• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்:

"மலர்விழியோ தனது அக்காவை அழைத்து சென்று தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளை எல்லாம் காட்டி,
பலவித கதைகளை சொல்ல, அவளும் தங்கையின் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள்"

கிச்சனுக்குள் கண்ணகி இருக்க,அங்கு வந்த வள்ளியம்மை அம்மாடி கண்ணகி என்க,டக்கென்று சொல்லுங்கள் அத்தை என்றவாறு திரும்பியவர் பின்னர் தனது நாக்கை கடித்துக் கொண்டார்.

"நாங்க செஞ்ச பாவத்திற்கு எங்கு போனாலும் விமோசனம் இல்லை.இன்னும் எங்களை தண்டிக்காதே மா"

"நாராயணன் அண்ணா மரணத்திற்கு நானும் ஒரு காரணமாயிட்டேன் இத்தனை வருஷமா இது எனக்கு பெரிய குற்ற உணர்ச்சி"

பானுமதி கிட்ட மன்னிப்பு வேண்டி எத்தனையோ முறை வீடு தேடி போனேன்.இதுவரை முகம் கொடுத்து பேசவில்லை.நீயாவது மன்னிச்சிடு மா என்றபடி மருமகளை நோக்கி கையை கூப்பி அந்த முதிய பெண்மணி அழுதார்.

"வயதில் பெரியவர் தன் முன்னால் குற்றவாளியாக நிற்பதை பார்த்து இளகிய மனம் கொண்ட கண்ணகிக்கு,அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை"

விடுங்கத்தை என்றவாறு அவரது கையை இறக்கி விட்டவர் நடந்தது நடந்து போச்சு.ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்பது போல,நல்ல வாழ்க்கையை தான் எங்க அப்பா உயிரை விட்டு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.நீங்க இனிமே இதை பற்றி எதுவும் நினைக்காதீர்கள்.நீங்கள் போய் உக்காருங்க,உங்க பையனுக்கு சாப்பாடு பேக் பண்ணிட்டு வரேன்"

"அதுக்குள் நீங்க குளிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம்.கீழே இரண்டாவது ரூம் தான் உங்களுக்கானது. என்னைக்காவது ஒருநாள் நீங்களாம் வருவீங்கன்னு தெரியும்.அதனால் தான் முன்னேற்பாடாக ரூம் போட்டு கட்டினது"

"தனது மருமகளை பார்த்து சிரித்தவர் சரி கண்ணு என்றவாறு உள்ளே போய் குளித்து உடைமாற்றிக் கொண்டு,பூஜை அறைக்கு போய் உட்கார்ந்த பாட்டியோ வழக்கம் போல் கடவுளிடம் கண்ணீரோடு தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்"

தோட்டத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த பேத்திகள் இருவரும் என்ன வள்ளி கண்ணு அமைதியாக உட்கார்ந்திருக்க?

டிவி பார்க்கிறாயா???

அட கழுதைங்களா எவ்வளவு கொழுப்பு இருந்தால் எங்க அம்மா பேரை சொல்றீங்க என்றவாறு சீவகன் வரவும், பேர் வைக்க தானப்பா பேரப்பிள்ளைகள் இருக்கோம் என்று இருவரும் சிரித்தார்கள்.

“அப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்கவும் யாரு என்றவாறு வாசலில் போய் எட்டிப் பார்த்த மதி,ஏய் மலரு மலரு தாத்தா டி என்று அதிர,என்னது அப்பாவா என்றவாறு சீவகனும் வந்து பார்க்க,அங்கே பலராமனும் வான்மதியின் அண்ணன் வீரேந்திரனும் நின்று கொண்டிருந்தனர்"

இருவரையும் பார்த்தவர்கள்,சொல்லவே இல்லையே என்கவும்,எங்கப்பா தாத்தா சொல்ல விட்டார்??

"என்னையும் கொண்டு வந்து சித்தப்பா வீட்டில் விடுனு நைட்ல தூங்க விடாம பாதி நேரத்தில் கார் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் பா என்றவாறு உள்ளே வந்தான்"

“சித்தி...சூடா ஒரு டீ கொண்டுவா என்றபடி சோபாவில் உட்கார அவன் குரலை கேட்டு வெளியே வந்த கண்ணகி வீரா என்று அதிர்ந்தவர், பின்னால் வந்த பலராமனை பார்த்து சுதாரித்தவர் வாங்க சார் என்க,அவரும் தலையசைத்தார்"

"இதோ கண்ணு என்றவர் உள்ளே போய் இரண்டு டீ போட்டு எடுத்துட்டு வந்து மாமனாருக்கும் கொழுந்தன் மகனுக்கும் கொடுக்க, வள்ளியம்மையோ தனது கணவரை தான் முறைத்துக் கொண்டிருந்தார்"

ஏன்டி ஒரு வார்த்தை நீங்களும் வரிங்களா என்று எங்கேயாச்சும் கூப்டியா?அப்டியே நீயும் உன் பேத்தியும் மட்டும் ஒய்யாரமா வந்துட்டீங்களே???

