Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 37
- Thread Author
- #1
அத்தியாயம் - 9
ஜோதாவின் குடும்பம் பெரியது. தனித்தனி வீட்டில் வசிக்கும் நவீன குடும்ப அமைப்பின்படி வாழ்ந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு இறுக்கமானது. உடன் பிறந்தவன் ஒருவனாக இருந்தாலும்கூட அண்ணன் என்று அழைக்க மொத்தம் எட்டு பேர் இருந்தனர்.
இவள் ஒருத்தி மட்டுமே பெண் குழந்தை என்பதால் அனைவரின் அன்பிலும் உச்சத்திலே திகைத்து வளர்ந்தாள். தனித் தமிழ்ப் பெயர் வைத்தாலும் பாப்பா என்று அழைப்பதில் ஒரு பூரணம் வேறு எதிலும் இருக்காது. செல்லமாக வளர்ந்தவள், ஆண் ஆதிக்கம், அடக்குமுறை இதைப்பற்றி எல்லாம் கேள்வியே படாதவள். தன்னைப் போலவே பேசி சிரித்த தோழி திடீரென பெண்ணியம் பேசும்போது, அதற்குள் இழுக்கப்படுகிறாள் ஜோதா.
“ஏன்டி நல்லாதன இருக்க? உனக்கு வேண்டிய எல்லாமே உன் அப்பாவும் அண்ணனும் செஞ்சிட்டுதான இருக்காங்க? செய்யறது வைக்குறத விட, அவங்க உன் மேல உயிரா இருக்காங்க? எவ்வளோ அன்பு வச்சிருக்காங்க? நீ என்னடானா ஓட்டு மொத்தமா ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்ற “
“இல்ல ஜோதா. நம்ம வீடு, நம்ம குடும்பம்னு வரும்போது எல்லாம் வேற மாதிரி இருக்கும். அத தாண்டி வெளிய யோசிக்கும்போது அது வேற மாதிரி இருக்கும்”
“அதென்ன இது வேற அது வேற?. எல்லாரும் ஆம்பளைங்கதான?. அவங்களுக்கும் குடும்பம் குட்டியெல்லாம் இருக்கும்ல?. அப்புறம் ஏன் வெளிய மட்டும் வேற மாதிரி இருக்கனும்?.
“நீ கேக்குற கேள்வி சரிதான். ஆனா அதுக்கான பதில நான் விளக்கமா சொல்ல ஆரம்பிச்சா ஒரு நாள் போதாது.என்னதான் நான் போராடி யோசிச்சு பக்கம் பக்கமா பேசுனாலும் உனக்கு புரியுமான்றது சந்தேகம்தான். அதெல்லாம் அனுபவிச்சாதான் புரியும்”
“என்ன நீ ஓவரா ஹைப் ஏத்தி பேசுற?. ஆம்பளைங்கன்னா அவ்வளோ மோசமா?”
