• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்.

"வழமை போலன்றி இந்த முறை தனது சின்ன மகன் குடும்பத்திற்கும் சேர்த்தே துணி எடுத்திருந்தார்"

"நேற்று காலையில் போனவர்கள் தான் இதுவரை இந்த பக்கம் வரவில்லை.மகன் குடும்பம் வருமா வராதா என்ற தவிப்போடு வாசலை அவ்வப்போது வள்ளியம்மை பார்க்க தவறவில்லை"

குளித்து புது டிரஸை போட்டுக்கொண்டு வந்த பேத்தியை பார்த்த பானுமதி, அவரது ரூமிற்குள் போனவர் கண்ணகியின் பிள்ளைக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை எடுத்துட்டு வந்து பேத்தியின் கையில் கொடுத்தவர்,அப்போ எங்களால் உன் அம்மாவுக்கு எதுவும் கொடுக்க முடியலை கண்ணு.

உனக்காக இந்த பாட்டியும் மாமனும் சேர்த்து வைத்ததை மறுக்காமல் வாங்கிக்கோ கண்ணு என்கவும்,மலர்விழியோ நீங்களே போட்டு விடுங்க பாட்டி என்க,சரி டா என்றவர் அதிலிருந்த காசிமாலை வளையல் நெக்லஸை எடுத்து ஆசை ஆசையாக தனது பேத்திக்கு போட்டு அழகு பார்த்தவரின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.

"சற்று தள்ளி நிற்கும் தனது மகளை பார்த்த பானுமதியோ பெருமூச்சு விட்டவர் அம்மாடி கண்ணகி,ஆயிரம் தான் இருந்தாலும் நீ பெரிய வீட்டு மருமகள்.ஏதோ நடந்தது நடந்து போயிடுச்சு அதை இனிமேல் மாற்ற முடியாது"

“சின்னையா உங்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்பது உங்க ரெண்டு பேரின் முகத்தில் இருக்கும் பூரிப்பே சொல்லுது.அவருக்கு ஒரு கெட்ட பேர் வந்துச்சுன்னாக்க அதுக்கு முதல் காரணம் நீயும் உன் பொண்ணாக தான் இருப்பீங்க"

"ஒரு காலமும் சின்னவர் மேல அப்படி ஒரு எண்ணம் யார் மனதிலும் வந்துரக்கூடாது"

போ கண்ணு,போய் குடும்பத்தோடு பொங்கலை கொண்டாடு.என்னைக்கு அவங்க ரெண்டு பேரும் விட்டு போனாங்களோ அன்னையிலிருந்து நம்ம வீட்ல எந்த விசேஷத்தையும் நாங்க கொண்டாடுவதில்லை.

உன் அம்மா மேல உனக்கு உண்மையிலேயே அன்பும் மதிப்பும் மரியாதையும் இருந்தால் உன் புருஷன் வீட்டுக்கு போய் பொங்கலை நல்லபடியா கொண்டாடிட்டு வா.இல்லை உனது விருப்பம் என்றவாறு தனது அறைக்கு போனவர் பொங்கி வந்து அழுகையை வாயை மூடிக் மௌனமாக கதறினார்.

“அப்பா நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே என்று மலர் கேட்பதிலே,அவளுக்கு தங்களது வீட்டுக்கு வர விருப்பம் இல்லை என்கும் விஷயம் சீவகனுக்கு புரிந்தது"

"கண்ணை மூடி திறந்தவர் மலரு ரெடியாகு.உங்க பாட்டி சொல்லிட்டு போனாங்கள்ல,இதுல யாரு குற்றவாளின்னு இப்போதைக்கு எந்த அலசலும் உனக்கு வேண்டாம்"

நடந்த விஷயத்திலிருந்து நானும் உன் அம்மாவும் கடந்து வந்துட்டோம்.எங்களுக்கு அப்புறம் உனக்கும் உறவு சொந்த பந்தங்கள் எல்லாம் வேணும்.அந்த எண்ணத்தில் தானே நீயும் இங்கு கிளம்பி வந்த??

