• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
9



“அண்ணி என்னாச்சி? ஏன் முகம் எதையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கு? ஆர் யூ ஆல்ரைட்?”

“யா... ஐம் ஓகே” என திணறலுடன் முடித்தவளின் முகம் தெளிவில்லாததைக் கண்ட சாதனா, சுபாவின் நெற்றியிலும், கழுத்திலும் கைவைத்து “ஃபீவர் எதுவுமில்லை. அப்புறம் ஏன் டல்லாயிருக்கீங்கண்ணி? உங்கப்பா, அம்மா நியாபகம் வந்திருச்சா? ஒரு நிமிஷம் இருங்க” என உள்ளே சென்றவள், திரும்பி வரும்போது செல்போனில் டயல் செய்து காத்திருந்து லைன் கிடைத்ததும், “அத்தை எப்படியிருக்கீங்க?” என ஆரம்பித்து, அவர்கள் வீட்டில் நாய்க்குட்டி இல்லை. இருந்திருந்தால் அதையும் விசாரித்திருப்பாளோ என நினைக்காமலிருக்க முடியவில்லை சுபாவினால்.

தன் தாய், தந்தையிடம் உரிமையாகப் பேசிக் கொண்டிருந்தவளையே பார்த்திருந்தவள், ‘நிஜமாகவே அண்ணனிற்கு ஏற்றவள். அழகு, அறிவு, அன்பு அனைத்தும் அடங்கிய துறுதுறுப்பானவள். இவளிருக்குமிடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது’ என்றே தோன்றியது.

பேசிமுடித்து “இந்தாங்கண்ணி. அத்தைக்கு என் பேச்சி போரடிச்சிப் போச்சி போல. தயவு செஞ்சி என் பொண்ணுகிட்ட குடுமான்னு கெஞ்சாத குறைதான். நானும் பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்.”

“யாரு? எங்கம்மா... அதுவும் நீ பேசுனது போதும் சொன்னாங்களா? நம்ப முடியலையே?”

“போனைப் பிடிங்க, நீங்களே கேட்டுக்கோங்க.”

‘இல்லை நான் பேசலை.’ சுபா மறுக்க வாய்திறக்க, அதற்குள், “பேசி முடிச்சிட்டு என்னைக் கூப்பிடுங்கண்ணி. தோட்டத்துல என்னோட நியூ கலெக்ஷன்ல இலை வந்திருக்கு. நான் உங்களைக் கூப்பிட்டுப் போறேன்” என்று போனை கையில் திணித்துச் சென்றாள்.

போனை வாங்கியவளுக்கு தாயிடம் பேசும் எணணமில்லை. ஆனால், கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தது. தனக்குத் தெரியாமல் இன்னும் என்னென்ன மறைத்திருக்கிறார்கள் என்று. இது தன்னைப் பெற்றவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்பது அவளுக்கு தெரியும்.

வேறு வழியில்லாமல் காதில் வைக்க, “சரியான வாயாடிங்க இந்த சாதனா பொண்ணு” என சிரித்தபடி அம்மா, அப்பாவிடம் சொல்வது காதில் விழ... சுபாவிற்குமே ‘வாயாடிதான்’ என தோன்ற அதனால் வந்த உதட்டோரப் புன்னகையுடன் “அம்மா” என்றாள்.

“தேவிமா எப்படிடா இருக்க? இப்படி நான் கேட்கக்கூடாது தான். இருந்தாலும் சம்பிரதாயமாக வாயில வந்திருது. என்ன பண்றது? “

‘ஓ... அவ்வளவு நல்லவனா உங்க மருமகன். நல்லவன் தான் இதுவரை பழகினது வரை’ என மனம் நினைத்தது. அப்பாவிடமும் பேசி, திரும்ப போன் தாயின் கைக்கு மாற... “அம்மா” என இழுக்க...

“என்னமா? எதாவது சொல்லணுமா?”

“இ... இல்லம்மா, அ... அது வந்து” என்றவளிடம்... “தேவிமா எதாவது விசேஷமா. அதான் தயங்குறியா?” என சந்தோஷம் தாளாமல் தாய் கேட்க...

தன் தயக்கத்தை தாய் தவறாகப் புரிந்துணர்ந்தது கோபத்தைக் கிளப்ப... “அம்மாஆஆ...” என பல்லைக் கடித்தாள்.

