• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்:

சார் உண்மைய சொல்லுங்க?

“அவரை கூப்பிட்டு வந்து அடிச்சீங்களா என்று சீவகன் சத்தம் போட,அங்கிருந்த போலீஸ்காரர்களோ அய்யைய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சின்னத்தம்பி,எங்களை நம்புங்க"

"நாங்க எதுவுமே பண்ணலை"

"உங்க கோயில் பணத்தை அவர் கையால் பண்ணிட்டதாக எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்தது.அதற்கு பிறகு தான் நாங்கள் ஊருக்குள் வந்து,ஒரு கையில் மட்டும் விலங்கை மாட்டி ஜீப்பில் அழைத்து வந்தோம்.

"வரும் வழியில் அவர் மயங்கிட்டார்.சரி உண்மை தெரிஞ்சிட்டு போல அந்த அதிர்ச்சியில் தான் அவர் மயங்கிட்டாரென்று ஜீப்பில் இருந்த தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தும் அவர் எந்திரிக்கவில்லை,உடனே இங்கு வந்துவிட்டோம் சின்னதம்பி என்றனர்"

"யார் சார் உங்களுக்கு கம்ப்ளைண்ட் கொடுத்தது?காட்டுங்கள் என்று கோவமாக கேட்க,யாருன்னு தெரியலை தம்பி.ஒரு பொம்பளை குரல் தான் கேட்டது"

"ஆஹா பிரமாதம்.."

மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவை லட்சணம் ரொம்ப நல்லாருக்குங்க சார்.வெறும் போனில் சொல்லப்பட்ட செய்தியை வைத்து,இப்படி அநியாயமாக ஒரு உயிரை எடுத்துட்டீங்களே??

இவர் மேல் எந்த தவறும் இல்லையென்பது நிரூபனமானால் போன உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா?

நிச்சயமா உங்க மேல கேஸ் போடுவேன் என்றவனோ அங்கிருந்த சீப் டாக்டரிடம் பேசி,போஸ்ட்மார்டம் பண்ணாமல் நாராயணன் பாடியோடு ஊருக்குள் வந்தவனுக்கு,கண்ணகி வீட்டினருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

"தன்னால் தான் இந்த குடும்பத்திற்கு இவ்வளவு தீங்கு வந்தது என்கும் உண்மை உணர்த்த,அவனை நினைத்து அவனுக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது"

"வீட்டில் வேலை செய்யும் ஆளிடம் வசந்துக்கு நடந்த விஷயத்தை பற்றி வள்ளியம்மை சொல்லியனுப்ப, கேள்விப்பட்ட பலராமனோ,ஈஸ்வரா என்று பதறி அடித்து வீட்டுக்கு வந்தார்"

"மருமகளை எதுவும் கேட்காமல் கூர்மையாக பார்க்க,அந்த பார்வையோ ஆயிரம் அம்புகளால் குத்தியது போல பாரிஜாதத்திற்கு இருக்கவும்,கீழே குனிந்து கொண்டாள்"

என்னங்க,நாராயணன் சாரை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டு போயிடுச்சுங்க. பணத்தை ஏதோ கையாடல் பண்ணிட்டாராம் என்கவும்,என்ன வள்ளி சொல்ற என்று அதிர்ந்தார்.

ஆமாங்க,நான் தானுங்க பீரோவில் இருந்த கருப்பு கலர் பர்ஸை எடுத்து கொடுத்தேன் என்கவும்,என்னாஆஆஆ!!!!

அய்யோஓஓ முட்டாள் முட்டாள் கபோர்டின் உள்ளே வச்சிருக்கேன்.அதை எடுத்து கொடு என்று சொல்லிட்டு போனனே,நீ என்னத்தை டி காதில் வாங்குன?

அதுல கணக்கு நோட்டு தானே வைத்திருந்தேன் என்று பலராமன் திட்டவும்,ஐயோ என்று வள்ளி அதிர, என்ன காரியம் பண்ணிருக்கிற வள்ளி???

“எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா என்றவர்,முதலில் நான் போலீஸ் ஸ்டேஷன் போய் அவரை கூப்பிட்டு வரேன் என்றவாறு வெளியே வரும் போது ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது"

ஒரு நிமிடம் யோசித்தவர் முதலில் அந்த பையனோட சாவுக்கு போயிட்டு போலீஸ் ஸ்டேஷன் போறேன் என்றவரோ மனைவியோடு அங்கு வரும்போது,ஆம்புலன்ஸ் தெருவுக்குள் போகவும்,பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி எடுத்துட்டு போறாங்களோ என்று நினைத்துக் கொண்டு இருவரும் வந்தனர்.

"மற்றவர்களும் எதுக்கு ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது என்று யோசனையாக பார்க்கவும், அதில் இருந்து நாராயணனின் பாடியை இறக்கவும் கடவுளே என்று கத்தி கதறினார்கள்"

"ஓரே நேரத்தில் இரண்டு இறப்பை கண்ட வீட்டினரோ,தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கத்தி கதறி மண்ணில் புரண்டார்கள்"

"இருவரின் பாடிக்கு முன்னால் வந்த பலராமனும் வள்ளியும் கண்ணீரோடு கைகூப்பினர்"

நீங்களெல்லாம் ஊருக்கு நியாஸ்தரா???

