Member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
கூர்க்:
“வேக வேகமாக கிளம்பிய சேதுராமன் காட்டு பங்களாவை பூட்டிக்கொண்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவன், அவனது மேல் அதிகாரியிடம் பர்சனல் வேலையாக இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்க,சேதுராமன் இப்படி லீவு எடுப்பவன் கிடையாது என்பது தெரிந்தால் அவரும் சரி என்றார்"
பிறகு பெங்களூரு ஏர்போர்ட்டிற்கு வந்தவன்,அங்கிருந்து சென்னை செல்லும் பிளைட்டில் ஏறி இரவு 11 மணிக்கெல்லாம் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவன்,வெளியே உள்ள டாக்ஸியில் ஏறி தாம்பரம் போகணும் என்க,டிரைவரும் போகலாம் சார் என்றான்"
பின்னர் தன்னவளின் வீடு இருக்கும் இரண்டு தெருவுக்கு முன்னாடியே காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கியவன், டாக்ஸிக்கான பணத்தை கொடுத்தான் விட்டு அங்கிருந்து நடந்து சென்றான்.
"இரவு நேரம் என்பதால் அந்த அளவுக்கு ஆட்கள் நடமாட்டமும் அந்த ஏரியாவில் இல்லை"
"பத்து நிமிட நடை பயணத்தில் அந்த தெருவிற்குள் நுழைந்தவனோ,அதில் கடைசியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு கொண்டே வந்தவனுக்கு,இரண்டு அடுக்குகள் கொண்ட மாடி வீட்டில் இரவு விளக்குகளும்,மேலே இருக்கும் தன்னவளின் அறையில் டியூப்லைட் எரிவதும்,ரூமுக்குள் அவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதும் தெரிந்தது"
"ஓஓஓஓ....கல்யாண குஷியில் மேடத்துக்கு தூக்கம் வரவில்லை போல"
“மவளே இன்னைக்கு நீ செத்த,இரு டி வரேனென்று சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவன்,காம்பவுண்ட் சுவரின் பக்கத்தில் இருக்கும் மரத்தில் ஏறி உள்ளே குதித்தான்"
"பின்னர் பூனை போல பொறுமையாக நடந்து போனவன் எப்படி மேலே இருக்கும் மாடிக்கு போவது? ஏதாவது வழியிருக்கா?என்று பார்க்க பைப் கனைக்ஷன் வருவது தெரிந்தது"
ரைட்டூ என்றவாறு அங்கிருந்த பைப் வழியாக ஏறியவனோ டிரைனிங் பீரியடில் குரங்கு போல தாவி ஏறியது இப்போது பயன்படுதே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், முதல் மாடியில் இருக்கும் பால்கனியின் கம்பியை எட்டி பிடித்து,ஒரே ஜம்பில் உள்ளே குதித்தவன் ஏய் கதவை திறடி என்றான்.
"அதிக சத்தம் இல்லாத குரல் தான் ஆனால் அதில் அவ்வளவு கோவம் இருந்தது"
“கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையில் இருந்தவளோ திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு போன கார்குழலி,குரல் வந்த திசையில் யாரென்று பார்க்க,ஜன்னலுக்கு வெளியே சேதுராமன் நிற்பது தெரிந்தது"
நீங்களா....!!!!
"நான் தான் டி என்று பல்லை கடித்தவன் ஒழுங்கு மரியாதையாக நீயே கதவை திற.இல்லை அதை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதற்கு எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை டி"
"புலியின் உருமல் போல இருக்கும் குரலை கேட்டவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் வந்தது"
"என்ன டி மரம் போல நிக்கிற? இப்ப நீ கதவை திறக்க போறியா இல்ல ஓங்கி கதவை உடைக்கட்டுமா"
“சொன்னதை செய்பவன் தான் என்கும் உண்மை புரிந்தவள்,வேகமாக போய் கதவை திறக்க உள்ளே வந்தவனே அவளை பார்த்து கொண்டே கதவை தாழிட்டு விட்டு அவளை நோக்கி வர,குழலியோ பின்னாடியே போய் அங்கிருந்த கதவின் மேல் இடித்து நின்றாள்"
ஏன் டி,உனக்கு எவ்வளவு திமிர்???
