Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 20
“இங்க பாரு பெரிய சந்தோஷத்த அனுபவிக்க, இப்படி சின்னச் சின்ன சந்தோஷத்த இழக்குறது தப்பே இல்ல. எனக்கு உன்னைய விட காசு முக்கியமில்ல. காதலிக்க காசு தேவையில்லனு வசனம் பேச நான் ஒன்னும் எல்லாரையும் மாதிரி முட்டாள் இல்ல. நல்லா கஷ்டப்பட்டு உழச்சாதான் உன்ன நல்லவிதமா பாத்துக்க முடியும்ற தெளிவு எனக்கிருக்கு, அதான் சொல்றேன். எல்லாம் நம்ம நல்லதுக்குதான். நீதான் புரிஞ்சு நடந்துக்கனும் “
“ம்ம்ம் “
ஜோதா பிடிவாதக்காரிதான். ஆனால் அவளது காதலன் அவனது அழுத்தமான குரலில் ஆழமான காதலில் ஏதாவது சொன்னால், சமத்துப் புள்ளையாகக் கேட்டுக் கொள்வாள். அக்பருக்கு அவளிடம் பிடித்த குணமே இதுதான். என்னதான் பேச்சு வார்த்தையின் போது புரியாமல் சில வார்த்தைகளை அவள் விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார். இதுதான் அக்பருடைய காதல் கொள்கை. அவளது உண்மையான குணங்களோடு அப்படியே ஏற்றுக் கொண்டு ரசிப்பதே அவரது காதல் மொழி.
அக்பருக்கு வாழ்வின் எதார்த்தம் புரிந்ததால், தன் ஆசைகளைப் புறக்கணித்து விட்டு வருவதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டார். ஜோதாவிற்கு அவ்வளவு உறுதியான மனப் பக்குவம் இல்லை. அவளுக்கு அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும், பக்கத்திலே இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் பெரிதாகத் தெரியவில்லை. இதனாலே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையும் வரத் தொடங்கியது.
ஒரு நாள் “எனக்குத் தெரியாது நீங்க இப்பவே கிளம்பி வாங்க. இல்லைனா நான் உங்க கிட்ட பேச மாட்டேன்” என்று ஜோதா சொல்ல, அக்பருக்கு கோவம் தலைக்கு ஏறியது. பொதுவாகவே அக்பர் மிகவும் அடக்கமான குணமுடையவர். எந்த உணர்வையும் பெரிதாகக் காட்டிக் கொள்ள மாட்டார். எப்போதும் பொறுத்துப் போகும் குணமுடைய அவர் அன்று கண்முன் தெரியாத கோபத்தினால், அவளை முதன் முறையாகக் கடிந்து பேசினார்.
“பேச மாட்டேன்னு சொல்ற அளவுக்கு உனக்கு மனசு வெறுத்துப் போச்சா?. சரி நீ பேசாத. நான் இங்க எவ்வளவோ முக்கியமான ஒன்னுக்காக கஷ்டப்பட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் நீ இப்படி பேசி நடந்துக்குறது எல்லாம் எனக்கு மனசு கஷ்டமாகுது. நீ உன் விருப்பம் போல இரு. பேச வேணாம்னு தோனுச்சுனா பேசாத போ “ என்று தன் நொந்து போன குரலினால் சொல்லிவிட்டு செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தார்.
இத்தனை நாள் இல்லாத விதமாக இன்று எல்லை மீறி பேசிவிட்டாளே என்கிற வருத்தம் அவரின் கவனத்தைச் சிதறடித்தது. இந்த சண்டை நடக்கும் அதே வேளையில்தான், அவர் பாக்ஸிங் போட்டிக்காக தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அவருக்கு ஃபிட்னஸ் மீதும் பாக்ஸிங் மீதும் இருந்த அதீத ஆர்வம் தன் கனவைத் துரத்தச் செல்லத் துண்டு கோலாக அமைந்தது.
