூடாது புரியுதா?

"உண்மை தெரியாமல் தான் நீ கோவமா இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். உன் பெரியப்பன் வேணும்னு அந்த இடத்துல கோயில் கட்டுவதற்கு தடுக்கல புரியுதா கண்ணு"

உன் அண்ணனுங்களுக்கு இந்த விஷயத்தை பற்றி இன்னும் தெரியாது.நம்ப குடும்பத்துல தெரிஞ்சவன் அடுத்த தலைமுறையில் நீ மட்டும் தான்.

"நாளை வளர்த்தாதே அப்பா கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம்"

"நீ நேர்ல போயிட்டு பேசிட்டு அங்க இருந்து எனக்கு போன் போடு சீவகனிடம் நான் பேசுறேன் என்று விநாயகமும் மகனுக்கு தைரியத்தை கொடுக்க,சரிப்பா என்று சந்தோஷமாக வீட்டிற்கு வந்து படுத்து தூங்கினான்"

வழக்கம் போல காலையில் எழுந்து குளித்து தயாராகி வந்தவன் தனது பெற்றோரிடம் முக்கியமான வேலையாக வெளியூருக்கு போகிறேன் என்று சொல்லும்போது,அவன் சீவகனை பார்க்கப் போகிறான் என்பது புரிந்த வாசன்,எதுக்கு இப்போ அவசரப்படுற என்கவும்,இது என்னோட வாழ்க்கை பிரச்சனை பா.

இதுவரைக்கும் உங்க அப்பாவும் உங்க தங்கச்சியும் அடிச்ச கூத்தில் நடந்த வரைக்கும் போதும்.அவளை என்னால் விட முடியாது.நானே போய் நேர்ல பேசுறேன் நீங்க பேசினா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.

அது நீங்க சொன்னதை வச்சே எனக்கு புரிந்து விட்டது என்க,அதற்கு சீதாவோ விடுங்க நல்லது நடந்தால் போதும் என்றார்.

"பின்னர் தனது வண்டியை எடுத்துக் கொண்டு நண்பன் வீட்டிற்கு வர,
அவனோ எதுவும் சொல்லாமல் இவனை மட்டும் பார்க்க,வாடா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

எனக்கு நல்லா காது கேட்கும் நீ சொல்லு என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு மருது சொல்லவும்,தான் கேள்விப்பட்டதை எல்லாம் சொல்ல அதைக் கேட்டவனோ அதிர்ந்து போய் திரும்பி பார்த்தான்.

"ஆமாடா...கையோடு இந்த முகூர்த்தத்திலேயே மலரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

அதுக்காக நேர்ல போயிட்டு அத்தை மாமா கிட்ட பேசலாம்னு இருக்கேன்.நீ என் கூட வரணும் டா.

நண்பன் சொன்னதை கேட்டவன்,நிஜமாத்தான சொல்ற?

"ஆமாடா"

இரு டா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன் என்றவாறு வீட்டிற்குள் போனவன் வேந்தன் கூட வெளியில போயிட்டு வரேன் மா.வர ரெண்டு நாள் ஆகும் மா என்கவும்,அதைக் கேட்ட மருதுவின் அம்மாவும் சரிப்பா என்றார்.

"பின்னர் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டவர்கள் சில மணி நேரத்தில் சீவகன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்"

"வழக்கம்போல் ஸ்கூல் விட்டு வீட்டிற்கு வந்த கண்ணகியோ,வீட்டை கூட்டிவிட்டு அவருக்காக காபி போட்டுக் கொண்டிருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது"

"இவ்வளவு சீக்கிரம் மலரோட அப்பா வர மாட்டாரே என்றவாறு கதவை திறக்க,அங்கே வேந்தனும் மருதுவம் நிற்பதை பார்த்தவர் வாங்கப்பா வாங்க என்று வழியை விட்டார்"

"உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவனுங்களிடம் எப்படி இருக்குறீங்க என்று கண்ணகி விசாரிக்க,நன்றாக இருக்கிறோம் என்றானுங்கள்"

"அப்பா அம்மா நல்லாருக்காங்களா மருது என்க,நல்லாருக்காங்க சித்தி.மஞ்சு புள்ளைங்களுக்கு அடுத்த வாரம் காது குத்தி பங்ஷன் வச்சிருக்குது.அது வேலையாக இருக்காங்க"

"ஓஓஓஓ...அட,வந்த பிள்ளைகளுக்கு எதுவுமே கொடுக்காமல் பேசிட்டு இருக்கேன் பாரு என்றவாறு கிச்சனிற்குள் போனவர்,சிறிது நிமிடத்தில் மூன்று கப் டீயோடு கொஞ்சம் ஸ்னாக்ஸையும் இரண்டு தட்டில் எடுத்து வந்தவர்,குடிங்க என்று டிரேவை நீட்ட அவனுங்களும் எடுத்து குடித்தானுங்கள்"

இரண்டு பேரும் சீவகனை தான் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கண்ணகியும் நினைத்துக் கொண்டிருக்கு, டீ கப்பை அங்கிருந்த டீபாயின் மேல் வைத்தவன் அத்தை,உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசிட்டு போகலாமென்று தான் வந்திருக்கிறேனென்று வேந்தன் சொல்ல,அப்படியா....!!!

சொல்லு வேந்தா?

என்ன விஷயம் பா???

சொல்வாளா...??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top