“ஏன்டி? இல்லையா? அதுக்கு ஏன் தப்பா எதையோ கேட்ட மாதிரி கத்துற? உனக்கு மேரேஜாகி இரண்டரை மாசமாகுது. அதான் ஆர்வத்துல கேட்டுட்டேன்” என்றவர், “தேவிமா. எனக்கொண்ணு சொல்லு, நீ மருமகனோட சந்தோஷமா இருக்க தான?”

அன்று கேட்டபொழுது உடனே ‘ம்’ என்ற வார்த்தையை வெளியிட்டவளால், இன்று அந்த ஓரெழுத்தைக் கூட சொல்ல முடியவில்லை. “அம்மா! ப்ளீஸ். இதையே எத்தனை தடவைதான் கேட்பீங்க? இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க? எனக்கு சங்கோஜமாயிருக்கு.”

“இதுல சங்கோஜப்பட என்னயிருக்கு?” என தாய் கேட்க... அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “வேண்டாம்மா. நான் அப்புறமா பேசுறேன்.”

“தேவிமா... தேவி...” என தாய் கூப்பிடக் கூப்பிட போனை கட் செய்தாள்.

“என்னாச்சிங்க இந்த பொண்ணுக்கு? பேச்செல்லாம் வித்யாசமாயிருக்கு. எப்பவுமே எதாவதுனா நான் தான் கோபப்படுவேன். இவளுக்கு என்ன கோபம் தெரியலையே?”

“அவ உன் பொண்ணில்லையா? அதான் கோபம் வந்திருக்கும்.”

“யாரோ என்னோட அம்மான்னு டயலாக்கெல்லாம் விட்டாங்க?” கணவனை முறைக்க... மனைவியின் முறைப்பில், “சரி முறைக்காத. அவ உன் பொண்ணு மட்டுமில்ல, இன்னொருத்தருடைய மனைவி. நீ கேட்கிற கேள்வி அவளுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்திருக்கும். நல்ல விஷயங்களை எப்பவும் மூடி மறைக்க முடியாதுமா. கர்ப்பம்னு தெரிஞ்சா உன்கிட்ட சொல்லாமலா குழந்தை பெத்துக்கப் போறா. பொண்ணைப் பற்றி மட்டுமே கவலைப்படுறியே, நம்ம பையனுக்கு 28 வயசாகுது. கல்யாணம் பண்றதா ஐடியா இல்லையா? பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா?”

“நீங்க இன்னும் பார்க்க ஆரம்பிக்கலையா? வாய் பேசிட்டிருக்காம, காலா காலத்துல அதைச் செய்யுங்க.”

“மாப்பிள்ளைகிட்டேயும் சொல்லி வைக்கலாமா?” என ராஜன் கேட்க...

மாப்பிள்ளை என்றதும் சுந்தரிக்கு மனதில் ஏதோ தோன்ற, “ஏங்க நம்ம சாதனாவை, ப்ரேம்கு கேட்டா என்ன?”

சட்டென்று ராஜனின் முகமும் பளிச்சிட, “இது ரொம்ப நல்ல விஷயம் சுந்தரி. கண்டிப்பா பேசலாம். நல்ல குணமுள்ள பொண்ணு. அவங்க குடும்பத்துப் பொண்ணுன்னா சும்மாவா...”

“எவங்க குடும்பத்து பொண்ணைப்பா சும்மாவான்னு கேட்குறீங்க?” என ப்ரேம் வர...

“நம்ம சாதனாவைத் தான்டா. மாப்பிள்ளை குடும்பத்து பொண்ணுன்னா சும்மாவான்னேன். நல்ல பொண்ணு.”

“நல்ல பொண்ணு மட்டுமில்லப்பா, சண்டைக்காரியும் தான்” என்றான் சிரித்தபடி.

“சண்டைக்காரியா? அவ யார்கிட்ட சண்டை போட்டுப் பார்த்த?”

