• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
செ ன் னை:

மட்டன் பிரியாணியை நல்லா வெளுத்து கட்டிக் கொண்டிருந்த ஜானுக்கு கால் வரும் ரிங்க்டன் சத்தம் கேட்கவும், தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க,அதில் பாஸ் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் சொல்லுங்க பாஸ் என்க, அந்த பக்கம் இருந்த வி.கே என்னடா பண்ணிட்டு இருக்க?

"இப்ப தான் சாப்பிடுறேன்"

"சொல்லுங்க பாஸ் என்ன பண்ணனும்? நீங்களே கால் பண்ணிருக்கீங்க என்று ஜான் பதற,டேய் எதுக்குடா இவ்வளவு டென்ஷன்?நான் கேட்ட மூணு தங்கம் இப்போது ரெடி என்று சேது மூலமாக கேள்விப்பட்டேன் அப்படியா???

"ஆமா பாஸ்..இன்னைக்கு நைட் மூணு தங்கத்தோடு நான் அங்கே கிளம்புறேன்"

அதைக் கேட்ட வி.கே,அங்கு காட்டு பங்களாக்கு போக வேண்டாம்.நீ என்ன பண்ணுற என்றால் நம்ப பங்களாக்கு போற வழியில நாலாவது திருப்பத்தில் இடது பக்கமாக நீல கலர் பெயிண்ட் அடிச்ச ஓட்டு வீடு இருக்கும்.

அந்த வீட்டுக்கு போ மத்ததெல்லாம் அங்க இருக்கிறவங்க கிட்ட என்ன பண்ணனும் என்று சொல்லு என்க, சரிங்க பாஸ் என்று போனை வைத்தவன்,டேய் ஜானு இந்த மூணு தங்கத்தையும் கைமாற்றிவிட்டால் உன் காட்டில் அடை மழை தாண்டா என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் சாப்பிட்டு முடித்து,அதற்கான பணத்தை கொடுத்து விட்டு மற்ற வேலையை பார்க்க சென்றான்.

"இரண்டு நாள் கடந்திருந்தது"

"யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் மூன்று விதமான எடைகள் கொண்ட தங்கத்தோடு காரில் ஏறியவன் கூர்க் நோக்கி பயணித்தான்"

"அதிகலை விடியல் தொடங்கும் முன்னே வி.கே சொன்ன வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்திய அடுத்த நொடி அங்கிருந்த இரும்பு கதவு திறக்கவும் கார் உள்ளே போய் நின்றது"

"ஹப்பாடா என்றவாறு கீழே இறங்கியவன் இரண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறிக்கும் போது இரண்டு ஆட்கள் அங்கு வந்தனர்"

“வா ஜானு என்க,டேய் பார்த்து எடுத்து போங்க,எந்த சேதாரமும் ஆயிட கூடாது.அப்படி ஏதாவது சின்ன கீறலாவது இருந்துச்சு பாஸ் என்ன பண்ணுவார்னு சொல்ல முடியாது என்று ஜான் மிரட்டினான்"

கண்டிப்பாக பா,இது நீ சொல்லி தான் தெரியணுமா என்றவர்கள் காரில் இருந்த மூன்று தங்க பார்சலையும் தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்த ரூமிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தவர்கள்,சரி ஜான் நாங்க கிளம்புறோம் என்க,இந்தாங்கடா பணம் என்று அவனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுக்கும் போது,ஜானின் போனுக்கு கால் வந்தது.

அனேகமா பாஸாக தான் இருக்கும் என்றவாறு பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க அதில் வீ. கே என்று வரவும் அட்டென்ட் பண்ணியவன் சொல்லுங்க பாஸ் என்க,ஹம்..என்ன ஜான்,சொன்ன வேலை என்ன ஆச்சு???

“அதெல்லாம் பத்திரமாக கொண்டு வந்து மூன்று தங்கத்தை சேர்த்துட்டேன்.இதற்கப்புறம் இங்கிருந்து எப்படி ஷிப்ட் பண்ணும் என்பதை நீங்கதான் எனக்கு சொல்லணும் பாஸ்"

சரி சரி அதை நான் பார்த்துக்கிறேன் நீ அந்த காரை அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டு நடந்து போ.உன்னை பிக்கப் பண்ணிக்க ஒரு டூவீலர் வரும். அதுல ஏறி நீ சென்னைக்கு போய் உன்னோட வழக்கமான வேலையை பாரு டா.

"இதுக்கு அப்புறம் நானாக உன்னை கண்டாக்ட் பண்ணும் வரைக்கும் இதை பற்றி எதுவும் யோசிக்காதே.நீ ஆசைப்பட்ட போல அந்த அண்ணா நகர் டவருக்கு பக்கத்துல இருக்கும் அப்பார்ட்மெண்டின் 11-வது பில்டிங்கில் ஏழாவது வீட்டை உனக்காக வாங்கிருக்கேன்"

நாளை காலை 11 மணிக்கு ரிஜிஸ்டர் சந்தோஷமா இரு டா என்கவும்,இதை கேட்ட ஜானுக்கு செய்யும் தொழில் தவறாக இருந்தாலும் தனக்காக ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதே என்பதை நினைத்து அழுகை வந்தது.

