Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 19
அவன் அப்பாவின் பழைய இருக்கை வார் (லெதர் பெல்ட்) போன்று இருந்த சப்பாத்தியை விருப்பமில்லாமல் அசைபோட்டுக் கொண்டிருந்த அதே வேலையில் அவன் கால் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் அதிர்ந்து கொண்டிருந்தது.
அதிரல் விடாமல் தொடர… செல்ஃபோனைக் கையில் எடுத்துப் பார்த்தான்.
யாமினியின் குறுஞ்செய்திகள் அடுக்கடுக்காய் குவிந்த வண்ணம் இருந்தது. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் கொடுக்க நேரமில்லாததால், ஐந்து நிமிடங்கள் அழைத்துப் பேசிக் குரலைக் கேட்டால் அனைத்தும் மறந்து விடும் என்று யாமிக்கு அழைத்தான். கோபத்தில் அழைப்பைத் துண்டித்து விட்டாள். அவள் மீண்டும் அழைப்பாள் என்று ஒரு மணி நேரம் காத்திருந்தான். அவன் நினைத்தபடி அழைப்பு வராததால் வீடியோ எடுக்கத் தயாரானான்.
அன்றைய நாளுக்கான வீடியோ இதோ இப்படித்தான் தொடங்கி, பயணித்து, முடிந்தது.
உரியவரைத் தவிர மற்றவர்களிடமே அவர்களது காதலைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்த இருவரின் காதலும் இருவரிடத்திலும் வெளிப்பட்டது இப்படித்தான். ஒரு நாள் ஜோதாவிற்கு கடுமையான வயிறு வலி. மாதத்தில் மூன்று நாள் வருமே அதே வலிதான். படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள் ஜோதா. அவளை எதிலும் கவனம் செலத்த விடாமல் ஒரு பாடு படுத்திக் கொண்டிருந்தது வயிறு வலி.
சுழித்த முகத்தோடு சுருண்டு படுத்த ஜோதாவிடம் மலர் வந்து “இந்தாடி உன் ஃபோன் உனக்கு இன்ஸ்டாகிராம்ல ஏதோ மெசேஜ் வந்திருக்கு. என்னனு பாரு” என்று சொல்லி செல்ஃபோனைக் கையில் கொடுத்தாள். வாங்கிப் பார்த்த ஜோதாவிற்கு வயிற்றைக் கொத்திக் கொண்டிருந்த கொடூரப் பறவைகள் வெளியேறி, அதற்கு மாறாக பட்டாம்பூச்சிகள் பறந்தன.
“ஹாய். என்ன பண்ற? சாப்பிட்டியா?” என்று அவள் மீது காதல் கொண்டுள்ள அக்பர் அவளை நலம் விசாரிக்க, சுழித்த முகம் சிரித்தது.
“சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா? “
“சாப்பிட்டேன். நீ எங்க இருக்க ஹாஸ்டல் போய்ட்டியா? “
“ஆமாங்க வந்துட்டேன் “
“சரி “
சுருக்கமான உரையாடலாக இருந்தாலும் சுகம் தரும் உரையாடலாக அமைந்தது. இருவரின் தாய் பொழியும் வெவ்வேறாக இருந்ததால், இவர்களது கருத்துக்களை கடத்த ஆங்கிலமே உதவியாக இருந்தது.
அக்பர் அதிகமாகப் பேசாத ஒரு ஆள். ஜோதா நெருக்கமான மனிதர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பேசும் ஒரு ஆள். இருவருமே அவர்களுடைய வரையறையில் இருந்து விடுபட்டார்கள். அக்பருக்கு ஜோதாவிடம் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தயங்காமல் பேசினார். மற்றவர்களிடம் வாய் கிழியப் பேசும் ஜோதாவிற்கு அக்பரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தாலே கைகால் நடுங்கிவிடும். இதைத்தான் காதல் என்று சொல்வார்களோ என்னவோ?.
இவர்களுடைய உரையாடல் முன்னேறி அடுத்த கட்டமாக குரல் பதிவு செய்து, அதன் மூலமாக இருவருக்கும் இடையில் இருக்கும் காதலைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தங்கத் தமிழை அக்பர் தத்தித் தத்தி பேசும் அழகை ஜோதாவும், மழலை பேசும் மலையாளத்தின் அர்த்தமற்ற சில வரிகளாக ஜோதா பேசும் அழகை அக்பரும் முகமலர்ச்சியோடு சிரித்து ரசித்த காலம், அவர்களது காதல் மெல்ல வளர்ந்த காலம்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு மேலாக இருவரும் சொல்லிக் கொள்ளாமலே காதலில் இருந்தார்கள். “எத்தனை நாள் இது இப்படியே தொடரும்?” என்று நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, ஒருவர் அடுத்து ஒருவர் தங்களது காதலை உறுதிப்படுத்தினார்கள்.
