• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 2

காரணம் என்னவென்று கண்டுபிடிக்க அவனிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை, அதை அப்படியே விட்டுவிட்டு வேறு கதைகளைப் பேசிச் சிரித்து மதியப் பொழுதைக் கழித்தார்கள்.
மற்ற நாட்களில் மூன்று நேரமும் உணவு உண்ண ஐந்து நிமிடமே அதிகபட்சம். ஆனால், எல்லா ஞாயிற்றுக் கிழமை மதியம் மட்டும் இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும். அந்த இரண்டு மணிநேமும் சிரிப்பு சத்தத்தால் வீடே நிறைந்திருக்கும். நேரம் கரைவதே தெரியாது. ருசித்துச் சுவைத்த மாமிச உணவு உடனுக்குடனே செரித்து மீண்டும் பசித்தேவிடும். கதை பேசப் பேச எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமை கிழமையாக இருக்கக்கூடாத என்கிற அற்ப ஆசை அனைவரின் மனதிலும் முளைக்கும்.

சிரித்துக் களைத்து அந்த இடத்தை விட்டு நகர ஆரமிக்கும்போது சரியாக சூரியனும் மேற்கை நோக்கி நகர்ந்து ஏறக்குறைய மலையின் பின்பக்கம் சென்று மறைந்தது தொடங்கிவிடும்.
மாலை நேரத்தில் ஆதியும் அப்பாவும் ஜிம்மிற்கு சென்றுவிடுவார்கள். ஜோதியும் சிபியும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்வார்கள்.
அப்படித்தான் இருவரும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கித் தூக்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

தெருவே அமைதியாக இருந்தாலும் சிபியின் வாய்க்கு அது ஆகாத வேலை. அதைக் கட்டுப்படுத்த எத்தாலும் முடியாது. யாராலும் முடியாது. ஜோதியிடம் சச்சரித்தபடியே வந்தான்.

“உன் மகன் வர வர ஓவரா பண்றான் சொல்லி வச்சுக்க அப்புறம் அவனுக்கு நான்தா வில்லன்”
“அவன கொற சொல்லாட்டி உனக்குத்தான் சோறே இறங்காதே. ஆதி என்னடா செஞ்சான் ?
“எப்போதுமே மெத்தையில நானும் அவனும் சேர்ந்துதான தூங்குவோம்?
“ஆமா… இப்போ என்ன அதுக்கு?”
“எப்போ காலேஜ் சேர்ந்தானோ அப்போ இருந்தே அவன் நடவடிக்கை சரியில்ல”
“ம்ம்ம்ம்ம் உனக்கும் தெரிஞ்சு போச்சா”
“பின்ன தெரியாம எப்படி இருக்கும்?. பக்கத்துலயே படுக்க வச்சிட்டு இருந்தவன் இப்போ என்னைய தள்ளி வேற கட்டில்ல படுக்க சொல்றான். வழியில்லாம தனியாதான் படுக்குறேன். அப்படியும் நிம்மதியாத் தூங்க முடியுதா? பெட்ஷிட் உள்ள இருந்து முனுமுனுன்னு சத்தம் ராத்திரி முழுக்க வருது அப்படி என்னத்ததான் பேசுவானோ தெரியல. இதெல்லாம் என்னனு கேக்க மாட்டியாமா நீ?”
“சரி விடுடா புதுசா காலேஜ் சேர்ந்திருக்கான் வகை வகையா வண்ணமா புள்ளைங்களப் பாத்ததும் காதல் வந்திருக்கும் அதான் பெரிய ராஜா துள்ளிகிட்டு திரியறாரு. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் அப்புறம் தன்னால அடங்கிரும் பாரு”
“ஆஆஆ எங்க கூடயும்தான் புள்ளைங்க படிக்குதுங்க. நாங்க என்ன இப்படியா அட்டூழியம் பண்றோம் ?
“அதெல்லாம் வயசுக் கோளாறுடா உனக்குப் புரியாது. சொல்லப்போனா ஆதி வயசுக்கு நீ வந்துட்டீனா நீ எல்லாம் அவன தூக்கி சாப்பிட்ருவ”
சிரித்துப் பேசி நடக்கையில் வீட்டிற்கு விரைவாக வந்துவிட்டார்கள். சிபி அவன் யூடியூப் சேனலில் நாளைக்கு எப்படி வீடியோ போடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

சமையலறையில் இரவு உணவு தயார் செய்யும் முனைப்போடு சிறப்பாகக் கொண்டிருந்தாள் ஜோதி.

பிள்ளைகள் வளர்வதில் சந்தோஷம் இருந்தாலும் கவலையே பெரும்பாலான இடத்தை அபகரித்துக் கொள்கிறது. ஆதி பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரி சேர்ந்து வாழ்க்கையின் புது அத்தியாயத்தில் நுழைந்த போது எவ்வளவு இன்பம் இந்த வீட்டை இறுகப் பற்றியதோ... இப்போது அதே அளவு சோகத்தையும் சுமக்கிறது.