மனசுல எதுவும் வச்சுக்காம எங்களோடு வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சீவகன் சொல்லவும்,கண்ணகியோ நிமிர்ந்து கணவரை பார்க்க நான் இருக்கேன்.என்னை நம்பி வரமாட்டியா என்று 20 வருடங்களுக்கு முன்பு கேட்ட அதே வார்த்தையை சீவகன் கேட்க,கண்களை கூட துடைக்காமல் வாங்க போகலாம் என்றார்.

இதுதான் என் மனைவி என்றவாறு கண்ணகியின் கண்களைத் துடைத்தவர் கதிர் டூட்டி முடிஞ்சு மதியத்துக்கு மேல தான் வருவான்.அதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போயிட்டு வந்துடலாம் என்றவர் தனது மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தனது வீட்டை நோக்கி போனார்.

"வழியில் பார்த்தவர்களோ மூவருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்ல அவர்களும் உள்ளுக்குள் இருக்கும் வலியை மறைத்துக்கொண்டு சிரித்த முகமாகவே வாழ்த்துகள்

சொல்லிக்கொண்டே அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து உள்ளே போனார்கள்"

உள்ளேயிருந்த வள்ளியம்மையோ கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு தனது வயதையும் மறந்து வேகமாக வெளியே வந்தவர் அங்கு வரும் சின்ன மகன் குடும்பத்தை பார்த்து ஈஸ்வரா என்றவாறு தனது நெஞ்சில் மேல் கை வைக்க,சந்தோஷத்தில் அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

"அந்த வீட்டுக்குள் போக கால் கூசினாலும் தனது தாயின் வார்த்தையினால் கையறு நிலையில் இருந்த கண்ணகியோ,கணவர் மகளோடு புருஷன் வீட்டிற்குள் நுழைந்தார்"

"சின்ன மகனின் குடும்பத்தைப் பார்த்த பலராமனுக்கு இப்போது தான் முகத்தில் சிரிப்பு வந்தது"

"பாரிஜாதமும் கேசவனும் வாங்க வாங்க,உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கோம்.இன்னும் காலை சாப்பாடு கூட சாப்பிடவில்லை என்று இயல்பாகப் பேச,கண்ணகியோ எதுவும் சொல்லாமல் மௌனமாக தலையசைத்தார்"

“எல்லாருக்கும் உங்க அப்பா துணி வைத்து கொடுப்பாரு.அதை வாங்கிக்கோங்க பா என்றபடியே வள்ளியம்மை பூஜை அறைக்கு முன்பு போக,அண்ணன் தம்பி இருவரும் அவரவர் குடும்பமாய் அங்கு வந்து நிற்கின்றனர்"

இரண்டு மகன்களின் குடும்பத்தினருக்காக வாங்கிய ஆடைகளின் மேல் பணத்தை வைத்து கொடுத்தவர்,தட்டில் இருந்த விபூதி குங்குமத்தை எடுத்து பூசி விட்டு ஆசீர்வாதம் பண்ணினார்"

"மற்றவர்கள் அவர்கள் காலில் விழ சீவகன் மலர் கண்ணகி மூவரும் அமைதியாக நின்றனர்"

பின்னர் வாசலில் கரும்பு பந்தலை போட்டு மண்பானையில் பொங்கலை வைக்க அது தயாரானதும் சூரியனுக்கு படைத்தவர்கள்,கோயிலுக்கு போகணும் தயாராகுங்க,அங்கு பூஜையை முடித்துவிட்டு வந்த பிறகு வீட்டில் பொங்கல் படைக்கணும்.இது தான் சம்பிரதாயம் என்று மருமகளிடம் வள்ளியம்மை சொல்ல,அதற்கு கண்ணகியோ சரிங்க என்றார்.

