• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 3, 2025
Messages
74
மலர் நினைவுகள்:

பாருங்களேன் பா இவளுக்கு எவ்வளவு திமிர் என்றவாறு,தனது மடியில் இருந்த குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு காரில் இருந்து கீழே இறங்கிய பாரிஜாதம்,கோவத்தில் என்ன பண்ணுகிறோம் என்று தெரியாமல் வேகமாக வந்தவள்,அங்கே சிவகனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த கண்ணகியை பார்க்கவும் மேலும் ஆத்திரம் வர,சின்னவரே என்று குரல் கொடுக்கவும் அந்த சத்தத்தில் இருவரும் திரும்பி பார்த்தனர்.

"வேகமாக வந்தவளோ கண்ணகியின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தவள்",உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் குடும்பத்தில் வாக்கப்பட நினைக்கிறாயா?

ஏன் தங்கச்சி வாழ்க்கையை பங்கு போட நிக்கிறியா டி பிச்சைக்கார நாயே, உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லையா?

"ஊர்க்காரர்கள் சொல்வதை நானும் காதில் கேட்டுட்டு அது பொய்யாக இருக்குமென்று இத்தனை நாளும் நினைத்திருந்தால்,இல்லை இல்லை அது உண்மை தான். இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் அடிக்கும் கூத்தை கண்ணால பாத்து தெரிந்து கொண்டேன்"

“இப்போது ரெண்டு பேரும் கையும் களவுமாக மாட்டினீர்களா என்றவளோ அதிர்ந்து நிற்பவளை பார்த்தவள்,இவளை அவமானப்படுத்தினால் கண்டிப்பாக இனிமேல் சீவகன் பக்கம் திரும்ப மாட்டாள்"

"பணத்தை விட மானம் மரியாதைக்கு தான் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.இந்த வாத்தி மவளும் அதே அன்னக்காவடி கூட்டம் தானேயென்று மனதிற்குள் நினைத்தவளோ,இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்டுறேன் டி என்றவாறு ஏட்டி கண்ணகியின் புடவை முந்தானையை வெறி பிடித்து இழுத்தாள்.

"அதில் சுய நினைவிற்கு வந்த கண்ணகி அய்யோ என்று கதறியபடி மரத்தின் பின்னாடி போய் ஒளிந்து கொண்டாள்"

"காரிலிருந்து கனகுவோ அய்யோ பாரிஜாதம் என்ன டி பண்ற என்று கத்தினார்"

"இதெல்லாம் காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வேலிசாமி ஏய் கனகு வாய மூடு டி.வேலுசாமியோட மவள் வீரமானவளென்று என் பொண்ணு. நிருபிச்சுக்கிட்டு இருக்கா டி.எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா என்று சொல்லிக் கொண்டான்"

தனது அண்ணி எதற்காக இப்படி எல்லாம் பேசுறார் என்பது புரியாமல் இவ்வளவு நேரம் மரம் போல நின்ற சீவகனோ,இதை பார்த்து அதிர்ந்தவன்,அண்ணிஈஈஈ பண்றீங்க??என்று கத்தியவாறு அவன் போட்டிருந்த சட்டையை கழட்டி கண்ணகி இந்தாமா என்று மரத்திற்கு அருகில் சென்று சட்டையை நீட்ட,இதையெல்லாம் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ந்தனர்.

"தன் வருங்கால மனைவிக்காக அல்லிக்காய் பறிக்க குளத்தில் இறங்கியவனோ,கண்ணகி கிடைச்சிடுச்சு என்று மேலே ஏறி வந்தவன்,அங்கே கூட்டமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று ஓடி வந்தான்"

கண்ணகியோ மரத்தின் பின்னால் அழுது கொண்டு நிற்க,என்ன டி ஆச்சு என்று பதறவும்,தனது மாமனின் குரலை கேட்டவளோ எதுவும் சொல்லாமல் வேகமாக ஓடி வந்து வசந்தை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கத்தி கதறினாள்.

"அவளின் புடவை இல்லாத கோலத்தை பார்த்தவன் அய்யோஓ என்றவாறு தனது சட்டையை வேகமாக இழுக்க அதிலிருந்து பட்டனுங்க சிலது கீழே தெரித்து விழுந்தது"

இதை பார்த்த பாரிஜாதம்,உன்னை மாப்பிள்ளையா வச்சிக்கிட்டு தான் இவ்வளவு ஊர் மேய விட்டுருக்காரு அந்த வாத்தியாரு?

பணத்துக்காக பெரிய வீட்டு புள்ளைய வளைச்சி போட சொல்லிக் கொடுத்திங்களா???

வாத்தி மவளுக்கு ஒரு ஆம்பள பத்தாதா என்கவும்,ஏய் யாரை பார்த்து என்ன டி பேசுற என்று பாரிஜாதத்தை பார்த்து வசந்த் கத்த,என்னையே எழுத்து பேசுறியாடா பிச்சைக்கார பயலே..