இப்போதெல்லாம் ஆதியின் இருப்பை நாங்கள் யாரும் உணருவதே இல்லை. அவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. முன்பைப் போல் அவன் யாரிடமும் பேசுவதில்லை, கேளி செய்வதில்லை, சிரிப்பதில்லை, சண்டையிடுவதில்லை. எப்போது பார்த்தாலும் செல்ஃபோனினால் செவியை அடைத்து விட்டு ஒரு தனி உலகில் இருக்கிறான். அவன் அப்பாவிற்கும் எல்லா சங்கதியும் தெரியும். இது கண்டிப்பிற்குரிய விஷயம் இல்லை. இது சகஜம்தான். ஆனால், சங்கடத்தில் முடியாமல் இருக்க வேண்டும் என்ற பயமே என்னை உறுத்துகிறது என்று ஆதியைப் பற்றி தவிப்பிலேயே சமையலறை வேலைகள் முடித்துவிட்டு டிவியின் முன் அமர்ந்தாள் ஜோதி.
பாக்கியலட்சுமி சீரியலில் மூழ்கிய ஜோதிக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஆதியும் அவன் அப்பாவும் வீட்டிற்குள் நூழைந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக இருவரும் எப்போதையும்விடவே முன் வந்துவிட்டார்களே? என்கிற கேள்விக் குறியோடு எழுந்து சென்ற ஜோதியின் கண்ணைத் தன் பக்கம் இழுத்தது ஆதியின் காலில் போடப்பட்டிருந்த கட்டு.
“டேய் ஆதி என்னடா இது? எப்படிடா ஆச்சு ?” என்று பதறிப்போய் அவனின் காலைத் தொட... “அதெல்லாம் ஒன்னும் இல்ல ரூமுக்கு கூட்டிட்டுப் போய் சாப்பிட வை. நாளைக்குப் பேசிக்கலாம்” என்று ஆதியின் அப்பா.

ஆதியின் முகம் வேர்த்து விறுவிறுத்து ஏதோ தவறு செய்தது போல இருந்தது. அப்பா கோபத்தோடு பேசிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தார். ஆதியின் கைபிடித்து அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்துவிட்டு தட்டில் சோறுடன் வந்து நின்றாள் ஜோதி.

மகனின் முகத்தில் இருக்கும் மாற்றத்தை மனம் ஏற்காமல் கண்ணீர் சிந்தியபடியே சோறு ஊட்ட வந்த ஜோதியின் கைகளைத் தட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஆதி.
“உங்க எல்லாரோட கோபத்தையும் கொட்ற குப்பக் கூடையை நானு? விஷயம் என்னனு மட்டும் யாரும் சொல்லிறாதீங்க. காட்டுங்க சரியா ?. ஒழுங்கா சாப்பிட்டுட்டு படு உங்க அப்பாகிட்ட என்னால திட்டு வாங்க முடியாது”
“எனக்கு ஒன்னும் வேணாம். அவருக்கே போய் எல்லாம் குடு”
“ரெண்டு பேருக்கும் சண்ட வந்ததால காயம் வந்துச்சா? இல்ல காயம் வந்ததால சண்ட வந்துச்சா?
“ஜிம்ல அவ்ளோ பேர் இருக்காங்க. எல்லார் முன்னாடியும் திட்றாருமா”
“கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு”
“அது ஒன்னு இல்ல… டிரட்மில்ல ஓடிட்டு இருந்தேன். உடனே யாமினி கால் பண்ணா, அவாய்ட் பண்ண முடியல அதுனால அட்டென்ட் பண்றே”
“ஏன்டா அவ கிட்ட பேசிகிட்டேவா அந்த மிஷின்ல ஓடுன?
“ஆமாமா. அப்படி ஓடிதான் விழுந்து வாறுறேன். அதுனாலதான் மீச டென்சன்ல சுத்துறாரு”
“ம்ம்ம்ம் அது சரி இதுக்கு இடையில நான் வரல அப்பனாச்சு மகனாச்சு. வேகமா சாப்பிட்டு அவரு குளிச்சிட்டு வர்றதுக்குள்ள தூங்கிரு. அதுதான் உனக்கு நல்லது”
குளியல் அறையில் இருந்து வெளியே வந்த சிபியின் அப்பா ஜோதியைப் பார்த்து முறைக்க மடியில் தாங்கியிருந்த ஆதியின் தலையை கீழே இறக்கித் தலையணையில் வைத்துவிட்டு சிபியை அழைத்துக் கொண்டு அறையை விட்டு மாடிக்குச் சென்றார்கள்.