ஜோதாவிடம் சண்டையிட்ட பிறகு அவருடைய மனது அவர் பேச்சைக் கேட்காமல் அவளையே தேடினாலும், எப்படி அவள் என்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லலாம் என்கிற கோபம் அவரை அவளிடம் பேச விடவில்லை.
ஜோதாவிடம் இருந்து தினமும் இரவு பத்து மணிக்கு அவருக்கு அழைப்பு வரும். அப்படி வரும்போது, அவர அருகில் யாராவது இருந்தால் “அவர் பிராக்டிஸ்ல இருக்காரு, அப்புறம் பேச சொல்றேன் “ என்று சொல்லச் சொல்லி அவளை நிராகரித்துக் கொண்டே இருந்தார். தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு பல நூறு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாலும், அதைப் பார்ப்பாரே தவிர பதில் பேச மாட்டார்.
இந்த சண்டையினால் இருவருக்கும் இடையில் இருந்த தூரம் உண்மையானது. சோகத்தின் பிடியிலேயே ஜோதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டிற்கும் சென்றாள்.
அடுத்து என்ன ஆச்சுனு நாளைக்குப் பாக்கலாம் என்று ஆதி வீடியோவை முடித்துப் பதிவேற்றினான்.
அவன் பதிவேற்றிய அடுத்த நொடியே அந்த வீடியோவை பார்க்கத் தொடங்கினார் ஆதியின் அப்பா. ஜோதியிடம் இதன் மீது எனக்கு பயம் இல்லை என்று சொல்லி நடித்தாலும், அவருக்குள் இருந்த நடுக்கம் அவருக்கு மட்டும்தான் தெரியும். கதை முடிவை நோக்கி நகர நகர பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஆதியின் அப்பாவிற்கு தீவிரமானது. இந்த வாரம் அவன் வீட்டிற்கு வருவதற்கு இடையிலேயே இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறதே அதற்குள் மொத்தக் கதையையும் அவனால் வீடியோ போட முடியாது என்றாலும், முழுவதையும் படித்துவிட்டால் என்ன செய்வது என்கிற கேள்வி? அவரை நொடிக்கு நொடி தத்தளிக்க வைத்தது.
அவனை அந்தக் கதையை முழுவதுமாகப் படிக்க விடாமல் தடுக்க என்ன செய்வது என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அறையின் கதவை வேகமாகத் தள்ளித் திறந்து ஜோதி உள்ளே வர பதறி அடித்து எழுந்தார்.
“ஏன்டி பாத்து வரமாட்டியா? விழுந்து கிழுந்து தொலச்சிட்டீனா என்ன பண்றது? . சரி கையில என்ன? “ என்று ஜோதியைப் பார்த்துக் கேட்டார். எப்போதும் வீராப்பாக இருக்கிற தன் கணவர் தடுமாறியதைப் பார்த்து நக்கலாக சிரித்த ஜோதி, “இங்க பாத்திங்களா? “ என்று தன் கையில் வைத்திருந்த பாதி கிழிந்த நோட்டைக் காட்டினாள்.
“என்ன இது?“
“மீதிக் கதை “
“மீதியா? என்ன சொல்ற? தெளிவா சொல்லு “
“ஆமாங்க ஆதி கிட்ட இருக்குறது பாதிக் கததான். மீதிக் கத இங்க இருக்கு “
“அப்படியா? உண்மையாவா? “
“ஆமாங்க. ஆதி சின்ன வயாசா இருக்கும்போது அவனுக்கும் சிபிக்கும் சண்ட. அந்த சண்டையில் ஆளுக்கு ஒரு பக்கமா பிடிச்சு இழுத்து பிச்சுட்டானுங்க. அதுக்கு அப்புறம் இருந்துதான் நான் அப்படியே எழுதாம விட்டுட்டேன். ஒழுங்கா பாக்காம அத எடுத்துட்டு போய் கத சொல்லிட்டு இருக்கான்”
“அப்பாடா இப்போதான் எனக்கு உயிரே வருது. இனி இதுக்கு மேல நம்ம ஒன்னும் செய்யத் தேவையில்ல. கதை தெரியாம அவனே வீடியோ போடுறத நிறுத்திடுவான்” என்று ஜோதியின் கணவர் சொல்ல “ஆமாங்க” என்று ஜோதி உற்சாகத்தில் துள்ளிக் குதித்து சிரித்ததை யாமினி அறைக்கு வெளியே நின்று கேட்டுவிட்டாள். ஆதி சொல்லும் கதைக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஆதிக்கு இந்தக் கதை முழுவதும் தெரிந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்? என்று சந்தேகித்தாள்.
அந்த நொடி முதல் வீட்டின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினாள் யாமினி. அவர்கள் பேசியதைக் கேட்டதும் அங்கிருந்து நடந்து சிபியின் பக்கம் சென்று அமர்ந்துகொண்டாள்.
ஆசையா யூட்யூப் சேனல் ஆரம்ம்பிச்சிருக்கான். அதுனால, வீடியோ போட வேணாம்னு சொல்லி நம்மளே அவனோட ஆசையக் கெடுக்க வேணாம்ங்க. இனி இதுக்கு அப்புறம் அவனுக்கு இந்தக் கதை முழுசா தெரியவராது. ஏன்னா? கல்யாணம் ஆன வரைக்கும்தான் அந்தப் பாதியில இருக்கு. அதுல இருந்து சிபி பொறந்தவரைக்கும் இந்தப் பாதியில இருக்கு. அதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல “
“பிரச்சினை இல்லனு ஈசியா நெனைக்காத முதல்ல அத யாருக்கும் தெரியாம மறச்சு வை. இல்ல… இல்ல…. எரிச்சிடலாமா?” என்று தன் கணவன் யோசனை சொன்னதும் முகத்தில் ஜீவன் இழந்து விட்டாள் ஜோதி.
“ஆசையாசையா எழுதுனதுங்க எரிக்க வேணாமே ப்ளீஸ். எங்கையாவது குப்பையில கூட கொண்டு போய் போட்டர்றேன் “
“என்ன வேணாலும் பண்ணு ஆனா இந்த நோட்டு இனி இந்த வீட்டுல இருக்கக் கூடாது. அவ்வளவுதான் “
“சரிங்க”
பிரச்சினை முடிந்து விட்டது என்று பெருமூச்சு விட்டு இருவரும் இருக்கிப் பிடித்த வேதனையில் இருந்து விடுபட்டார்கள். அறையில் இருந்து வெளியேறிய ஜோதியின் முகத்தில் விவரிக்க முடியாத சந்தோஷம் பளபளத்தது. அந்த மினுமினுப்பு யாமினிக்கு இருந்த சந்தேகத்தை குழப்பமாக்கித் தவிக்கவிட்டது.
“யாமினி இன்னும் தூங்காம என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?“ என்று சோஃபாவில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து கேட்க்க, “அவ்வளவுதான்மா தூங்கப் போறோம்” என்று சிபி சொன்னான்.
“சிபி ஹோம் வொர்க் முடிக்க நேரம் ஆகிருச்சு அதான் “ என்று சொல்லி, சிபியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் யாமினி.
எல்லாம் நன்றாகத்தான் போகிறது என்கிற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்கச் சென்ற ஜோதிக்குத் தெரியாது யாமினி அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்று.
பேசியதைக் கேட்டிருந்தாலும் அரை குறையாக அர்த்தம் தெரியாமல்தான் கேட்டிருந்தாள். அதை ஆதியிடம் என்னவென்று சொல்லவது என்கிற குழப்பத்தில் செல்ஃபோனை எடுத்தாள். அவனிடம் ஏற்கனவே கோபத்தோடு இருந்த யாமினி, முதலில் அதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தாள். சண்டைக்குத் தாயாராக ஆன்லைனில் நுழைந்த யாமினிக்குப் பெரிய அதிர்ச்சி. அன்று என்றும் இல்லாத அதிசயமாய் வழக்கத்திற்கு மாறாக ஆதி சண்டையைத் தொடங்கி வைத்திருந்தான்.
தொடரும்...♡