Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
சென்னை:
"ஒருவாறு தூக்கம் கலைந்து கண்விழித்த கார்குழலி பெட்டை தடவி பார்க்க,அங்கே வெறுமையாக இருக்கவும்,பதறி அடித்து எழுந்தவளுக்கு,தான் இருக்கும் கோலம் கண்டு வெட்கம் வந்தது"
"பின்னர் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவள்,இவர் எங்கே போனாரென்று கணவனை தேட,அங்கே சேதுராமன் இருப்பது போல எந்த அறிகுறியும் இல்லை"
"வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவளுக்கு, டிரஸிங்டேபிளின் மேல் லெட்டர் இருப்பது தெரிந்தது"
இது என்ன லெட்டர் என்றவாறு கைகள் நடுங்க அதை எடுத்தவளோ பிரித்து படிக்கலானாள்.அதில், அன்புள்ள மனைவி குழலிக்கு உனது ஆருயிர் கணவன் சேதுராமன் எழுதுவது.தவிர்க்க முடியாத ஒரு சூழலில் சிக்கியிருக்கிறேன்.
அதை முடித்துவிட்டு உன்னை தேடி வருவேன்.என்மேல் உனக்கு பூரண நம்பிக்கை இருக்கென்று எனக்கு தெரியும்.அதனால்தான் கடந்த மூன்று வருடமாக உன்னை எவ்வளவோ நான் காயப் படுத்திய போதும் நீ எனக்காக காத்திருந்தாய்.
இன்னும் சிறிது நாட்கள் எனக்காக அதே நம்பிக்கையோடு காத்திரு டி. விரைவில் வருவேன் இப்படிக்கு உனது உயிர்...என்பதோடு கடிதம் முடிந்திருந்தது.
"அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க,வேகமாக நைட்டியை மாற்றிக்கொண்டு கதவை திறக்கவும்,அங்கே கார்குழலியின் அம்மா சாந்தா தான் நின்று கொண்டிருந்தார்"
“என்னமா என்க,என்ன குழலி உடம்பு எதுவும் சரியில்லையா?மணி 7 ஆகுது இன்னும் எழுந்து வரலையேனு பார்க்க வந்தேன் என்கும் போது தான் மகளின் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்தவர்,என்னங்க என்று கத்தினார்"
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுந்தரம் மனைவியின் சத்தம் கேட்டு,என்னாச்சு என்று பதறியடித்து மாடிக்கு வந்தவர் எதுக்கு டி இப்படி கத்துர என்று மனைவியை முறைக்க,கொஞ்சம் உங்க மகள் கழுத்தை பாருங்க என்றார்.
அதன் பிறகு தான் குழலிக்கும் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை பற்றி ஞாபகம் வர, அய்யோ என்று திரும்பிக் கொள்ளவும்,அடிப்பாவி உன்னை பெத்து எடுத்து வளர்த்த எங்க கிட்ட சொல்லாம எப்படி டி கல்யாணம் பண்ணுன?
இன்னும் ஒரு மாசத்துல உனக்கு கல்யாணம் பேசி முடித்திருக்கே டி.அவங்க கிட்ட நான் என்ன டி சொல்லுவேன் என்று மகளை அடித்துக் கொண்டு சாந்தா கேட்க,அவளோ எதுவும் சொல்ல முடியாமல் அழுதாள்.
"வாயை தொற டி"
ஒத்த புள்ளையா இருக்குணு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்கனு தலையால அடிச்சிக்கிட்டனே கொஞ்சமாவது என் வார்த்தைகளை காதில் வாங்குணீங்களா?