“அப்பா அம்மா இல்லாத அனாதை நாய் நீ என் முன்னாடி குரலை உசத்துர என்றவள் ஆங்காரமாக ஏட்டி உதைக்க, அந்த ஆண்மகனோ தடுமாறி போய் கீழே விழும். போது,அங்கிருந்த கருங்கல்லில் பின்தலை அடிபட்டு மயங்கியவனின் உயிர் அதே இடத்தில் அநியாயமாக பறிபோனது"

"மாமா என்று கத்திக் கொண்டே கண்ணகி போய் வசந்தை எழுப்ப,அதன் பிறகே சுயத்துக்கு வந்த பாரிஜாதிற்கு தான் என்ன செய்தோம் என்பது புரிய, ஐயோ என்று தனது தலையில் கையை வைத்துக் கொண்டாள்"

பெரிய வீட்டு விவகாரம் என்பதால் மற்றவர்கள் கையை கட்டி பரிதாபமாக வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலாக இருக்க,கோ கொள்ளையோயென சத்தம் கேட்டு,வீட்டில் இருந்த பானுமதியோ என்னவென்று வாசலுக்கு வந்தவரின் பார்வையில்,தூரத்தில் கூட்டமாக இருப்பது தெரிந்தது.

ஏன் இப்படி கூட்டமாக நிற்கிறார்கள்???

என்னவா இருக்குமென்று வேகமாக ஓடி வந்தவர் கூட்டத்தை விட்டு விலகி பார்க்கவும், அங்கு கண்ணகியோ ரத்த வெள்ளத்தில் வசந்தை மடியில் வைத்துக்கொள்ளவும் கதறுவதை கண்டு அய்யய்யோ பெரியவனே என்னடா ஆச்சு??என்று தனது நாத்தனார் மகனை பார்த்து நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழ,அய்யோ அம்மாஆஆஆஆ மாமா நம்மளை விட்டுட்டு போயிடுச்சு மா என்றவாறு கதறினாள்.

மகள் சொன்னதை கேட்ட பானுமதி என்ன டி சொல்ற என்று அதிர்ந்து போனவரோ ஆண்டவனே என் பொண்ணு வாழ்க்கையில் இப்படி இடிய இறக்கிட்டியே என்று தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதார்.

"சிறிது நிமிடத்திலேயே இதெல்லாம் நடந்துவிட யாராலையும் எதையும் தடுக்க முடியவில்லை"

அழுது கொண்டிருந்த கண்ணகியோ கொலை வெறியில் நிமிர்ந்து வேகமாக எழுந்து வந்தவளோ பாரிஜாதத்தை மாறி மாறி அறைந்தவள் ராட்சசி எதுக்கு டி என் வாழ்க்கையை அழித்த?

யார் டி சொன்னால் உன்னோட கொழுந்தனாரை நான் காதலிக்கிறேன் என்று???

பிசாசு,பேயே...கொலைகாரி..நீ எல்லாம் பொண்ணா???இன்னும் ஒரு மாசத்துல எங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் டி. அதுக்குள்ள எங்கள் வாழ்க்கையை அழிச்சிட்டியே நீ நல்லா இருப்பியாடி என்று அறைய,தனது மகள் செய்த காரியத்தை விட,அத்தனை பேருக்கு முன்னாடி யாரோ ஒருத்தியிடம் அடி வாங்குவதை பார்த்த வேலுசாமியோ வேகமாக வந்து கண்ணகியின் கையை பிடித்து தடுத்தவர் யாரை டி அடிக்கிற பிச்சைக்கார நாயே கண்ணகியின் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார்.

"அதில் தலை சுற்றி கீழே விழப்போன கண்ணகியை இவ்வளவு நேரம் நடந்த சம்பவத்தில் அதிர்ந்து கல் போல் நின்ற சீவகனோ அய்யோ என்று தாங்கி பிடித்தவன்,மாமாஆஆஆ இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை என்று கையை ஓங்க,அதில் ஸ்தம்பித்து போனார்"

அநியாயமா உங்க பொண்ணு ஒரு உயிரை எடுத்துடுச்சு.இப்பவே நான் போலீஸ்க்கு போன் பண்ணி இங்க வந்து உங்க பொண்ணை அரெஸ்ட் பண்ண சொல்லுங்க போறேன் என்றவன், முதல்ல வசந்தை வீட்டுக்கு தூக்கிட்டு போகலாம் என்றவாறு,ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தின் பாடியை தூக்கிக்கொண்டு கண்ணகி வீட்டிற்கு செல்ல,பானுமதியும் கண்ணகியும் அழுது கொண்டே பின்னாடி வந்தனர்.

