Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 11
சிலருக்கு வார்த்தைகளால் சொல்லாவிட்டாலும் சட்டென்று புரிந்துவிடும். அவருக்கும் அவளின் நிலை புரிந்தது. அவளுடன் பேச முனைந்தார்.
“இது ஸ்வீட்டா? “ என்று கேட்டார். ஆனால் அவள் நுனி மூக்கில் குடி கொண்ட கோபமோ அவர் பேசியது கேட்டும் கேட்காமல் இருக்கச் சொன்னது.
இருப்பினும், சாக்லேட்டை சுவைத்து முடித்துவிட்டு தண்ணீர் குடிக்கும்போது “தண்ணி வேணுமா? “ என்று அவரைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
எப்படி ஒத்துப் போகாதவராய் இருந்தாலும் தம்மிடம் இருப்பதை அவருக்கு தராமல் எப்படி இருக்க முடியும் என்கிற குழந்தை மனதும் ஜோதாவிற்கு உரியதுதான்.
“தண்ணி வேணுமா? “ என்று ஜோதா கேட்டுத் திரும்பும்போது சரியாக அவரின் பார்வை அவள் மீது ஏற்கனவே பற்றி இருந்தது. பழைய காதல் திரைப்படங்களில் காட்டப்படும் கண்கள் நான்கும் மோதி முதல் பார்வை சந்திப்பின் காட்சிதான் அது. நான்கு நொடிதான்! வெறும் நான்கே நான்கு நொடிதான்! மின்சாரம் பாய்ந்து அடித்துச் சாய்த்து ஒரு வழியாக்கிவிட, இதற்குமேலும் வேண்டாம் என்று அவரால் எப்படி மறுக்கமுடியும்?. கை நீட்டி வாங்கினார்.
“இருங்க நானே ஓப்பன் பண்ணி தரேன் “ என்று சொல்லி மீண்டும் அதை வாங்கித் மூடியைத் திறந்து கொடுத்தாள் ஜோதா.
அதை வாங்கி இரண்டு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் அவள் கையில் கொடுத்துவிட்டார். அவரிடம் இருந்து வாங்கி பிறகு ஜோதா குடிக்க, அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை விறுட்டென்று எழுந்து தன் கைகளால் முடியைக் கோதிக்கொண்டே கீழே இறங்கினார்.
“இப்ப எதுக்கு இவரு கீழ போறாரு? “ என்று ஜோதா யோசித்துக் கொண்டிருக்கும்போதே வெளியில் இருந்த அனைவரும் பேருந்திற்குள் ஏற ஆரம்பித்தார்கள். இவரைத் தேடி அலைந்து கொண்டிந்த அவள் கண்களை அவர் கண்டுபிடித்ததும் கையை அசைத்து “நானும் ஏறிவிட்டேன் “ என்று பதிவு செய்தார்.
பேருந்து மீண்டும் நகர ஆரம்பித்தது. அதுவரை கூச்சலிட்டபடி இருந்த பேருந்து கூட்டத்தின்போது சத்தம் அமைதியானது. அனைவரும் சோர்ந்து போனார்கள் போலும்!. அந்த நேரம் பார்த்து அவர் “நேம் “ என்று அவளிடம் கேட்க , தன்னிடம் ஏதோ கேட்கிறார் ஆனால் பிடிபடவில்லையே என்கிற குழப்பத்திலே காதொலிப்பானைக் கழற்றி பையில் வைக்க... “நேம் நேம் “ என்று சொல்லி அவர் அவளைச் சுட்டிக் காட்டினார்.
“ம்ம்ம் ஜோதா”
“ஓகே “ என்று சிரித்தபடியே தலையைத் திருப்பி எதிர் சீட்டின் ஜன்னல் வழியே ஜில் என்ற பூங்காற்றிடம் ஒரு மந்திரத் தூது அனுப்பியிருப்பார் போல, காற்றின் தொடுதலை உணர்ந்த உடனே உடல் கூசி சிலிர்த்தாள் ஜோதா. அந்த காற்று அவரிடம் பேச அவளுக்கு கற்றுக் கொடுத்தது.
“காத்து ஜில்லுனு அடிக்க நல்ல இருக்குல “
“எஸ் “
“ஊர் கிட்ட வந்துட்டோம்ல இனி இப்படித்தான் இருக்கும் “
“டிஸ்டன்ஸ்? “
“என்ன டிஸ்டன்ஸ்?. ஓஓ… ஊருக்கு போற டிஸ்டன்ஸா இன்னும் ஒரு மணி நேரம்தான் போயிரலாம் “
“ஓகே ஓகே “
அப்போதுதான் மலர் சொன்ன வார்த்தை ஜோதாவுக்கு நியாபகம் வருகிறது. அவர் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர் உன் ஊர்க்காரர் போலத்தான் தோன்றுகிறது என்கிற வசனத்தை அவள் உறுதியாகப் பேசினாளே, பின் இவர் இப்போது “டிஸ்டன்ஸ்?” என்று கேட்கிறார் என்று குழம்பினாள்.