“உனக்கென்னப்பா லீவுனா வீட்டுக்கு கார்லயே போய்ட்டு கார்லயே திரும்ப வருவ.உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நிம்மதியா உக்காந்து பாட்டு கேட்டுட்டு, ஜன்னல் வழி வேடிக்க பாத்துட்டு போவ. இருபது முப்பது கிலோமீட்டர் கால் வலிக்க நின்னுட்டு போக தேவையில்ல, யாராவது இடிப்பாங்களோனு பயப்பட தேவையில்ல, இடம் இருந்தாலுமே இவங்க பக்கத்துல உக்காரலாமா? வேணாமானு? யோசிக்கத் தேவையில்ல. அதெல்லாம் எங்கள மாதிரி பஸ் ஏறி போய்ட்டு வர்றவங்களுக்குதான் புரியும்”
“என்னடி நீ ஓவரா பேசுற. அடுத்த லீவுக்கு பாரு நான் பஸ்லயே போய்ட்டு திரும்ப வர்றேன். இது சவால்”
“ஆஹா அப்படியா? சரி இருக்கட்டும். ஆனா சவால் வெறும் போய்ட்டு வர்றது மட்டும் இல்ல. அப்படி நீ தனியா பஸ்ல போய்ட்டு வரும்போது எந்த ஆம்பள மேலயும் தப்பான அவிப்பிராயமுமே வராம நீ இருக்கனும் அதுதான் உண்மையான சவாலே “
“சரிடி பாத்துக்கலாம்”
ஜோதா சாவல் போட்டாலும் அவளுடைய வீட்டில் தனியா வந்து போக ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்கிற கருத்து ஜோதாவிற்கு மட்டுமல்ல, அங்கிருந்த அவளுடைய தோழிகள் அத்தனை பேருக்கும் தெரியும். இருந்தாலும் விடுமுறை நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நான் அடுத்த விடுமுறைக்கு தானாக பயணிக்கப் போகிறேன் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல வசனங்களை அடுக்கடுக்காய் அவள் தந்தையிடம் அடுக்க ஆரம்பித்தாள்.
“இங்க பாருமா தனியா வர்ற வேலையே வேணாம். ஸ்கூல் படிக்கும் போதிருந்து சுந்தர் கூட கார்லதான வீட்டுக்கு வர்ற. இப்போ என்ன புது பழக்கம் பழகுற?”
“இல்லப்பா நான் ஓன்னும் சின்ன பொண்ணு இல்ல?.இன்னும் எத்தன நாளுக்குதான் சுந்தர் அண்ணாவே கூட்டிட்டு போவாரு?. நான் தனியா போய் பழக வேணாமா? நான் என்னப்பா தனியா பிக்னிக் போறேன்னா சொல்றேன்?. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு, திரும்ப வீட்ல இருந்து ஹாஸ்டலுக்கு அவ்வளவுதானப்பா”
“அதெல்லாம் வேணாம் சும்மா இருமா. சொல்ற பேச்ச கேளு”
இப்படி ஒவ்வொரு நாளும் ஜோதா தன் தந்தையிடம் வாதாடும் போதும் அறை தோழிகள் அவளைச் சுற்றி அமர்ந்து கொண்டு கேட்டு குறுஞ்சிரிப்பில் மூழ்குவார்கள்.
எப்படியாவது இதில் வெற்றி பெற்று அவளுக்கு ஆண்களின் நல்ல குணங்களைப் பற்றி புரிய வைக்க வேண்டும். அதே எண்ணம் அவள் மனதில் நீடித்தால் அதன் விளைவுகள் தீவிரமாகக் கூட இருக்கும். அதனால் நல்ல சிந்தனையை அவளுக்குச் சொன்னால் மட்டும் போதாது அதைச் செய்தும் காட்ட வேண்டும் என்று ஜோதா விரும்பினாள்.
ஜோதா எதிர்பார்த்தவாறே விடுமுறைக்கு தனியாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சுந்தர் அண்ணாவிற்கு பல வருட போராட்டத்திற்குப் பிறகு திருமணத்திற்குப் பெண் அமைந்ததால் அனைவரும் பெண் வீடு பார்க்கச் செல்ல வேண்டி இருந்தது. என்னதான் சுந்தர் அண்ணா ஜோதா வீட்டுக் காரை ஓட்டும் வேலை செய்தாலும் அவரை குடும்பத்தில் ஒருவராகவே அனைவரும் நினைப்பார்கள்.
அப்படிப்பட்டவருக்கு முதன்முறையாக ஒரு நல்லது நடக்கையில் அதைத் தட்டிக் கழித்துப் போகாமல் இருக்க முடியாது என்று ஜோதாவின் அப்பா நினைத்தார். ஓட்டு மொத்த குடும்பம் முழுவதும் அங்கு செல்லத் தயாரானார்கள்.
