• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
9



செல்லும் அவர்களையே ஒரு புன்னகையுடன் பார்த்திருக்க, “சரி டைமாகுது எல்லாரும் படுங்க” என்று அனைவரையும் அனுப்பிய சுதாகரிடம் வந்தான் சுபாஷ்.

“என்னடா?” என்ற அப்பாவிடம்...

“அப்பா நான் கார்த்திகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்பா” என அனுமதி கேட்டான்.

“பேசலாமே! மொத்தமா சேர்த்து வச்சி நாளையிலிருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பேசுங்க” என்றார் தகப்பனும் அசராமல்.

“அப்பா ப்ளீஸ் கொஞ்ச நேரம்தான்பா?”

சற்று யோசனையுடனேயே சரியென்று சொல்ல, அங்கிருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றவன் “சாரி கார்த்தி” என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

“பேசுறதையெல்லாம் பேசிட்டு சாரி கேட்டா முடிஞ்சிதா. ஒரு செகண்ட்ல என்னைக் கொல்லாம கொன்னுட்டு சாரி கேட்டா ஆச்சா” என எகிறினாள்.

“கார்த்தி ப்ளீஸ்” என்று அவன் குரல் இறங்கியது.

“அதெப்படிங்க என் கண்ணீரைப் பார்த்துத்தான் லவ் வருதா? கண்ணீர்லதான் அழகாயிருக்கேனா? அப்ப உங்க காதலை நான் தக்கவச்சிக்க ஆயுள் முழுக்க அழணுமா?” மனதிலுள்ளதைக் கொட்டிக் கொண்டிருந்தவள், “சொல்லுங்க? ஏன்ங்க இப்படிப் பண்ணிட்டீங்க? என்னை நீங்க அவாய்ட் பண்றப்பல்லாம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

அழுது கொண்டிருந்த தனக்கு மட்டுமே உரிமையான அவனின் முறைப் பெண்ணை அணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றிய மனதை அடக்கி அவளை கட்டிலில் அமரவைத்து அருகில் அமர்ந்தவன் அவளின் கண்ணீர் துடைத்து, “என்னை உனக்கு பிடிச்சிருக்கா கார்த்தி?” என்றான்.

“முதல்ல பிடிச்சிருந்தது. இப்ப பிடிச்சிருக்கான்னு தெரியல யோசிச்சி சொல்லட்டுமா? என்றாளவள் பதிலுக்கு.

“எவ்வளவு வேணும்னாலும் யோசிச்சி நாளைக்கு நைட்குள்ள சொல்லிடுறியா. ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக.

“ஏன் நாளைக்கு நைட்குள்ள சொல்லணும்?” என வேகமாகக் கேட்டாள்.

“ஏன்னா, நாளைக்கு நைட் நமக்கு பர்ஸ்ட் நைட். நீ பாட்டுக்கு பிடிக்கலன்னு சொல்லி நான் உன்னை நெருங்க ட்ரை பண்ண, நீ என்னைத் தள்ளிவிட தேவையா எனக்கு” எனும்போது நிஜமாகவே அவனைத் தள்ளிவிட்டாள்.

“ஏய்! ஏன் என்னை இப்பவே தள்ளிவிட்டுட்ட?” என்றான்.

“ஹ்ம்... நல்லா பாருங்க நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல உள்ள டிஸ்டன்ஸ் எவ்வளவு கம்மியா இருக்கு.”

அதைப் பார்த்தவனுக்கு, ‘ஆஹா நல்ல சான்ஸை கவனிக்காம விட்டிருக்கோமே’ என மனம் சுருங்க, ‘பரவாயில்லடா சுபாஷுப் பயலே ட்ரை பண்ணு...’ மனம் சொல்ல, “இனிமேல் நமக்குள்ள டிஸ்டன்ஸ் எதுக்குடா?” என்றபடி இன்னும் நெருங்கி அவள் காதோரமாய், “அந்த பர்ஸ்ட் நைட்டை மிஸ் பண்ணக்கூடாதுன்னுதான், நாளைக்கு நைட்குள்ள பிடிச்சிருக்கு சொல்லச் சொன்னேன்” என்றான் ஒரு ஏக்கப் பெருமூச்சோடு.