“நீங்க கொடைக்கானலா? “
“ ஆஹான் இல்ல”
“இல்லையா? நீங்க எங்க ஊர்னுதான உங்க பக்கத்துல உக்காந்து வந்தேன். ஐயோ நான் இப்போ என்ன பண்ணுவேன்?”
“எந்தா? … மனசிலாயில்லா “
“என்னது மனசுல ஆயீ இல்லையா… “ அட நான் அப்பவே சந்தேகப்பட்டேன் ஆள் வேற பாக்க பள பளனு வாட்ட சாட்டமா இருக்கானேனு என்று தனக்குள்ளே புழம்பினாள் ஜோதா.
“வீடு எங்க?... வீடு வீடு “ என்று தன் கை இரண்டினையும் கூப்பி வீட்டுக் கூரைபோல வைத்துக் கொண்டு கேட்டாள்.
“திருச்சூர், கேரளா”
“மலையாளியா? “
“ம்ம் ஹான் “
அப்படிப் போடு அரிவாள என்கிற மாதிரி பயங்கரத் திருப்பு முனையாக இருந்தது அவரின் பதில்.
“நேம்”
“அக்பர் “
பெயரைக் கேட்டதும் அமைதியாகிவிட்டாள் ஜோதா. அவர் பெயரே அவரை அடையாளப்படுத்த, நெருக்கமாக அமர்ந்திருந்தாலும் அவருக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் இடைவெளி எட்டிப் பிடிக்க இயலாதது என்று ஜோதா புரிந்து கொண்டு வாயடைத்துப் போனாள்.
“கொடைக்கானல்ல தெரப்பிஸ்ட்டா வொர்க் செய்றேன் “ என்று அவர் கொஞ்சும் தமிழால் மலையாளத்தை மூடி மறைத்துப் பேசினார். அவ்வப்போது எட்டிப் பார்த்த மலையாள வார்த்தைகளும் அவர் தமிழ் பேசும் சாயலும் ஜோதாவை அவர் இடது பக்க சட்டைப்பை… இல்லை இல்லை இதயப்பையில் அமருமாறு அழைத்தது. திகைத்துத் திக்கித் திக்கி பதில் பேசினாள் கதையின் நாயகி, ம்ம்ம் அக்பரின் காதல் நாயகி.
“ம்ம்ம் சரி”
“நீ காலேஜ் தானே? “
அவர் பேசாதவரை இருந்த தவிப்பை விட அவர் பேச ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட குழப்பமே மேலோங்கி இருந்தது. நான் கல்லூரியில் படிப்பது அவருக்கு எப்படித் தெரியும்? என்கிற கேள்வியை, தோற்றத்தை வைத்துக் கணித்தருப்பார் என்கிற சாதாரணமான பதில் திருப்திபடுத்தவில்லை. ஏனென்றால் அவர் சாதாரணமானவர் இல்லை.
“உங்களுக்கு எப்படித் தெரியும்? “
“பேசும்போது கேட்டேன்”
“ஓஓஓ தமிழ் நல்லா பேசுறீங்க”
“ம்ம்ம் பின்ன ரெண்டு வருஷம் இங்கதானே வொர்க் பிறகு எப்படி? “
“சரிதான்”
முதல் முறையாகப் பார்த்த ஒருவரிடம் என்ன பேசுவது என்பது பற்றி இருவருக்குமே எந்த யோசனையும் இல்லை. இருந்தும் பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள்?. எப்படி பேசினார்கள்? என்று நாளை வீடியோவில் பார்க்கலாம் என்று ஆதி பேசி முடித்தான்.
வீடியோ பார்ப்பவருக்கும் கதை கேட்பவருக்கும் இந்த கதை பிடிக்குமா? பிடிக்காதா? என்பதைப் பற்றி எல்லாம் ஆதி கவலைப்படவே இல்லை. கதையின் சூழலலும் நகர்வும் அவனை அதற்குள் இழுத்து இறுக்கிக் கட்டிக் கொண்டதால், அவனும் அடுத்து என்ன? என்கிற ஆர்வத்தோடு அதனுடனே பயணித்தான். ஒவ்வொரு நாளும் கதை படிப்பதும் யூடியூப்பில் வீடியோ போடுவதும் அவன் வலிக்கு மருந்தாகவும், தனிமைக்கு துணையாகவும் இருந்ததால் அதை உற்சாகத்தோடு தொடர்ந்து கொண்டிருந்தான்.
இரண்டாவது வீடியோவை அப்லோட் செய்துவிட்டு உறங்கிய ஆதிக்கு தன் அலைபேசியில் வைத்திருந்த அழைப்பு இசை கேட்டவுடன் விருப்பமே இல்லாமல் கண் விழித்து யார் என்று எடுத்துப் பார்த்தான். அந்த அழைப்பு அவன் அலைபேசியில் பதிவாகாத எண்ணிலிருந்து வந்திருந்தது. இந்த நேரத்திற்கு அழைப்பதற்கு அப்படி என்ன அவசியம் இருக்கிறது? என்று யோசித்தபடியே பதற்றத்தில் அனுமதி பொத்தானைத் தொட்டு அழைப்பை ஏற்றான்.