முதலில் தன் காதலைச் சொன்னது அக்பர்தான். குளியலறையில் இருந்து வெளியே வந்த ஜோதா தன் செல்ஃபோனில் இசையை இசைத்துவிட்டுந் தலையைத் துவட்டுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் செய்ய வந்தாள். ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக அக்பரிடம் இருந்து அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. “ஐ லவ் யூ ஜோதா “ என்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மெசேஜ் செய்துவிட்டு இணையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அதை அவள் இப்போதுதான் பார்க்கிறாள், படபடக்கிறாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர்தான் வருகிறது… ஆனால் அதன் பெயர் அழுகை இல்லை.
அந்த ஒற்றைக் குறுஞ்செய்தி அவள் உலகத்தையே நகர விடாமல் கட்டிப் போட்டது. அவள் தலை முடியில் இருந்து வழிந்து தரையில் விழும் தண்ணீரின் டப்டப் சத்தமும் அவளது இதயம் துடிக்கும் லப்டப் சத்தமும் மட்டும்தான் அவளுக்குத் துள்ளியமாகக் கேட்டது. பதிலுக்கு என்ன குறுஞ்செய்தி அனுப்புவது என்று தெரியாமல், அவளுக்குத் பிடித்த நீல நிற இதயத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.
அதற்கு பிறகு அந்த நாளில் நடந்த எந்த நிகழ்விலுமே அவள் உயிரோடு இருந்ததாக அவளுக்குத் தெரியவில்லை. பேய் அறைந்ததைப் போல உணர்வற்று கிடந்தாள். யாரிடமும் பேசவில்லை, எந்த வேலையும் செய்யவில்லை. அந்த நாள் முடிய சரியாக ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது. மணி இரவு பதினொன்று. அவருக்கு இதயத்தைக் கொடுத்ததாளோ என்னவோ ஏதுமற்றதாக உணர்ந்து அவளை அவளே கிடப்பில் தள்ளினாள்.
அவருக்குக் கொடுத்த பதிலுக்கு பதிலாக அவர் என்ன செய்து வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால், தூக்கமே வராது என்று தைரியத்தை வரவழைத்து இன்ஸ்டாவிற்குள் நுழைந்தாள். அவளுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்.
அவள் அனுப்பிய நீல இதயத்திற்குக் கீழ் “வார்த்தையால் சொன்னால், இன்னும் அழகாக இருக்கும் “ என்று தன் விருப்பத்தை ஆசையோடு தெரிவித்திருந்தார். அவர் ஆசைக்கு விருந்தாக ஜோதா குரல் பதிவில் “எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ “ என்று தன் குரலால் சொல்லி அனுப்பி வைத்தாள். அப்படியே குரல் பதிவு உரையாடல் வளர்ந்து இரவை விழுங்கியது.
“மெசேஜ்ல சொல்லியிருந்தாலே போதும். நீ என்னடானா வாய்ஸ் நோட்ல சொல்லிட்ட இப்பவே உன்னையப் பாக்கனும் போல இருக்கு எனக்கு “
“உடனே பாக்கனும்னு சொல்லாதீங்க “
“என்னது உடனேவா?. உன்னப் பாத்து ஒரு வருஷம், இரண்டு மாசம், ஏழு நாள் ஆச்சு “
“என்னங்க இப்படி கணக்கு வச்சிருக்கீங்க! “
“அப்புறம் இதெல்லாம் மறக்குற காரியமா? “
“மம்ம்… சரி சாப்பிட்டீங்களா ? “
“இல்லையே “
“ஏன் என்னாச்சு? “
“பண்றதெல்லாம் பண்ணிட்டு ஏன்னு வேற கேக்குறியா நீ?. நான் சாப்பிடாததுக்கு நீதான் காரணம். ரிப்லை பண்ணிட்டு, அதப் பாத்தவன் என்ன நிலமையில இருக்கான்ற அக்கறை இல்லாம உன் இஷ்டத்துக்கு இப்போ வர்ற. நீ எப்ப வருவ? எப்ப வருவனு பாத்துப் பாத்தே நான் சாப்பிடவே மறந்துட்டேன் “
“நீங்க தைரியமா சொல்லிட்டீங்க. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மாதிரி கூச்சமா, வெக்கமா அது என்னனே சரியாத் தெரியல. ஏன் நான் உங்கள லவ் பண்றேனு சொன்னாதான் தெரியுமா?. சாப்பிடாம இருந்துட்டு பேச்ச பாரு பேச்ச”
“தெரிஞ்சாலும், நீ சொல்ற மாதிரி வருமா? “
“ம்ம்ம் ரொம்பதான் லவ் பண்றீங்க “
“ம்ம்ம் ஆமா ஆமா. சரி தூங்கலாமா? சாப்பிட வேற இல்ல, தூங்காமையும் இருந்தா காலைல ஜிம்ல ஆக்டிவா இருக்க முடியாது. டயடாகிரும் “
“சரி தூங்கலாம் “
அக்பர் தன் மனதில் இத்தனை நாளாக சுமந்த சுகமான பாரதத்தை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்க, ஜோதாவோ ஜோரான வலியில் தூக்கம் தொலைத்தாள். இருவருக்கும் இடையில் இருந்த புரிதல் அவர்களின் காதலை மேலும் வலுவடையச் செய்தது. பல மாதங்கள் பார்க்காமலே காதலித்தார்கள்.
