• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
பொள்ளாச்சி-செழியன் வீடு:

"இதுவரை நடந்ததை எல்லாம் மகனிடம் வாசனும் சொல்லி முடிக்க,கேட்ட வேந்தனுக்கோ எதுவுமே சொல்ல முடியவில்லை"

"நிச்சயமாக மலர்விழியின் அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்பது வேந்தனுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது"

ஏங்கப்பா இவ்வளவு கொடுமை நடக்கும்போது நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க?கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தீர்களா என்று ஆத்திரமாக வேந்தன் கேட்க,நான் நமது டெக்ஸ்டைல்ஸ் விஷயமா சென்னை வரைக்கும் போயிருந்தேன் பா.

"ஆர்டர் வாங்கிக் கொண்டு ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு வந்த பிறகுதான் எனக்கே இவ்வளவு விஷயமே தெரிஞ்சது"

"அப்போதெல்லாம் செல்போன் கிடையாது.ஒன்னு தந்தி கொடுக்கணும் இல்ல யாராவது நேரில் பொய் சொல்லணும்"

நானோ பிசினசிற்காக அங்கே இங்கேனு அலைஞ்சிகிட்டு இருந்ததால் எப்போ எங்க இருப்பேன்னு தெரியாமல்,எப்படி என்னை தொடர்பு கொள்ள முடியும்,அதை கொஞ்சம் யோசித்துப் பாரு???

ஊருக்குள் வந்த உடனே அண்ணன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டாங்க.அன்றைக்கே பாரிஜாதத்திடம் இனி இந்த வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன்.

“மகள் வீட்டுக்கு வர வில்லை என்ற கவலையிலேயே என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.இவங்க யாருக்குமே கண்ணகி வீட்ல நடந்த விஷயம் பெருசா தெரியலை?பொறந்த பொண்ணு நம்ப வீட்டுக்கு வரலையே என்பது தான் பெரும் குற்றமாக தெரிஞ்சது"

பிறகு மல்லிகாவுக்கு நானும் அண்ணனும் நல்லதை எடுத்து சொல்லி புரிய வைத்தோம்.மனதிற்குள் சீவகன் மேல ஆசைப்பட்டுடுச்சு அதை உடனே மாத்திக்க முடியாதில்லையா,கொஞ்ச நாள் எனக்கு நேரம் கொடுங்க அண்ணனு சொல்லுச்சு.

அதுவும் வாஸ்தவமான விஷயம் தானே,பிறகு அதுக்கு புடிச்ச ஓவிய கிளாசுக்கு நான்தான் தினமும் கூப்பிட்டு போயிட்டு வந்துட்டு இருந்தேன்.

இப்படியே ஆறு மாதம் போனது. அப்போது என்னுடைய ஸ்கூல் நண்பன் மூலமாக அவன் தம்பியோட வரன் வந்துச்சு.நம்மள போல திருச்சில பெரிய டெக்ஸ்டைல்ஸ் வைத்திருக்கிறார்கள்.

அந்த பையனும் படிச்சு முடிச்சிட்டு சொந்தமாக தொழில் பண்றான்.விசாரிச்ச வரைக்கும் ரொம்ப தங்கமான பையன்னு தெரிஞ்சது.பிறகு மல்லிகா கிட்ட அந்த பையனை பற்றி சொன்னோம்.

உங்க விருப்பம் ணா என்று சொன்ன பிறகு பாக்குறவங்க வியக்கும் வண்ணம் கல்யாணம் நடந்தது.இதோ வருஷம் ஓடி போயிடுச்சு. குடும்பம் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் என்று மல்லிகா திருச்சியில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

"விருந்து முடிந்த மூன்றாம் நாள் மாமியார் வீட்டுக்கு கிளம்பிய மல்லிகா ஹாலில் இருந்த எங்க கிட்ட வந்து கொஞ்சம் பேசணும்னு சொல்லுச்சு"

சொல்லு டா கண்ணுனு அண்ணன் கேட்க,இனிமே இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன். என்றைக்கு பாரிஜாதத்துக்கு தண்டனை வாங்கி கொடுப்பீங்களோ அன்னைக்கு தான் உங்க முகத்தில் முழிப்பேன்னு சொல்லிட்டு போன புள்ளை தான் இதுவரை வரலை.