நான் உயிரோடு இருக்கும் போதே இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக் தயாராவா?
"அவ்வளவு துணிச்சல் வந்துடுச்சா டி என்றவாறு அவளின் தொண்டையை பிடிக்க,குழலியோ கண்ணீரோடு நின்றாள்"
ஏன் அதற்குள் நான் கசந்துட்டேனா??
மூணு வருஷமா நான் தான் வேணும்னு நின்னியே, அதுலாம் என்னாச்சு சொல்லு டி???
"தொண்டையை இறுக்கி பிடித்திருந்தால் இருமல் வரவும், தலையை இடம் வலமாக அவள் ஆட்ட,அதன் பிறகே தனது செயல் புரிந்தவன் கையை எடுக்க,லொக் லொக்கென்று இருமினாள்"
"சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,ம்ம்ம் பதில் சொல்லு டி? என்றவாறு தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்தவன்,அங்கே இங்கேயென விலகாதபடி அவளை இடித்துக் கொண்டு நின்றவனோ,அவள் கண்களை பார்த்துக் கொண்டே மூன்று முடிச்சை போட்டு விட்டு அதிர்ந்து போயிருப்பவளை அணைத்தவாறு பெட்டில் சரிந்தான்"
"நன்கு தூக்கத்தில் இருந்தவனுக்கு அலறம் சத்தம் கேட்க,கண் விழித்தவனோ,தன்னை அணைத்து படுத்திருப்பவளின் நெற்றியில் முத்தமிட்டு பொறுமையாக எழுந்து போய். குளித்து தயாரானான்"
ஒருமுறை தன்னவளை இமைக்காமல் பார்த்து ரசித்தவன் அவளுக்காக எழுதியிருந்த கடிதத்தை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தவன், அங்கிருந்த டிரஸிங்டேபிளில் மேல் வைத்து விட்டு வந்த வழியே திரும்பி போனவன்,மெயின் ரோட்டில் வந்து நின்று எதாவது வண்டி வருதா என்று பார்கும் போது அவன் முன்னால் நீல கலர் ஷிப்ட் கார் வந்து நின்றது.
டிரைவர் சீட்டில் இருந்தவன் ஹலோ சேது சார் வி.கே அண்ணா தான் உங்களை பிக்கப் பண்ணிக்க சொன்னாங்க என்க,
இதைத் கேட்டவனோ என்னாஆஆ என அதிரும் போது அவன் போனிற்கு கால் வர,பேண்ட் பாக்கெட்டில் இருந்ததை எடுத்து பார்த்தவனின் கைகள் நடுங்க அட்டேன் பண்ணி காதில் வைத்தான்.
"சின்னா என்கும் குரலை கேட்டு ஸ்தம்பித்து போனான்.உடல் மட்டும் தான் வெளிநாட்டில் இருக்கு டா.என் மனசுலாம் உன்னிடம் தான் டா இருக்கு"
"இந்த உலகில் உனக்கு நானும் எனக்கு நீயும் தான் இருக்கிறாய்"
உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியாமல் இருக்குமா சொல்லு?
"நீ எதனால கார்குழலியை விட்டு விலகிப் போனாய் என்று எனக்கு தெரியும் டா"
"நம் வம்சம் பெருக,உனக்கென ஒரு குடும்பம் கண்டிப்பாக வேணும் டா,அடுத்த வாரம் நானே வந்து அவங்க அப்பாகிட்ட உங்க கல்யாணத்தை பற்றி பேச இருந்தேன்"
"சரி சின்னா...இந்த வேலையை நான் பாத்துக்குறேன்.நீ கார்குழலியோடு சந்தோஷமா நம்ப வீட்ல போய் குடும்பம் பண்ற வேலைய பாரு"
"உனக்கு இதால எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக தான் உன்னை இதுல நான் சம்பந்தப்படுத்தவில்லை"
இதுவரைக்கும் நீயும் இதில் உடந்தை என்று நினைச்சுட்டு இருக்க டா.நம்ப அப்பா அம்மா மேல சத்தியமாக சொல்றேன் உனக்கும் என் பிசினசுக்கும் சம்மந்தமே இல்லை.நான் செய்யும் தொழில் பற்றி உனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் டா உன்னிடம் சொன்னேன்.
என் தம்பியோட மனசு எனக்கு தெரியாம இருக்குமா???