ஜோதாவை அழைத்து வர வேறொரு வண்டியை அனுப்பி வைக்கவா? என்று கூட அவள் அப்பா யோசித்தார். ஆனால் எப்படியோ பல வசனங்களைப் பேசி தைரியத்தைக் கொடுத்து நானே வந்துவிடுவேன் என்று வாதாடி சம்மதம் வாங்கினாள்.
எப்படியோ ஒரு வழியாக சம்மதம் வாங்கியாச்சு என்று பெருமூச்சு விடுவதற்குள் அம்மா அப்பாவிடம் இருந்து அழைபேசியை வாங்கி அடுக்கடுக்காய் அறிவுரைகளைக் குவிக்க ஆரம்பித்தாள்.
விடுதியில் இருந்து தாமதிக்காமல் கிளம்பிவிட வேண்டும். பேருந்தின் முன் பகுதி இறுக்கையிலேயே அமர்ந்துகொள்ள வேண்டும். பெண்களின் பக்கம் மட்டுமே உட்கார வேண்டும். ஆண் உட்கார நேரிட்டால் நடத்துனரிடம் இருக்கையை மாற்றி உட்கார வைக்குமாறு கேட்க வேண்டும். பேருந்தில் அனாவசியமாக யாரிடமும் பேசக்கூடாது. பேருந்து நிலையத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்கி உண்ணக்கூடாது. பயணச்சீட்டு வாங்க சில்லறை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று இன்று நீண்டது அம்மாவின் பட்டியல். அத்தனையையும் கேட்டு
“ம்ம்ம்ம்ம்ம் சரி ம்ம்ம்” என்று சமாளித்துவிட்டு சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதித்தாள் ஜோதா.
“பேருந்து பயணம்தானே அதற்கேன் இப்படி?” என்று கேட்ட தோழிகளுக்கு சரித்தபடியே பதிலளித்தாள். “பேருந்து பயணம்தான். ஆனால் முதல் தடவை. அனுபவிக்காத வரை அத்தனையும் ஆச்சர்யமே” என்றாள். அதுவும் சரிதான் என்று தோழிகளும் போர்வையோடு சேர்த்து அந்த நாளின் சோர்வையும் இழுத்து மூடி உறங்கினார்கள்.
மறுநாள் சொன்னவாரே நால்வரும் எழுந்து குளித்துப் புறப்பட்டார்கள். கல்லூரி வாயிலைக் கடந்து முதன் முறையாக ஜோதா நடந்து வருகிறாள். பல முறை பார்த்த சாலைகளாகவே இருந்தாலும் ஒரு புதுவித பூரிப்பை அந்த சூழல் அவளுக்குக் கொடுத்தது. ஆர்வமும் சந்தோஷமும் நிறைந்த முகத்தோடு முதன்முறையாக பேருந்து படி ஏறி இருக்கையில் அமர்ந்தாள்.
கல்லூரியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு நால்வரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். பேருந்து நிலையத்தில் இருந்துதான் அவரவர் ஊருக்குப் பிரிந்து செல்லும்படி இருந்தது.
அதற்கு முன்பாக ஒரு உணவகத்திற்கு சென்று காலை உணவை முடித்தார்கள்.
இரண்டு தோழிகள் பேருந்து ஏறி சென்றுவிட்டார்கள். ஒருத்தி மட்டும் ஜோதாவின் கூடவே நின்றிருந்தாள்.
“ஏன்டி உனக்கு இன்னும் பஸ் வரலையா? இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்?”
