New member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 13
- Thread Author
- #1
அத்தியாயம் - 5
இத்தனை நாள் கழித்து அந்த பெயர் காதில் வந்து படும்போது நெருப்பில் விழுந்த புழுவைப் போலவே நோகிறான்.
ஏன் பார்த்தோம்? ஏன் பழகினோம்? ஏன் பிரித்தோம்? இதுதான் காதலா? என்று கூட தெரியாத, எதுவுமே புரியாத ஒரு உறவு அவளுடன். தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்த கதை. அந்த கதையின் நாயகி. ஆதியின் காதல் நாயகிதான் அவள் என்று அம்மாவிடம் அவன் எப்படிக் கூறுவது என்று தெரியாமல் ஏதேதோ பிதற்றினான்.
“ஏன்டா இவ்வளோ யோசன? “
“இல்லமா அவள எந்த உறவா வச்சு சொல்றதுனே எனக்குத் தெரியல. அவ என் ஃபிரண்டுனு பொய் சொல்லவும் முடியல, அவன் காதலினு சொல்ற தகுதியும் எனக்கு இல்ல. என்னனு சொல்றது? “
“என்னடா தகுதி இல்ல உனக்கு?”
“அவ என்ன பண்றா? எப்படி இருக்கா? எதுவுமே எனக்குத் தெரியல. அவள அவங்க வீட்ல என்னென்ன வார்த்த பேசிருப்பாங்க, என்னாலதான் அவளுக்கு பிரச்சன. ஆனா அத சரிசெய்ய வேண்டிய நானே இப்படி எங்கையோ வந்து ஒழிஞ்சிட்டு இருக்கேன்.நெனச்சாலே கஷ்டமா இருக்குமா”
“ஆதி மனசப் போட்டு கொழப்பிக்காத படிக்குற வேலைய மட்டும் நீ பாரு. எல்லாமே சரியாகிரும் “
“சரிமா “
“ம்ம் அவள உனக்கு அவ்ளோ புடிக்குமா? “
“ஆமா… உன்ன மாதிரியோதா அவளும் “
“ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் “
“என்ன வார்த்த இழுக்குது… சரியில்லையே. எத்தன யாமினி வந்தாலும் ஜோதிதா என்னோட ஃபர்ஸ்ட் பெஸ்ட் லவ்வர் “
“ஆஆஆ… எல்லாம் பாத்தாச்சு பாத்தாச்சு”
“என்ன பாத்த? “
“நீ உன் காதலிக்கு எழுதி வச்ச காதல் வசனங்களைத்தான். சும்மா சொல்லக் கூடாதுடா ஆதி நீ ரசிகன்டா “
“அச்சோ... அத எப்படிமா நீ பாத்த?”
“அதுவா? ரஃப் நோட் கேட்டு நேத்து சிபி என்னைய படுத்தி எடுத்துட்டான்டா. உன் ரூம்ல எதாவது நோட்டு இருக்கானு பாக்கலாம்னு போனே அப்போதா அத எடுத்தேன்”
“ம்ம் அப்புறம்? “
“அப்புறம் என்ன பத்து தாள் மட்டும்தா எழுதியிருந்த அதுனால அத கிழிச்சு போட்டுட்டு சிபிக்கு ரஃப் நோட்டா வச்சுக்க கொடுத்துட்டேன் “
“அது சரி”
“இந்த வயசுல எல்லாமே சரியாதான் தோனும். இப்போதைக்கு படிக்குறது மட்டும்தா உன் வேல சரியா?. அம்மா சொல்றத மட்டும் செய் “
“சரிமா படிக்குறேன் “
எல்லாமே தெரிஞ்சும் எடுத்தெரிஞ்சு பேசாம, கோவப்படாம, திட்டமா இப்படி பொறுமையா அன்பா எடுத்து சொன்னா எப்படி அத மீறத் தோனும். பிள்ளைங்கள காரணமே இல்லாம இறுக்கிப் பிடிக்குற பெத்தவங்க இருக்க மத்தியில வெறத்து ஒதுக்க நூறு காரணம் இருந்தும் கையப் புடிச்சு வழிகாட்ற ஜோதிக்காகவே ஆதி நல்லா படிக்க ஆரம்பிச்சான்.
அவன் படித்த பள்ளிகளில் அவனைத் தெரியாத ஆளே இருக்க முடியாது. பள்ளிக்கு எதிரில் மாங்காய் விற்கும் ஆயாவில் இருந்து பள்ளி முதல்வர் வரை அனைவருக்கும் ஆதியைத் தெரியும். காரணம் ஓயாத வாயால் அனைவரிடமும் அவரவருக்குத் தகுந்த மாதிரி பேசி ஒட்டிக்கொள்வான்.
ஆனால், இந்தக் கல்லூரிக்கு வந்ததால் எல்லாம் தழைகீழாக மாறிவிட்டது. பத்து பேருடன் பேசினாலும் யாரிடமும் தான் யார் என்பதைப் பகிரவே இல்லை. அதை அவன் விரும்பவும் இல்லை. என்ன வேலையோ அதை செய்துவிட்டு, படிப்பதை மட்டுமே முழு வேலையாக வைத்துவிட்டு, மீதி நேரங்களை உறங்குவதில் செலவிட்டான். இப்படி இருந்ததாலோ என்னவோ மற்ற எதிலுமே அவனுக்கு நாட்டம் இல்லாமல் போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கே அவன் வாழ்க்கை வெறுமையாகத் தோன்ற ஆரம்பித்தது. சலிப்பூட்டும் வகையில் செக்கு மாட்டைப் போல வாழ்வது பிடிக்கவில்லை அவனுக்கு. அதிகப்படியான நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் கண்டதை யோசித்துக் கவலை கொண்டு சோர்ந்து போவதைத் தவிர்த்து, அந்த நேரத்தை உருப்படியாக்கினால் என்ன? என்கிற கேள்வி எழும்பியது.
கேள்விக்குப் பதில் தேடி கடைசியில் ஒரு முடிவு எடுத்தான். ஆதி பேசுவதில் வல்லவன் என்பதால் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து தினமும் வீடியோ போடுவதாக முடிவு செய்தான். எம்மாதிரியான வீடியோ போடலாம்? என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் இரண்டு நாட்கள் கழிந்து ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது.
ஞாயிற்றுக் கிழமை வந்தால் ஆதி வீட்டிற்கு போவது வழக்கம் என்பதால் அன்றும் கிளம்பிவிட்டான். போகும் வழி எல்லாம் புதிதான தொடக்கத்தைப் பற்றிய சிந்தனைதான்.
வீட்டிற்குள் நுழைந்த கையோடு தன் மனதில் இருந்த யோசனையை அம்மா காதில் போட்டுவிட்டான் ஆதி.
“யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறது பெருசு இல்ல டெய்லி வீடியோ போடனும் அப்போதான் ஓரளவுக்காச்சும் முன்னேர முடியும். நம்ம சிபி மாதிரி ஒரு வருஷத்துக்கு ஒரு வீடியோ போட்ட, சேனல இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்”
“அட ஆமல்ல நம்ம சிபி ஆல்ரெடி ஒரு யூடியூப் சேனல் வச்சிருக்கான்ல? சூப்பரு அப்போ அதவே நான் எடுத்துக்குறேன். ஆமா அதுல எவ்ளோ சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க? “
“ஆயிரத்து மூனுனு நெனக்குறேன் “
“அவ்ளோதானா?”
“அப்புறம் அவன் போடுற வீடியோக்கு மில்லியன் கணக்குலயா சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பாங்க? “
“இந்த ஆயிரத்த கூடிய சீக்கிரத்துல மில்லியனா நான் மாத்தி காட்றேன் “
“மாத்துனா சந்தோஷம்தான். ஆனா எதுக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கோடா ஆதி “
“அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் நான் பாத்துக்குறேன் “ என்று சொல்லியபடியே படுக்கையறைக்குள் நுழைந்தான் ஆதி. படுக்கையில் விளையாடிய அசதியில் கோணல் மானலாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சிபியைப் பிடித்து உலுக்கி எழுப்பினான். அவனும் அரைத் தூக்கத்தில் எழுந்து அமரந்த பின், யூடியூப் சேனல் ஐடியைத் தனக்குத் தருமாறு கேக்க, ஆரம்பத்தில் முடியாது என்று அடம்பிடித்தவன்... அது வாங்கித் தரேன் இங்க கூட்டிட்டு போறேன் என்று ஆதி ஒருசில வாக்குறுதிகள் கொடுக்க அதற்கு ஆசைப்பட்டு விட்டுக்கொடுத்துவிட்டான். வழக்கம்போல அவன் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் ஆதி.
“ஐடி வாங்கிட்டேன்மா “
“அதுதான பாத்தேன் விடுவியா நீ? “
“கன்டென்ட் என்ன போடலாம்னு குழப்பமா இருக்கு “
“ஒவ்வொரு நாளும் நடக்குற நியூஸ உன் ஸ்டெயில்ல கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா சொல்லு “
“அதுக்குதான் மதன் கௌரி இருக்காரே “
“அப்போ கத சொல்லு “
“கதையா? எந்த கத? “
“நான்தான் ஒரு பீரோ முழுக்க எழுதி வச்சிருக்கேனே. அதெல்லாம் இனி எதுக்கு ஆகப் போகுது போய் எடுத்து படிச்சு சொல்லு”
“சாரிமா நீ ஒரு ரைட்டர்ன்றதவே மறந்துட்டு எந்த கதனு கேட்டுட்டேன்”
“நீ மட்டும் மறந்திருந்தா வருத்தப்பட்டிருப்பேன். நான் ரைட்டர்ன்றத நானே மறந்துட்டேன்”
“சரி விடு உன் கதைய உலகமே கேக்க வச்சறேன் உன் பையன். என்ன சொல்ற? “
“நீங்க என்ன பண்ணாலும் சப்போர்ட் பண்றது ஒரு தாயா என் கடம அத நான் என்னைக்கும் செய்வேன் “
“ம்ம்ம் நீ ஒரு மேஜிக்மா. இத்தன நாளா எப்படி? எப்படினு யோசிச்சிட்டு மட்டுமேதா இருந்தேன். வீட்டுக்கு வந்தேன் உங்கிட்ட விஷயத்த சொன்னேன் பத்தே நிமிஷத்துல ரூட்டு க்ளியர் ஆகிருச்சு”
“ம்ம்ம் ரொம்ப பேசாம ஆக வேண்டிய வேலையப் பாருங்க பெரிய ராஜா “
“நாளைக்கே நான் யூடியூப்ல பெரிய ஆளா ஆகிட்டா உனக்கும் சிபிக்கும் செல வைப்பேன். உங்க உதவிய நான் மறக்க மாட்டேன் “
“சரிதான் போடா “
தெளிவான வழி கிடைத்துவிட்ட உற்சாகத்தில் அம்மாவைக் கட்டியணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு அலமாரியை நோக்கி நடந்தான்.
அம்மா சொன்னதைப் போலவே ஒரு அலமாரி முழுவதும் அழுக்குப் படிந்த காகிதக் கட்டுக்களும் தட்டையான தடித்த நோட்டுகளும் பல இருந்தது. அங்கிருந்த துணி ஒன்றினை எடுத்துத் தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு நாளைந்து நோட்டுகளையும் இரண்டு கட்டு காகித பண்டலையும் மட்டும் எடுத்துத் தன் பையில் வைத்துக் கொண்டான்.
மறுநாள் திங்கட்கிழமை கல்லூரிக்குச் சென்று விடுதி திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. வகுப்பில் அரங்கேறிய எதுவுமே ஆதியின் பார்வையில் கூட படவில்லை. அவன் சிந்தனை முழுக்க அம்மா எழுதிய காகிதங்கள் மீதுதான் இருந்தது. கல்லூரியில் இருந்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டே விடுதிக்குச் சென்றது அன்றுதான் முதல் நாள்.
வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வீடியோ போடுவதற்கு தயாராக பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்தான்.
அந்த நோட்டில் அம்மா எழுதியிருந்த வார்த்தைகள் பெரும்பாலும் தெரியவில்லை. அது தண்ணீர் சிந்தி ஊறிப்போய் அழிந்த நிலையில் இருந்தது. தெளிவாக எழுத்துத் தெரிந்த பத்திகளில் சில வார்த்தைகளுக்கு அர்த்தமே அவனுக்குப் புரியவில்லை. அதனால், அதை உள்ளே வைத்துவிட்டு அடுத்த நோட்டைக் கையில் எடுத்தான்.
இம்முறை எடுத்த நோட்டில் எழுத்து மிகவும் தெளிவாகவும், எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும்படியும் இருந்தது. இரண்டு மூன்று பக்கங்களுக்கு நடுவில் அழகழகான ஓவியங்களும் வரையப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கே படிக்கத் தூண்டும் அளவிற்கு இருந்ததால் இதிலிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்தான். அதன் படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோ போட்டாலும் இந்த நோட்டில் இருக்கும் கதையை சிரியாக ஒரு மாதத்திற்கு போடலாம் என்று கணக்குப் போட்டு அதற்கேற்றார் போல கதையைப் பிரித்தும் வைத்துக் கொண்டான்.
ஒவ்வொரு நாளும் வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கு முன் அந்நாளுக்கான பகுதியைப் படித்துவிட்டு ஒரு முறைக்கு இரண்டுமுறை சொல்லிப் பார்த்துவிடுவது ஆதியின் பழக்கமாகவே இருந்தது. அவன் திட்டமிட்டபடியே தினமும் ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதற்கான வரவேற்பும் ஆதிக்கு அவன் நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.
தொடரும்...♡