“ஹலோ… ஹலோ ஆதி “
அந்தக் குரல் அவன் இதயத்தில் ஊறி உரைந்துபோன குரல். அவன் செவிகளில் சீராகி உயிரினில் வேரான குரல். அந்தக் குரலைக் கேட்டதும் தன் கண்ணில் இருந்து சொட்டிய கண்ணீரின் வெதுவெதுப்பு அவளின் இருப்பைக் கொண்டுவந்து சேர்த்தது. கனத்த குரலுடன் “யாமினி “ என்று அழைத்தான்.
“டேய் எங்கடா இருக்க? “ என்று அழுகுரலில் ஏக்கத்தோடு அவள் கேட்டாள்.
“யாமினி நீ முதல்ல அழாத. அழாம பேசு “
“எனக்கு பயமா இருக்கு “
“ஏன்? எதுக்கு? என்ன பயம் உனக்கு? “
“நீ நல்லா இருக்கல்ல? “
தவிதவித்த குரலில் பயத்தோடு “நீ நல்லா இருக்கியா? “ என்று கேட்பது வெறும் நலம் மட்டும் விசாரிப்பது அல்ல. அவளின் இத்தனை நாள் போராட்டம் மற்றவர்களை எதிர்கொள்வதும், தன்னை சரிபடுத்துவதிலும் இல்லை. எண்ணமெல்லாம் அவன் எங்கே? எப்படி? இருக்கிறான் என்பதிற்குள்தான் மூழ்கி இருந்திருக்கும் என்ற களைத்துப் போன காதல் வரிகள் அவளை அவனுக்கு வேறொரு கோணத்தில் அறிமுகம் செய்தது.
“யாமினி நான் நல்லா இருக்கேன். நீ எத நெனச்சும் கவலப்படாத சரியா?”
“நீ எப்ப வருவ? ”
ஞாயிற்றுக்கிழமை மாலை பொழுதில் வீட்டில் அப்பாவின் முதுகில் ஏறி சவாரி செய்து, அவர் கையிலி வேட்டியில் தொட்டில் கட்டி ஆடி, அவர் மூக்குக்கண்ணாடியை எடுத்துப் போட்டு, அவர் முகம் கை கால்களின் மீதெல்லாம் ஓட்டு வீடும் தென்னை மரமும் வரைந்து, அவருக்கு முத்தம் கொடுக்கப்போய் ஏமாற்றி அம்மாவிற்கு முத்தம் கொடுத்து, வேலை செய்து இறுகிப்போன அவர் கையின் மீது தன் குட்டி முழங்கையால் பருப்பு குத்தி கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடிய பிறகு… மறுநாள் சிபி எழுவதற்கு முன்பாகவே அப்பா வேலைக்குச் சென்றுவிடுவார். நேற்றைப் போல இன்று இருக்கப் போவதில்லை என்று தெரிந்தவுடன் காரணம் சொல்லத் தெரியாமல் அழுது அடம்பிடிப்பான் சிபி,.
அழைபேசியில் அப்பாவின் குரல்கேட்டதும் அவனது முதல் கேள்வியும் “நீ எப்ப வருவ? “ என்றுதான் இருக்கும். நானும் சிறுவயதில் இப்படித்தான் கேட்டிருப்பேன்.
அப்பாவின் இல்லாமையைத் தாங்கிக் கொள்ள முடியாத பிள்ளையின் தவிப்பும், காதலனின் இல்லாமையைத் தாங்கிக் கொள்ள முடியாத காதலியின் தவிப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
“படிச்சு முடிச்சிட்டு, ஒரு நிரந்தரமான வேலைக்குப் போன உடனே நீ எங்க இருந்தாலும் உன்ன தேடி வந்து கூட்டிட்டு வந்து என் கூடவே வச்சுப்பேன். உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன். நீ அழாம இரு “
“சரிடா “
“ஆமா உனக்கு எப்படி என் நம்பர் கெடச்சது? காலேஜ்ல பிரச்சன ஆனதால நம்பர் மாத்தி எட்டு மாசம் ஆச்சு. வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும்தான் இந்த நம்பர் தெரியும் “
“உன் அப்பாதான் குடுத்தாரு “
நடு இரவில் எதிர்பாராத அழைப்பு! எதிர்பாராத குரல்! எதிர்பாராத தகவல்!. அதிர்ச்சி இந்த அளவிற்கு இருக்குமென்று அவன் நினைக்கவில்லை. “அவரு எப்படி? “ என்று அவன் கேட்ட அடுத்த நொடியே “ஆதி நாளைக்கு முடிஞ்சா லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வர முடியுமா ? “ என்று அப்பாவின் குரல் கேட்டது.
விடுதிக்கு வந்ததில் இருந்து ஆதி அவன் அம்மாவிடம் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான். எப்போதாவது சிபியிடம் பேசுவான், இல்லை இல்லை வாதாடுவான். விடுதிக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பல மாதங்கள் கழித்து அன்றுதான் அப்பாவின் குரலை அழைபேசியில் கேட்டான்.
தொடரும்...♡