"இன்னைக்கு அவள் என்ன பண்ணிட்டு வந்துருக்காள்னு நல்லா பாருங்க என்று சாந்தா அழ,சுதந்தரத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை"
வேதனையோடு மகளை பார்க்க,மன்னிச்சிடுங்கப்பா என்றவளோ சேதுராமனை காதலித்த விஷயத்தையும்,இருவரும் கோயிலில் கல்யாணம் பண்ணிக் கொண்டதாகவும் பொய் சொல்லவும்,அதனால் தான் மூன்று வருடமாக கல்யாணம் வேணாம்னு சொன்னியா?என்று மகளை முறைக்க,ஆமாம் என்றாள்"
"வரிசையாக மூன்று குழந்தைகள் இறந்த பிறகு, கடவுளிடம் வரம் வாங்கி பெற்ற ஒரே மகள் தான் நம்ப குழலி. அவள் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் சாந்தா"
ஏன் டா,குழலி அப்பாகிட்ட இப்படி ஒரு வார்த்தைனு சொல்லிருக்கலாமே என்றவாறு கீழே வந்த சுந்தரம் மாப்பிள்ளையின் அப்பாவுக்கு கால் பண்ண,அந்த பக்கம் அட்டன் பண்ணியவர் சொல்லுங்கள் சம்பந்தி நல்லாருக்கிங்களாயென இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
சுந்தரம் ஏதோ சொல்ல தயங்குவதை உணர்ந்தவர்,சொல்லுங்கள் சம்பந்தி என்ன பிரச்சனை?
“அது வந்துங்க என்றவர் இதுபோலனு நடந்த விஷயத்தை சொல்ல,அவர்களோ அந்த பக்கம் காச்மூச்சென்று கத்தினார்கள்.பின்னர் ஒரு வழியாக பேசி அவர்களை சமாதானப் படுத்தவே சுந்தரத்திற்கு போதும் போதுமென்றானது"
மகளை பார்த்த சாந்தா,யார் டி அவன்?எந்த ஊர்?என்று கேட்கும் போது கூர்கில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். பேர் சேதுராமன்.
மகள் சொன்னதை கேட்டு என்னாஆஆ போலீசா என்று அவர்கள் அதிர,ஆமாம் என்றாள்.சரி போன் பண்ணு அவர்கிட்ட நான் பேசணும் என்றவாறு சோபாவில் உட்கார்ந்த சுந்தரத்திற்கு இன்னும் இதை நம்பமுடியவில்லை.
ரூமில் இருக்கும் போனை எடுத்துட்டு வந்தவள் சேதுவின் நம்பருக்கு கால் பண்ண இரண்டாவது ரிங்கில் அட்டென்ட் பண்ணியவன் குழலி என்னடி ஆச்சு?
ஒன்னும் பிரச்சனை இல்லையே?
“அவனின் பதட்டமான குரலை கேட்டவர் ஹலோ..நான் குழலியோட அப்பா சுந்தரம் பேசுறேன்.உங்ககிட்ட நான் உடனே பேசியாகணும்.நேரில் வாங்க என்றவாறு அழைப்பை துண்டித்தார்"
“காரில் இருந்த சேதுராமன் அண்ணா காரை திருப்புங்க..எங்கேயிருந்து என்னை கூப்பிட்டு வந்தீர்களோ அந்த இடத்திற்கு போங்கணா என்றவாறு சீட்டில் சாய்ந்து கண்களை மூடினான்"
சரிங்க தம்பி என்றவர் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு காரை திருப்பியவர் சென்னையை தாண்டி ரொம்ப தூரம் வராததால் இரண்டு மணி நேரத்திலேயே கார்குழலி வீட்டிற்கு முன்பு வந்து சேர்ந்தார்
"தான் செய்தது தவறாக இருந்தாலும் அதை ஒத்துக் கொள்ளும் தைரியத்தோடு, கம்பீரமாக உள்ளே வருபவனை பார்க்க குழலிக்கு பெருமையாகவும்,அதேநேரம் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது"
"இருவரையும் பார்த்தவன் வணக்கம், நான் சேதுராமன்.பெங்களூர்ல விகே பில்டர்ஸ் ஓனர் வாஞ்சிநாதனுடைய தத்துப்பையன்"
வி.கே பில்டர்ஸ் இந்தியாவிலேயே புகழ் பெற்ற நிறுவனம் என்பது அவருக்கு தெரியும் என்பதால் அப்படிங்களா என்று அதிர்ந்து போய் சுந்தரம் கேட்க,ஆமாங்க சார் என்றவன் தனது பிறப்பை பற்றியும் வளர்ந்தது படித்ததெல்லாம் மறைக்காமல் சொன்னான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்டவர், சரிங்க இப்போதைக்கு உடனடியாக ரிசப்ஷன் வச்சிக்கலாமே, இதில் ஒன்னும் பிரச்சினை இல்லை தானே?ஒரு மாசத்துல பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு வேற பண்ணிட்டோம்.