எங்களை எல்லாம் பார்த்தா மனுஷனா தெரியலையா??ஏன் நாங்களாம் என் மகன் வீட்ல தங்க கூடாதா என்று மனைவியிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்தார்.

இங்க பாருங்க என் வாயில நல்லா வந்துரும்.எத்தனை வாட்டி நான் கேட்டேன் நீங்க வருகிறீர்களானு,எனக்கு பஞ்சாயத்து இருக்கு,புண்ணாக்கு உருட்டணும்,புளி ஒடைக்கணும்னு பெரிய நீதிமான் போல பேசிட்டு இருந்தீங்களே..

ஏய்.. நீயும் மதியும் இங்கு வந்தாச்சு, இவன் மில்லுக்கு போனால் நைட்டு தான் வருவான்.எனக்கு பொழுது போகணுமே.உன் மவன் ஹாஸ்பிடல் போறான்.மருமகள் ஸ்கூலை கட்டிக்கிட்டு அழுவுது.

"தனியா இருக்க எனக்கு பைத்தியம் பிடிக்காதா என்று பலராமன் சொல்லவும், அவர் சொல்வதும் சரிதான் என்பது மற்றவர்களுக்கும் புரிந்தது"

“சரி பிரஷ் ஆகிட்டு வாங்க எல்லாருமே சாப்பிடலாமென கண்ணகி கூப்பிட, நாங்க ரெண்டு டிக்கெட் எக்ஸ்ட்ரா வந்துட்டோமே சித்தி,எங்களுக்கும் சாப்பாடு இருக்குமா?என்று வீரேந்திரன் கேட்க,அட வீரா...உன் சித்தி எப்பவுமே எக்ஸ்ட்ரா தான் பண்ணுவாள்"

நீ கவலைப்படாதே,போய் ரெண்டு பேரும் பிரெஷ் ஆகிட்டு வாங்க என்று சீவகன் சொல்ல,அதேபோல் இருவரும் கால் மணி நேரத்தில் குளித்து பிரஷ் ஆகி வரவும் எல்லாருக்கும் கண்ணகியே டிபனை பரிமாறினார்.

சரி நான் ஆபிஸிற்கு கிளம்புறேன் என்று சீவகன் சொல்லிக் கொண்டு போக,கண்ணகியும் ஸ்கூலுக்கு கிளம்பியவர் பக்கத்தில் தான் ஸ்கூல்.மதியத்துக்கு சாம்பார் பொரியல் ரசம் எல்லாம் வச்சுட்டேன்.

மலர்-மதி,ரெண்டு பேரும் சாப்பாடு வடிச்சு அப்பளம் பொறிச்சி எல்லாரும் சாப்பிடுங்க என்றவாறு அவர் கீழே இருக்கிற ரூமிற்குள் போனவர் சிறிது நிமிடத்தில் தயாராகி மதிய சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவரோ ஸ்கூட்டியில் ஏறி சென்றார்.

"இப்பொழுது ஐவரும் மட்டும்தான் வீட்டில் இருந்தனர்.பேரப்பிள்ளைகள் மூவரோடு இருந்த முதிய தம்பதிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது"

ஏன் ணா ஒண்ணுமே வாங்கிட்டு வரலையா என்று மலர் கேட்க,அய்யோ சின்ன கண்ணு, தாத்தா தான் உயிரை வாங்குனாரு.என்ன வாங்க முடியும் சொல்லு??நீ கேட்டதெல்லாம் நானும் வாங்கிட்டு வரனும்னு தான் நினைச்சேன் டா.

போ ணா உன் பேச்சை காய் என்றவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள,அடேய் இந்த ஒருமுறை மன்னிச்சிடு.அடுத்து வரும் போது அண்ணன் வாங்கிட்டு வரேன் என்று ஒரு வழியாக கெஞ்சி கதறி தங்கையை சமாதானப்படுத்தினான்.

"இரண்டு நாட்கள் தங்கியிருந்த வீரா அவர்களிடம் சொல்லிக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பி விட்டார்"

"வழக்கம்போல் இவர்கள் இருவரும் வேலைக்கு போக,மலரும் கல்லூரிக்கு போயிட்டு வந்த மீதி நேரம் எல்லாம்,நால்வரும் அக்கம் பக்கம் இருக்கும் இடங்களுக்கு சென்று வந்தனர்"

"சீவகனுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருக்கும் சில கோயில்களுக்கு பெற்றோர்களை அழைத்துப் போனார்"

"அவர்கள் வந்து ஒரு மாதம் கடந்திருக்க சரி பா நான் ஊருக்கு கிளம்புறேன் என்று பலராமன் மட்டும் பொள்ளாச்சிக்கு கிளம்பி விட்டார்"

"வீட்டிற்கு பின்னாடி தெருவில் இருக்கும் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதால் வள்ளியம்மையும் கண்ணகியும் கோயிலுக்கு சென்று விட,மலர் கல்லூரிக்கு சென்று விட்டாள்"

"வயிற்று வலியின் காரணமாக மதி மட்டும் வீட்டில் இருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்கவும், ரூமில் படுத்திருந்தவளோ யாருன்னு தெரியலையே என்றவாறு எழுந்து போய் கதவை திறந்தவளோ,அங்கிருப்பவனை பார்த்து அதிர்ந்து போனாள்"

அவளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அதிர்ந்து நிற்பவளின் கையைப் பிடித்து பின்பக்கமாக வளைத்தவன்,அங்கிருக்கும் சுவற்றில் சாய்த்து,அவள் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளோடு புதைந்து நின்றவன்,யாரை கேட்டுட்டு நீங்க வந்த டி?