இனி உனக்கு போன் பண்ணினால் உன்னோட அண்ணன் விக்ரமாக தான் கால் பண்ணுவேன்.வி.கே.வாக உனக்கு கால் பண்ண மாட்டேன்.இனிமேல் என்னை தொடர்பு கொள்ளாதே,பாய் என்று சொல்லி அந்த பக்கம் அழைப்பு கட்டாக,சேதுராமன் கண்ணிலிருந்து கண்ணீரோ தாரை தாரையாக ஓடியது.
"சார் எனக்கும் டிரைவரின் குரல் கேட்டு அதில் கலைந்தவன் கண்ணை கூட துடைக்காமல் காரில் உட்கார்ந்து கொள்ளவும்,கூர்க் நோக்கி கார் ஓடியது"
மலர் நினைவுகள்:
ஒன்பதாவது மாதம் வளையல் போட்டு பிறந்த வீட்டிற்கு வந்த பாரிஜாதம் தன் மனதில் உள்ளதை பெற்றோர்களிடமும் அண்ணன்களிடமும் சொல்ல,"கடவுள் யாருக்கு யார் யார் என்பதை எழுதி வைத்திருப்பாரோ அதன் போல தான் நடக்கும்"
“வீணா கற்பனை பண்ணாதிங்களென்ற வாசன் சரிங்கப்பா நான் வயலுக்கு போறேன்.சீதா மட்டும் குழந்தைகளோடு தோப்பு வீட்டில் இருக்கிறாள் என்றவாறு அங்கிருந்து சென்றான்"
"விநாயகத்திற்கும் தம்பி சொல்வது சரியென்று பட,நானும் வாசன் சொல்வதை தான் சொல்லுவேன்"
சின்ன மச்சான் படிச்சிட்டு தான் இருக்காரு கண்ணு.வேலைக்கு போய் நாலு காசு சம்பாரிக்கட்டுமே அதன் பிறகு இதை பற்றி பேசலாமா என்று அந்த பேச்சுக்கு தடை போட,வேலுசாமி-கனகு தம்பதியருக்கும் மகன்கள் சொல்வதே வாஸ்தவமாக இருந்தது.
இனி தங்கை கிட்ட பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவள் அதற்கு ஏற்ற போல சீவகனின் குணங்களைப் பற்றியும், இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் எவ்வளவு நன்மை என்றால் எல்லாம் தங்கையிடம் சொல்ல, மல்லிகாவிற்கும் அக்கா சொல்வதை கேட்க சீவகனின் மேல் காதல் வந்தது.
"பத்தாவது மாதம் இறுதியில் பாரிஜாதத்திற்கு இடுப்பு வலி வர, பக்கத்து ஊரில் இருக்கும் ஹாஸ்பிடலில் சில மணி நேரத்தில் டெலிவரியானது"
"குழந்தையை தூக்கி வந்த நர்ஸ் ஆண் குழந்தை பிறந்திருக்கென்க,இரண்டு பேரின் பெற்றோர்களும் பேரன் பிறந்ததை எண்ணி பூரித்தனர்"
"நர்மல் டெலிவரி என்பதால் மூன்றாம் நாளில் பாரிஜாதத்தை டிஸ்சார்ஜ் பண்ண,வேலுசாமியோ தனது மனைவி கனகாவோடு மகளையும் பேரனையும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்"
"மொத்த வசூலித்த பணத்தையும் பேங்கில் கட்டிட்டு வாங்க நாராயணன் என்று,முதல் நாளே பலராமன் சொல்லியிருந்தார்"
இதை பற்றி தனது மனைவி வள்ளியம்மையிடம் நாராயணன் சார் வருவார் அவர்கிட்ட பணம் கொடுத்து விடு.பணத்தை கபோர்டில் வைத்துவிட்டு போறேன் என்றேன் பலராமன்,வேலை நடக்கும் வயலை பார்க்க சென்றுவிட்டார்.
பேங்குக்கு தயாரானவர் பானு, வரி வசூலித்த பணத்தை நான் போய் பேங்க்ல கட்டிட்டு வந்துடுறேன் என்ற நாராயணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பெரிய வீட்டுக்கு வந்தவர் அம்மா என்க,வீட்டுக்குள் இருந்த வள்ளியம்மை அவரின் குரல் கேட்டு வெளியே வந்தவர்,உள்ளே வாங்க ணா ஒரு வாய் டீ குடிங்க என்க,இருக்கட்டும் மா என்றார்.