“எனக்கு பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு. ஆனா உனக்கு ஒரு நாளைக்கே மொத்தம் ரெண்டே பஸ்தான். அதுவும் உங்க ஊர் டூரிஸ்ட் பிளேஸ்னால பயங்கர கூட்டமா வேற இருக்கும். நீ வேற ஃபஸ்ட் டைம் பஸ்ல போற. உன்னைய எப்படி தனியா விட்டுட்டு என்னால போக முடியும்?. வெயிட் பண்ணி இருந்து உன்னைய பஸ் ஏத்தி விட்டுட்டு அப்புறம் போய்க்குறேன்”
“உனக்கு பிரச்சன இல்லனா இருடி”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் சமாளிச்சுக்குறேன்”
மற்ற இருவரைக் காட்டிலும் மலருக்கு ஜோதாவின் மீது பாசம் சற்று கூடுதலாகவே இருக்கும். ஜோதாவிற்கும் அவள் மீது அக்கறையும் அன்பும் அதிகம்தான் ஆனால் காட்டிக்கொள்ள மாட்டாள்.
மலரும் ஜோதாவும் வேடிக்கையான குணம் கொண்ட நண்பர்கள். இருவரின் சிந்தனையும் பெரும்பாலும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கும்.
ஆணழகன்களை எல்லாம் சேர்ந்தே ரசிப்பார்கள். அதெல்லாம் ஐந்து நிமிட வேடிக்கையான ஜாலிதானே என்று பேசி தங்களை
நியாயப்படுத்திக் கொள்வார்கள்.
ஜோதாவின் ஊருக்குச் செல்லும் பேருந்தில் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. சுற்றுலா தளம் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும் அதனால் பேருந்து வருவதற்கு கால் மணி நேரம் முன்பாகவே முன்பதிவு செய்துவிடுவார்கள். முன்பதிவு சீட்டீல் இருக்கை எண் போட்டு இருக்கும்படி அமர்ந்துகொள்ள வேண்டும். முன்பதிவு சீட்டு முடிந்துவிட்டால் மூன்று மணி நேரம் நின்றுதான் பயணம் செய்ய வேண்டும். நினைத்ததைவிட அதிகக் கூட்டம் இருந்தால் சில நேரம் நிற்க கூட இடம் இருக்காது.
ஜோதாவும் மலரும் சென்ற போது அனைவரும் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜோதாவும் சென்று நின்றாள். மலர் வரிசையை விட்டு நீங்கி ஜோதாவின் அருகே நின்றிருந்தாள். அப்போது ஆண்கள் வரிசையில் நின்றிருந்த ஒரு ஆண் இருவரின் கவனத்தையும் இழுக்க, இருவரும் அவரைப் பார்த்து அவரின் அழகை புகழ்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர் பார்க்க திரைப்பட கதாநாயகனைப் போல வடிவத்தையும் சாயலையும் கொண்டிருந்தார். அவர்கள் அவரைத்தான் பார்க்கிறார்கள் எனத் தெரிந்ததும் அவரின் சைகை இன்னும் ரம்மியமாய் மாற ஆரம்பித்தது.
என்னதான் ஆள் அழகாய் இருந்தாலும் ஐந்து நிமிடம்தான் ரசிக்க முடியும் என்ற அவர்களின் பேச்சு வார்த்தை வேறு எதையோ தேடி ஓடியது.
“ரெக்கார்ட் நோட் எழுதனும்னு சொன்ன முடிச்சிட்டியா?
“இல்ல மலர் ஃபேக்ல எடுத்து வச்சிருக்கேன்.லீவுல எழுத முடியுமானு தெரியல, இருந்தாலும் எடுத்து வச்சிருக்கேன்"
“எப்படி எழுதுவ?. சுந்தர் அண்ணாவுக்கு வேற கல்யாணம்னு சொல்ற கஷ்டம்தான்”
“ஆமாடி பெரிய தொல்லையா இருக்கு. லீவு முடிஞ்சு வரும்போது நோட்ட முடிச்சு வைக்கலனா மார்க் போட மாட்டேனு மேம் சொன்னாங்க. எப்படியாவது எழுதிதான் ஆகனும்”
“ம்ம்ம்ம் சரி முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணி பாரு”
"ம்ம்ம்"
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே முன்பதிவு சீட்டு பதிபவர் வந்து விட்டார் வரிசையும் நகர்ந்தது.
தொடரும்...♡