பேசாம இருந்தாலும் ஊருக்குள்ள இருக்கேன்னு இருந்தேன்,நீ என்னனா உன் சித்தப்பா வீட்டில் விருந்து திங்குகிறதுக்கு வந்து ஒரு மாசமா உட்கார்ந்திருக்க..

ஏன் என்கிட்ட சொல்லிட்டு வரல சொல்லு டி?

யாரை கேட்டு நீ வந்த?

உனக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது,எனக்கு பதில் சொல்லு டி என்கவும்,ஏற்கனவே வயிற்று வலி அதோடு கதிர் வேற கையை முறுக்கிக் கொண்டு அவளோடு புதைந்தபடி நிற்க,ஏதோ இரும்பு வளையத்திற்குள் மாட்டியது போல வான்மதிக்கு அழுகை வந்தது.

அவள் அமைதியாக இருக்கவும், உன்ன தாண்டி கேட்கிறேன்,ஏன் அதுக்குள்ள நான் உனக்கு கசந்துட்டேனா? ?

ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து நான்தான் வேணும்னே என் பின்னாடியே சுத்திட்டு தானே இருந்த??இந்த ஒன்றரை வருஷமா எங்க போச்சு உன் காதல்??

அவ்ளோ தானோ காத்துல பறந்துடுச்சா?

நான் இல்லாமல் நீ வாழ்ந்துடுவியா?

போன் பண்ணுறதை நிறுத்திட்ட கோவமே இன்னும் உன் மீது போகலை,சரி ஊருக்குள் தானே இருக்கனு நிம்மதியாக இருந்தால் எனக்காக தினமும் மாடில நிக்கிறவளை சில நாளா காணும்.

இதே தொடர எங்கடா ஒரு மாசம் ஆள காணோம்னு விசாரித்தால்,நீ இங்க வந்து இருக்கேன்னு தெரியுது என்ற பல்லைக் கடிக்க,இதுவரை அமைதியாக இருந்தவள், இப்பொழுதுதான் வாயை திறந்து கொஞ்சம் தள்ளி போறீங்களா என்றாள்.

நான் எதுக்குடி தள்ளி போகணும்??

நான் இப்படித்தான் இருப்பேன்.நீ எனக்கு சொந்தமானவள் டி.அதில் வெகுண்டு திரும்பி பார்த்து முறைத்தவள்,ஏன் அது உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சுதா??

இத்தனை வருஷம் நாய் போல உங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேனே அப்ப தெரியலையா??

ஏய்...என்ன டி வாய் ஆடுர?

எனக்கு அப்பயும் தெரிஞ்சது இப்பவும் தெரிஞ்சது எப்பயும் தெரியும் அதுக்காக நீ இப்படி பேசாம அமைதியா இருப்பியா?

இதோட நீ என்கிட்ட பேசி 13 மாசம் 25 நாள் ஆகுது டி என்கவும்,அதைக் கேட்டு அதிர்ந்து போய் கதிரை பார்த்த வான்மதிக்கு,கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

ஏன் உனக்கு மட்டும் தான் காதல் வருமா?எனக்கெல்லாம் உன் மேல காதல் வரதா?

கடல் நீல கலர் பாவாடை சட்டையில் கரு நீலத்துல தாவணி போட்டுக்கிட்டு,நீட்டு ஜடை பின்னி மல்லிகை பூ மணக்க,துள்ளி ஓடும் புள்ளி மானை போல,அந்த வயல்ல ஓடி வந்த நீ எதிர்ல நான் வருவது தெரியாம இடிச்சு,அந்த சேத்துல விழுந்து என் மேல புரண்டியே அப்பவே இந்த மனசுல நீ வந்துட்டடி.

"சின்ன பொண்ணுனு நானும் மனசை கட்டுப்படுத்திட்டு தான் இருந்தேன்.ஆனா முடியலை டி"

நானும் ஆம்பளை தானே??

"இதுக்கு ஒன்னும் கொறச்சலில்லை"

ஊர் உலகத்துல யாரும் இப்படி காதலை சொல்ல மாட்டாங்க என்ற குரல் ஜன்னல் வழியாக கேட்கவும்,பதறிப் போய் அவளிடம் இருந்து விலகியவன்,யாரென்று கதவை திறக்க அங்கே கையை கட்டிக் கொண்டு மலர்தான் நின்று கொண்டிருந்தாள்.

சொல்வாளா..??
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top