“என்கிட்டத்தான்பா. ஷப்பா... என்ன கோபம் வருதுன்றீங்க. முதல் நாள் நடந்த அவர்களின் சந்திப்பைச் சொல்லி, ஆனா, அடுத்த செகண்ட் மன்னிப்பும் கேட்டுட்டா. தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்கக்கூட மனசு வேணும்பா. நல்ல பொண்ணு. சரி எனக்கு டைமாகுது நான் கிளம்பறேன்” என அவ்விடத்தைவிட்டு நகர்ந்தவனின் கைப்பிடித்திழுத்து...

“உனக்கு அந்தப்பொண்ணை பிடிக்குமா?” என்றார் ராஜன்.

“என்னப்பா கேட்குறீங்க? அவளைப் பிடிக்கலைன்னு யாராவது சொல்வாங்களா? ஆமா, திடீர்னு அவளைப்பற்றி என்ன பேச்சி? ஏன் இந்தக் கேள்வி?”

“சாதனாவை இந்த வீட்டு மருமகளாக்கிக்கலாம்ன்ற ஐடியாவுல தான்” என தாய் சொல்ல..

புரியாமல் முதலில் விழித்தவன், புரிந்ததும் மனதினுள் சந்தோஷ சாரலடிக்க அதை வெளியில் காட்டாமல், “என்ன திடீர்னு இப்படி ஒரு யோசனை?”

“உனக்குப் பிடிச்சிருக்குல்ல?”

“ம்... பிடிச்சிருக்கும்மா. அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கணுமே?”

“உன்னைப் பிடிக்கலன்னு யார்டா சொல்லுவாங்க? உன்னை மாதிரி ஒரு பையன் அவங்க வீட்டுக்கு கிடைக்க மாட்டான்டா.”

“உங்க பையன்றதால இப்படி சொல்றீங்க? என்னதான் சொல்லுங்கப்பா எல்லா விதத்திலயும் ஜீவா தான் பெஸ்ட். நானாவது நல்லாயிருக்கிற அவங்க வீட்டுப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஆனா, ஜீவா ரியலி க்ரேட்பா.”

“பாருடி உன் பையன் அப்படியே கல்யாணத்துக்கு நான் ரெடின்னு சொல்லிட்டான்.”

“ச்சோ! போங்கப்பா” என வெட்கப்பட்டவனை, பெற்றவர்கள் ரசித்து, “எப்ப ஃப்ரீன்னு சொல்லுப்பா நாம பொண்ணு கேட்டுப் போகலாம்?”

“இப்பவேவா. அவ வேலைக்குப் போக ஆரம்பிச்சி ரெண்டு மாசம்தான்ப்பா ஆகுது. ஆறுமாச ட்ரெய்னிங்ல இன்னும் நாலுமாசமிருக்கு. அவ ஆசைக்கு வேலை பார்க்கட்டும்பா. முடிஞ்சதும் போய் பொண்ணு கேளுங்க. யார் வேண்டாம்னு சொன்னது”

ப்ரேம் நான்கு மாதங்கள் தள்ளிப்போட்டதற்குப் பதில் அந்த நிமிடமே சம்மதித்து, தங்கையிடம் கூறியிருந்தால், அதைத் தொடர்ந்த தவறான சில நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம். எதற்கும் நேரம் வேண்டுமே!

தாயிடம்; பேசி போனை வைத்த சுபாவிற்கு, அடுத்து என்ன செய்வதென்று ஆயாசமாக இருந்தது. எப்படி? யாரிடம் சென்று இந்த குழப்பங்களைத் தீர்ப்பதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவளிடம்...

“அண்ணி பேசி முடிச்சாச்சா? என்கிட்ட குடுங்க” என போனை வாங்கி, “வாங்க தோட்டத்துக்குப் போகலாம்” என்றழைத்தாள்.

“வெளியே வெயில் இருக்குமே சாதனா?”

“இல்லண்ணி இவ்வளவு நேரம் வெயில் கொளுத்திச்சி. இப்ப மழை கொழுத்தப் போறேன்னு இருட்டிட்டு நிற்குது. க்ளைமேட் சூப்பராயிருக்கு. வாங்க போகலாம்” என இழுக்க... அதே நேரம் சாதனாவிற்கு ராஜிடமிருந்து போன் வர, எடுத்துப் பேசியவள் விஷயத்தை ஒரு காதில் வாங்கி, மறு காது வழியாக விட்டு போனை ஷோபாவில் போட்டு, “போகலாம் அண்ணி” என்றாள்.