அவனின் ஏக்கம் அவளுள்ளும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அவன் முகம் பார்க்க முடியாமல் அமைதியாக அமர்ந்திருக்க. அவள் முகம் தூக்கி அவன் முகமெங்கும் அலைபாய்ந்த அவளின் கண்பார்த்து, “சாரி” என்றான்.

கண்கள் அவன் கண்களில் நிலைத்து, “சாரி எதுக்குங்க. விட்டுறலாமே” அவளுக்குமே அவன் அடிக்கடி மன்னிப்பு கேட்பது பிடிக்கவில்லை. கம்பீரம் ஆண்களுக்கு அழகு அதைத் தனக்காக விட்டு இறங்கி வந்து மன்னிப்பு கேட்பவன் மேலுள்ள காதல் உணர்வு இன்னுமே அதிகரித்தது.

“இல்ல கார்த்தி, நான் உனக்கு ரொம்ப தப்பு செஞ்சிருக்கேன். உண்மையை சொல்லணும்னா, உனக்கு கணவனா இருக்கிற தகுதி எனக்கு இருக்குதான்னுதான் இப்ப நான் யோசிக்கிறது. எல்லா வகையிலும் நீ நல்லவளா இருக்க. ஆனா, நான் அப்படியில்லன்னு தோணுது.”

“முதல் நாள் உங்க வீட்டுக்குள்ள வந்தப்ப கண்கலங்கி என்னை ஒரு பார்வை பார்த்த பாரு, அப்ப யாராவது அந்தப் பொண்ணை அழ வேண்டாம்னு சொல்லுங்களேன்னுதான் தோணிச்சி. உன் கண்ணீர் என்னை எதோ செஞ்சது. இப்ப வரைக்குமே அந்தத் தாக்கம் இருக்குது. நம்ம கல்யாணம் பிக்ஸ் பண்ணினதிலிருந்து நிறுத்துறதுக்காக இப்ப வரைக்கும் எந்த ஸ்டெப்பும் நான் எடுக்கலை. எடுக்கணும்னு யோசிச்சது கூட இல்ல. இதான் கார்த்தி நிஜம். அத்தை பொண்ணு, அதுவும் பக்கத்துலயே இருக்க, இதுவரை உன்னை நான் சரியாவே பார்க்கல. அதான் மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் நிறைய ஆகிருச்சி. இனிமேல் என்னைத் திருத்திக்கறேன்” என்றான்.

“ப்ச்.. அதை விட்டுறலாம்ங்க. ஆனா, ஒரு கொஸ்டின்கு ஆன்ஸ்வர் பண்ணுங்க. நான் அழகாயிருக்கேன்னு எல்லார் முன்னாடியும் நீங்க சொன்னது உங்க உள்மனசுல இருந்து இல்ல. அது பொய்தான?” என்றாள் அவன் கண்பார்த்து.

“கார்த்தி உன்னை அறிவுன்னு அம்மா சொன்னது எவ்வளவு நிஜம். சான்ஸேயில்ல கண்டுபிடிச்சிட்ட நீ” என்று அசடு வழிய சிரித்தவன், “இப்பவும் நீ என் கண்ணுக்கு அழகா தெரியல கார்த்தி. இதுவும் நிஜம்தான். அதுக்காக உன்னைப் பிடிக்கலன்னு சொல்லமாட்டேன். நீ எனக்கு எப்பவும் வேணும்.”

“சுப்ப்பு” என சுபாஷை அழுத்தியவள், “நீ இன்னும் திருந்தவே இல்லையா? உன்னையெல்லாம் வச்சி நானெப்படி காலத்தை ஓட்டுறது. உனக்கு என் அழகை நிரூபிக்கிறதிலையே காலம்லாம் ஓடிரும் போலிருக்கே. ஆண்டவா!” என்று கடவுளிடம் முறையிட்டாள்.

“ஏய்! என்ன நீ மரியாதை இல்லாம பேசுற?”

“அப்புறம் மாலை போட்டு மரியாதை குடுப்பாங்கன்னு எதிர்பார்ப்பு இருக்கா. வந்துட்டாங்க வாழைக்காய்க்கு வாய்ப்பாடு வராதுன்னு சொல்றதுக்கு.”

“ஹேய்! இதென்ன புதுவிதமான பழமொழி?”

“ம்...என் ஃப்ரண்ட் சாதனா சொன்ன ந்யூ ட்ரெண்ட் பழமொழி. நான் எனக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன். அப்புறம் கல்யாணத்துக்கு முந்தின நாள் கட்டிக்கப்போற பொண்ணுகிட்ட வந்து நீ அழகாயில்லன்னு சொல்ற உங்ககிட்ட எப்படி மரியாதையோட பேசுறதாம்?” என்றாள் அசராமல்.

அவள் முகம் நிமிர்த்தி, “நீ என்னை காதலிக்கிறியா கார்த்தி?” என்றான் அவள் கண் நோக்கி.

“அதான் பப்ளிக்லயே போட்டு உடைச்சாச்சே. இன்னும் தெரியாத மாதிரி என்ன கேள்வி.”

“அது வேற. இப்ப நீ என்கிட்ட சொல்லு?”

“என்ன ஐ லவ் யூன்னு சொல்லணுமா? அதெல்லாம் முடியாது. அதுக்கு வேற ஆளைப் பாருங்க” என்றாலும் அந்த வார்த்தைகளை சொன்னதும் தன்னையறியாமல் ஒரு வெட்கம் அவளை ஆட்டுவித்தது.

“அதெப்படிடா பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொருத்தியைப் பார்க்க முடியும். எப்பவும் உன்னையே பார்க்கிறேன்டா” என உருகல் வசனம் பேசினான்.

“மாம்ஸ் வேணும்னா என்னைப் பாருங்க” என்று அவ்வளவு நேரம் மறைவிலிருந்து கீர்த்தி வர அவளைத் தொடர்ந்து வித்யாவும்.

சட்டென்று அவனை ஒட்டியிருந்த இடத்திலிருந்து எட்டிச் சென்றவள், “ஏய் கொஞ்சமாவது அறிவிருக்கா? இங்க எப்படி, எப்ப வந்தீங்க?” என திட்டினாள்.

“அதெல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சி அண்ணி.”

“வித்யா என்ன பழக்கம் இது?” என்று அண்ணனாய் அவன் கண்டிக்க,

“சாரிண்ணா. சும்மா உங்களை கலாய்க்குறதுக்காகத்தான்...” என முடிக்காமல் நிறுத்தினாள்.

“அவளை ஏன் மாம்ஸ் திட்டுறீங்க? நான் சொன்ன கேள்விக்கு பதில் சொல்லுங்க? ம்.. சீக்கிரம். அப்பத்தான் உங்களுக்கு கரடியா இல்லாமல் கிளம்ப முடியும்.”

“உன்னையா? நீ குழந்தைப் புள்ள. உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னாலே வீட்டு முன்னாடி போலீஸ் வந்து நிற்கும். அவங்க ட்ரீட்மெண்டை யார் வாங்குறது. நான் ரிஸ்க் எடுக்கல தாயே!”

“யாரு நாங்க குழந்தைப் புள்ள. எல்லாம் நேரம்தான் மாம்ஸ். உங்க மனசை ப்யூரிபை பண்றதுக்கு நானும் வித்யாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு தெரியுமா? நாங்க உங்களுக்கு சின்னப் பசங்களா?”

“வித்தி வா இன்னும் ஆறு மணிநேரம் டைம் இருக்கு. முகூர்த்தத்துக்குள்ள ஒரு நாரதர் டச் குடுத்தோம்னு வைங்க, எல்லாம் ஸ்ஸ்...” என்று தன் கழுத்தில் கையை குறுக்காக காண்பித்தாள்.

“ஸ்டாப் இட் கீர்த்தி. ஜஸ்ட் ஸ்டாப் இட்.. நாம பேசுற வார்த்தைகளை பார்த்து பேசணும். நேத்து இவங்க கேட்ட கேள்விக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். அவசரத்துலயோ, ஆத்திரத்துலயோ கொட்டுற வார்த்தைகளோட வீரியம் முதல்ல நமக்கு தெரியாது. அதனால எதிர்ல உள்ளவங்க எந்தளவுக்கு பாதிக்கப்பட்டாங்கன்னு தெரிஞ்சப்புறம்தான், தப்பா பேசிட்டோமோன்னு தெரியும். நீ பாட்டுக்கு அபசகுனமா பேசிட்டிருக்க. கல்யாணத்தை நிறுத்துறேன்னு பேசுறதை முதல்ல நிறுத்து. அந்த வார்த்தை இனிமேல் என் காதுல விழுந்தது அவ்வளவுதான். இப்ப வெளியில கிளம்புறீங்களா?” என்றாள் கோபமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
மனதிற்குள் அதன் தாக்கம் இன்னுமே இருக்க உடல் சற்று நடுங்கியது. ‘இந்தக் கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலிருந்து ஒரே அபசகுனமான பேச்சுக்கள்தான். எப்பப்பாரு நிறுத்திடுறேன் நிறுத்திடுறேன்னு. என்னைப் பார்த்தா இவங்களுக்கு எப்படித்தான் தெரியுதோ’ என மனம் புலம்பியது.

“சாரிக்கா இனிமேல் இப்படி பேசமாட்டேன்.”

“நானும்தான் அண்ணி சாரி. எல்லாத்தையும் விளையாட்டாவே பார்த்துட்டு, உங்க பீலிங்ஸ் புரிஞ்சிக்காம விட்டுட்டோம். ரியலி சாரி அண்ணி.”

அவர்களின் மன்னிப்பில் புலம்பலிலிருந்து வெளி வந்தவள், “சாரி நான்தான் கோபத்துல... பட், கல்யாண விஷயத்துல விளையாடாதீங்க. டெய்லி கல்யாணத்தை நிறுத்துன்ற வார்த்தை கேட்டு அப்படியே நடந்திருமோன்னு எவ்வளவு பயந்திட்டிருக்கேன் தெரியுமா? இன்னுமே அந்த பயம் தெளியலை.”

“அதான் கீர்த்தி அப்படி சொன்னதும் கோபம் வந்திருச்சி. போங்க போய் படுங்க காலையில எழுந்திருக்கணும்ல” என்று அனுப்பினாள்.

“ஏன் இவ்வளவு கோபம் கார்த்தி?”

“ம்... உங்க மேல காட்ட முடியல. அதைத்தான் அங்க காட்டிட்டிருக்கேன்” என்று முகத்தைத் திருப்பினாள்.

“உரிமை உள்ளவங்ககிட்ட தான் நீ கோபத்தை காட்டுவேன்னு அப்பா சொன்னாங்க கார்த்தி. நீன்னு இல்லை பொதுவா எல்லாருமே அப்படித்தான்னாங்க. முதல்ல என்கிட்ட பதிலுக்கு பதில் பேசின. அப்புறம் நான் எது சொன்னாலும் ஆமா சாமி போட ஆரம்பிச்சிட்ட. இப்ப என்னடான்னா என்கிட்ட காட்ட வேண்டிய கோபத்தை மத்தவங்ககிட்ட காண்பிக்கிற. இதுல எது நிஜம்?”

“அவங்க ஒண்ணும் மத்தவங்க இல்லை. ஒருத்தி என்னோட தங்கை. இன்னொருத்தி என்னோட நாத்தனார். அந்த உரிமை கொடுத்த தைரியத்துலதான் பேசினேன்.”

“அப்ப என்மேல ஏன் கோபப்படல? அந்தளவுக்கு வெறுத்துட்டியா கார்த்தி. நான் செஞ்சது தப்புத்தான் இல்லன்னு சொல்லி நியாயப்படுத்தல. இருந்தாலும் என்னை மன்னிக்கவே மாட்டியா?” என்றவன் குரலிலுள்ள வருத்தம் அவளையும் வருத்த...

“இந்த ரூம்குள்ள நுழைஞ்சதிலிருந்து உங்ககிட்ட கோபப்பட்டதாத்தான் எனக்கு நியாபகம். ஒரு வேளை வாயால சொன்னதால புரியலையோ? அப்ப கையால சொல்லட்டுமா?” என்று அவனுக்கு அடிபோட கைதூக்க, அவளின் கைகளைப் பிடித்து, “தேங்க்ஸ்” என்றான் அவள் முகம் பார்த்து.