"இரண்டு உயிரை பறித்தவளை இந்த வீட்டுக்கு வரவைக்க என் மனசும் இடம் தரவில்லை"

"இந்த விஷயம் நடந்த அன்றே என் அண்ணன் அவர் மனைவி குழந்தைகளோடு பக்கத்து தெருவில் இருக்கும் இன்னொரு வீட்டுக்கு போயிட்டார்"

அன்னையிலிருந்து இன்று வரைக்கும் உங்க தாத்தா கிட்ட நான் பேசுறது கிடையாது என்க,என்னப்பா சொல்றீங்க?வசந்தை தானே அத்தை தள்ளி விட்டாங்க.அதுல தான் அடிபட்டு உயிர் போச்சு.

இவர் ஹார்ட் அட்டாக்ல தான இறந்திருக்கார் என்கவும் அங்க தான் பா ஒரு ரகசியமே இருக்கு வேந்தா என்றவர்,போலீசுக்கு போன் பண்ணியதே பாரிஜாதம் தான் என்க,எ
ன்னப்பா சொல்றீங்க என்று மேலும் வேந்தன் அதிர்ந்து போக ஆமா கண்ணு...

பேங்க்ல போயிட்டு அவரு பர்ஸை திறந்து பார்க்க அதுல கணக்கு நோட்டு இருந்துச்சுல்ல,இதை அவருக்கு பக்கத்துல இருந்த பொம்பளையும் பார்த்திருக்காங்க.

"அது
பாரிஜாதத்தோடு பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்து கூட்டாளி பொண்ணு"

அந்த புள்ளை தான் வீட்டுக்கு போன் பண்ணி இதுபோல நாராயணன் சார் பணம் எடுத்துட்டு வந்தாரு, பணப்பையில் உங்க வீட்டு கணக்கு நோட்டு புக் இருக்கவும் பதறி அடிச்சுட்டு வீட்டுக்கு போறாருன்னு சொல்லிருக்கு.

"ஏற்கனவே கண்ணகி அடிச்ச ஆத்திரத்துல கோவமாக இருந்ததால் நாராயணன் சார் பணத்தை திருடிவிட்டதாக பாரிஜாதம் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி சொல்லிருக்கு"

போலீஸ் ஸ்டேஷன்ல போய் யார் கம்ப்ளைண்ட் குடுத்தா என்று பலராமன் மாமா விசாரிக்கும் போது தான் அவங்க கால் ரெக்கார்டுல அவர் வீட்டு நம்பரா இருந்திருக்கு.

"அதை பற்றி மாமா வந்து எங்க அப்பா கிட்ட சொல்லும்போது பொண்ணு மேல உள்ள பாசத்துல எங்க அப்பா மன்னித்து விட சொன்னார்"

"இது நியாயமே இல்லை"

இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை.இனி உங்கள் வீட்டு வாசப்படி ஏற மாட்டேன்னு சொல்லிட்டு போனவங்கதான் இருபது வருஷம் ஆகுது இதுவரைக்கும் எங்க அத்தை மாமாவும் சரி பாரிஜாதமும் இந்த வீட்டு படி ஏறலை.

நீங்கலாம் சின்ன புள்ளைங்க உங்களுக்கெல்லாம் ஏதும் தெரியக்கூடாதுனு தான் நீங்க பழகுறதுக்கு கூட நாங்க எதுவுமே சொல்லாம இருக்கோம் கண்ணு...

