• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 16, 2025
Messages
13
அத்தியாயம் - 3

அன்று அவன் கல்லூரிக்குச் செல்ல காரணமாக இருந்தது யாமினி மட்டும்தான். பேருந்தில் பயங்கரக் கூட்டம். நிற்கக் கூட இடமில்லை. அவளும் இங்கே வா இங்கே வா என்று சைகை செய்ய, மூச்சு கூட விட முடியாத நிலையில் அவளை விட்டுத் தள்ளிக் கூட்டத்தில் சிக்கியபடியே ஒற்றைக் கண்ணால் அவளை ரசித்தபடியே வந்தான் ஆதி.

நிறுத்தத்தில் இறங்கி கல்லூரிக்குள் நடந்து செல்லும்போதே அவன் கால்கள் இரண்டும் புரள்வதைக் கவனித்தாள் யாமினி.
“ஏன் இப்படி காமெடியா நடந்து வர்ற?”
“உனக்கென்னப்பா நீ ஜாலியா உக்காந்து வந்த.நின்னு வந்தவனுக்குத் தான் தெரியும் வலியும் வேதனையும்.உனக்கு ஒன்னு தெரியுமா?எனக்கு விவரம் தெரிஞ்சு இன்னைக்குதான் நான் பஸ்லயே வர்றேன். ஸ்கூல் படிக்கும் போது கூட அப்பாதான் பைக்ல கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருவாரு “
“ஆமா நானே கேக்கனும்னு நெனச்சேன் உன் பைக் என்னாச்சு”
“அதுவா?அது ரிப்பர் ஆகிருச்சு அதான்”
“சரி சரி “
இருவரும் பேசிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே அன்றைய நாளுக்கான முதல் வகுப்புத் தொடங்கியது.
பி. ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் பெயரைக் கேட்டாலே பூக்கள் உதிர்ந்து வாசனை நுகர்ந்து மயங்கிவிட வேண்டியதுதான். பல பிரிட்டிஷ் காதல் கதைகள் எல்லாம் பாடமாய் அமைந்த அப்படி ஒரு பிரிவு. விரிவுரையாளர் அந்தக் கதையின் பக்கத்தைப் புரட்டி கையில் எடுத்தவுடனே மாணவர்களைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார். அந்த சிரிப்போடு சேர்த்த வெக்கமும் சேர்ந்து கதையின் காதல் சாயத்தை அப்படியே பூசி மொழுகும்.

ஒரு சில ஆசிரியர்களால் மட்டும்தான் எழுத்தைத் தாண்டி, இருக்கும் இடத்தில் இருந்தே கதைக்களத்தில் பயணிக்க வைக்கும் அளவிற்கு கதை சொல்ல முடியும். அந்த வகையில் நம்ம அபி மேம் நடத்தும் போது அந்த இடத்திற்கே போவது மட்டுமல்லாமல் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். வகுப்பு முடிந்த பிறகும் கூட அந்த பாத்திரத்தின் குணாதிசயங்கள் நம்மை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொள்கின்றன நம்மை நெருங்கியவர்களையே நம் மீது சந்தேகப்படுவார்கள் வைத்துவிடும் அளவிற்கு ஆழமாகவும் அழகாகவும் இருக்கும்.
வகுப்பு நடக்கும் ஒரு மணி நேரம் முழுவதும் இதுவரை காதலிக்காதவர்களே கனவு உலகில் டூயட் பாடிக் கொண்டிருப்பார்கள்.
காதலிப்பவர்களின் நிலையை சொல்லவா வேண்டும்?.
படர்ந்து விரிந்த வானின் கீழே, ஓங்கி உயர்ந்த மலையின் மேல அமைந்த கோட்டையின் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்கும் யாமினிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

மந்திரக் கிளிகள் இரண்டு ஒன்று சேர்ந்து காலத்தால் என்றும் அழிக்க முடியாத உறுதியான உத்திரவாதக் காதல் ஒப்பந்தம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பறந்து செல்லும் புறாக் கூட்டமோ தோட்டத்தில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறித்து வந்து அவர்கள் முன்னிருக்கும் மேஜையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
அங்கங்கே அலைந்து திரியும் ஆண் மயில்கள் தோகையை விரித்து வருவோர் போவோர்க்கு விசிறிக் கொண்டிருந்தன. பட்டாம்பூச்சிகள் கைகோர்த்துக் கொண்டு தோரணமாய் விரிந்து ரம்மியம் கூட்டின.