நீங்க வருவீங்கணு அவரும் பணம் கொடுத்துட்டு போயிருக்காரு ணா.நான் போய் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே வந்தவர்,பீரோவில் இருந்த கருப்பு பர்சை எடுத்து வந்து நாராயணனிடம் கொடுக்க,அவரோ நம்பிக்கை மிகுதியால் அதை திறந்து பார்க்காமல்,சரி மா என வாங்கி சைக்கிளில் ஏறி பேங்கிற்கு போனவர் 100,50,20 வீதம் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை திறந்து பார்க்கலாம் என்றவாறு பர்சை திறக்க அதில் கணக்கு நோட்டுகள் தான் இருந்ததே தவிர பணம் இல்லை.
"பதறியடித்தவர் அங்கிருந்து வேகமாக சைக்கிளில் ஏறி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்"
கண்ணகியோ தனது மாமன் வசந்திடம் அல்லிக்காய் சாப்பிடனும் போல இருக்கு என்று சொல்ல,அப்படியா டி.சரி வா நம்ம வீட்டுக்கு போற வழியில தான் குளம் இருக்கே,அங்கே போகலாம் என்றவாறு தனது மாமன் மகளோடு வந்தவன்,நீ இங்கையே இரு நான் பறித்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்த குளத்தில் குதிக்க, கண்ணகியும் வசந்தத்திற்காக அங்கிருந்த மர நிழலில் காத்திருந்தாள்.
"குளத்தில் இருந்து நூறு அடி தூரம் தான் தெருவுக்குள் போகும் வழி என்பதால் அவள் அங்கு மரத்தின் கீழ் தனியாக நிற்பது தெரிந்து,ஏத்தா இங்க நிற்கிற என அந்த வழியாக வந்தவர்கள் கேட்க,வசந்த் மாமா அல்லிக்காய் பறிக்க போயிருக்காங்க அதனால்தான் என்றவள்,இந்த மாமா என்ன தான் பண்றாரென திட்டிக் கொண்டிருந்தாள்.
"சி ஏ பாஸ் பண்ணிய சீவகன் தனது பெற்றோரிடம் சொல்லி விட்டு அப்படியே அண்ணன் மகனை பார்க்கலாமென வந்தவனோ அங்கிருந்த கண்ணகியை பார்த்தவன்,அம்மாடி கண்ணகி ஒரு சந்தோஷமான விஷயம் என்க,சொல்லுங்க சார் என்றாள்"
“நீ என்னை அண்ணனு கூப்பிடு இல்லனாக்க நண்பனு சொல்.இப்படி சார் சார் என்றால் என்ன அர்த்தம் என்று சீவகன் சிரிக்க,நீங்க எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க"
"உங்களை குருவா தான் நான் நினைக்கிறேன்.அதனால்தான் சார் என்ற மரியாதையோடு கூப்பிடுறேன். அண்ணன்னு கூப்பிட எனக்கு மனசு வரவில்லை என்றாள்"
"அதைக் கேட்டவன் சரி மா,இவ்ளோ பெரிய ஸ்தானத்தை கொடுத்திருக்கிற ரொம்ப சந்தோஷம்"
அப்புறம் நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் சி.ஏ எக்ஸாமில் நான் பாஸ் பண்ணிட்டம்மா என்கவும் கங்கிராஜுலேசன் சார் என்று சிரித்தவாறு கண்ணகி சொல்ல,எல்லா ஊர்லையும் கங்கிராஜிலேஷனை கை குலிக்கி தானே சொல்லுவாங்க என்று சீவகனும் விளையாட்டுக்கு பேசினான்.
கண்டிப்பாக சார் என்ற கண்ணகியோ சீவகனுக்கு முன்பு கையை நீட்ட,அவனும் தேங்க்ஸ் மா என்றவாறு கை குலுக்கும்போது காரில் வந்த பாரிஜாத குடும்பமோ இதை பார்க்க,டிரைவர் சீட்டிலிருந்த வேலுசாமியோ சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார்..!!
சொல்வாளா...?

Last edited: