New member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 13
- Thread Author
- #1
அத்தியாயம் - 6
முதல் நாள் வீடியோ :
ஹாய்! ஹலோ! வணக்கம்! அன்ட் வெல்கம்! யாருடா இவன் ஒரு தினுசா புதுசா இருக்கானேனு பாக்குறீங்களா? நான்தான் உங்க ஆதி. எனக்கு கத சொல்ல புடிக்கும். அதே மாதிரி கத கேக்க புடிக்குற யாரா இருந்தாலும் இந்த சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. அப்படியே மறக்கமா அந்த பெல் ஐக்கானையும் டச் பண்ண மறந்துறாதீங்க, அப்படினாதான் நான் டெய்லி போடுற க்யூட்டன் ஸ்வீட்டான கதைகள் எல்லாம் உடனுக்குடனே உங்கள வந்து சேரும்.
நான் முன்னாடி சொன்ன மாதிரியே பல வகையான கதைகள அடுத்தடுத்து நம்ம வீடியோல நான் சொல்லப் போறேன் நீங்க கேக்கப் போறீங்க. அந்த வகையில் நம்ம கேக்க போற முதல் கதை ஒரு காதல் கதை.
ஆஹா! ஆரம்பமே அமர்க்களமா இருக்கேனு நீங்க அங்க சொல்றது எனக்கு இங்க கேக்குது. சரி வலவலனு பேசாம ஸ்ட்ரெய்ட்டா கதைக்குள்ள போலம்… !!!
உங்க எல்லாருக்குமே ஜோதா அக்பர் கதை தெரிஞ்சிருக்கும். இப்போ சொல்லப் போறது அந்தக் கதை இல்ல. அதே கதாப் பாத்திரங்களின் வேறொரு கதை.
அக்பர்! அகன்ற தோளும் அளவான மீசையுமாய் பார்க்கவே பெண்களை ஈர்க்கும் பேரழகு படைத்த ஒரு இஸ்லாமிய இளைஞன். பார்ப்பதற்கு மட்டுமல்ல அவன் ஒவ்வொரு செயலிலும் ஏகப்பட்ட அழகும் அறிவும் சிதறிக் கிடக்கும். உடல் வலிமையில் அவன் காட்டும் ஆர்வம் குடும்ப நலனிலும் குறையாமல் இருக்கும். அவன் மதத்தின் மீதான ஈடுபாடும் மார்கத்தில் அவனுக்கிருக்கும் தெளிவும் ஆச்சர்யப்படக் கூடயதாகவே இருக்கும்.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அம்மா, வீடு, ஜிம் இவ்வளவுதான். வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பெரும்பாலான நேரம் ஜிம்மில்தான் இருப்பான். காரணம் அவனுக்கு உடற்பயிற்சி மேல் அதீத ஆர்வம். அந்த ஆர்வம் தீவிரமடைய அதையே தன் தொழிலாக மாற்றிக் கொண்டு தன் சொந்த முயற்சியில் ஜிம் ஒன்று நடத்தி வருகிறான்.
இருபத்து மூன்று வயதிலே இத்தனை தெளிவுடன் இருக்கிறானே என்று அவனைப் பார்த்து பொறாமைப் படாத ஆளே இருக்க முடியாது. அவன் முதுகிற்குப் பின்னால் புறணி பேசும் அதே கூட்டம்தான் தேவையான நேரங்களில் அவன் கால்களையும் சுற்றி வரும். குணம் எவ்வளவு தீங்கானதாக இருந்தாலும் உதவி என்று தன்னிடம் வந்து நின்றுவிட்டால் காக்க வைக்காமல் தன்னால் இயன்றதை சிரித்த முகத்துடன் செய்யும் தங்க குணம் படைத்தவன்.
ஜோதா! திராவிடப் பேரழகி. கொஞ்சும் தமிழால் மிஞ்சும் வனப்புடன் அத்தனை இதயத்தையும் தன் வயப்படுத்தும் ஒரு தமிழ் எழுத்தாளர். வயது என்னவோ இருபத்து ஒன்றுதான். ஆனால், ஆசையும் கனவும் வயதுக்கு மீஞ்சியே வைத்திருக்கிறாள். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதை அடைய வேண்டாமா? என்று ஒவ்வொரு நாளும் தனக்குத் தானே போட்டி போட்டுக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கிறாள்.
தன் கன்னியமான நடத்தையாலும், கவரப்படும் திறமையாலும் அனைவராலும் அறியப்படுகிறவள். அவள் குறும்புத்தனங்களும், கேளி கிண்டல்களும் அவளாய் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு மட்டுமே தெரியவரும்.
பரந்து விரிந்த இப்பூமியில் தன்னளவில் ஒரு உலகை அமைத்து, அதற்கென சில அறங்கள் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு கட்டமைப்பில் வாழ்பவள். அவளுக்கு வெளியுலகம் பற்றியெல்லாம் சிந்தனையே இல்லை. ஏனெனில் அது அவளுக்கு அறியப்படாத ஒன்று.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குடும்பம், வீடு, விடுதி , பேப்பர், பேனா மற்றும் சொற்பமான சில மனிதர்கள் அவ்வளவுதான். பிறரிடம் பழகுவதற்கே அச்சப்படுகிற மென்மையான குணமுடையவள்.
தேவையான அத்தனையும் தான் கேட்பதற்கு முன்பே கிடைத்துவிடும். ஆணையிட்டால் அது நடந்தே தீரும். விரும்பாதவை ஒதுக்கி வைக்கப்படும். ஆக மொத்தம் அவள் சொல் அந்தக் குட்டி உலகில் ஒரு வேதவாக்கு.
ச்ச்சே ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே வித்தியாசமான கோணங்கள்ல வாழ்க்கைய வாழ்றாங்க. இவங்க எப்படி சந்திக்கப் போறாங்க? . எப்படி காதலால இணையப் போறாங்க?. இவங்களுக்கிடையே வாழ்க்கை எப்படி அமையப் போகுதுனு அடுத்தடுத்து வர்ற எபிசோட்ல டீடைலா பாக்கலாம். இப்பொழுது உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நான் உங்கள் ஆதி. பாய்… !
புதிதாக எந்த ஒரு காரியம் செய்தாலும் அதைப் பற்றிய சிந்தனைகள் நம்மை சின்னா பின்னமாக ஆக்காமல் விடாது.
நல்ல விதமாகவும் தோன்றும் கெட்ட விதமாகவும் தோன்றும். வீடியோ பார்ப்பவருக்கு இது புடிக்குமா? புடிக்காதா? என்பதை விட, யாராவது எதாவது கேளியாக விமர்சனம் செய்துவிட்டால் என்ன செய்வது ? என்கிற அச்சமே கூடுதலாக இருந்தது. அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் செல்ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு அப்லோட் செய்த வீடியோவையே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான்.
ச்சைஐஐஐ போயும் போயும் இந்த சட்டையவா போட்டு முதல் முதலா வீடியோ போட்டேன். இந்த சட்டைக்கும் எனக்கும் ராசியே இல்ல. சரி இது கூட பரவாயில்ல கேமராவ நல்லா நேரா வச்சிருக்கனும் கொஞ்சம் சாஞ்ச மாதிரி இருக்கு. கைய மாத்தி வச்சிருக்கனும், கண்ண இத்தன தடவ சிமிட்டி இருக்கக் கூடாது, அந்த இடத்துல இவ்ளோ அழுத்தமா பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்ல. அது, இது, அப்படி, இப்படினு போட்ட ஒரு வீடியோல ஓராயிரம் குறை கண்டுபிடிச்சிட்டு இருந்தான். பாக்குறவங்க கூட இந்த அளவுக்கு நோட் பண்ணிருக்க மாட்டாங்க.
ரொம்ப நேரமா ஃபோனையே பாத்துட்டு இருந்ததால கண்ணெல்லாம் எறிய ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு மேல முழிச்சிருந்தா அவ்ளோதா ஒழுங்கா போய் தூங்கலாம் எதுவா இருந்தாலும் காலைல எழுந்து பாத்துக்கலாம்னு கம்முனு போய் படுத்துட்டான்.
காலையில் எழும்போதே தமதமாகிவிட்டது. கல்லூரிக்கு கிளம்பிச் செல்லவே நேரம் சரியாக இருந்ததால் வீடியோவிற்கு வரவேற்பும் விமர்சனமும் எவ்வாறு இருந்ததென்று பார்க்காமலே கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
அன்று கனமழை காரணமாக விடுதியில் இருந்து சென்ற மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது. குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்ததாலா? இல்லை குளிர் சற்று அதிகமாக இருந்ததாலா? என்றெல்லாம் தெரியவில்லை அன்று எந்த வகுப்புமே நடக்கவில்லை. அதனால் கல்லூரியில் கிடைத்த நேரத்தில் அந்த நாளுக்கான வீடியோவில் என்ன பேசாலாம் என்று எடுத்து வைத்துக் படித்துக் கொண்டிருந்தான்.
அம்மா இவ்வளவு ரசனையுடையவளா என்று ஆதிக்கு அன்னைக்குத்தான் தெரியும். எப்படி ஒவ்வொரு எழுத்து வாசிக்கும்போதும் அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்கிறாள்?.
கண்ணால் பார்ப்பது போல எழுத்தைப் படைப்பதெல்லாம் அசாத்தியமான திறமைதான். இன்னும் ஒரு பக்கம் மட்டும் படித்துவிட்டு மூடிவிடலாம் என்று சொல்லிச் சொல்லியே பல பக்கங்கள் திருப்பிவிட்டேனே என்று தன் அம்மாவின் அறிவை நினைத்துப் பூரிக்கிறான் ஆதி.
ஜோதாவும் அக்பரும் எவ்வாறு சந்தித்தார்கள் என்ற முறையே அவன் வாசித்த பக்கங்கள், யாமினி பற்றிய சந்தனைக்குள் ஆதியை நுழைத்தது.