வானத்து மேகம் மழையைத் தூவ, இடி மின்னல் ஓசையுடன் குளிர்ந்த கோப்பை நிறையத் திராட்சை ரசத்தைக் கையில் ஏந்திக் கொண்டே இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டு முத்தமிட்டு வாழ்க்கைக்கான சத்தியத்தைச் செய்தார்கள். அந்த முத்த மயக்கத்தோடு திராட்சை ரசத்தின் போதையும் சேர்ந்து போட்டுத் தாக்க வகுப்பு முடிந்த போதும் கூட அந்தக் கனவில் இருந்து வெளியே வரவில்லை ஆதி.

யாமினியின் குரல் காதின் அருகே கேட்பது போல இருக்கிறதென்று திரும்பிப் பார்த்து அதிர்ந்தான் ஆதி. அவன் அருகில் அமர்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறாள் யாமினி. அருகில் என்றால் அவனது இடது தொடையும் அவளது வலது தொடையும் , அவனின் இடது தோளும் அவளது வலது தோளும் உரசும்படி. குளிர்ந்த கனவில் இருந்து விழித்ததும் வேர்த்துவிட்டது அவனுக்கு.
"டேய் என்ன கனவா? மேம் சொன்ன கத நல்லா இருந்துச்சுல?"
“ஆமா யாமினி உன்னையும் என்னையும் அந்த கதையில வச்சு பாத்து ரசிச்சிட்டு இருந்தேன்”
“அதான் உன் முகத்துலயே தெரியுதே”
“இப்போ எனக்கு அடுத்த கிளாஸ்க்கு சார் வந்திரக் கூடாதுனு ரொம்ப ஆசையா இருக்கு”
“ஏண்டா? “
“சார் வந்தா நீ எழுந்து போய்ருவீல அதான்.யாமினி நீ என் பக்கத்துல இவ்ளோ நேருக்கமா உக்காந்திருக்க.இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? இருந்தாலும் இப்படியே இருக்கனும்னு தோணுது”
ஆதியின் வார்த்தைகள் யாமினியின் பார்வையை அவன் பக்கம் இழுத்துப் பிடித்து வைத்திருந்தது. பார்வை விலகாமல் அவன் கண்களை அவள் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்த அதேவேளையில் எதிர்பாராத விதமாக ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் வந்த பரபரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த அனைவரும் அவரவர் இடம் போய் சேர்ந்தார்கள் ஆதியையும் யாமினியையும் தவிர.
இருவரும் மிக அருகில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மேஜையில் ஓங்கித் தட்டினர் இருவரும் எழுந்து நின்றார்கள்.
அவர் இடது கையை வாசலை நோக்கி நீட்டினார். தலையைக் குனிந்தபடியே இருவரும் வெளியே சென்றனர். அந்த வகுப்பு முடியும்வரை சொல்ல முடியாத பயத்தோடு ஒருவரை ஒருவர் முகத்தைச் சுழித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வகுப்பில் இருந்து வெளியே வந்த ஆசிரியர் இருவருடைய பெற்றோர்களின் செல்ஃபோன் எண்ணை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமருமாரு சொன்னார். அவ்வழி நடந்து செல்வோருக்கு வேடிக்கையாக இல்லாமல் உள்ளே செல்ல அனுமதித்தது நிம்மதி என்றாலும் அப்பாவிடம் என்ன சொல்லுவார் என்கிற பயம் இருக்கத்தான் செய்தது. யாமினியின் அழுகையை நிப்பாட்ட ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவள் இப்படி அழுக நான்தானே காரணம் என்கிற குற்ற உணர்ச்சி அதற்கு முயற்சி கூட செய்ய விடவில்லை.

அந்த நாள் முழுக்க அவளை வெறித்துப் பார்த்தபடியே நேரம் கழிந்தது. கல்லூரி முடிந்து வீட்டிற்குப் போக மனமில்லாமல் ரோட்டில் மெல்ல நடந்து கொண்டிருந்தான். பாதை தெரியாமல் தன்நிலை புரியாமல் ஏதோ ஒரு சிந்தனையில் சுற்றித் திரிந்தான் ஆதி. ஆசிரியர் அப்பாவிடம் என்ன கூறியிருப்பார்? அதை அப்பா எந்த விதத்தில் எடுத்திருப்பார் ? வீட்டிற்குப் போனால் பிரச்சனை எப்படி வெடிக்கும்? நேற்றிருந்தே நேரம் சரியில்லை. அப்பாவின் கோபத்தைத் தீவிரமாக்கும் விதத்தில் நமக்கும் விதி சதி செய்கிறதே என்கிற யோசனை அவன் நேர முல்லை வேகமாக சுழற்றி விட்டது.

இதயத்தின் நச்சரிப்பிற்கு மேலாக ஒரு சத்தம் இடது நெஞ்சின் ஓரம் கேட்டது. அலைப்பேசியில் அப்பாவின் முகத்துடன் அவர் அழைப்பு, அட்டென் செய்த அடுத்த நொடியே “இன்னும் பத்து நிமிஷத்துல நீ வீட்ல இருக்கனும்” என்று அவர் கூறினார். குரல் கேட்டது உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதுவரை படபடத்துக் கொண்டிருந்த அந்த இதயம் இப்போது நின்றே விட்டது இடது பக்க சட்டைப் பாக்கெட்டிற்குத் தட்டிக் கொடுத்துவிட்டு “என்ன ஆனாலும் சரி வா பாத்துக்கலாம் “ என்று தனக்குத் தானே ஆறுதல் கூறி அவ்விடத்திலிருந்து நகர்ந்தான் ஆதி.

எப்போதும் மீன் மார்க்கெட்டின் மறு உருவமாய் காச்சு மூச்சென்று கூச்சலிடும் வீடு இப்போது மயான அமைதியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

அம்மாவும் சிபியும் சமையலறையில் இருந்தார்கள். அப்பா ஹாலில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போல சமையலறைக்குள் செல்ல கால்கள் விரைந்தன.
“அப்பா உன் மேல பயங்கர கோபத்துல இருக்காரு. என்னதான்டா உனக்குப் பிரச்சன?. போ போய் எதாவது பேசு”
"என்ன பேச?"
“போய் சாரிப்பா இனிமே இப்படி பண்ண மாட்டேன். ஒழுங்கா இருக்கேன் அப்படினு சொல்லு போ”
“ஆமா அப்படி சொன்ன உடனே வாடா தங்கம்னு மடில உக்கார வச்சு முத்தம் கொஞ்சுவாரு. அவரு என்ன நீயா? ஈஸியா ஏமாத்துறதுக்கு? பிச்சு எடுக்கப் போறாரு அது மட்டும் உறுதி”
“நீயா முடிவு பண்ணாம போய் பேசு”
ஜோதி எவ்வளவுதான் சொன்னாலும் ஆதி அப்பாவிடம் போசுகிற மனநிலையில் இல்லை. காரணம், அவரின் கோபம் எந்த அளவிற்கு நியாயம் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவர் எப்படித் திட்டி, அடித்து, சண்டை போட்டாலும் குனிந்த தலை நிமிராமல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார். உண்மையை மிக எதார்த்தமாகப் புரிந்து கொண்டு காத்திருந்தான்.
ஆனால் அவன் எதிர்பார்ப்பு பொய்யானது. அப்பா அன்று அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இனி எப்போதும் இப்படியேதான் இருக்கப் போகிறார் என்று அவனுக்கும் மற்றவர்களுக்கும் தெரியவில்லை பாவம்.
அவன் அறையில் படுத்திருந்த ஆதியிடம் ஜோதி ஒரு கசப்பான செய்தியைச் சொன்னாள். அந்த முடிவிற்கு நாலு அடியே மேல் என்பது போல இருந்தது.
“ஆதி “
“என்னமா ? “
“உங்க அப்பா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு வர சொன்னாரு”
“என்னவாம்”
படுத்திருந்தவன் தலையணையை விட்டு சட்டென்று எழுந்து அம்மாவின் கையைப் பிடித்தான். ஜோதியின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் ஆதியின் கையில் சொட்டுச் சொட்டாகப் படிந்தது. “என்னமா?” என்று ஏக்கத்தோடு பார்த்துக் கேட்டான்.
எப்போதும் எட்டி உதைத்து விளையாடும் சிபியின் கைகளும் கால்களும் பின்புறமாகப் பற்றிக் கொள்ள இதுவரை புரியாத பாசத்தால் உடைந்து அழுதான் ஆதி.

தொடரும்...♡
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top