"அதை பற்றி கேள்விகள் வருவதற்குள் இதை நடத்துவது நல்லது என்கவும்,உங்களோட விருப்பம் சார்.என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பண்ணுறேன் என்றான்"
இன்னும் எதற்காக சார்...தாராளமாக அத்தை மாமா என்றே சொல்லுங்க தம்பி.இதுவரைக்கும் எங்களுக்கு ஒரு மகள் இப்போது மருமகனே மகனாக கிடைத்திருக்கிறார் என்று சாந்தா சொல்லவும் சந்தோஷங்கத்தை என்ற சேதுராமன் காதலோடு மனைவியைப் பார்த்தான்.
"அதற்கு பின் வேலைகள் துரிதமாக நடந்தது"
"ஒரு வாரத்தில் மீண்டும் பத்திரிகை அடித்து,நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் சட்டப்படி கார்குழலியை திருமணம் செய்து கொண்டான்"
"அன்று மாலையே இருவருக்கும் மண்டபத்தில் ரிசப்ஷன் நடக்க,சேதுராமனின் பார்வைகளோ வாசலில் தான் இருந்தது"
ஒரு வாரத்துக்கு முன்னே நடந்த விஷயத்தை தனது அண்ணனுக்கு தெரிவித்திருந்தான்.ஆனால் அவன் ரிசப்ஷனுக்கு வரேன் இல்லை வரமாட்டேன் என்று எதுவும் சொல்லவில்லை.
"ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தனது அண்ணன் கண்டிப்பாக வருவான் என்று சேதுவும் காத்திருக்க,அவனது நம்பிக்கையை வீணாக்காமல் விக்ரமும் கம்பீரமாக அங்கு வந்தான்"
"மூன்று வருடங்களுக்கு பிறகு நேரில் பார்த்த அண்ணனை கட்டிக்கொண்டு சேது கண்கலங்க,சந்தோஷமா இருடா என்றான்.பின்னர் அவனை தனது மாமனார் மாமியாருக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்"
சேது என்று தனியாக அழைத்தவன் ஏண்டா இப்படி?என்னை பற்றி நீ கவலைப்படாதே புரியுதா.போய் உன்னோட கல்யாண வாழ்க்கையை மட்டும் பாரு என்று சொல்லிவிட்டு விக்ரம் அங்கிருந்து சென்று விட்டான்.
"ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்து பொண்ணு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர்"
சம்பிரதாயப்படி அவர்களுக்கு அன்று இரவு முதலிரவுக்கான ஏற்பாடு செய்திருக்க,இருவரும் இப்போது இருக்கும் மனநிலையில் முதலிரவு கொண்டாட மனமில்லாமல் அமைதியாக படுத்து தூங்கிவிட்டனர்.
"மறுநாள் அவளின் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக குன்னூரை நோக்கி புறப்பட்டான்"
"கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தவன் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தான்"
நீதி நேர்மை நியாயம் என்று சொல்லி தானே இந்த வேலையில் சேர்ந்தோம்.அண்ணன் சொன்னது போல் இந்த கடத்தலில் சம்பந்தமில்லை என்றாலும்,மனசாட்சிக்கு தவறு என்று தோணிக் கொண்டே இருக்கிறது.
இனிமே இந்த வேலை நமக்கு வேண்டாம் என்றவன் வேலைக்கு விஆர்எஸ் எழுதி கொடுத்துவிட்டு,அவன் சம்பாதித்த பணத்தில் அவனுக்காக குன்னூரில் ஏற்கனவே ஒரு வீட்டையும் அதைச் சுற்றி சில நிலங்களையும் வாங்கி ஆட்களை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறான்.
அங்கு போய் மனைவியுடன் வாழ்க்கையை தொடங்க முடிவு பண்ணியவன்,இதுவரை அவனுக்காக தனி அக்கவுண்டில் வி.கே போட்டு வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்தவன், அவனுக்குத் தெரிந்த இரண்டு ஆசிரமத்திற்கு நேரில் போய் வாஞ்சிநாதன் பெயரைச் சொல்லி பணத்தை கொடுத்தவனோ,அவன் சம்பளத்தில் தேவையானதெல்லாம் வாங்கி இதோ கல்யாணம் முடித்துக் கொண்டு புதிய விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.