“போன் யார்கிட்டயிருந்து?”

“அது நமக்கு அவ்வளவு இம்பார்டண்ட் இல்ல. நீங்க வாங்க என்னோட.” தோட்டத்திற்குச் சென்றதும் சாதனா அங்கிருந்த செடிகளருகில் செல்ல, சுபா அனைத்தையும் ஒவ்வொன்றாக ரசித்தபடி வந்தாள். வெயில் இல்லாமல் மழைநேர குளுமை, அவ்விடத்தில் பூத்திருந்த விதவிதமான மலர்களும் அவளின் கண்ணிற்கு குளிர்ச்சியைக் கொடுத்தது. “ப்யூட்டிஃபுல்” என்றாள் தன்னை மறந்து.

“அண்ணி எப்படி ப்யூட்டிஃபுல்னு சொல்றீங்க? உங்களால தான் பார்க்க முடியாதே?”

சட்டென்று சுதாரித்த சுபா, “என்னால எப்படி சாது பார்க்க முடியும். மழைக்காற்று அடிக்குதில்ல, இந்த ஜில் காற்றடிச்சி, பூக்களோட வாசனையும் சேர்ந்ததால உணர்ந்து சொன்னேன்.”

“ஓ... அப்படி சொன்னீங்களா? இது என்னோட ரேர் கலக்ஷன் அண்ணி. மதுரையிலிருந்து என்னோட ஃப்ரண்ட் அவ வீட்டுக்குக் கொண்டு வந்த செடி. இதுக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா? முதல்ல என்ன பேருன்னு தெரியுமா?”

அந்தச் செடியின் வித்தியாசத்தை சுபாவும் பார்த்திருந்தாள் தான், இருப்பினும் வெளியே காண்பிக்காமல், “நீ சொன்னால் தானம்மா தெரியும்?” என்றாள்.

“அண்ணி இதோட பெயர் அனாமிகா!”

“என்னது செடியோட பெயர் அனாமிகாவா? என்ன உளர்ற நீ?”

“உளறலை அண்ணி. நிஜமாகவே அனாமிகா தான். பெயர் தெரியாதவங்களை அனாமிகான்னு சொல்றதில்லையா அது மாதிரி. இதனோட கூப்பிடுற பெயரும் தெரியாது. சைன்ஸ் பெயரும் தெரியாது. ஸோ அனாமிகான்னு வச்சிட்டேன்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“நீயே வச்சிட்டியா? நீ ரொம்ப அறிவாளி தான்டா சாதுமா. இந்த நேம் எதுக்கெல்லாம் யூஸாகுது.”

“தேங்க்யூ... தேங்க்யூ” என சலாம் போடுவது போல் சொல்ல, சுபா வந்த சிரிப்பை அடக்கி, “சரி என்ன ஸ்பெஷல் இந்த செடியில?” என்றாள் தெரிந்து கொண்டே தெரியாதது போல்.

“ஹான்... அதான் மேட்டரே. அண்ணி இங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க” என்று அமரவைத்து சுபாவின் கையை எடுத்து செடியில் வைத்து, “மெல்ல தடவிப் பாருங்க அண்ணி வித்தியாசம் தெரியும். முள்ளுல்லாம் கிடையாது அண்ணி பயப்படாம தொட்டுப்பாருங்க.”

மெல்ல அதன் இலைகளை வருடியவளுக்கு இலைகளின் கடினத்தன்மையும், இலையிலேயே வேர்விட்டு செடியாகிய விதமும் கண்ணில் பட்டது.”

சாதனா செடியின் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தாள். “இந்தச் செடியில் உள்ள இலை குட்டி போடும் தெரியுமா?”

“இலை குட்டி போடுதா? ஆச்சர்யமாயிருக்கே.”