ஊருக்குள் வந்த நாராயணனுக்கு அழுகுரல் கேட்க,என்ன அழுகுரல் சத்தம் நம்ம தெரு பக்கம் வேகமாக கேட்குது என்று முணவியவர்,சைக்கிளை மிதித்து கொண்டு வந்தவரோ தனது வீட்டு வாசலில் கூட்டமாக இருப்பதை பார்த்து, சைக்கிளை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே போட்டு விட்டு என்ன ஆச்சு என்று பதறி உள்ளே போக,முற்றத்தில் வசந்தை படுக்க வைத்திருக்க,சுற்றி எல்லாம் அழுது கொண்டிருந்தனர்.

அய்யோஓஓஓஓஓஓ...!!!

எம்புள்ளைக்கு என்னாச்சு??என்றவரோ தலையில் அடித்துக் கொண்டு அழ, நடந்ததையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லி கேள்விப்பட்டவர்,அங்கிருந்த அருவாளை எடுத்துக்கொண்டு பெரியவீட்டை நோக்கி வர, மற்றவர்களோ நாராயணா வேண்டாம் டா சொல்றதை கேளு டா என்று அவரை தடுக்க முயன்றனர்.

"வீர் கொண்ட சிங்கம் போல பக்கத்து தெருவில் இருக்கும் அரண்மனை வீட்டுக்கு வந்தவர்,பாரிஜாதம் என்று அங்கிருந்த வாசலில் நின்று கத்தும் போது,போலீஸ் ஜீப்பும் உள்ளே வந்தது"

கோயிலுக்கு சேர்த்த வரிப் பணத்தை நீங்க கையாடல் பண்ணிட்டதாக உங்க மேல கம்ப்ளைன்ட் வந்துருக்கு நாராயணன் என்றவாறு அவரின் ஒரு கையில் விலங்கை போட,என்ன என்று அதிர்ந்து போனவர் கையில் இருந்த அருவாளை கீழே போட,வாங்க என்று அவரை ஜீப்பில் ஏத்திட்டு போனார்கள்.

“இதையெல்லாம் அவர் பின்னாடியே ஓடி வந்தவர்கள் பார்க்க,அய்யோ அய்யோ என்று கத்தினர்.நான் திருடனா நானா திருடன் என்ற நாராயணன் தனது நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே ஜீப்பில் சாய்ந்தார்"

"மாடியில் இருக்கும் தனது அறை வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாரிஜாதமோ கொடூரமாக சிரித்துக் கொண்டிருந்தாள்"

அத்தனை பேருக்கு முன்னாடி உன் பொண்ணு என்னை கை நீட்டி அடிச்சாள் இல்ல,இப்போ நீ திருடன்.இந்த பட்டத்தோடு நல்லா அவமானப் படுங்க என்றவளுக்கு அவள் செய்த குற்றம் நினைவிலே இல்லை.

ஐயோ பானுமதி பானுமதி என்று ஓடி வந்தவர்கள் நாராயணனை போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு கண்ணு.வரிப் பணத்தை கையாடல் பண்ணிட்டானாம் என்கவும்,ஏற்கனவே மருமகனை பறிகொடுத்தவர்,இப்பொழுது கணவரை போலீசார் கைது பண்ணிட்டு போயினர் என்று கேட்டு,இன்னும் உன் ஆசை தீரலையா கடவுளே என்றவாறு மயங்கி விழுந்தார்.

"பள்ளிக்கூடம் போயிருந்த கதிரையும் காலேஜ் போயிருந்த கவிதாவையும் வசந்த் இறந்து போன விஷயத்தை சொல்லி உறவினர் ஒருவர் அழைத்து வந்திருந்தார்"

"கண்ணகியோ புத்தி பேதலித்த போல் வசந்தின் பாடியை பார்த்துக்கொண்டே தூணில் சாய்ந்து உட்கார்ந்தவள் தான், அதற்கு பின்னால் அவள் கண்ணில் பட்டாள். கண்ணீர் மட்டுமே வந்ததே தவிர,சுற்றம் எதுவும் அவளுடைய நினைவில் இல்லை"

"சிந்தனை முழுவதும் தனது மாமனின் மேல்தான் இருந்தது"

வாசலில் உட்கார்ந்திருந்த சீவகனோ இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, ஊரில் இருந்து ரெண்டு பேரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரிக்க,வரும் வழியிலே அவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போயிருப்பதாகவும் அங்கிருந்த ரைட்டர் சொன்னார்.

"அதைக் கேட்டு அய்யோ என பதறியடித்து ஹாஸ்பிடலில் போய் விசாரிக்கும் போது,வரும் வழியிலே ஹார்ட் அட்டாக்கில் நாராயணன் இறந்து போன விஷயம் தெரிந்தது"

சொல்வாளா...??


 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top