ஒரு பேச்சுக்கு கூட அத்தைனு நம்ப மருமவள் கூப்பிட மாட்டேங்குதேங்க என்று தனது கணவரிடம் வள்ளியம்மை வருத்தப்பட,எப்படி கூப்பிடும்?
நீயும் உன் அண்ணன் உங்களோடு நானும் சுயநலவாதியாக இருந்துட்டனே.ஊருக்கு நீதி சொல்றவன் சுத்தமான உத்தமனாக இருக்கணும்.

ஆனால் நான்????

அந்த தகுதியை எனக்குள் இழந்து வருஷம் ஓடி விட்டதே என்று வருத்தப்பட்டவர்,உன் மனசாட்சி தொட்டு சொல் அந்த இடத்தில் நாம் இருந்தால் நம்மளால முடியுமா???

"கணவரின் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்தார்"

ஏன் வள்ளி,இத்தனை வருஷத்தில் உன்கிட்ட இதை பற்றி நான் கேட்கலை.உண்மையை மட்டும் எனக்கு சொல்,பொய் சொல்ல வேண்டாம்.

பாரிஜாதம் தெரியாமல் பண்ணிட்டுனு நம்பி உன் அண்ணன் மகளை நீ மன்னிச்சிட்டியா?என்றவாறு மனைவியைப் பார்த்தார்.

கணவர் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவர்,இந்த நிமிஷம் வரைக்கும் நான் மன்னிக்கலைங்க என்க,அப்போ கண்ணகி மட்டும் நம்மை மன்னிக்கணும் இல்லையா??

ஏன்னா அது ஏழை பொண்ணு அதனால் தானே,இது எந்த விதத்தில் நியாயம் என்கவும்,அவர் கேட்ட கேள்விகளோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.

நேரம் கடக்க,பெரியப்பா பிள்ளைகளோடு அந்த பெரிய அரண்மனை வீட்டை சுற்றி வந்த மலர்,அய்யோ எவ்வளவு பெரிய வீடு என்றவாறு ஓய்ந்து போய் அங்கிருந்த மெத்தையில் படுக்க ஏய் மலரு,கோயிலுக்கு கிளம்ப சொல்கிறார்கள் சீக்கிரம் குளிச்சிட்டு வா உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன் என்று கண்ணகி சொல்லவும்,சரிங்கம்மா என்றவாறு டவலோடு ரெஸ்ட் ரூமிற்குள் போனாள்.

பலராமன் வாங்கி கொடுத்த புது டிரஸை எல்லாரும் போட்டுட்டு தயாராகினர்.கடைசியாக வெளியே வந்த சின்ன பேத்தியை பார்த்த முதிய தம்பதிகள் இருவரும் கன்னம் வழித்து முத்தம் கொடுத்தார்கள்.

"பின்னர் பூஜை பொருட்களோடு குடும்பமாய் அவர்களின் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்றனர்"

அங்கே அய்யரும் அர்ச்சனை பண்ணிக் கொண்டிருக்க,குடும்பமாய் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஏதோ ஓர் உந்துதலில் கண்களை திறந்த மலரோ,எதிர் வரிசையில் நிற்பவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,ஏதோ சொல்ல முடியாத குறுகுறுப்பொன்று அவளுக்குள் வந்தது.

"கண்ணை மூடியவள் சில நொடிகள் சென்று ஒற்றைக் கண்ணை திறந்து பார்க்க,அப்பொழுதும் எதிரில் இருப்பவன் ரசனையாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்"

அவனின் கூறிய பார்வையோ உள்ளுக்குள் ஏதோ இம்சைகள் செய்ய,அருகில் இருந்த தனது பெரியப்பா மகளின் பின்னே போய் ஒளிந்து கொண்டாள்"

என்னாச்சி மலரு என்று வான்மதி கேட்க ஒன்னும் இல்லக்கா.தாவணி ஏதோ விலகின போல இருக்கு என்கவும்,அப்போ வா அங்கு தூணுக்கு பின்னாடி போய் சரி பண்ணிட்டு வரலாம் டி என்று மதி கூப்பிட,பரவால்லைங்க கா இதோ சரி பண்ணிட்டேன் என்று சமாளித்தாள்.