“நிஜம் அண்ணி. இந்த இலை இருக்குதுல்ல அதுல வேர் வந்து சின்ன பூ மாதிரி இலை வர ஆரம்பிச்சி, அதுவும் ஒரு செடியா மாறும் அது தான் ஸ்பெஷல். இலை குட்டி போடுறது. இலையிலிருந்து செடியைப் பிய்த்து மண்ணுல நட்டாலும் அதுவும் செடியா வரும். ஒரே செடியில, ஒரே இலையில ரெண்டு மூணு வேர் விடுறது அதிசயமில்லையா. இந்தச் செடி இப்படியே குட்டி போட்டபடியே வளர்ந்தா குடும்பத்துக்கும் நல்லதாம். என்னோட கார்டன் கலக்ஷன்லயே இதுதான் என்னோட ஸ்பெஷல் கலக்ஷன். அன்ட் திருட்டு மாங்காய் மாதிரி த்ரில் செடி.”

“அடிப்பாவி! திருடினியா?”

“நோ...நோ... வித்யா வீட்டுல விதவிதமா வச்சிருந்தா. இதை மாதிரி நாலஞ்சு இருந்தது. எனக்கு ஒண்ணு குடுன்னா அம்மா திட்டுவாங்க, பெருசாகட்டும் தர்றேன்னா. எனக்கு அந்தளவுக்கு பொறுமையில்லையா, ரொம்ப நாள் கேட்டும் தரமாட்டேன் சொன்னாளா.. அவ ஊர்ல இல்லாத சமயம் பார்த்து சுவரேறிக் குதிச்சி ஐந்து செடியில ஒண்ணே ஒண்ணு, அண்ணி நல்லா கேளுங்க ஒண்ணே ஒண்ணு தான் சுட்டேன்” என்றாள் சர்வசாதாரணமாக.

“அடிப்பாவி! செய்யுறது திருட்டு. இதுக்கு விளக்கம் வேறயா?”

“இல்லயில்ல அண்ணி. திருட்டுன்னா என்ன? ஒருத்தவங்க வீட்டை உடைச்சி அவங்க வீட்டுப் பொருட்களையெல்லாம் கொள்ளையடிக்கிறது. நான் பகல்ல போயி, அவங்க இத்துப்போன இரும்பு கேட்டைத் தாண்டி ஒரு செடியை எடுத்துட்டு வந்தேன். இதுக்குப் பெயர் திருட்டா? அதுவுமில்லாம, இது குட்டி போடும் செடியில்லையா.. அதனால குட்டி போட்டதும், குட்டியை வச்சிக்கிட்டு தாயை வித்யா வீட்ல கொண்டு சேர்த்துட்டேன்.”

“சரி நீ ஆசைப்பட்டது மரமா இருந்தா என்ன பண்ணியிருப்ப?”

“பேராசை பெருநஷ்டம் அண்ணி. அதிக ஆசை ஆபத்தை விளைவிக்கும். நமக்கேத்த ஒரு எள்ளுருண்டைக்குத் தான் ஆசைப்படணும். அவ வீட்டுல இப்ப இந்த செடி நிறைய குட்டி போட்டிருச்சி, இப்ப வந்து வேணுமா சாதுன்னு கேட்டா, சரிதான் போடி இதே மாதிரி ஒண்ணு நானே வாங்கிட்டேன் சொன்னேன்.”

“சுட்டுட்டேன் சொல்லுடி.. வாஙகிட்டேன் சொல்லாதன்றா? என்னடின்னு கேட்டா? நானா குடுத்தா எங்கம்மா திட்டுவாங்க. அவங்கண்ணன் ஒரு செடியைக் குடுத்ததை, என்னவோ சொத்தையே குடுத்த மாதிரி கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிறாங்க. நீயா சுட்டா என்னைக் கேட்க முடியாது பாரு. அதான் தரமாட்டேன்னு உன்னை வெறுப்பேத்துனேன். குட்டி போட்டதும் செடி ஆட்டோமேடிக்கா எங்க வீட்டுக்கு வந்திருச்சி போல...”

“ஹி...ஹி... நம்மளை நாமளே புகழக்கூடாதுடினு அசடு வழிய சிரிச்சது எனக்குத்தான தெரியும்.”

ஹா...ஹா... என வாய்விட்டுச் சிரித்த சுபாவையே பார்த்திருந்த சாதனா, “உங்க சிரிப்புத்தான் அண்ணி என்னை முதல்ல அட்ராக்ட் பண்ணியதே. நானே உங்களை பார்த்து இப்படி டயலாக் அடிக்கிறேனே, எங்கண்ணன் அநேகமா ப்ளாட்டுத்தான்” என்றதும் சுபாவின் முகத்தில் வெட்கரேகை ஓட...

