• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 29

ஆதியின் அப்பா எதிர்பார்த்த நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் புகுந்திருந்ததால் வசதியாகப் போனது அவருக்கு. கீழ் வீட்டில் நடப்பதை மாடிப் படிக்கட்டில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் அப்பா எதுவும் தெரியாதது போல

“என்னமா கீழ சத்தம் ? “ என்று வசனம் பேசிக்கொண்டே கீழே வந்தார்.

“ஒன்னு இல்லப்பா… நோட்ட காணோம் அதான் “

“நோட்டுதான? அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய சத்தம்?. வேற புதுசு வாக்கிக்கோ “ என்றார் அப்பா. அவருடைய சாமர்த்தியத்தைப் பார்த்து யாமினி சிரித்தாள். அவர் சொன்ன பதிலைக் கேட்டதும் கோணலாக மாறிய ஆதியின் முகத்தைப் பார்த்து சிபி சிரித்தான்.

இவர்கள் இருவரும் சிரிப்பதைப் பார்த்தவுடனே மனதின் கவலை நீங்க ஆதியும் சிரித்தான்.

“இல்லப்பா அது ரொம்ப முக்கியமான நோட்டு “

“முக்கியம்னு தெரியுதுல அப்போ நீதான் பத்திரமா வச்சிருந்திருக்கனும் “

“அலமாரிலதா வச்சிருந்தேன் இப்போ காணோம் “

“அப்படி என்ன முக்கியமான நோட்டு? ப்ராக்டிக்கல் ரெக்கார்ட் நோட்டா?”

“இல்லப்பா “

“அதவிட முக்கியமான நோட்டு உனக்கு அப்படி என்ன இருக்கப் போகுது? “ என்று கேட்ட அப்பாவின் கேள்விக்கு ஆதி பதில் சொல்லத் தெரியாமல் திணறினான். அந்த வேளையில் “எல்லாரும் சாப்பிட வாங்க “ என்று அம்மாவின் குரல் தலையிட்டு அவனைக் காப்பாற்றியது.

ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு என்றாலே ஆதி வீட்டில் விசேஷம்தான். மதிய உணவு உண்ண ஆரம்பித்தால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது அந்த இடத்தைவிட்டு எழாமல் எதாவது கதை பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்.

விழுங்கிய உணவு பேசியும் சிரித்துமே செமித்துப் போக மீண்டும் உண்ணு வயிற்றை நிரப்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்று அதற்கு முன்பாகவே பேசியதால், அப்போது பேச எதுவுமே கிடைக்கவில்லை.

அனைவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்து, அன்று வழக்கத்திற்கு மாறாக உரையாடலை ஆதியின் அப்பா தொடங்கினார். அவர் பேசினால் அதற்கு பின்னால் கண்டிப்பாக எதாவது இருக்கும் என்கிற நடுக்கத்திலே அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆரம்பத்தில் சிரிப்பூட்டம் வகையில் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தவரின் தலைப்பு மெல்ல மெல்ல ஆதியின் பக்கம் திரும்பியது.

“என்ன பெரிய ராஜா எனக்குத் தெரியாம எதாவது பண்றீங்களா? “

“இல்லப்பா அப்படியெல்லாம் இல்ல “ சிரித்துக் கொண்டிருந்தவன் முகம் சுருங்கியது.

“ம்ம்ம் சுந்தர் காமிச்சான் நீங்க யூடியூப்ல கத சொல்றத. பாத்தேன் நல்லாதான் இருக்கு “

“அது சும்மா விளையாட்டா பண்ணதுப்பா “

“ம்ம்ம் நல்ல விஷயம்தான். இப்போ அதுக்கு நான் தப்பு ஒன்னும் சொல்லலையே. பண்றது எல்லாம் ஓகே. ஆனா நம்ம எதுக்காக ஆசப்பட்டு கஷ்டப்பட்டோம்? என்னவாக மாறனும்னு லட்சியத்த வச்சிட்டு இருந்தோம்? ன்னு யோசன பண்ணி பாத்துட்டு, அதுக்கப்புறமும் எதுவும் தோனலைனா நீங்க தாராளமா இதையே தொடரலாம் “

“ப்பா இதெல்லாம் சும்மாதான். நெறையா நேரம் வீணாகுதேனு பண்ணேன். வேற ஒன்னும் இல்ல “

“ம்ம்ம் நெறையா நேரம் கெடச்சா உடம்ப தயார்படுத்தலாம், உடற்பயிற்சி செய்யலாம், யோகா செய்யலாம் இன்னும் எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு எப்படி ஆர்வம் பாத மாறுச்சுனு தெரியல “

“இல்லப்பா அதெல்லாம் பண்ணிட்டுதான் இருக்கேன் “

“ம்ம்ம் அதெல்லாம் நீ பண்ணிட்டுதான் இருக்கனு உன் அடிவயித்துல புதுசா முளச்சிருக்க ரெண்டு கிலோ தொப்பையே சொல்லுது “ அதுவரை அமைதியாய் இருந்த மூவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

ஆதி எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து சத்தமாக சிரித்ததால் அதிர்ச்சியில் அவன் கையில் வைத்திருந்த ஒரு டம்ளர் தண்ணீரைக் கீழே சிந்தினான்.

“என்புள்ள பந்தையத்துல ஜெயிக்குக்ற துடிப்பான குதிரைனு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போதான் புரியுது அவனுக்கு கூட்டத்தோட கூட்டமா ஆட்டு மந்தையில வாழதான் புடிச்சிருக்குனு” என்று சொல்லிவிட்டு எழுந்து கைகழுவி விட்டு பைக்கை முறுக்கி வெளியே கிளம்பிவிட்டார்.