பொள்ளாச்சி:
"வேகமாக தனது ரூமிற்கு போனவன் போனை எடுத்து தன்னவளுக்கு கால் பண்ண,மலரோ அவன் அழைப்பை ஏற்கவில்லை,"
கிட்டத்தட்ட 50 முறைக்கு மேல் கால் பண்ணிருப்பான் அவள் எடுக்கவே இல்லை.
ரொம்ப கோபமாக இருக்கிறாள் போல என்று நினைத்தவன்,சரி நேரிலே போய் சமாதானம் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்து கண்ணை மூடியவனுக்கு தனது பெரியப்பா நினைவு வர,சட்டையை போட்டுக் கொண்டு கதவை திறந்து வெளியே போகும் மகனை வாசனும் சீதாவும் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"அப்பொழுதுதான் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு விநாயகமும் கனியும் வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருக்கும்போது,இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் இந்த நேரத்தில் வாரது என்று எட்டிப் பார்த்தார்"
"அங்கே தனது தம்பி மகன் வருவதை பார்த்தவர்,என்ன டி உன் சின்ன மவன் வரானே என்க,ஏன் உங்களுக்கு மகன் இல்லையா என்று கனியும் முறைத்தார்"
ஆத்தாளும் மகனும் தானே கொஞ்சி குலாவுறிங்க..அவனுக்கு புடிச்சதை நீ செஞ்சு அனுப்புறதும்,உனக்கு பிடிச்சது சீதா செஞ்சா அவன் கொண்டு வந்து கொடுப்பதும் எல்லாம் நான் பாத்துகிட்டு தாண்டி இருக்கிறேன்.
ஒரு மனுஷன் வீட்டில் இருக்கிறானே என்று கண்ணில் ஏதாவது காட்டுறீங்களா???
"வேகமாக வந்த வேந்தன் தனது பெரியப்பாவை பார்த்து தயங்கி நிற்க, வா கண்ணு வந்து உட்காரு என்க, அமைதியாக வந்து பெரியப்பாவின் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தான்"
"எப்பொழுதும் அவன் முகத்தில் இருக்கும் அந்த தேஜஸ்ஸும் கம்பீரமும் இப்பொழுது இல்லாததை பார்த்த விநாயகத்திற்கு,ஏதோ விஷயம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது"
ஐயா எழிலு...என்ன ஆச்சு?
ஏன் கண்ணு உன் முகம் இப்படி வாடி போயிருக்கு?
அப்பா ஏதாச்சும் சொன்னா என்று விநாயகம் கேட்கவும்,சில வருஷங்களுக்கு முன்னாடி நடந்ததை இப்பதான் அப்பா என்கிட்ட சொல்லுச்சு என்றான்.
அதைக் கேட்டு திடுக்கிட்டவர் அந்த அறிவு கெட்டவன் இப்ப எதுக்கு இந்த விஷயத்தை எல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான் என்று தனது தம்பியை சத்தம் போட,என்னால தான் பா அப்பாவும் இந்த விஷயத்தை சொன்னாங்க..
அதைக் கேட்டவர் உன்னால சொன்னானா? என்ன சங்கதி? உன் பெரியப்பனுக்கு தெளிவாக சொல்லு கண்ணு...
அது வந்து பா நாளைக்கு நாள் நல்லாருக்குன்னு வான்மதியை பொண்ணு கேட்டு போகலாம்னு அம்மா சொல்லுச்சு.நான் எனக்கு வேற பொண்ணை புடிச்சி இருக்குன்னு சொன்னேன்.
ஓஓஓஓ...அந்த பொண்ணு யாரு??
நம்ம சொந்தமா,உறவு முறையா? என்று கோபமாக விநாயகம் கேட்க,சீவகன் மாமா பொண்ணு பா..எதேஏஏ கண்ணகியோட மகளா என்று கனியும் விநாயகமும் அதிர்ந்தார்கள்....!!!
சொல்வாளா..??

Last edited: