Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 10
வெயில் காலம் என்பதால் கூட்ட நெரிசலில் அவளால் நிற்கவே முடியவில்லை. இருந்தும் எப்படியோ தாக்குப்பிடித்தாள்.
தனக்கு முன் இருவர் மட்டுமே வாங்க வேண்டிய நிலையில் இருக்கும்போது தன் வலது தோளில் யாரே கைவைத்து அழைப்பது போல இருக்கவும் திரும்பிப் பார்த்தாள் ஜோதா.
கூட்ட நெரிசலில் முகம் சரியாகத் தெரியவில்லை சிவப்பு நிற பனியனில் கருப்பு நிறக் கோடாய் அணிந்திருந்தார். வெளிர் நிற தோளுமாய் வழித்தெடுத்த முகமுமாய் இருந்தார். எனக்கும் ஒன்று ப்ளீஸ் என்று வாய் திறக்காமல் சைகையில் கேட்டார். ஒருவர் மூன்று முன்பதிவு சீட்டுவரை பதியலாம் என்பதால் அவர் நீட்டிய இருபது ரூபாயை ஜோதா வாங்கினாள். அவர் ஜோதாவிடம் பணத்தைக் கொடுத்து விட்டு கூட்டத்தை விட்டு நகர்ந்து ஜாலியாக நின்றிருந்தார்.
அவள் நொந்து நூலாகி ஒரு வழியாக முன்பதிவு சீட்டை வாங்கிக் கொண்டு சென்று அவரிடம் கொடுத்தாள். கூடவே பத்து ரூபாய் மீதியையும் கொடுத்தாள்.
அவர் முகத்தில் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் இறுகிய பாவனையோடு சீட்டை வாங்கினார். பணத்தைக் கொடுக்கும்போது ஜோதாவின் முகத்தைப் பார்த்தார். அப்போதும் அவள் அவரைத் தெளிவாகப் பார்க்காமலே சென்றுவிட்டாள். காரணம் மலர் ஜோதாவின் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தாள்.
“ஜோதா யாருடி அது தெரிஞ்சவங்களா? “
“இல்லடி “
“சீட்டெல்லாம் வாங்கிக் கொடுக்குற? “
“கேட்டாரு அதான் “
“நான் உன் கூடவேதான இருந்தேன். இது எப்போ நடந்துச்சு? “
“கூட்டத்துல சிக்குனேன்ல அப்போதான். பாவமா முகத்த வச்சு கேட்டாரு அதான் சரி போய்ட்டு போகுதுனு வாங்கி கொடுத்தேன்”
“யேய் லூசு அவரு நம்ம வர்றதுக்கு முன்னாடியே இங்க இருந்தாரு. சொல்லப்போனா அவரு லைன்ல நின்னிருந்தா அவருதா உனக்கு முன்னாடியே வாங்கிருப்பாரு. ரொம்ப நேரமா நம்ம பக்கத்துலயேதா நின்னிருந்தாரு. உன்னையே வேற பாத்துட்டு இருந்தாரு. ஒரு வேள உங்க ஊர்காரரா இருப்பாரோ? “
“என்னடி இப்படி சொல்ற?. எங்க ஊரா இருந்தா ரொம்ப நல்ல இருக்கும் “
“ஆமாடி அவர் பக்கத்துலயே உக்காந்து போயிரு. பாக்கவே இன்னசெண்ட்டா இருக்காரு “
“ஏய் அதெல்லாம் முடியாது யாருனே தெரியாதவங்களோட எப்படி உக்காருவேன்? “
“நீ உக்காந்துதான் ஆகனும். ஏன்னா நீ ரெண்டு சீட்டுனு கேட்டு வாங்கிருப்பியா? அப்போ பக்கத்து பக்கத்து சீட்டாதான் இருக்கும்?“
“ஆமா எங்கிட்ட முப்பதாம் நம்பர் சீட் இருக்கு “
“அப்போ அவர்கிட்ட முப்பத்தொன்னு இல்லனா இருப்பதொன்பதாம் நம்பர் சீட்டுதான் இருக்கும் “
“என்னடி இப்படி சொல்ற வேற சீட் மாறி உக்கார முடியாதா? “
“இருக்குற கூட்டத்தப் பாத்தா அதெல்லாம் நடக்காத காரியம்னுதா தோனுது “
“வேற வழியே இல்லையா “
“ஏன் முகம் கோணலா மாறுது? சும்மா உக்காந்து போ. பயப்படாத சரியா? “
“சரிடி “
“பாரு இப்பக் கூட அவரு அங்க நின்னு உன்னையேதான் பாக்குறாரு “
முதல் அனுபவமே இப்படியா என்று முகம் சுழித்தபடியே திரும்பிப் பார்த்தாள் ஜோதா. சிரித்த முகத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்த அந்த சிவப்பு பனியன் பையனின் முகத்தைத் தெளிவாகப் பார்த்தாள்.
பேருந்து பயணம் சலிக்காமல் இருக்க எதாவது நொறுக்குத்தீனி வாங்கிக் கொடுக்கலாம் என்று மலர் அவளை கடைக்கு அழைத்துச் சென்று சரியாக திரும்பும்போது பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டது.
பேருந்து வந்ததும் பாகை நோக்கிப் பாயும் எறும்புக் கூட்டமாய் குவிந்தார்கள் பயணிகள்.ஜோதா ஓடிச் சென்று பேருந்து கூட்டத்தில் முட்டி மோதி ஏறும்போதும் அவர் அதே இடத்தில் நின்று அவளைப் பார்த்து சிரித்தபடியே இருந்தார். ஜோதாவிற்கு அவள் மீது பொறாமை நிறைந்த சிறிய கோபம் இருந்தது. நோகாமலே நோம்பு கும்பிடுறானே இவன் என்று மனதிற்குள்ளே முனங்கிக் கொண்டாள்.
எப்படியோ ஒரு வழியாக பேருந்தில் ஏறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் காற்று வீசுவதையே உணர்ந்தாள். அதுவரை வெக்கையில் வெந்துகொண்டிருந்தாள். தன் துப்பட்டாவாள் முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது அவர் வந்து இருக்கையின் அருகே வந்து நின்று, உட்காரவா? வேண்டாமா? என்று தயங்கியபடியே பார்வையிலேயே கேட்டார். உட்காருங்கள் என்று சொல்லும் விதமாக ஜோதா சற்று நகர்ந்து அமர அவரும் சிறு புன்னகையோடு அவள் அருகே அமர்ந்தார்.
ஜோதாவின் மீது தன் உடல் பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு மிகவும் கண்ணியமாகவே அமர்ந்திருந்தார். அவரின் இந்த குணம் ஜோதாவின் கவனத்தை அவர் பக்கம் இழுத்தது. அவர் பார்க்க நன்றாக இருந்தாலும் அவள் மனதில் அவருடைய அழகை விட அவரின் அந்த குணமே பேசுபொருளானது.
பேருந்தும் மெல்ல நகர்ந்தது. நடத்துநர் வந்து பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்ததும் “டிக்கெட் அறுபது ரூபாயா? “ என்று அவர் கேட்டார். ஜோதாவும் ஆம் என்று பதில் சொன்னாள். அவர் ஒரு ஐம்பது ரூபாயை தன் பணப்பையில் இருந்து முதலில் எடுத்தார். பின் பத்து ரூபாயை சரியாக எடுத்துவிட்டு என்ன யோசித்தாரோ தெரியவில்லை அதைத் திரும்ப பையில் வைத்துவிட்டு ஒரு இருபது ரூபாயை எடுத்து கையில் தயாராக வைத்தார். அவர் திரும்ப பையில் வைத்த பத்து ரூபாய் முன்பதிவு சீட்டு எடுத்த பிறகு ஜோதா தன் கையால் அவருக்குக் கொடுத்தது என்று அவருக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும்.
அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி நடத்துநர் கையை நீட்டும்போது அவர் தன் கையில் வைத்திருந்த எழுபது ரூபாயைக் கொடுத்து “ஒரு டிக்கெட் “ என்றார். தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நடத்துநரோ ஒரு வித அதிர்ச்சியோடு தலையை நிமிர்த்தி புருவத்தை விரித்து “ஒன்னா? “ என்று கேட்டபடியே ஜோதாவைப் பார்க்க, ஏதோ ஒரு புரியா உணர்வு அவளுக்கு அறிமுகமாக தலையைக் குணிந்துகொண்டாள். நடத்துநர் அவரிடம் பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு, "உனக்கும் ஒன்னாமா? “ என்று ஜோதாவிடம் கேட்டார். “ஆமா “ என்று சொல்லியவரே பணத்தை நீட்டி பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டாள்.
இருவரும் எதுவும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை. ஆனாலும் , ஒரு நாண உணர்வு இருவருக்குள்ளும் நெளிவதை அறிய முடிந்தது. அங்கு நின்றிருந்த கும்பலாக ஊர் சுற்றிப் பார்க்க வந்த வாலிபக் கூட்டம் அவ்வப்போது ஜோதாவைப் பார்ப்பார்கள், அதை அவர் பார்த்து விட்டால் உடனே முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.
அங்கிருந்த அனைவருமே அவர்களை காதலர்கள் அல்லது திருமணமான புதுத்தம்பதிகள் என்றே நினைத்திருப்பார்கள். காரணம் இருவருக்கும் பொறுத்தம் அப்படி இருந்தது. ஏற்ற நிறம், முக அமைப்புமே ஒரே குடும்பத்தினர்தான் என்று நம்ப வைக்கும் விதமாகவே இருந்தது.
பொதுவாக பயணத்தின்போது பாடல் கேட்பது ஜோதாவிற்கு விருப்பமான ஒன்று. அன்றும் அப்படித்தான் தன் அலைபேசியில் இசையை இசைத்து தன் காதொலிப்பானைப் பொறுத்தினாள். வெளிச்சூழல் மறைந்து அவளுக்குள் ஒரு புதியதொரு உலகம் பூத்தது. காரணம், காதில் ஒலித்துக் கொண்டிருந்தது இளையராஜாவின் பாடல்.
பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த சொற்கள் எல்லாம் திடீரென கை கால் முளைத்து காட்சியாகத் தெரியும்போது அதில் பயணிக்காமல் இருக்க முடியுமா என்ன?. மங்களான மஞ்சள் நிற புகை மூட்டம், அதில் வெள்ளை நிற பூக்களை அடுக்கடுக்காய் விடிந்த கூடைபோல கட்டியிருந்த பெரிய ஆடையை அணிந்தபடியே ஜோதா செல்கிறாள். எங்கு செல்கிறாள் என்றெல்லாம் தெரியவில்லை. திரும்பும் திசையெல்லாம் நிறைந்திருந்த ரோஜா கூட்டங்களின் வாசனை வழி சொல்ல அப்படியே அதன்படி நடந்தது அவளின் பூப்பாதங்கள். வழியில் ஒரு பச்சை நிற குளம் தெரிய இவளும் அவளைப் பின்தொடர்ந்து வந்த பட்டாம்பூச்சியும் அருகே சென்று அமர்ந்து பார்க்க, குளத்து நிழலில் ஒரு முகம் தெரிந்தது. “ஓய் பட்டாம்பூச்சி இந்த மூஞ்சிய எங்கையோ பாத்த மாதிரி இருக்கே நேத்து படிச்ச புத்தகத்துல வர்ற ஹீரோவோ? “
“இல்ல இல்ல அவரு உன் ஹீரோ “
“டேய் பட்டாம்பூச்சி இன்னைக்கு தேன் ஓவாராகிருச்சோ? போதைல ஏதோ ஒலரிட்டு இருக்க”
“போத எனக்கில்லடி என் அழகு ராசாத்தி உனக்குதான். மயக்கத்துல இருந்து எழுந்து பாரு அவரு உன்னைய ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்காரு “
கண்விழித்துப் பார்த்தால் குளத்து நிழலில் தெரிந்த அதே முகம் தன் அருகே அமர்ந்து கையில் பேரீச்சம் பழத்தால் நிறம்பிய டப்பாவை நீட்டி “டேக் இட் “ என்று சொல்லிக்கொண்டு சிரித்தபடியே பார்த்தார்.
உண்மையை விழுங்கும் மாயைதான் கனவு, அந்த கனவில் இவரால் எப்படி வர முடிந்தது! என்கிற வியப்பின் குழப்பத்திலேயே எனக்கு வேண்டாம் என்று தலையசைத்தாள் ஜோதா.
இவ்வளவும் நடக்கும்போதும் பாடல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. என்ன மாயமோ தெரியவில்லை அடுத்து வந்த அத்தனை பாடல்களுக்குமே அவர்தான் ஹீரோவாகத் தெரிந்தார். பாடல்களின் வரிகளும் இவர்கள் இருவரும்தான் என்று அவர்களையே கைகாட்டி மையப்படுத்தியது. அந்த இன்பச் சுருளுக்குள் சிக்கிய ஜோதாவுக்கு பாடலின் பின்னணி இசையாக அவர் அவளிடம் முதன் முறையாகப் பேசிய “டேக் இட் “ என்கிற வார்த்தைதான் கேட்டது. அது மீண்டும் மீண்டும் அவரை தன் கனவுகளில் அலங்கரிக்க வித்திட்டது.
பயணம் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதால் ஓட்டுநரின் ஓய்விற்காகவும், பயணிகள் பசியாறவும் வழக்கமாக நடுக்காட்டு ரோட்டின் மீது அமைந்த ஒரு உணவு விடுதியில் பேருந்தை நிறுத்துவார்கள்.
பேருந்தை விட்டு இறங்கி அனைவரும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தார்கள். ஜோதாவின் அருகில் அமர்ந்திருந்தவரும் கீழே இறங்கினார். ஆனால் ஜோதா இறங்கவில்லை. அவளுக்கு பயம் எல்லாம் ஒன்றும் இல்லை. கீழே இறங்கிச் சென்று வேடிக்கை பார்ப்பது தேவையில்லாதது என்று அவள் நினைத்ததால் இறங்கவில்லை.
அவள் இறங்கவில்லை என்றதும் அவர் மீண்டும் பேருந்திற்குள் ஏறினார். பல காலி சீட்டுகளுக்கு மத்தியில் ஜோதா மட்டும் அமர்ந்து, தான் வைத்திருந்த நொறுக்குத் தீனியை காலி செய்துகொண்டிருந்தாள்.
அவர் சென்று அமர்ந்ததும் அவள் கையில் இருந்த சாக்லேடைக் கொடுத்தாள். ஆனால் அவர் அதை வாங்கவில்லை பதிலாக “இது போல ஃபுட் ஐட்டம்ஸ் நோ” என்றார். “ம்ம் ஓகே “ என்று பதில் சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜோதா.
சிறு வயதில் இருந்தே அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவளின் சொல்லுக்கு ஒத்துப் போகதாவரிடம் முகத்தைக் காட்டிவிடுவாள். அந்த முகம் அவர்களுக்கு அவளின் கோபத்தைச் சொல்லிவிடும்.
தொடரும்...♡