கல்லூரி முதல்நாள், கூண்டிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட சிட்டுக்குருவிகளைப் போல கீச் கீச்சென்று ஒலியெழுப்பிக் கொண்டு கல்லூரி எனும் கனவுத் தோட்டத்தை சுற்றித் திரிந்தார்கள் மாணவர்கள். அந்தப் புறாக் கூட்டத்தில் நானும் ஒருவன்.
பன்னிரெண்டாம் வகுப்பு பாதியில் இருந்தே கல்லூரி வாழ்க்கையை கனவிலே வாழத் தொடங்கிவிட்டேன். கல்லூரி பற்றிய காட்சிகள் சினிமாவில் வரும்போதெல்லாம் இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு கேள்வி எட்டிப் பார்க்கும்.
கஷ்டப்பட்டு படித்தும் கணக்குப் பாடத்தில் கோட்டை விட்டு நிற்கும் போதெல்லாம் “இப்ப நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்குனாதான்டா காலேஜ்ல போய் ஜாலியா இருக்க முடியும்”என்று கணக்கு வாத்தியார் சொல்லும்போது படிக்கத் தூண்டும் காரணமாக இருந்தது அந்த கனவுதான். கணக்கு வாத்தியாரே சொல்லிவிட்டார் அப்போ காலேஜ் லைஃப் ஜாலியாதான் இருக்கும் என்று நகராத பன்னிரெண்டாம் வகுப்பு நாட்களைக் கைபிடித்து கடக்கச் செய்தது அந்த இனிப்பான பொய்தான்.
பண்ணிரெண்டாம் வகுப்புக் கடைசி பரிட்சை நாளன்று அதுவரை பொத்திப் பொத்தி கறைபடாமல் காப்பாற்றிய வெள்ளை நிற பள்ளிச் சீருடையில் மாற்றி மாற்றி மையை சிந்தி வீதி வழியே ஓடியதும், வினாத்தாளை சிறு சிறு கீற்றாக்கி நடந்து சென்ற பாதைகளுக்கு தடையங்களாய் போட்டு ஓடி, வேண்டுமென்று நண்பனிடம் மாட்டி ஜிகுனா பூச்சு பெற்று கண் உறுத்தலோடு நடந்ததும், அம்மா வாசலில் போட்ட கலர் கோலங்களில் குளித்து எழுந்தது போல வீட்டிற்குச் சென்றதும், அம்மாவின் செல்லக் கோபத்தை கண்ணம் கிள்ளி ஆற்றிவிட்டு வீடு நுழைந்ததும், அப்பா வருவதற்குள் அறை குறையாகக் குளித்துவிட்டு நல்ல புள்ளையைப் போல பட்டையடித்து அப்பாவியாய் நின்றதும் நேற்று நடந்தது போல இருக்கிறது என்று பழைய பள்ளி நினைவுகளை நினைத்து சிலாகித்துக் கொண்டிருந்தான்.
தொடக்கம் இருந்தால் அதற்கான முடிவும் இருக்கும் அல்லவா?. அதன்படி அந்த நினைவு பள்ளிப் பருவத்தின் இறுதியில் ஆதியை இழுத்து வந்து விட்டது.
பன்னிரெண்டாம் வகுப்பு மே மாத விடுமுறையில் தேர்வு முடிவிற்கு காத்திருந்ததை விட எந்தக் கல்லூரியில் சேரலாம் என்கிற சித்தனைதான் ஓங்கி இருந்தது. அப்பா செல்ஃபோன் வீட்டிலே மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டால் போதும் அதை எடுத்து கல்லூரிகளின் ஜாதங்களையே சரிபார்த்து எது சரி வரும் எது சரி வராது என்று அக்கு வேறு ஆணி வேறு பிரித்து வைத்துவிட்டு புகைப்படத்தைப் பார்த்தே பாதி கல்லூரி வாழ்கையை இரண்டு நாட்களிலே வாழ்ந்து முடித்துவிடுவேன்.
நான் போட்ட கணக்குகள் வழக்கம் போல தப்பா போக, கடைசியில் அப்பாவின் கணக்கு சிரியா? தவறா? என்றே சிந்திக்காமல் ஒப்புக்கொண்டேன். வீட்டில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்திலே கல்லூரி சென்று படித்து வருமாறு அப்பா ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்.
மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. ஏனென்றால், மதிப்பெண் அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஒரு வேளை நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் வேறு சிறப்பான இடத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த கல்லூரியில் சேர எனக்கு இருந்ததை விட அப்பாவிற்குதான் அதிக சலிப்பு.
கல்லூரியில் சேர்க்கப்போகும் முந்தைய நாள் அம்மாவிடம் புழம்பிக்கொண்டிருந்த அப்பாவின் கனத்த வலி நிறைந்த குரலைக் கேட்கும்போதுதான் உணர்ந்தேன் இன்னும் கூடதல் கவனத்தோடு இருந்திருக்கலாம் என்று. காலம் கை மீறிய பிறகு அதை நினைத்து நோவு கொள்வது வேண்டாத காரியம் என்கிற புரிதல் அப்பாவிடம் இருந்துதான் எனக்கு வந்தது.
தொடரும்...♡