இதுவரை பாஸ் என்று கூப்பிட்டவன் இப்பொழுது அண்ணா என்று நா தழுதழுக்க இதுதான் கடைசி அசைன்மெண்ட்.இனி மேல் நீ எப்போதும் போல வேலையை பாரு டா.இதை மறந்துடு சரியா என்கவும் அண்ணா என்று அவன் அதிர,ஆமா டா போய் உன் புது வாழ்க்கையை தொடங்கு போ என்றவாறு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"அவர்களிடம் காரை கொடுத்தவன் அந்த காட்டு பாதையில் நடந்து வரும்போது ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியாக இருந்தது"

"இந்த பணத்தால் தானே
அப்பாவின் உயிர் போனது,அன்றைக்கு எங்களிடம் பணமிருந்திருந்தால் ஹாஸ்பிடலுக்கு போய் எங்கப்பாவை காப்பாற்றியிருக்கலாமே"

அடுத்த வேளை சோறுக்கு வீடு வீடா கையேந்திருக்க மாட்டேனே,இந்த பணத்தால் தானே எல்லாருக்கும் முன்னாடி அவமானப்பட்டோம் என்னும் நிகழ்வுகள் கண் முன்னால் வர,நம்ப ஒன்னும் கொலை குற்றம் பண்ணலையே???

"நல்லது தான் பண்ணியிருக்கிறோம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவனுக்கு,அவன் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறான் என்பது தெரியவில்லை"

ஒன்று மட்டும் அவனுக்கு நன்கு தெரியும்.இந்த வேலைக்கு தான் இல்லை என்றால் நிச்சயமாக இதே வேலைக்காக நம்மை போல எத்தனையோ பேர் காத்திருப்பார்கள்.

இதுவரை செய்தது போதும் இனி மேல் இந்த கடத்தல் விஷயத்தில் ஈடுபடக்கூடாது.முழு மனதாக திருந்தி வாழ வேண்டும் என்று உறுதியோடு நடந்து கொண்டிருந்தவனின் முன்னால் டூவீலர் ஒன்று வந்து நிற்க,அதில் ஏறி உட்கார்ந்தான்.

மலர் நினைவுகள்:

திடீரென்று ஒருவன் அதுவும் இன்று தான் கோயில் பார்த்தவன்.இப்படி கேட்ட அதிர்ச்சியில் விழிகளை அகலமாய் விரிக்க,சத்தியமாக ஏன் எதற்காக என்ற காரணம் தெரியலை டி.உன்னை பார்த்த உடனே மனசுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.

"அப்படியே மனசுக்குள்ள பின்னி பிணையுது"

"ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாமல் வருவது தான் காதலென்று கொஞ்ச நேரம் முன்பு தான் தெரிஞ்சிக்கிட்டேன்"

மனதார நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன் டி.என்றைக்கு இருந்தாலும் உன் கழுத்தில் நான் தான் மூன்று முடிச்சு போடுவேன் என்றவனோ,அதிர்ந்து போய் நிற்பவளின் கையில் இருந்த போனை எடுத்தவன் ஆன் பண்ண லாக் இல்லாததால் ஓபன் ஆனது.

நல்ல வேளை கண்ணா பின்னான்னு குரலி வித்தை காட்டுற போல லாக் பண்ணாம இருந்தாளே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,
தனது நம்பரை அதில் டைப் பண்ணி வேந்தன் என்று சேவ் பண்ணியவன்,உனக்கு எப்போ பேசணும்னு தோணுதோ அப்போ எனக்கு கால் பண்ணு,உன் அழைப்புக்காக நான் காத்திட்டு இருப்பேன் டி என்று சொல்லிவிட்டு வந்த போலவே திரும்பி சென்றான்.

“அவன் போய் சிறிது நிமிடங்கள் சென்று ஏதோ சத்தம் கேட்டு தலையை உலுக்கியவள்,இங்கு என்னடா நடக்குது என்றவளோ போனில் என்ன பண்ணினான் என்று செக் பண்ண புதிதாக வேந்தன் என்னும் பெயர் சேவ் பண்ணியிருப்பது தெரிந்தது"

“வேந்தன் என்று முணுமுணுத்தவளுக்கு வெளியே அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போதே போன் வந்ததும் உள்ளே வந்து விட்டதால் அவன் யார் என்று தெரியவில்லை"

பேர் நல்லாருக்கே என்றவாறு முற்றத்தை தாண்டி வந்தவளுக்கு வெளியே உள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ,தாய் வீட்டில் நடந்த அவலங்களுக்கு காரணம் பாரிஜாதத்தோட குடும்பம்.அது இவர்கள் தான் என்பதை தெரிந்து கொண்டவளோ மனதிற்குள் பூத்த காதலை அந்த நிமிஷமே அடியோடு வெட்டினாள்.