அதிக நேரம் பேசுவதில்லை. ஒரு நாளைக்கு அதிகபட்சமாகவே அரை மணி நேரம்தான் பேசுவார்கள். அக்பருக்கு நேரம் கிடைக்காவிட்டால், அதுவும் இல்லை.
இப்படியே போய்க்கொண்டு இருக்க ஜோதாவின் கல்லூரி காலம் முடியும் நேரமும் நெருங்கிக் கொண்டே இருந்தது.
அந்த நேரத்தில் மிகவும் தீவிரமான, அவசியம் தேவையான வாக்கு வாதம் ஒன்று தொற்றிக் கொண்டது.
“அவ்வளவுதான் இன்னும் ஒரு மாசம் மட்டும்தான் காலேஜ், அடுத்து பத்து நாள் எக்ஸாம், அப்புறம் லீவு. நீங்க எப்போதான் என்னைய பாக்க வர்றீங்க?. வருவீங்க வருவீங்கனு பாக்குறேன் வரவே மாட்றீங்க. எனக்கு ஆசையா இருக்குங்க. வாங்க ப்ளீஸ்ங்க “ என்று கொஞ்சலோடு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா? எனக்கும்தா உன்ன பாக்கனும்னு ஆசையா இருக்கு”
“சொன்னா மட்டும் போதாது செய்யனும்”
“செய்யிறேன்.நான் ஒன்னு உங்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்.அதுக்குள்ள நீ இப்படி பேச ஆரம்பிச்சிட்ட.இப்போ நேரம் சரியில்ல. நான் நாளைக்கு சொல்றேன்”
“நாளைக்கெல்லாம் வேண்டாம். இப்பவே சொல்லுங்க”
“நாளைக்கு சொல்றேன்டி செல்லம்”
“போங்க... இப்பவேதான் சொல்லனும்”
“எனக்கு கேரளாலயே வேல கெடச்சிருக்கு. நாளைக்கு ஊருக்குக் கெளம்புறேன்”
"நாளைக்கேவா?"
“ம்ம்ம் ஆமா. ஏன் திடீர்னு “
“தீடீர்னு இல்ல. நான்தான் மூனு மாசத்துக்கு முன்னாடியே சொன்னனே அப்ளைப் பண்ணிருக்கேனு. ரொம்ப நாளா எந்தத் தகவலும் வராததால செலக்ட் ஆகலனு. நெனச்சேன். சொல்லப்போனா நான் அதை மறக்கவே மறந்துட்டேன்”
“மறந்தது மறந்ததாவே இருக்கட்டும் நீங்க அங்க போக வேணாம். இங்கையே இருங்க. அப்போதான் அடுத்து நான் வீட்டுக்கு வரும்போது உங்களப் பாக்க முடியும்”
“இங்க விட மூனு மடங்கு அங்க சொந்த சம்பளம் அதிகம். அதோட ஊர்லயே வேல. அதுனால இங்க ஆகுற செலவை விட அங்க கம்மியாதான் ஆகும்”
“உங்களுக்கு என்னவிட காசுதான் முக்கியம். போங்க என்னமோ பண்ணுங்க” என்று பெருமூச்சு விட்டுக் கத்தி பின் அமைதியானாள். ஹலோ ஹலோ என்று தன் ஆசைக் காதலன் விடாமல் அழைத்தபோதும் கூட எந்த பதிலுமே பேசாமல் இருந்தாள். “குழந்த மாதிரி பண்ணாத. ஏதாவது பதில் பேசு. எனக்கு டென்சன் ஆகுது” என்று அக்பர் பல்லைக் கடித்த பிறகு, “நான் பேசிட்டுதான இருக்கேன்” என்று சுட்டித் தனமான குரலில் சொன்னாள். அவரும் தன் கோபம் மறந்து சிரித்தார்.
தொடரும்...♡