“உங்களை முதல் முதல்ல பார்த்தவுடனே ஃபோனடிச்சி சாதுமா, மில்ஹயா! மில்ஹயானு! கத்துறான். என்னண்ணானு கேட்டா, உங்கண்ணியைப் பார்த்துட்டேன்னு போன்ல ஒரே அலப்பறை. ஆனா, அடுத்த நிமிஷமே, ப்ச்... அதெல்லாம் எதுக்கண்ணி, எப்படி என் கலெக்ஷன்” என பேச்சை மாற்றினாள்.

‘ஏன் நிறுத்திட்டு பேச்சை மாத்துறா? சொன்ன அடுத்த நிமிஷம் என்ன நடந்தது?’ மனம் திரும்பவும் தன்னைப் பற்றிய கேள்விகளுக்குத் தாவ...

“அண்ணி சொல்லுங்க என் கலக்ஷன் எப்படி?” என்று சுபாவின் யோசனையைக் கலைத்தது சாதனாவின் கேள்வி.

“சுட்ட பொருள் எப்பவும் சூப்பராகத் தான்டா இருக்கும்.” விரல் வைத்து அபிநயித்தபடி சொன்னாள். “ஆமா. உன் ஃப்ரண்ட் உன்னைத் தப்பா எடுத்துப்பாள்ல? உன்னோட நேம் கெட்டுறாதா?” என வருத்தமாய் கேட்க...

“அச்சோ அண்ணி! இதெல்லாம் சின்னப்பிள்ளைங்க விளையாட்டு மாதிரி. நானாவது அவ வீட்டுயிருந்து ஒரு செடிதான் எடுத்துட்டு வந்தேன். அவ எத்தனை வீட்டுல எத்தனை விதமான செடி சுட்டுட்டு வந்து வச்சிருக்கா தெரியுமா? ஜஸ்ட் ஃபார் ஃபன் அண்ணி.”

‘ஓ... இப்படியும் கூட ஃபன் பண்ணிப்பீங்களா?’ மனதில் தோன்றியது, காலேஜ் படிக்கிறேனென்று பொண்ணுங்க பையன் பின்னாடியும், பையனுங்க பொண்ணுங்க பின்னாடியும் சுத்தி சீரழியுற இந்த வயசுல, இன்னும் குழந்தைத்தனங்கள் மாறாத சாதனாவின் இந்த கேரக்டர் சுபாவைக் கவர்ந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் மேகம் இருட்டியபடி மழைத்துளி விழ ஆரம்பிக்க... சின்னச்சின்னத் துளிகளில் ஆனந்தமாக நனைந்தபடி மழையை ரசித்திருந்த சுபாவிடம், “அண்ணி வாங்க போகலாம்” என்று கைபிடித்திழுக்க...

“ஹேய்! இன்னும் கொஞ்ச நேரம்பா.”

“மழை உங்களுக்கு ஒத்துக்கலன்னா, ஃபீவர் வந்திரும். அப்புறம் எல்லாரும் என்னைத்தான் திட்டுவாங்க. வாங்க அண்ணி.”

“அதெல்லாம் ஒத்துக்கும். ஒரு பைவ் மினிட்ஸ் தான் சாதனா. நீ வேணும்னா போ நான் வர்றேன்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜீவா வர... ‘அண்ணா’ என அழைக்க வாய் திறந்த சாதனாவிடம் கண்காண்பித்து உள்ளே போகச் சொன்னான். புரிந்து தங்கை உள்ளே சென்றதும், மனைவியினருகில் வந்து அவள் மழையை ரசிக்க, அவன் அவளை ரசித்தான்.

மழையின் வேகத்தோடு காற்றும் அதிகரிக்க, “சாதனா இன்னும் பைவ் மினிட்ஸ் தான். ப்ளீஸ் எனக்காக மழையில நனையுறது செம ஜாலியா இருக்கு தெரியுமா?” கண்ணாடியில் நீர்பட்டு பார்வை மறைக்க, சாதனாவின் பதில் குரல் இல்லாமல் போகவும், கண்ணாடியிலுள்ள தண்ணீரை கைகளால் துடைத்து, சாதனாவைப் பார்க்கத் திரும்ப அருகிலுள்ள மரத்தின் வேர்பட்டு கால் இடறி விழப்போனவளை...

ஓடி வந்து பிடித்து “பார்த்துடா தேவி” என்ற கணவனின் குரல் கேட்டு அவன் முகம் பார்க்க முயல, முகம் தெளிவில்லாமல் மங்கலாகவே தெரிந்தது. காரணம் கண்ணாடியில் விழுந்த மழைத்துளிகள் கண்களில் வழிந்திருந்ததால்.

மனைவியைத் தாங்கிப் பிடித்தவன் அப்படியே தூக்கி, “சுப்பு சூப்பராயிருக்கடி” என காதோரம் கிசுகிசுக்க... ‘இந்த நேரம் இவங்க இங்கே எப்படி?’ என நினைத்தவள், முதன்முதலாக கணவனின் நெருக்கமான தொடுகையில் வெட்கத்தில் முகம் சிவக்க கணவனின் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்தாள்.

“சுப்பு இது இன்னுமே சூப்பராயிருக்குடி” என்றதும் “ச்சோ! சுப்புவ விடமாட்டீங்களா?” என்று சிணுங்க...

“எப்படி விடச்சொல்ற? அது என்னோட உயிரில் கலந்ததாச்சே. என் உடல்லயும் கலக்க வைக்கலாம்னு பார்க்கிறேன். கலக்க விட்டுருவோமா?”

“புரியலையே?” என்றாள் அவனின் சுப்பு.

“புரியலையா? புரிய வைக்கவா?” என்று கிறங்கலாகச் சொல்ல... ‘ம்’ என்றவள் அர்த்தம் புரிந்து, ‘ம்கூம்..’ என்று சிணுங்க...

“நீ முதல்ல சொன்ன, ம் மட்டும் எடுத்துக்கறேன்டா தேவி” என்றவனிடம், மறுப்பாக தலையசைத்து ஏதோ சொல்ல வர, “ப்ச்... நோ வேர்ட்ஸ் தேவிமா!” மழையில் நனைந்திருந்தவளை ஈர உடையுடன் தன் கைகளில் ஏந்த, வெட்கத்தில் தன் நெஞ்சோரம் முகம் புதைத்திருந்தவளை உச்சி முதல் பாதம் வரை ரசித்து, ‘இவள் என் மனைவி’ என்று கர்வம் கொள்ளச் செய்தது. இவளைத் தொட ஏன் தயங்க வேண்டுமென்றது அவனின் ஆண் மனம்.

‘இன்னும் நீ உண்மையைச் சொல்லலையேடா?’ என மனசாட்சி கேட்க... ‘எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மை தானே. சொல்லி புரியவைக்கலாம்’ என நினைத்தவனுக்கு, முன்னாடியே அவளுக்குப் புரியவைத்திருக்கலாம் என்று காலம் கடந்தே தோன்றியது. உடலின் தேவைகளே அந்த நிமிடம் அத்தியாவசியமாய் பட்டு, மனைவியிடம் கொஞ்சல் ப்ளஸ் கெஞ்சல் மொழிகள் பேசியபடி வர...

தொட உரிமையிருந்தும் இத்தனை நாள் கணவனின் விலகலில் நொந்திருந்த மனதிற்கு இதமாகவும், அன்றொரு நாள் வந்து போன குழந்தை ஏக்கமும், கணவனின் ஸ்பரிசமும், கிறங்கல் பேச்சிகளும், கொஞ்சல் மொழிகளும் தனக்குக் கண் தெரியும் என்பதையே மறந்திருந்தாள் சுபா.

தங்களின் அறைக்குள் சென்று கதவடைத்து, அவளைக் கட்டிலில் கிடத்தி ஜன்னல் மூடி கர்ட்டன்களை இழுத்துவிட்டு, மனைவியிடம் வர, மழை நேர இருளும் கணவனின் தொடுகையை மனம் ஏற்க, உடலும் அதற்கு இசைபாட, ஈருடல் ஓருடலாய் கலந்து, ஓருயிர் உருவாக்கும் உன்னத வேலையை ஆரம்பித்தார்கள் ‘சுபானந்த்’ ஆன ‘ஜீவதேவி’ தம்பதியர்.
 
Top