"இப்போதைக்கு வெளியே போனால் அவனை பார்க்க வேண்டிய சூழல் வரும் என்பது புரிந்து நேராக தனது அறைக்கு சென்று கதவை அடைக்க,அவளையும் மீறி அழுகை வந்தது"

"மலருக்கு யார் மேலும் இப்படி ஒரு எண்ணம் வரவில்லை.ஏனோ கோவிலில் பார்த்தவுடனே அவனின் கம்பீரமும்,அவனைப் பார்க்கும்போது தனக்குள் எழுந்த குறுகுறுப்பும். அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது"

"ஆனால்,இப்படி பாரிஜாதத்தின் அண்ணன் பையனாக இருப்பான் என்பதை சிறிதும் அவள் எதிர்பார்க்கவில்லை"

அழுது கொண்டிருந்தவளுக்கு
நேற்று சீவகனும் கடந்த காலத்தை சொல்லும் போது பாரிஜாதத்தின் சின்ன அண்ணன் வாசனுக்கு எழில் வேந்தன் என்ற மகனும் இன்னொரு மகளும் இருக்கிறார் என்ற விஷயத்தைப் பற்றி பானுமதி சொன்னது ஞாபகம் வந்தது.

கடவுளே இத்தனை வருஷகாலமாய் எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தனே,எதற்காக என்னை இந்த ஊருக்கு வர வைத்தாய்???

"நாங்கள் மூன்று பேரும் நிம்மதியாக இருந்தோமே",அது உனக்கு பொறுக்கவில்லையா?

"எதற்காக இவனை எனக்கு உன் சந்நிதியில் காட்டி இப்படி ஆறாத வலியை கொடுத்தயென உள்ளுக்குள் கதறினாள்"

எவ்வளவு நேரம் கதவில் சாய்ந்து உட்கார்ந்து அழுதாள் என்று தெரியவில்லை.கதவு தட்டும் சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வந்தவள்,வேகமாக ரெஸ்ட் ரூமுக்கு போய் முகத்தை கழுவி விட்டு, டவலால் துடைத்துக் கொண்டே கதவை திறக்க,அங்கே அவளின் பெரியப்பா மகள் வான்மதி தான் நின்று கொண்டிருந்தாள்.

"சொல்லுங்க அக்கா என்க,ஒன்னும் இல்ல மலர் என்றவாறு உள்ளே வந்து கதவை சாத்தியவள்,நான் ஒரு போன் பண்ணனும் அதான் இங்க வந்தேன்"

"வெளியில் இருந்து பண்ணினால் எல்லாருக்கும் கேட்டு விடும் என்பவளின் முகத்தில் இருக்கும் பதட்டமே அது காதல் விஷயம் தான் என்பதை புரிந்து கொண்டாள்"

ஓஹோ...என்னங்கக்கா லவ்வா என்று சிரிக்க,ஆமாண்டி கொஞ்சம் கூட மனசு இறங்க மாட்டேங்குறாரு என்று வான்மதி வருத்தமாக சொல்லவும்,அப்படியா???

என் அக்கா அழகு ராணியை பிடிக்காமல் அப்படி எந்த சீமையிலிருந்து அந்த மனுஷனுக்கு பொண்ணு வேண்டுமா???

"மலர் சொன்னதை கேட்ட வான்மதிக்கு அழுகை வந்தது"

நானும் எவ்வளவோ இறங்கி போயிட்டேன் டி.கொஞ்சம் கூட என் மனசை புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.அவரை தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று அழ,ஐயோ அக்கா நல்ல நாள் அதுவும் எதுக்கு அழுகுறீங்க???

அப்பா,அம்மா கிட்ட சொல்லி சுமூகமா இந்த விஷயத்தை முடிக்கலாமே என்கவும்,நீ சொல்றது வாஸ்தவம் தான் டி.ஆனால் இதுக்கு அவர் சம்மதிக்கணுமே டி???

"ஸ்சூஊஊஊஊஊ"

“ஐயோ அக்கா முதல்ல என் மாமா யாருன்னு சொல்லுங்க,உனக்காக அப்பா,அம்மா கிட்ட சொல்லி நான் பேச சொல்றேன் என்கவும்,நிஜமாவா என்று கண்ணீரோடு கேட்கும் வான்மதியை பார்த்தவள் சத்தியமாக அக்கா"

"யார் அந்த மரமண்டை என் அக்காவை இப்படி அழ வைக்கிறதா?ஆளை காட்டுங்கள் கா மூட்டை பூச்சி போல நசுக்கிடுறேன்"

"உங்கள் உள்ளத்தை கொள்ளையடித்த கள்வன் யாரென்று சொல்லுங்க கா"

தனது தங்கை சொன்னதை கேட்ட வான்மதி,ஆள் யாருன்னு சொன்னா நீ என்னை தப்பா நினைக்க மாட்டியே என்கவும்,நான் ஏன் கா தவறாக நினைக்க போறேன்???

ஆமாஆஆ கா நீங்கள் சொல்றதை பார்த்தால் எனக்கு தெரிஞ்சவங்களோ என்று அதிர்வாக கேட்டாள்..!!

சொல்வாளா...??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top