உங்க குடும்பத்தில் உள்ள ஆளால் தான் நாராயணனோட உயிரும் போயிருக்கும். பொம்பளையா அவள்???

பணம் இருக்கு அதனால் மருமகள் செய்த காரியத்தை மூடி மறைக்க இப்படி இங்கு வந்து அப்பாவி நாடகமா என்று நாராயணனின் பங்காளி ஒருவர் கேட்க,மற்றவர்களும் அவரோடு சேர்ந்து கொண்டு கேள்விகளை கேட்க,அதில் கூனி குறுகியவர் எல்லாருக்கும் முன்னாடி நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று கையை கூப்பினார்.

நீங்கள் மன்னிப்பு கேட்டால் போன உயிர் வந்து விடுமா என்று வேகமாக எழுந்து வந்து கண்ணகி கேட்க,சிறு பெண்ணுக்கு பதில் சொல்ல முடியாமல் பலராமன் கீழே குனிந்தார்.

பொம்பளையா அவள்??

என் கழுத்தில் ஏற வேண்டிய தாலியை அறுத்தாளே அவள் கழுத்தில் அந்த தாலி நிற்குமா?

அவள் நாசமா போவாள் என்று மண்ணை வாரி சாபம் விடப்போக,அம்மாடி என்றவாறு கண்ணகியின் காலில் விழுந்த வள்ளியம்மை,ஒரு பாவமும் அறியாத என் பையனுக்கு உன் வாயால் சாபம் விடாத தாயி..

"கன்னிப்பொண்ணு சாபம் ஒரு காலமும் போகாது தாயி என்று அவள் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்"

அப்போ எங்கள் வீட்டில் மட்டும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா?

ஏன்னா நாங்கள் ஏழைகளாச்சே ச்சை..உங்களை தொட்டாலே ஏழேழு சென்ம பாவம் என்னை புடிச்சிக்கும்.அதற்கு எந்த கங்கையில் குளித்தாலும் விமோசனம் கிடைக்காது என்றவாறு அவரை உதறி தள்ளிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டாள்.

“இப்படி ஒரு நிலைக்கு நீயும் உன் மருமகளும் கொண்டு வந்துட்டிங்களே என்று எண்ணியபடி மனைவியை ஒரு பார்வை பார்த்த பலராமன்,எதுவும் சொல்லாமல் இடிந்து போய் ஓரமாக உட்கார்ந்துவிட்டார்"

அந்த வீட்டின் பையனாக சீவகனே அனைத்தையும் எடுத்து செய்தவன் இருவரின் பாடிக்கு கொள்ளி வைத்து விட்டு வீட்டிற்கு வந்தவன்,அங்கிருந்த ஊர்க்காரர்களையும் தனது வீட்டினரையும் பார்த்தவன்,உங்கள் மருமகள் கொலை பண்ணிய குற்றத்திற்காக போலீசில் நீங்களே போய் அவங்களை ஒப்படைங்க என்க...

"இதைக் கேட்ட வேலுசாமி அய்யோ சின்ன மருமகனே பச்ச உடம்புகாரி,குழந்தை பிறந்து 3 நாள் தான் ஆகுது கண்ணு"

எதா இருந்தாலும் ஊர் பஞ்சாயத்தில் பேசி,அந்த குடும்பத்திற்கு பணம் கொடுக்கலாம்.நம்ப ஊர் வழக்கப்படி காலங்காலமாக இப்படித்தான் நடக்கிறது.உங்க அப்பா மட்டும் எப்படி இதை மீறலாமென்க,பலராமனும் அதற்கு ஆமாம் என்றார்.

"யாரு எத்தனை கொலை வேணாலும் பண்ணிட்டு பணம் கொடுத்து விட்டால் சரியா போயிடும் இதுதான் உங்க தீர்ப்பு"

"ச்சை,உங்களையெல்லாம் சொந்தம் என்று சொல்லவே எனக்கு கேவலமாக இருக்கு.இல்லாத ஒரு காரணத்தை சொல்லி அநியாயமா ஒரு உயிரை பறித்தாங்களே உங்க மருமக,அதை உண்மையாக்குகிறேன்"

கண்ணகி தான் என்னோட பொண்டாட்டி.இந்த நிமிஷத்திலிருந்து உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்னை பொறுத்த வரைக்கும் நீங்க எல்லாரும் செத்துட்டீங்க.

“குருவா நினைச்ச பொண்ணை போய் தப்பான உறவு இருக்கிறதா கற்பனை பண்ணி,அப்பாவி உயிரை எடுத்த பொம்பளைக்கு கரிசனம் பார்த்த கேடு கெட்ட நீங்க எனக்கு எப்போதும் வேண்டவே வேண்டாம் என்றவன்,வீட்டிலிருந்த கண்ணகியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான்"

“இருவரின் போட்டோக்கு முன்னால் அழுது கொண்டிருந்த பானுமதியோ,எங்கே தனது மகளின் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று உள்ளுக்குள் வேதனையாக இருந்தவருக்கு,சீவகனின் இந்த செயல் கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது"

வசந்தோட சாவுக்கு கண்டிப்பாக உங்க மருமக பதில் சொல்லித்தான் ஆகணும். நீங்கள் என்ன மூடி மறைக்கிறது,கண்ணால் பார்த்த சாட்சிகள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம்.

நாங்களே போலீஸ்க்கு போறோம் என்று ஊர்க்காரர்கள் சிலர் சொல்ல,கண்ணை மூடி அழுதவாறு உள்ளே இருந்த பானுமதியோ எழுந்து வெளியே வந்து எல்லாரையும் பார்த்து கை கூப்பியவர்,உங்களோட இந்த அன்பு எப்போதும் எனக்கு வேண்டும் "

"இனிமே இதை பற்றி யாரும் பேசாதீங்க"

எங்க வீட்டின் இரண்டு தூணோட உயிரே போயிடுச்சு.இனி அவங்க மருமகளுக்கு தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்கலைன்னா என்ன?

தயவுசெய்து இங்கே இருந்து போயிடுங்க என்கவும்,தண்டித்திருந்தால் கூட அவ்வளவு வலித்திருக்காது.அவர் மன்னித்து விட்டதே பெரும் குற்ற உணர்வாக இருந்தது.

பொம்மை போல் வருபவளின் கையைப் பிடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தவன்,அந்த வழியாக வந்த பஸ்ஸில் ஏறி நேராக சென்னைக்கு வந்தவன், நண்பனின் வீட்டில் கண்ணகியின் நிலைமையைச் சொல்லி விட்டு,ஊரில் இருக்கும் நெருங்கிய நண்பருக்கு பணத்தை அனுப்பியவன் மற்ற காரியங்களை அவர்களோடு இருந்து பார்க்க சொல்ல,அவனும் சரி என்றான்.

"பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் கண்ணகியை அங்கிருக்கும் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போனான்"

"அவளும் இங்கு வந்து 16 நாள் ஆகிவிட்டது.இதுவரை அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை"

எதற்கு கோயிலுக்கு என்று அவள் தயங்கி நிற்க,இந்த நிமிஷத்திலிருந்து உனக்கு அப்பா அம்மா புருஷன் எல்லாமே நான்தான்.நீ என்னை குருவா நினைச்சது உண்மை என்றால்,உன் குரு மேல உனக்கு நம்பிக்கை இருந்தால் உன் வாழ்க்கையை என்னை நம்பி ஒப்படை மா என்றான்.

கண்ணகியோ எதுவும் சொல்லாமல் கண்ணீரோடு அமைதியாக இருக்க, சீவகனுடைய நண்பனின் அப்பாவும் அம்மாவும் அங்கிருந்த பூசாரியிடம் தாம்பாளத்தை கொடுக்க,சாமியிடம் அர்ச்சனை பண்ணி எடுத்துட்டு வந்தவர் தாலியை எடுத்து கட்டுங்கோ என்றார்.

கண்ணகியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டவன் என்றைக்கு உனக்கு என்னை கணவனாக ஏத்துக்க தோணுதோ அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்.இல்ல கடைசி வரைக்கும் குரு என்ற மரியாதை மட்டும் உனக்கு இருந்தாலும் எனக்கு சம்மதம் தான் சோ இனி உன்னோட பாதுகாவலன் நான்தான்.

"எனக்கு மும்பையில் இருக்கும் கம்பெனியில் ஆடிட்டர் வேலை கிடைச்சிருக்கு.நாளைக்கு நாம ரெண்டு பேரும் போகணும்"

உன்னோட சர்டிபிகேட் மற்ற புரூப்களை வாங்கி அனுப்ப சொல்லிட்டேன்.இன்னைக்கு வந்துடும்.அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரலாம் வா என்று சொல்லிக் கொண்டு மனைவியோடு வந்தவன் சில பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு,அன்று இரவே தம்பதியர் இருவரும் மும்பைக்கு போனார்கள்.

பிரபலமான கம்பெனியில் ஆடிட்டராக வேலை கிடைத்திருக்க,அவர்களே சீவகனுக்கு குவார்ட்டர்ஸ் கொடுக்கவும் வீட்டு வாடகை பற்றிய கவலையில்லை"

கண்ணகியை அங்கிருந்த கல்லூரியில் சேர்த்து விட,இரண்டு வருடத்தில் டீச்சர் டிரைனிங் முடித்ததால் அந்த சர்டிபிகேட்டை வைத்து பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு இண்டர்வியூக்கு போகவும் வேலை கிடைத்தது.

அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமே இவர்கள் கணவன் மனைவி,ஆனால் வீட்டிற்குள் இருவரும் நண்பர்கள் போல தான் வாழ்ந்தனர்.

"போகப்போக சீவகனின் அன்பும் பொறுமையும் கண்ணகியின் மனசை மாற்றியது.சிறிது நாட்களாக மனைவியின் பார்வையில் குறுகுறுப்பை கண்ட சீவகன்,தன்னவள் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ள விரும்பினான்"


சொல்வாளா..??
 
Last edited:

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top