"பின்னர் கருவறையில் இருக்கும் சாமிக்கு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கண்களை திறந்தவள் சாமியை வணங்கிவிட்டு வீட்டிற்கு வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது கம்பீர நடையோடு,ஆண்களுக்கு உரிய அத்தனை அம்சத்தோடு கதவை உள்ளே வருபவனை பார்த்தவள் இவனை தானே கோயிலில் பார்த்தோம் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்"

“ஒரு கையால் வேஷ்டியை லேசாக தூக்கி பிடித்துக்கொண்டு,தன் மீசையை தடவியபடி அவளை பார்த்து கண்ணடிக்க,தனது அக்காவோடு உட்கார்ந்திருந்தவளோ திடுக்கிட்டாள்"

ஹாலில் உட்கார்ந்திருந்த பலராமனோ வாயா வேந்தா என்க,ஆசீர்வாதம் பண்ணுங்க அப்புச்சி என்றபடி பெரியவரின் காலில் விழுந்தவனை,நல்லா இரு கண்ணு,அடுத்த வருஷம் குடும்பமா அப்புச்சி காலில் விழணும் கண்ணு என்று ஆசீர்வாதம் பண்ணினார்.

“கண்டிப்பாக உன் வாய் வார்த்தை போல பண்ணிடலாம்.அதுல சந்தேகமே வேண்டாம் என்று சற்று தள்ளி உட்கார்ந்திருப்பவளை பார்த்து கொண்டே வேந்தனும் சொன்னான்.

"அந்த நேரம் மலரின் போனிற்கு அவள் தோழிகளிடமிருந்து வீடியோ கால் வர,அட்டென்ட் பண்ணி பேசிக்கொண்டே அங்கிருந்து வீட்டிற்குள் சென்றாள்"

"வேந்தன் யார் என்று சீவகனுக்கு அறிமுகப்படுத்தினார்,தனது தாய்மாமனின் பேரனா என்று அதிர்ந்தவர்,அவனின் அம்மா அப்பா பற்றி விசாரிக்க எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா"

இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க மச்சான் அவர் ஜோடி கூட வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேந்தனின் அம்மா சீதாவும் அவர் கணவர் வாசனும் அங்கு வந்தார்கள்.

வாங்க கண்ணுகளா என்று தங்கை மகனை பலராமன் கூப்பிட,அத்தை-மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க என்ற வாசனோ தனது மனைவி சீதாவுடன் பெரியவர்கள் காலில் விழா என்றைக்கும் இதேபோல சந்தோஷமா இருங்க என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

"பின்னர் சீதா-வாசனிடம் சீவகன் தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். அவர்களோ பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்"

உள்ளே போகுபவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,சிறிது நிமிடம் சென்று அங்கிருந்து நைசாக நழுவி வீட்டிற்கு போனவனோ,எங்கே போனாளென்று பார்வையால் அந்த ஹாலை அலச,எழில் ஓவியம் உயிர் பெற்றது போல,இருக்கா இல்லையா என்று தெரியாத இடுப்பை தோட்டத்து கதவின் மேல் சாய்த்தவாரு போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்து,உள்ளம் சாரல் வீச இரு பக்க மீசையை கர்வமாக முறுக்கி விட்டு அவளை நோக்கி சென்றான்.

"மலரும் பேசிவிட்டு திரும்ப எதிரில் இருப்பவன் மேல் இடித்து கீழே விழுந்தவளை,தனது வலது கையால் வளைத்து பிடித்து தன்னோடு அணைத்தவன்,நாம கல்யாணம் பண்ணிக்கலாமென்று அவளின் கண்களை பார்த்துக்கொண்டே கேட்டான்"

சொல்வாளா..???
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top