ஆதி முன்பு போல் இல்லை. காதல் கத்தரிக்காய் எல்லாம் சகஜம்தான் என்று நினைத்து இப்படியே விட்டுவிட்டால் தடம் மாறிப் போய் விடுவான். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று சிபியின் அப்பா சங்கடத்தோடு பேச, ஜோதி பதில் பேச முடியாமல் இருந்தாள். அது மட்டும் அல்ல நாளைக் காலை இவருக்கும் ஆதிக்கும் இடையில் என்ன நடக்கப் போகிறதோ? என்கிற பெரிய கேள்வியும் அச்சுறுத்தலாக இருந்தது.

இதை நினைத்தே இரவெல்லாம் சிந்தனையோடு கண் மூடாமலே இறந்து போனார்கள் ஆதியின் அப்பாவும் அம்மாவும்.

மறுநாள் விடிந்ததும் திங்கட்கிழமை என்பதால் அனைவரும் வேலை பரபரப்பில் இருந்தனர். சிபியின் பள்ளி வாகனம் வாசலில் வந்து ஒலி எழுப்ப அவனை ஏற்றி அனுப்பிவிட்டு ஆதியின் மதிய உணவு டிப்பனைக் கட்டிக்கொண்டிருந்தாள் ஜோதி.

அவன் அறையில் இருந்து வெளியே வந்து “ம்ம்ம்மா இன்னுமா?வாமா சீக்கிரம்” என்று கத்திக் கொண்டே சோபாவில் அமர்ந்தான் ஆதி. ஜிம்மில் இருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்தவர்…
“பெரிய ராசா பைக்க அசோக் மாமா கேட்டிருக்காரு அவருக்கு ஏதோ வேலை இருக்காமா அதுனால, ஒரு வாரத்துக்கு பஸ்ல காலேஜ்க்கு போங்க” என்று சொல்லிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தார் ஆதியின் அப்பா.

எரிச்சலடைந்து எழும்பியவன் வழக்கம் போலவே அவன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு முனுமுனுக்க ஆரம்பித்தான்.
“ம்ம்மா ப்ளீஸ் மா இவரு வேணும்னே பண்றாருமா. நீயாவது போய் பேசுமா எனக்காக”
“நான் போய் என்னத்தடா பேசுவேன்?. உனக்குத்தான் அவரப் பத்தி நல்லாத் தெரியுமே.அவரு முடிவு எடுத்தா எடுத்ததுதான்.நீ பஸ்லதான் காலேஜ் போகனும் வேற வழி. இல்ல”
எப்போதும் தாங்கிப் பிடிக்கும் அம்மாவே தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வது போல பேசியதால், கோபம் கொப்பளிக்க பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.
நேற்று மதியம் வரை இருந்து வாழ்க்கைக்கு மேல் இப்போது இந்த நொடி வரை இருக்கும் வாழ்க்கைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?. அதற்கு என்ன காரணம்?. அதை எப்படி சரிசெய்வது? என்றெல்லாம் சிந்திக்கும் மனப்போக்கில் அவன் இல்லை. அதற்குப் பாதிலாகக் கோபமும் வெறுப்பும்தான் அவனுக்குள் மீறிக் கொண்டிருந்தது. இதற்கு காரணம் வயசுதான்.

குரல் தடித்துத் தாடி மீசை எல்லாம் முளைத்து வயசுக்கு வந்துட்டான் பையன். பொண்ணுங்க வயசுக்கு வந்தா, மாதவிடாய் நாட்களில் மட்டும்தான் மூட்ஸ்விங். ஆனால் பசங்களுக்கு வாழ்க முழுக்க மூட்ஸ்விங்தான். இதில் வருத்தப்பட கூடிய விஷயம் என்னவென்றால், அவர்களால் அதை ஒரு பொருட்டாக மதித்து நேரம் செலவழித்துச் சரிசெய்து செயல்பட முடியாது. போகின்ற போக்கில் வழித்தெடுத்துவிட்டுத்தான் போக வேண்டியதாய் இருக்கும்.

புதிதிற்கு வழித்தெடுத்தது எரிச்சலைக் கொடுத்தாலும் போகப் போக பழகி விடும். ஆதிக்கும் அப்படித்தான்.

அரசுப் பேருந்தில் ஏறிச் செல்ல மனமே இல்லாமல் பேருந்து நிலையத் திண்ணையில் அமர்ந்திருந்தான் ஆதி. அப்போது ஒரு பேருந்து வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தன் அருகில் இருந்த கூட்டத்தில் பலர் மெல்ல நகர்வதைக் கவனித்த ஆதி தலையை நிமிர்ந்து பார்த்தான்.

அப்போது ஜன்னல் கம்பியின் இடையில் ஒரு கை நீண்டு வந்து அசைந்து கொண்டிருந்தது. அது அவனுக்குப் பரீட்சியமான கைதான். யார் அது என்று எழுந்து பார்க்கையில் அவளும் தலை சாய்த்து நான்தான் என்று சொல்லாமல் விரைந்து ஏறினான் பேருந்தில்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top