தலையைக் குணிந்தபடியே சாப்பிட்டு முடித்த ஆதி அமைதியா மாடியில் அமர்ந்திருந்தான். அப்பா பேசியதற்கு கண்டிப்பாக ஆதியின் மனம் வருத்தப்படும் என்று அவனை சமாதானம் செய்ய அம்மா மாடிக்கு விரைந்தாள்.

“ஆதி இங்க என்ன செல்லம் பண்ற? “ என்று கேட்டுக்கொண்டே அவன் அருகே வந்த ஜோதியைக் கை நீட்டித் தடுத்து, “அப்படியே போயிருமா இல்லனா நான் மனுசனாவே இருக்க மாட்டேன் “ என்று பல்லைக் கடித்துப் பேசினான்.

இந்த மாதிரி இவன் கோபத்தை எத்தனை ஆயிரம் முறை ஜோதி கடந்திருப்பாள்?. அதே போல இப்பொழுதும் அவனை சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு அவன் அருகே அமர்ந்தாள்.

சமாதானத்தின் முதல்படியாக அவன் தலையில் கையை வைத்து நீவினாள், சிடு சிடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவளுடைய கையைத் தட்டிவிட்டான் ஆதி.

“பேசுனது உங்க அப்பா. அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்? “

“ம்ம் அந்த ஆள் பொண்டாட்டிதான நீ?”

“ஆஆ இது நல்ல இருக்கே. அவரு புள்ளதான் நீயும். இதோ நீ ஒய்யாரமா உக்காந்திருக்கியே இது அவரு வீடுதான். இப்போ ஸ்டைலா போட்டிருக்கியே ஒரு டிசர்ட் இதுகூட அவரு காசுல வாங்குனதுதான்”

“ம்ம் இந்த எரிச்சலுக்குத்தான் நான் வீட்டுக்கே வர்றதில்ல “

“என்னடா அப்பனும் புள்ளையும் கொஞ்ச நாளா ராசியா இருக்காங்களேனு ஆச்சர்யப்பட்டேன். இதோ இப்போ முட்டி கிட்டு மூஞ்ச தூக்கிட்டியா நீ “

“அவருதான் என்னைய எதாவது சொல்லி சீண்டி விட்டுட்டே இருக்காரு”

“பொறுமையா யோசிச்சு பாரு. அவரு உன்னைய சீண்டியா விடுறாரு? “

“அவரு என் நல்லதுக்குதான் சொல்றாரு இருந்தாலும்…”

“என்ன ? இருந்தாலும்னு இழுக்குற… இந்த வயசுல பெத்தவங்க என்ன சொன்னாலும் தப்பாதான் தெரியும். அவங்களுக்கு புடிச்சது நமக்கு புடிக்காது. இது புரியாததாலதான் நெறையா குழந்தைங்க திசை மாறி யோய் வாழ்க்கையவே தொலச்சர்றாங்க “

“புரியுதுமா. ஆனா என்ன பண்றது? அப்போதைக்கு இருந்த மனநிலைக்கு இது இருந்ததாலதான் நான் இன்னைக்கு ஓரளவுக்காச்சும் நல்லா இருக்கேன். இது மட்டும் இல்லைனா நான் என்ன ஆகிருப்பேனு எனக்கே தெரியல”

“சரிதான். அதான் இப்போ நல்லா இருக்கீல அந்த நோட்ட வேற காணோம்னு சொல்ற இத இப்படியே விட்டுட்டு உன் எய்ம் எதோ அத மட்டும் மனசுல வச்சுக்கோ “

“எப்படிமா இவ்வளோ ஈசியா விட்றுனு சொல்ற?. உங்களுக்கு வேணா இது வெறும் சாதாரண யூடியூப் சேனலாத் தெரியலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல “

“அதுக்கு இதுலயே வாழ்க்கைய ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டியா? “

“அப்படி இல்லமா. காலேஜ் முடிக்கிற வரைக்கும்தான் “

“அதெல்லாம் வேணாம்டா இது மனசுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டா அப்புறம் உன்னால விடவே முடியாது. இது உன் வாழ்க்கை இல்ல புரிஞ்சுக்கோ “

“ம்ம் “

“இடையில வந்தது இடையிலயே போகுதுனு நெனச்சுக்கோ. அப்பா சொன்ன மாதிரி இப்போ இருந்தே உடம்ப தயாரா வச்சுக்கோ அப்போதான் பின்னாடி உனக்கு ஈசியா இருக்கும் “

“ம்ம்ம் “

“ம்ம்ம் ம்ம்ம் மொனங்காம கொஞ்ச நேரம் இப்படியே உக்காந்து யோசிச்சு பாரு, அம்மா என்ன சொல்ல வர்றேனு புரிய வரும் “ என்று சொல்லிவிட்டு ஜோதி பயங்கர குஷியாக கீழே இறங்கினாள்.

தாங்கள் நினைத்ததை ஒரு வழியாக வெற்றி கரமாய் நிளைவேற்றிய சந்தோஷத்தில் ஜோதியும் அவளது கணவனும் அன்று இரவு நிம்மதியாக உறங்கினார்கள்.

இதுவா? அதுவா? என்கிற கேள்வி வந்துவிட்டாலே தூக்கம் தொலைந்துவிடும். ஆதியும் அந்தக் குழப்பமான மனநிலையில்தான் இருந்தான். எப்போதும் இரவு உறங்குவதற்கு முன்பு யாமியிடம் பத்து நிமிடமாவது அரட்டைப் பெட்டிக்குள் வார்த்தைகளைத் தட்டிவிட்டுத்தான் உறங்குவான். அன்று அவர்களுடைய உரையாடல் பத்து நிமித்தைத் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு மேலும் தொடர்ந்தது.


தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top