“இப்போ உங்க தாத்தா கோயில் கட்ட சொல்றாரே அந்த இடத்துல தான் வசந்தோட உயிர் போனது.அங்கு கோயில் இருந்தால் நாமெல்லாம் போய் வணங்குவோம்"

அந்த மூலமாக செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பு கிடைக்கும்னு உங்க தாத்தா நினைக்கிறாரு.

ஆனால் எங்க அண்ணனோ அப்பாவி உயிரை காவு வாங்கிய பாவப்பட்ட இடத்தில் எதுவுமே வேண்டாம் என்று தான் இதை தடுத்துக் கொண்டிருக்கிறார்.

எங்க அண்ணன் தடுக்கிறது ஒன்னும் சொத்துக்கு ஆசைப்பட்டு கிடையாதுடா. அடுத்த தலைமுறையான உங்களுக்கு எந்த தீங்கும் வேண்டாமென நினைக்கிறோம்.கோயிலை கட்டி கும்பிட்டால் மட்டும் செய்த பாவம் தீர்ந்து விடுமா???

நாராயணன் சார் எவ்வளவு நேர்மையான மனுஷன் தெரியுமா?? இதுவரைக்கும் பானுமதி அம்மா நம்ம முகத்தை கூட நிமிர்ந்து பார்த்தது கிடையாது.

அவங்க பையனும் படிச்சு இன்னைக்கு போலீஸ்காரனாக ஆகிட்டான் அவன் நினைச்சிருந்தா குடும்பத்தோட தூக்கி ஜெயில வைக்கலாம்.ஆனா அந்த அம்மா இருக்கிறார்களே மன்னிச்சு விட்டாங்க.அந்த பெருந்தன்மை இந்த வீட்ல யாருக்குமே இல்லை.

“இத்தனை வருஷத்துல ஓரளவுக்கு அவங்க நடந்த விஷயத்தை மறந்திருப்பாங்க.இப்ப போய் திடீர்னு கோயிலை கட்டினாக்க இந்த இடத்துல தானே அப்படி எல்லாம் நடந்ததுன்னு ஒவ்வொரு நாளும் அவங்களை வேதனைப் படுத்துறதுக்கு எங்களுக்கு மனசு வரலை கண்ணு"

அகால மரணமடைந்த உசுரோட ஆத்மா அங்கே தான் சுத்திக்கிட்டு இருக்கு.எங்களுக்கும் புள்ள குட்டி இருக்கு.அவங்க மேல அந்த பாவம் சுமக்க கூடாது என்பதற்காக தான் அந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டாம் என்று நினைப்பது தவறா சொல்??என்றவாறு கையை கட்டிக்கொண்டு வாசன் கேட்க,வேந்தனால் அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

"இப்போது இருக்கும் நிலமைக்கு எங்கே நமக்கு மலர்விழி கிடைக்க மாட்டாளோ என்பது தான் வேந்தனின் உள்ளுக்குள் பெரிய போராட்டமாக இருந்தது"

மலரின் நினைவுகள்:

சனி ஞாயிறு இருவருக்கும் லீவ் என்பதால் வழக்கம் போல தாமதமாக தான் எந்திரிப்பார்கள்.ஆனால் நேற்று இரவு தூங்க போகும் போது நாளைக்கு ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும் சீக்கிரம் எந்திரிக்கணுமென்று சொல்லிருந்தான்"

"அப்படி இவர் எங்க தான் கூப்பிட்டு போறாரென்ற யோசனையோடு வெகு நேரம் தூங்காமல் புரண்டு படுத்த கண்ணகியோ பின்னர் தன்னை மறந்து தூங்கினாள்"

"கண்ணகி ஏய் கண்ணகி என்று தோளை தட்டி சீவகன் எழுப்ப,அவளோ பதறியடித்து எழுந்தாள்"

“வெளியே போகணும்னு சொன்னனே என்க,அட ஆமாம்...இதோங்க என்றவாறு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள் குளித்து தயாராகி வெளியே வர,அங்கே சீவகனும் தயாராக இருப்பதை பார்த்து போலாங்க என்றாள்"

"பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருக்கும் சித்தி விநாயகர் கோயிலுக்கு போனார்.லைனில் காத்திருந்து இருவரும் சாமியை தரிசனம் பண்ணி விட்டு சந்நிதியில் உட்கார்ந்திருக்கும் போது கண்ணகி என்றவாறு மனைவியின் கையைப் பிடித்தார்"

"மனைவியிடம் பேச நினைத்ததை பொறுமையாக பேச,கண்ணகியும் தனக்குள் உண்டான மாற்றத்தையும் சொன்னாளா.பிறகு இருவரும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தவர்களோ கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்கினர்"

"இருவரின் அந்நியோன்யமான அன்புக்கு பரிசாக பத்தாவது மாதத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்க, பதினாறாம் நாள் ஐயரை வர வைத்து பூஜை பண்ணி நண்பர்கள் புடைசூழ மலர்விழி என்று மகளுக்கு பெயரைச் சூட்டினார்"

"முதல் குழந்தை பிறக்கும்போதே கண்ணகி மிகவும் பலவீனமாக இருந்ததால்,அப்போழுதே இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று சிவகன் முடிவு பண்ணினான்"

"10 வருடங்கள் மும்பையில் இருந்தவர்கள் அதன் பின் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தனர்"

கடைசி காலத்தில் சென்னையில் செட்டில் ஆகலாம் என்று முடிவு பண்ணி நண்பனிடம் விஷயத்தை சொல்ல,அவனோ அவன் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு காலி கிரவுண்ட் இருப்பதாகவும், அதையே பேசி முடித்து விடலாம் என்றான்.

சரி டா என்றவன் நண்பனின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி அந்த இடத்தை மகளின் பெயரில் வாங்கிய சீவகன்,காண்ட்ராக்டரிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்குமாறு நண்பனிடம் சொல்ல,அவனும் இவர்கள் கேட்டது போல பார்த்து பார்த்து வீட்டை கட்டி முடித்தான்.

"ஒரு நல்ல நாளில் நண்பர்களோடு புது வீட்டில் பால் காய்ச்சி குடி போனார்கள்"

பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்த மலர்விழி காலேஜ் படிப்பதற்காக சென்னைக்கு வந்து விட,தான் மட்டும் சில மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்ததையும்,பின்னர் சென்னைக்கு மாறுதல் வாங்கி வந்து விட்டதாகவும்,அதன் பின் நடந்தது தான் உனக்கு தெரியுமே என்று,கடந்த காலத்தில் தங்களுக்கு நடந்ததை எல்லாம் கண்ணகியும் சீவகனும் கண்ணீரோடு சொல்லி முடித்தனர்.

"மலர்விழியோ இரண்டு கண்ணிலும் வழிந்தோடும் கண்ணீரோடு தனது தாயை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்"

சிறிது நிமிடங்கள் சென்றிருக்க,அழுது கொண்டிருக்கும் பேத்தியின் கண்களை துடைத்து விட்ட பானுமதி,முடிந்து போனதை பற்றி வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது?

"என்னை பொறுத்தவரை வசந்தும் அவரும் இந்த வீட்டில் எங்களோடு தான் இருக்காங்க என்கும் போது இடது பக்கம் சுவற்றில் பல்லியின் சத்தம் கேட்க,என் சாமி நான் வந்துருக்கேனு உங்களுக்கு தெரியுதா என்று கண்ணகி அழுதார்"

பின்னர் ஒருவழியாக அவரை சமாதானம் பண்ணிய பானுமதி வாங்க சாப்பிடலாம் என்று அவர்களுக்காக சமைத்த சாப்பாட்டை பரிமாறவும்,அவரவருக்கு இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு கடமைக்கு சாப்பிட்டு படுத்து விட்டனர்.

"விடியலும் வழமை போல வர இன்று
பொங்கல் பண்டிகை என்பதால் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் பலராமன் புது துணி எடுத்து வைத்திருந்தார்"

சொல்வாளா...??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top