“என்ன திடீர் தேங்க்ஸ்? கார்த்தி அவ்வளவு பெரிய ஆளாகிட்டாளா என்ன?” என்றாள் கிண்டலாகவே.

“ஆமா. ரொம்பப் பெரிய ஆளாகிட்ட என் மனசுக்குள்ள. தேங்க்ஸ் எதுக்குன்னு கேட்டல்ல, நான் செஞ்ச தப்பால தவறாம நீ கிடைச்சதுக்கு.” அவனின் வார்த்தைகள் யாவும் ஆழ்மனதிலிருந்து வந்தது.

அதை உணர்ந்ததாலோ என்னவோ அதில் மெய்மறந்திருந்தவளை இவ்வுலகுக்கு இழுத்து வந்தது அவனது வார்த்தைகள்.

“இந்த மாதிரி ஒரு வீட்டைக் கட்டின எங்கப்பாவுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லணும் கார்த்தி” என்றதில் மயக்கம் தெளிந்தவள், “ம்... எங்க மாமா ஒண்ணும் வீட்டைக் கட்டலையாம். கொத்தனார்தான் கட்டினாராம் சொல்லிக்கிட்டாங்க. அப்புறம் யாரோ என்னை அழகில்லைன்னு இப்பக்கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாங்க. அது யாருங்க?” என்றாள் கேலியாக.

“ஹா..ஹா கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்” என்று மனம் திறந்து சிரித்தவனை முறைத்து...

“நான் என்ன கோணலாவா இருக்கேன்” என்று அவனுக்கு அடிபோட்டு... “தப்புத் தப்பா ஒரு நல்லது செஞ்சிருக்கீங்க நீங்க. அப்பா சொல்லித்தான் உங்க மேல ஸ்பெஷல் கேர் எடுக்க ஆரம்பிச்சேன். அப்பா சொல்லலன்னா இப்பவும் பழைய கார்த்தியாவே தான் இருந்திருப்பேன். அப்படி இருந்திருந்தா கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க பிரம்மச்சாரியாகவேதான் இருந்திருக்கணும்” என பேச்சினூடே கிண்டலாக சொல்லியவள்,

“அப்புறம் உங்களை கவனிச்ச பிறகுதான், எப்படி இத்தனை நாள் உங்களைப் பார்க்காமல் போனேன்னு தோணிச்சி. உங்களுக்கே தெரியாம உங்களை நான் கவனிக்க ஆரம்பிச்சேன் தெரியுமா? காதல்ன்ற ஒண்ணுக்காக ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு நிறைய டைம் நினைச்சிருக்கேன். ஆனா, உங்களை நேசிக்க ஆரம்பிச்சப்ப புரிஞ்சது அதுலயும் ஒரு சுகம் இருக்குன்னு.”

“நான்தான் எதையும் புரிஞ்சிக்காம எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டேன் கார்த்தி. நீ அழகாயிருக்கியா, இல்லையான்னு ரிசர்ஜ் பண்ணின நேரத்திற்கு வேற எதாவது யோசிச்சிருந்திருக்கலாம்னு இப்ப தோணுது. எனிவே, பொண்டாட்டி.. இதுவரை மிஸ் பண்ணினதை, நாளைக்கு நீ என் மிஸஸ் ஆனதுக்கப்புறம் பார்த்துக்கறேன்.”

“அதெல்லாம் தாராளமா பார்த்துக்கோ. இப்ப படுக்க கிளம்பு. அப்பா குடுத்த டைம் முடிஞ்சி ஒரு மணிநேரம் ஆகிருச்சி” என்றபடி வந்து நின்றார் வாணி.

“அம்மா நீங்க எப்படி?” என்று அவன் எழ, அவரின் குரல் கேட்டதுமே கார்த்திகா எழுந்து நின்றிருந்தாள்.

“ஏன்டா பதட்டப்படுற. நான் நீங்க பேசின எதையும் கேட்கல. இப்பத்தான் வர்றேன். நீங்க ஒண்ணும் கதவை சாத்தி வச்சி எதுவும் ரகசியம் பேசலையேடா. கதவு திறந்து கிடந்ததனால வந்தேன்.”

“சரிமா நீங்க கிளம்புங்க. இதோ வர்றேன்.” வாணி அங்கிருந்து நகர்ந்ததும் கதவோரம் வந்தவன் கதவை பாதியாக சாத்தி அவளைக் கூப்பிட்டான்.

என்னவென்று தெரியாவிட்டாலும் அவனருகில் வர அதற்குள் அவன் உள்ளே வந்து, “கார்த்தி இன்னையோட நம்ம பேச்சுலர் லைஃப் முடிஞ்சது. நான் இதுவரை உன்கிட்ட எந்த தப்பும் பண்ணினதில்ல. ஏன் இவ்வளவு நேரம் இருந்தும் உன்னை எதுவும் செய்யலதான?” என்றதில்,

‘என்ன சொல்ல வருகிறான்’ என புரியாமல் விழித்தாலும், ஏனோ மனம் எச்சரிக்கை மணியடித்தது.

“இப்ப பேச்சுலரா தப்பா ஒண்ணே ஒண்ணு” என்றபடி அவளைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். முதலில் அதிர்ந்தாலும் விடிந்தால் கணவனாகப் போகிறவன் என்ற நினைவில் அவனின் அணைப்பில் அவளுமே அடங்க, அவனின் முத்தத்தில் அவள் முகம் வெட்கத்தில் கண்மூட, மூடிய இமைகளில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் கார்த்தி” என்று அவளை விலக்கி வேகமாக வெளியே சென்று விட்டான்.

ஏனோ அவனின் இந்த செய்கையில் அவளினுள்ளிருந்த ஹார்மோன்கள் மாறியதில் உடலெல்லாம் ஒருவித சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. அவனின் அந்த அணைப்பு மீண்டும் வேண்டும் வேண்டுமென்றது அவளது மனதிற்கு.

சற்று நேரம் கழித்து வந்த மெசேஜ் அவள் எண்ணியதையே தாங்கி வர, வந்த வெட்கத்தை மறைக்க தலையணைக்குள் முகம் புதைத்தவள் அவனுக்கு ரிப்ளை பண்ண வேண்டும் என்பதற்காக ‘குட் நைட்’ என்ற மெசேஜை அனுப்பிவிட்டு படுத்தவளுக்கு தூக்கம் என்ற ஒன்றே மறந்து போனது.

கல்யாணக் கனவுகள் கலர்கலராக கனவுகளைத் தூவியதோ!

காலையில் மண்டபமே சில்லென்ற நீரோடையாய் சலசலத்துக் கொண்டிருக்க, மறுபுறம் பட்டுப்புடவைகள் பளபளத்துக் கொண்டிருக்க, மணமேடை நோக்கி வந்த கார்த்திகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுபாஷ்.

‘நீ என் கண்ணுக்கு மட்டும் ஏன் அழகாவே தெரியலை கார்த்தி’ என்று முந்தின இரவு கூட சொன்னவன். தற்பொழுது பட்டுப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் அவளைப் பார்த்தவன் கண்கள் மட்டுமல்ல வாயும் விரிந்தது.

அவனருகில் வரும்பொழுது அவன் பார்வை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து ஒரு வெட்கப் புன்னகையை சுபாஷின் புறம் விசிறியடிக்க, அதில் ஆல் அவுட் ஆனான் சுபமாக.

மனதிலுள்ள உறுத்தல்கள் குறைந்ததாலா! முந்தின இரவு அவளை அணைத்துக் கொடுத்த முத்தத்தினாலா! ஏற்கனவே நிகழ்ந்திருந்த மனதின் மாற்றத்தினாலா! அனைத்தும் ஒன்று சேர அவளைப் பார்த்தவன் கண்களில் மின்னல் வெட்டியது முதல் முறையாக.

சுபாஷின் பார்வை மாற்றம் அவளுக்கும் எதையோ உணர்த்து நிமிர்ந்து அவனைப் பார்த்து, என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, ‘ம்..ம்கூம்..’ என்று அவனின் தலை மெல்ல அசைந்தது.

சுற்றிலும் அனைவரும் தங்களையே பார்த்திருந்த போதும் எதையும் யோசிக்காது, “என்னங்க அழகாயிருக்கேனா?” அவனருகில் குனிந்து மெல்லிய வெட்கப் புன்னகையுடன் கேட்டாள்.

“கார்த்தி, எப்படி இப்படி ஒரே நைட்ல அழகாகிட்ட. என்னால நம்பவே முடியல தெரியுமா?” என்றதும் ‘ஸ்..ஆ’ என்று கத்தினான்.

கீர்த்தியோ, “என்ன மாம்ஸ் கருவாச்சி எரும்பு கடிச்சிருச்சா. சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா வருது” என்றாள் குறும்பாக.

“அது எறும்பு கடிச்சதால இல்ல கீர்த்தி, புகை கண்ணுல பட்டு எரிஞ்சிருக்கும் இல்லண்ணா” என்ற வித்யாவின் பார்வை அண்ணன் கத்தியதற்கு அண்ணியைப் பார்த்தபடி இருந்தது.

“இருக்கும்.. இருக்கும்.. நாங்கதான் நேத்துத்தான் பார்த்தோமே!” என்றார்கள் வடிவேலும், வள்ளியும்.

“ஏய் எதுவாயிருந்தாலும் தாலிகட்டு முடிஞ்சதும் பேசுங்க. இப்ப சைலண்ட்” என பெரியவர்கள் அதட்ட, அதில் சிறிதளவே அடங்கினாலும் அவர்களை கேலி செய்வதை மட்டும் நிறுத்தவில்லை.

“ஏன்டி என்னைக் கிள்ளின?” என்றான் அவர்களின் கேலியை மறந்து.

“இப்ப நம்ப முடியுதான்றதுக்காகத் தான் கிள்ளினேன். என்ன நம்பமுடியுதில்ல” என்றாள் புருவம் உயர்த்தி.

“எஸ் நம்புறேன். ஆனாலும், சான்ஸேயில்ல கார்த்தி. எப்படி ஒரே நைட்ல? இன்னுமே இது நிஜமான்ற பிரம்மிப்பிருக்கு எனக்கு.”

“ப்ச்.. அதுக்கு உங்க பார்வையிலிருந்த கோளாறுதான் காரணம். என்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம். பக்கத்து வீடு பகைன்னு சொல்லியே நம்மாளுங்க நம்மளை பழி வாங்கிட்டாங்க. அதனால ஒருத்தரை ஒருத்தர் பார்க்க நிறைய சந்தர்ப்பம் இருந்தும், யாரும் யாரையும் பார்த்துக்கல. அப்படியே பார்த்திருந்தாலும் பகைவர் வீட்டுப் பிள்ளைங்களாதான் அறிமுகமாகி இருப்போம். நமக்குள்ள சண்டைன்றப்ப எப்படி அழகெல்லாம் தெரியும். அதுவும் நீங்க உங்களையறியாம செய்த தவறுக்கு தண்டனைன்ற பெயர்ல இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க. அதனால என்னை அழகுன்ற கண்ணோட்டத்துல பார்க்கத் தோணல. இப்ப அந்தமாதிரி தடைகள் எதுவுமில்ல. நான் உங்க மனசுல இருக்கேன். அதான் என்னோட வெளித்தோற்றம் உங்க கண்களுக்கு வெளிச்சமா தெரியுது.”

“கார்த்தி நான் உள்தோற்றம் பார்க்கலையே. அதைப் பார்த்த மாதிரியே சொல்ற?” என இடக்காக கேட்டான்.

“சு..ப்..பு நான் சொன்னதுக்கு அர்த்தம் வேற. நீங்க சொல்றதுல டபுள் அர்த்தம் வருது. தொலைச்சிடுவேன்” என்று பல்லைக்கடித்தபடி எச்சரிக்கை செய்தாள்.

“மத்தவங்ககிட்ட பேச முடியாது கார்த்திமா. உன்கிட்ட.. உன்கிட்ட மட்டும்தான் கார்த்திமா டபுள் என்ன ட்ரிபிளா கூட பேச முடியும்” என வழிய...

“ச்சீ.. போ” என்றவளின் வெட்கத்தில் சிவந்த முகத்தைப் பார்த்தபடியே, ஐயர் கெட்டிமேளம் சொல்ல தாலிகட்டி, செல்வியாக தனித்திருந்த அத்தை மகளை திருமதியாக மாற்றி தன்னவளாக்கிக் கொண்டான். உறவாக! உரிமையாக!
 
Top